சிமோன் த பொவார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: mzn:سیمون دوبووار |
|||
வரிசை 20:
''சிமோன் லூசி ஏர்னஸ்டைன் மேரி பேர்ட்ரண்ட் டி பொவார்'' என்னும் இயற்பெயர் கொண்ட சிமோன் டி பொவார், ஒரு [[சட்ட வல்லுனர்|சட்ட வல்லுனரும்]], [[நடிகர்|நடிகருமான]] ஜார்ஜ் டி பொவார் என்பவருக்கும், பிராங்கோய்ஸ் பிராசியர் என்னும் இளம் பெண்ணுக்கும் மகளாகப் [[பாரிஸ்]] நகரில் பிறந்தார். இவர் நல்ல பாடசாலைகளில் கல்வி கற்றார். [[முதலாம் உலகப் போர்|முதலாம் உலகப் போருக்குப்]] பின்னர், மியூஸ் வங்கியின் தலவராக இருந்த இவரது தாய்வழிப் பாட்டனான குஸ்தாவ் பிரேசியர் வங்குரோத்து ஆனார். இதனால் முழுக் குடும்பமும் பிறரின் பழிப்புக்கு ஆளானதுடன் [[வறுமை]] நிலைக்கும் தள்ளப்பட்டது. இவர்கள் ஒரு சிறிய வீட்டுக்குக் குடிபுக வேண்டியதாயிற்று.
இரண்டு பெண்பிள்ளைகளைப் பெற்றிருந்த சிமோனின் தந்தையார் ஆண்பிள்ளைகளை விரும்பியிருந்தார். எனினும், சிமோன் "ஆண்பிள்ளைகளுக்கு உரிய மூளை"யைப் பெற்றிருப்பதாகக் கூறிவந்தார். இள வயதிலிருந்தே சிமோன் படிப்பில் கெட்டிக்காரியாக இருந்தார். ஜார்ஜ் தனக்கு [[நாடகம்]], [[இலக்கியம்]] போன்றவற்றில் இருந்த ஆர்வத்தைத் தனது மகளிடத்திலும் உருவாக்கினார். கல்வியறிவின் மூலமே தனது மகள்கள்
15 ஆவது வயதிலேயே தான் ஒரு எழுத்தாளர் ஆக வேண்டும் என சிமோன் முடிவெடுத்துவிட்டார். இவர் பல பாடங்களிலும் சிறந்து விளங்கினாலும், மெய்யியலின் பால் பெரிதும் கவரப்பட்டு, அதனைக் கற்பதற்காக [[பாரிஸ் பல்கலைக்கழகம்]] சென்றார். அங்கே அவர் ஜான் பவுல் சாட்டர் உட்படப் பல அறிவுத்துறை சார்ந்தோரைச் சந்திக்கும் வாய்ப்புப் பெற்றார்.
[[பகுப்பு:பிரெஞ்சு எழுத்தாளர்கள்]]
|