கதிர்வீச்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 56 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 10:
[[வில்லெம் ரோண்ட்கன்]] ஒரு குழாயையும், வெற்றிடம் பற்றியும் பரிசோதனை ஒன்றை நிகழ்த்திக் கொண்டு இருக்கும்போதே இவ்வகை கதிர்களை கண்டறிந்து, அவற்றிற்கு எக்ஸ் கதிர்கள் என்ற பெயரைக் கொடுத்தார்.
== கதிர்வீச்சின் தன்மை ==
கதிர் வீச்சானது ஆற்றல் மிக்கது ஆனால் கண்ணுக்குத் தெரியாதது. இது வெளியில் அலை வடிவத்தில் பரவக்கூடியது. பொதுவாக ஒரு கதிர்வீச்சுக்கான மூலத்திலிருந்து, ஆற்றலானது நேரான வரிசையில் கதிர்வீச்சாக எல்லாத் திசைகளிலும் பயணிக்கும். கதிர்வீச்சானது [[உயிரினம்|உயிரினங்களுக்கு]] ஆபத்து விளைவிப்பனவாக இருக்கும். கதிர் வீச்சின் அளவை பெக்கரல்(Becquerel-Bq) அளவுகளில் குறிப்பிடுகின்றனர். எவ்வளவு கெட்டியான அல்லது தடிமனான பொருட்களிலும் வேறு எந்த பொருட்களின் துணை எதும் இல்லாமல் செல்ல முடியும். பல்வேறு ஆண்டுகள் கழிந்தாலும் இத்தகைய கதிர்வீச்சுப் பொருட்கள் கதிர்களை உமிழும் இயல்புடையன. கதிர்வீச்சினால் பல்வேறு தனிமங்களின் மூலக்கூறுகள் அயனிகளாக மாற்றப்படுகிறது.
 
== சூரியக் கதிர் ==
சூரியக் கதிரானது நீண்ட அலைநீளம் கொண்ட அகச் சிவப்புக் கதிர் முதல் குறைந்த அலை நீளம் கொண்ட புற ஊதாக்கதிர் வரையிலான அலைநீளக் கதிர்வீச்சுகளைக் கொண்டது. இவை தீங்கு விளைவிக்கககூடியது. புற ஊதாக்கதிர் வீச்சுக்கு அப்பால் உள்ளது அயனியாக்கக் கதிர்வீச்சாகும். இது பொருண்மைக்கு சேதத்தை விளைவிக்கக் கூடியது. குறிப்பாக உயிர்த் திசுக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. ஒரு குறிப்பிட்ட அளவு நிலைக்குட்பட்ட அயனியாக்கக் கதிர் வீச்சில் உயிர்வாழ்வனவற்றின் படிவளர்ச்சி ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/கதிர்வீச்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது