அலெசான்றோ வோல்ட்டா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 72 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
(edited with ProveIt)
வரிசை 1:
[[படிமம்:Alessandro-volta2.jpg|thumb|160px|அலெசான்றோ வோல்ட்டா]]
 
'''அலெசான்றோ வோல்ட்டா''' அல்லது '''அலிசாண்ட்ரோ வோல்ட்டா'''(Alessandro Volta: [[1745]]-[[1827]]) என்பவர் மின் துறை என்று ஒரு துறை உண்டாவதற்கே வழிகோலிய முன்னோடி அறிவியல் அறிஞர்களில் ஒருவர். முதல் மின்கலத்தை உருவாக்கியவர். மீத்தேன் வாயுவைக் கண்டறிந்தவர்.<ref name="வொல்டா">{{cite book | title=அறிவியல் நாள்காட்டி | publisher=அறிவியல் ஒளி இதழ் | year=பிப்ரவரி 2013 இதழ் | pages=133}}</ref> இவர் [[இத்தாலி]] நாட்டில் [[லொம்பார்டி]] என்னும் மாவட்டத்திலே உள்ள [[கோமோ]] என்னும் ஊரில் [[பிப்ரவரி 18]], 1745ல் பிறந்தார். மின் ஆற்றல் மற்றும் மின் விசையைப்பற்றி ஆய்வு செய்ய மிகவும் ஆர்வமுடன் இருந்தார். இவ்வார்வத்தின் காரணமாகவே இவர் [[இலத்தீன் மொழி]]யில் தம் மின் கண்டுபிடிப்பைப்பற்றி ஒரு கவிதையே எழுதிவிட்டார். இன்று அன்றாடம் பேச்சு வழக்கில் கூறப்படும் 110 வோல்ட்டு மின் அழுத்தம், 230 வோல்ட்டு மின் அழுத்தம், என்பதில் உள்ள [[வோல்ட்டு]] என்னும் மின் அழுத்த [[அலகு|அலகானது]] இவருடைய பங்களிப்பைப் பெருமை செய்யவும், நினைவு கூறவுமே அமைக்கப்பட்டது. இதனாலேயே [[மின்னழுத்தம்|மின் அழுத்தத்தை]] அளக்கும் கருவியை [[வோல்ட்டளவி]](''Voltmeter'') என்று அழைக்கின்றோம். மின்னழுத்தத்தை வோல்ட்டழுத்தம் என்றும் குறிக்கப்பெறும்.
 
இவர் [[1774]]ல் அரச கல்விக் கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக இருந்தார். [[1775]]ல் மின் ஏற்பை உருவாக்கும் எலெக்டெரோஃவோரசு (''electrophorus'') என்னும் கருவியைக் கண்டுபிடித்தார். [[1776]]-77களில் வளிமங்களின் (வாயுக்களின்) வேதியல் பண்புகளை ஆய்ந்துகொண்டு இருந்தபோது, [[மெத்தேன்]] என்னும் ஒரு வளிமத்தைக் கண்டுபிடித்தார். இது எரியக்கூடிய [[வளிமம்]]. இவ்வளிமம் கரிமமும் நான்கு ஐதிரசன் அணுக்களும் சேர்ந்த கூட்டணுக்களாலான ஓர் அடிப்படையான ஒரு வளிமம்.
 
[[1800]]ல் இவருக்கும் [[கால்வானி|லூயிகி கால்வானி]] என்னும் இன்னுமொரு பெரிய மின் அறிஞருக்கும் இடையே அறிவியல் சார்பாக கருத்து வேறுபாடுகள் இருந்தன. கால்வானி அவர்களின் கருத்துக்கு மாறாக, இவர் மின்கல அடுக்கு ஒன்றை செய்து காட்டினார். இதன் வழி தொடர்ந்து மின்னோட்டம் இருப்பதைக் காட்டினார்.
 
== மேற்கோள்களும் குறிப்புகளும்==
{{reflist}}
 
[[பகுப்பு:அறிவியலாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/அலெசான்றோ_வோல்ட்டா" இலிருந்து மீள்விக்கப்பட்டது