கோவூர் கிழார் (சங்ககாலம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 13:
===வேந்தனுக்கு அறிவுரை===
* நலங்கிள்ளி உறையூரை முற்றியிருந்தான். நெடுங்கிள்ளி கோட்டையை அடைத்துக்கொண்டு உள்ளே இருந்தான். கோவூர் நெடுங்கிள்ளிக்கு அறிவுரை கூறினார். போரிடுபவன் சேரனோ, பாண்டியனோ அல்லன். சோழன். யார் தோற்றாலும் சோழனுக்குத் தோல்வி. இதனைக் கண்டு பகைவர் நகைப்பர் என அறிவுரை கூறினார். <ref>புறநானூறு 45</ref> இதனைக் கேட்ட நெடுங்கிள்ளி, நலங்கிள்ளிக்கு விட்டுக்கொடுத்தான் எனத் தெரியவருகிறது.
* நலங்கிள்ளியிடம் இருந்த இளந்தத்தன் என்னும் புலவர் முற்றுகையின்போது உறையூருக்கு வந்தார. ஒற்று வந்தார் என்று நெடுங்கிள்ளி அவரைக் கொல்லப் புகுந்தார். புலவர் பிறருக்குத் தீங்கு செய்யத் தெரியாதவர் எனக் கோவூர் கிழார் விளக்கிப் புலவர் இளந்தத்தனைக் காப்பாற்றினா. <ref>புறநானூறு 47</ref>
* சோழன் குளமுற்றத்துத் தூஞ்சிய கிள்ளிவளவன் மலையமான் மக்களை யானைக் காலின் இட்டுக் கொல்லச் சென்றான். யானையைக் கண்டவுடன் அழுகையை மறந்து சிரிக்கும் குழந்தை உள்ளத்தை எடுத்துச் சொல்லி கோவூர் கிழார் குழந்தைகளைக் காப்பாற்றினார். புறநானூறு 46
 
==அடிக்குறிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/கோவூர்_கிழார்_(சங்ககாலம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது