நாராயணகுரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி bot adding hidden cat AFTv5Test & gen cleanup
வரிசை 130:
இந்திய சமூகச் சீர்திருத்தப் பெரியார்களில் ஒருவராகவும், ஆன்மீகத்தில் பல புதுமைகளைக் கொண்டு வந்தவரும் சிறந்த இலக்கியப் படைப்பாளியாகவும் அறியப்பட்டு தத்துவ ஞானியாகவும் உயர்ந்த ஸ்ரீ நாராயண குரு 1928-ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதத்தில் தனது சிவகிரி மடத்தில் உடல் நிலை சரியின்றி இருந்து வந்தார். அந்த ஆண்டில் செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதியில் மகாசமாதி எனும் நிலையில் அடக்கமானார்.
 
ஸ்ரீ நாராயணகுருவின் உயிர் பிரிந்த அறையில் அவர் பயன்படுத்திய கட்டிலும், நாற்காலியும், தலையணைகளும் அப்படியே இருக்கின்றன. அங்கு ஒரு விளக்கு எந்நேரமும் எரிந்து கொண்டிருக்கிறது. <ref> பரணீதரன் எழுதிய கேரள ஆலயங்கள் நூலின் பக்கம்-30 </ref>
 
==ஸ்ரீ நாராயண குருவின் தத்துவங்கள்==
வரிசை 136:
* ஸ்ரீ நாராயண குருவின் தீண்டாமை ஒழிப்புக் கொள்கைகள் முக்கியத்துவமுடையது என்றாலும் அதற்குப் பின்பு அவர் எடுத்துச் சொன்ன "அனைத்தும் ஒன்றே" என்பதுதான் முக்கியமானதாக வலியுறுத்தப்பட்டது. நாராயணகுருவின் வழிமுறை எதையும் நிராகரிப்பது அல்ல. அவர் அனைத்தையும் கற்று உள்ளடக்கி தனக்கென ஒரு நோக்கை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றார். அனைத்தையுமே கற்றுக் கொள்ள வேண்டும். இது போல் அனைத்தையும் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்றார். அறிவு ஒன்றுதான் மனித குலத்துக்கு உரியது என்றும் அதைக் கொண்டு முன்னேற்றம் காண்பதுதான் வாழ்க்கை என்றும் சொன்னார். இந்த அறிவுக்கு குறுக்கு வழிகள் எதுவும் இல்லை என்ற அவரது உபதேசம் முக்கியமானது.
 
* தன்னை பின்பற்றியவர்களிடம் தான் கற்றறிந்தது மட்டுமின்றி அனைவரும் வேதங்கள், உபநிடதங்கள் இந்திய மற்றும் மேலை நாட்டு தத்துவங்கள், சமஸ்கிருத மலையாள காவியங்கள் தமிழிலக்கிய மரபு அனைத்துமே கற்று தெரிவு செய்து மறு ஆக்கம் செய்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார்.
 
* நாராயண குருவின் கொள்கைகளையும் செய்திகளையும் உலகம் முழுவதும் கொண்டு சென்றவர்களில் அவரது சீடரான நடராஜ குரு முக்கியமானவர். இவர் நாராயண குருகுலம் எனும் ஒரு அமைப்பை நிறுவி அவருடைய தத்துவங்களையும், நூல்களையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ஐரோப்பிய நாடுகளுக்குச் கொண்டு சென்றதுடன் அங்கும் நாராயண குருகுலத்தின் கிளை அமைப்புகளைத் துவக்கி உலகத் தத்துவ ஞானிகளில் ஒருவராக அவரைப் பரிணமிக்கச் செய்தவர் என்பது இங்கு குறிப்பிடக் கூடிய ஒன்று.
 
* ஸ்ரீ நாராயண குருவின் கொள்கைகள், கோட்பாடுகள், செயல்பாடுகள் என்று பல விஷயங்கள் கேரளாவில் உள்ள பல பல்கலைக்கழகங்களிலும் வேறு சில பல்கலைக் கழகங்களிலும் ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டு பல மாணவர்கள் முனைவர் (Ph.D.,) பட்டமும், ஆய்வியல் நிறைஞர் (M.Phil.,) பட்டங்களும் பெற்றுள்ளனர். கேரளாவில் ஒரு பல்கலைக் கழகத்தில் ஸ்ரீ நாராயண குரு கருத்துக்கள் தனித்துறையாகவே இடம் பெற்றிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
==ஸ்ரீ நாராயண குருவின் சிறப்புகள்==
வரிசை 146:
* 1901ல் வெளியிடப்பட்ட திருவாங்கூர் மாநில மக்கள் தொகை கணக்கெடுப்பு புத்தகத்தில் ஸ்ரீ நாராயணா "குரு" எனும் அடை மொழியுடன் சம்ஸ்கிருத பண்டிதராகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
* சாமியார்களைச் சந்திக்கவே விரும்பாத மகாத்மா காந்தி 1925-ல் கேரளாவில் இவரை பல எதிர்ப்புகளுக்கிடையே சந்தித்ததுடன் "அவதார புருஷர்" என்றும் பாராட்டினார்.
 
* தமிழகத்தின் புரட்சிக்கவிஞர் சுப்பிரமணிய பாரதியார் இவருடைய சமூகச் சீர்திருத்தக் கொள்கைகளைப் பாராட்டி எழுதியிருப்பதுடன் இவருடைய சமஸ்கிருத நூல்களையும் கருத்துக்களையும் பாராட்டியிருக்கிறார்.
 
* கேரளத்தின் மகாகவி ஜி.சங்கரகுரூப் எழுதிய செய்யுளில் ஸ்ரீ நாராயண குருவை " இரண்டாம் புத்தர்" என்று குறிப்பிட்டுள்ளார்.
வரிசை 154:
* கேரளாவில் ஸ்ரீ நாராயண குருவின் பிறந்த நாள் மற்றும் அடக்கமான நாள் ஆகியவை கேரள அரசால் அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
 
* 2006- ஆம் ஆண்டில் ஸ்ரீ நாராயண குருவின் 150 வது பிறந்த நாளின் போது இந்திய அரசு ரிசர்வ் வங்கி மூலமாக சிறப்பு நாணயங்களை வெளியிட்டு சிறப்பித்தது.
 
==ஸ்ரீ நாராயணகுரு பெயரிலான அமைப்புகள்==
வரிசை 176:
[[பகுப்பு:1928 இறப்புகள்]]
[[பகுப்பு:சமூக சீர்திருத்தவாதிகள்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
[[en:Narayana Guru]]
"https://ta.wikipedia.org/wiki/நாராயணகுரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது