புனைகதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 38:
 
புனைகதைகளில் வரும் உரைகள் எல்லாமே இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டோரிடையே நிகழும் உரையாடல்களாக இருப்பதில்லை. சில வேளைகளில் படைப்பாளியே நேரடியாகக் கதையைக் கூறுவார். இது "[[கதை சொல்லல்]]" எனப்படும். கதையின் நிகழ்விடம் அல்லது ஒரு கதைமாந்தரைப் பற்றி வாசகர்களுக்குச் சொல்வதற்காக "வருணனை"களும் உரைப்பகுதியில் இருப்பதுண்டு. இவ்வருணனையைப் படைப்பாளி நேரடியாகவோ அல்லது கதைமாந்தர்களின் வாய்வழியாகவோ செய்வது உண்டு. சில கதைகளில் கதையின் சில அம்சங்களைப் படைப்பாளி தானே விளக்கும் வழக்கமும் உள்ளது. இது "விளக்கவுரை" எனப்படும். சில இடங்களில் கதைமாந்தர் தமக்குத்தாமே பேசிக்கொள்வதன் மூலம், கதையை நகர்த்த உதவுவது உண்டு. இது "தனி மொழி" எனப்படும்.
 
===முரண்பாடு===
[[முரண்பாடு (எழுத்து)|முரண்பாடு]] என்பது புனைகதை இலக்கியங்களில் காணப்படும் முக்கியமான கூறுகளில் ஒன்று. "முரண்பாடு இல்லையேல் கதை இல்லை" என்று புரூக்சு, வாரென் என்னும் இருவரும் தாமெழுதிய "புனைகதையை விளங்கிக் கொள்ளல்" என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளனர். சிக்கல் வாந்த புனைகதைகளில் முரண்பாட்டைப் பிரித்துப் பார்ப்பது வாசிப்பவர்களுக்கு எளிதாக இராது. எனினும் முரண்பாடு முதன்மைக் கதைமாந்தரையும், எதிர்க் கதைமாந்தரையும் மையமாகக்கொண்டு அமையும். பொதுவாக இம்முரண்பாடு நன்மைக்கும் தீமைக்கும் இடையானதாக இருக்கும்.
 
புனைகதைகளில் காணும் முரண்பாடுகளில் அடிப்படையான ஐந்து வகைகள் உள்ளன. இவை,
* ஒருவருக்குத் தன்னுடனான முரண்பாடு,
* ஒருவருக்கும் இன்னொருவருக்கும் உள்ள முரண்பாடு,
* ஒருவருக்கும் சமூகத்துக்கும் இடையிலான முரண்பாடு,
* ஒருவருக்கும் இயற்கைக்கும் இடையிலான முரண்பாடு,
* ஒருவருக்கும் இயற்கை கடந்த சக்திகளுக்கும் இடையிலான முரண்பாடு என்பன.
 
முற்காலத்தில் மனிதனுக்கும் விதிக்கும் இடையிலான முரண்பாடுகளும் புனைகதைகளில் முக்கிய இடத்தைப் பெற்றன. தற்காலத்தில் மனிதனுக்கும் இயந்திரத்துக்கும், அல்லது தொழில்நுட்பத்துக்கும் இடையிலான முரண்பாடும் முக்கியமான முரண்பாடுகளில் ஒன்றாக உள்ளது.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/புனைகதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது