உயிரணு ஆற்றல் பரிமாற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Adding மேற்கோள்கள் using AWB
clean up using AWB
வரிசை 1:
[[Image:CellRespiration.svg|thumb|right|300px|மாதிரி [[மெய்க்கருவுயிரி]] ஒன்றில் நிகழும் '''உயிரணு ஆற்றல் பரிமாற்றம்''']]'''உயிரணு ஆற்றல் பரிமாற்றம்''' (Cellular Respiration) அல்லது '''கலச் சுவாசம்''' அல்லது '''உயிரணுச் சுவாசம்''' என்பது [[உயிரினம்|உயிரினங்களில்]] இருக்கும் [[உயிரணு]]க்களில் நிகழும் ஒரு தொகுப்பு [[வளர்சிதைமாற்றம்|வளர்சிதைமாற்ற]]த் தாக்கங்களும், செயல்முறைகளுமாகும். இந்த செயல்முறைகள் மூலம் [[ஊட்டச்சத்து|ஊட்டச்சத்தில்]], உயிரினத்திற்கு ஆற்றல் தரக் கூடிய Adenosine triphosphate (ATP) உருவாக்கப்படுவதுடன் கழிவுகளும் உருவாகும்<ref>{{cite web|last=Bailey|first=Regina|title=Cellular Respiration|url=http://biology.about.com/od/cellularprocesses/a/cellrespiration.htm}}</ref>. இங்கு நிகழும் தாக்கங்கள் பெரிய மூலக்கூறுகளில் இருக்கும் கூடிய ஆற்றலுள்ள பிணைப்புக்களை உடைத்து, அவற்றை சிறிய மூலக்கூறுகளாக மாற்றி, அதன்போது உயிரின் வாழ்வுக்குத் தேவையான ஆற்றலைப் பெறும் [[சிதைமாற்றம்|சிதைமாற்ற]] (Catabolism) தாக்கங்களாகும்.

[[குருதிச் சுற்றோட்டத்தொகுதி]] உள்ள [[விலங்கு]]களில், அவற்றின் [[உடல்|உடலில்]] உள்ள உறுப்புக்களில் இருக்கும் உயிரணுக்களில், [[குருதி]]யில் இருந்து பெறப்படும் [[ஆக்சிசன்]] பயன்படுத்தப்பட்டு, ஊட்டச்சத்துக்கள் வளர்சிதைமாற்றத்திற்குட்பட்டு உடலுக்குத் தேவையான ஆற்றலை உற்பத்தி செய்வதுடன் [[காபனீரொட்சைட்டு]] கழிவாக பெறப்படும். இவ்வகையில் அனைத்து உடற் தொழிற்பாடுகளுக்கும் அவசியமான ஆற்றல் அல்லது சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. இது குருதி மூலம் [[உடல் உறுப்புக்கள்]] அல்லது [[இழையம்|இழையங்கள்]] அல்லது உயிரணுக்களுக்கு கொண்டு வரப்படும் ஆக்சிசனானது, [[ஊட்டச்சத்து|ஊட்டச்சத்துக்களில்]] இருக்கும் [[உயிர் வேதியியல்]] ஆற்றலை, உடலால் நேரடியாகப் பயன்படுத்தப்படக் கூடிய Adenosine triphosphate (ATP) சக்தியாக மாற்றும் நிகழ்வாகும்.

ஆக்சிசனானது பின்வரும் பல தொடர் நிகழ்வுகள் மூலம் உயிரணுக்களால் பெறப்படுகிறது.
வரிசை 8:
2.''' O2 பரவல் :''' நுரையீரல்களின் நுண்ணறைகளிலிருந்து ஆக்சிசன், குருதி [[மயிர்த்துளைக்குழாய்]]கள் அல்லது இரத்தத் தந்துகிகளினுள் உள்ள இரத்தத்தில் பரவும்.

3. '''O2 கடத்துதல் :''' நுரையீரல் [[சிரை]]யூடாக (அல்லது நுரையீரல் நாளத்தினூடாக) ஆக்சிசன் மிகுந்த இரத்தம் இதயத்தின் இடது மேலறையினுள் சென்று, பின் இடது கீழறைக்குக் கடத்தப்படும்.

4. '''O2 கொண்டு செல்லல் :''' [[குருதி]]யில் கலந்துள்ள [[ஆக்சிசன்]] ஆனது, இடது இதயக் கீழறையிலிருந்து மகா[[தமனி]] அல்லது பெருநாடி என அழைக்கப்படும் நாடி மூலம் எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர் பல தமனிகளாலும் (நாடிகளாலும்) உடலின் பல பாகங்களுக்கும் கடத்தப்பட்டு, இறுதியில் தந்துகி வலைப்பின்னல்களால் (குருதி மயிர்த்துளைக்குழாய்களால்) ஆக்சிசன் உடலின் பல உயிரணுக்களுக்கும் பரப்பப்படும். [[இழையம்|இழையங்களின்]] தந்துகிகளிலிருந்து ஆக்சிசனானது [[குளுக்கோசு]] போன்ற ஊட்டச் சத்துக்களோடு, உடல் உயிரணுக்களுக்கு பரவும்.

அந்த ஆக்சிசனே இந்த உயிரணு ஆற்றல் பரிமாற்றத்தில் பயன்படுத்தப்பட்டு, ஆற்றலை உற்பத்தி செய்வதுடன், காபனீரொட்சைட்டையும், [[நீர்|நீரையும்]] வெளியேற்றும். இந்த காபனீரொட்சைட்டு மீண்டும் வெளியேறுவது பின்வரும் தொடர் நிகழ்வினால் நடைபெறும்.

1. '''CO2 கொண்டு செல்லல் ''': உயிரணுக்களிலிருந்து மயிர்த்துளைக் குழாய்களினுள் பரவும் காபனீரொட்சைட்டு, சிரைகள் (அல்லது நாளங்களூடாக) [[இதயம்|இதயத்துக்கு]] கொண்டு வரப்படும். இதயத்தின் வலது மேலறைக்கு வரும் குருதி, வலது கீழறைக்குள் செல்லும். பின் அங்கிருந்து நுரையீரல் தமனி மூலம் நுரையீரலுக்கு எடுத்துச் செல்லப்பட்டும்.

2. '''CO2 கடத்துதல் :''' வலது கீழறையிலிருந்து காபனீரொட்சைட்டு செறிந்த குருதி, அங்கிருந்து நுரையீரல் தமனி மூலம் நுரையீரலுக்கு எடுத்துச் செல்லப்பட்டும்.
3. '''CO2 பரவல் ''': இரத்தத்தில் இருக்கும் காபனீரொட்சைட்டு குருதி மயிர்த்துளைக்குழாய்களில் இருந்து, நுரையீரல் நுண்ணறைகளுக்குள் பரவும்.

4. '''வெளிமூச்சு அல்லது மூச்செறிதல்:''' மூச்செறிதல் (inhalation) மூலம், கார்பனீரொட்சைட்டு மிகுந்த [[வளிமம்]] நுரையீரலில் இருந்து [[மூச்சுக்குழாய்]] ஊடாகச் சென்று, [[மூக்கு|மூக்கினூடாக]] வெளியேற்றப்படும்.

[[வேதியியல்]] நோக்கில் இந்த உயிரணு ஆற்றல் பரிமாற்றம் ஒரு ஆற்றல் வெளியேற்றும் [[ஒடுக்க-ஏற்ற வேதிவினைகள்|ஒடுக்க-ஏற்ற வேதிவினைத்]] தாக்கமாகும். ஆனாலும் இது [[தகனம்|தகனத்தில்]] போல் விரைவாக நிகழாமல், மெதுவாகவும், பல படிநிலைகளிலும் நிகழ்வதனால் தகனத்தில் இருந்து வேறுபடுகின்றது.

==மேலும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/உயிரணு_ஆற்றல்_பரிமாற்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது