மின்னணுவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up, removed: <!-- interwiki -->
வரிசை 2:
'''இலத்திரனியல்''' (''electronics'') அல்லது '''மின்னணுவியல்''' என்பது [[மின்குமிழ்]], [[கடிகாரம்]], [[தொலைபேசி]], [[வானொலி]], [[தொலைக்காட்சி]], [[கணினி]] என அன்றாட வாழ்வில் பயன்படும் பல கருவிகளின் இயக்கத்துக்கு அடிப்படைத் தொழில்நுட்பம் ஆகும். தகவல்களை சேமிக்க, முறைவழியாக்க (process) இலத்திரனியல் பயன்படுகிறது. அதாவது, மின்சக்தியைக் கொண்டு சமிக்கைகளை உருவாக்கலாம். சமிக்கைகளாக தகவல்களை பிரதிசெய்யலாம். இந்த சமிக்கைகளை அல்லது தகவல்களை இலத்திரனியல் கருவிகளால் கணிக்கலாம்.
 
இலத்திரனியலில் செயல்படு மின்கூறுகளான [[வெற்றிடக் குழல்]]கள், [[திரிதடையம்|திரிதடையங்கள்]], [[இருமுனையம்|இருமுனையங்கள்]], [[தொகுப்புச் சுற்று|நுண் தொகுப்புச்சுற்று]]க்களும், செயலறு மின்கூறுகளான [[மின்தடையம்]], [[மின்தேக்கி]], [[மின்தூண்டி]]களும் ஒன்றிணைந்த [[மின்சுற்று]]கள் பெரும் பங்காற்றுகின்றன. செயல்படு மின்கூறுகளின் நேர்பாங்கற்ற நடத்தையும் அவற்றின் இலத்திரனோட்டத்தை கட்டுப்படுத்தும் பண்பும் நலிவுற்ற சமிக்கைகளை வலிப்படுத்த உதவுகின்றன; இப்பயன்பாடு தகவல் பதப்படுத்தல், [[தொலைத்தொடர்பு]], மற்றும் சமிக்கை முறைவழியாக்கம் துறைகளில் பெரும் பங்காற்றுகிறது. மேலும் இலத்திரனியல் கருவிகள் [[நிலைமாற்றி]]களாகப் பயன்படுத்தகூடும்; இது எண்ணிம தகவல் பதப்படுத்தலில் பயனாகிறது. [[மின்சுற்றுப் பலகை]]கள் போன்ற ஒன்றிணைப்புத் தொழில்நுட்பங்கள், இலத்திரனியல் பொதியல் தொழில்நுட்பங்கள், மற்றும் பல்வேறு தொடர்பு கட்டமைப்புகள் மின்சுற்று செயல்பாட்டை முழுமையாக்கி கலவையான மின்கூறுகள் முறையான [[ஒருங்கியம்|ஒருங்கியமாக]] செயல்படச் செய்கின்றன.
 
== மின்னியல், இலத்திரனியல், இயற்பியல் ==
மின்னணுவியல் என்பது [[மின்சாரம்]], [[மின்பொறியியல்|மின் இயந்திரவியல்]] ஆகியவற்றிலிருந்து மாறானது; மின்னியல் பொது வழக்கில் மின்சார உற்பத்தி, வழங்கல், நிலைமாற்றல், சேமிப்பு மற்றும் மின்சக்தியிலிருந்து பிற ஆற்றல் வடிவங்களுக்கும் மற்ற ஆற்றல் சக்திகளிலிருந்து மின்சக்திக்கு மாற்றுவதையும் விவரிக்கின்றன. இவற்றின் கூறுகளாக [[மின்கம்பி]]கள், [[மின்சார இயக்கி|மின் இயக்கிகள்]], [[மின்னியற்றி]]கள், [[மின்கலம்|மின்கலங்கள்]], [[நிலைமாற்றி]]கள், [[உணாத்தி]]கள், [[மின்மாற்றி]]கள், [[மின்தடையம்|மின்தடையங்கள்]] உள்ளன. இந்த வேறுபாடு மின் [[பெருக்கி]]கள் மூலம் நலிவுற்ற சமிக்கைகளை வலிவேற்றப் பயன்படுத்தத் தொடங்கிய 1906இல் இருந்து துவங்கியது. 1950 வரை இதன் முதன்மை பயன்பாடு வானொலி ஒலிபரப்பிகள், வானொலிப்பெட்டிகள், வெற்றிடக் குழல்களிலேயே இருந்தமையால் இத்துறை "வானொலி தொழில்நுட்பம்" என்றே அழைக்கப்பட்டு வந்தது.
 
இன்று, பெரும்பாலான மின்னணுவியல் கருவிகள் [[குறைக்கடத்தி]] மின்கூறுகளை பயன்படுத்தி இலத்திரன்களைக் கட்டுப்படுத்துகின்றன. குறைகடத்தி கருவிகளின் அறிவியலும் தொழில்நுட்பமும் [[திண்மப்பொருள் இயற்பியல்|திண்மப்பொருள் இயற்பியலின்]] அங்கமாகக் கருதப்படுகிறது; நடைமுறை இடர்களுக்குத் தீர்வாக இலத்திரன் மின்சுற்றுக்களின் வடிவாக்கமும் உருவாக்கமும் [[மின்னணுவியல் பொறியியல்]] துறையாக அழைக்கப்படுகிறது.
== இலத்திரனியல் வரலாறு ==
இலத்திரனியல் தொழில்நுட்பத்தின் அடிப்படைக் கருவி அல்லது கூறு [[திரிதடையம்]]. அதன் கண்டுபிடிப்பின் பின்னரே இலத்திரனியல் வளர்ச்சி பெற்றது.
 
* 1897 - அணுக் கூறுகளில் ஒன்றான இலத்திரனை [[ஜெ. ஜெ. தாம்சன்]]. கண்டுபிடித்தார்.
வரிசை 29:
[[வானொலி]]ப் பெட்டிகள் போன்ற பெரும்பாலான [[தொடரிமக் குறிகை|அலைமருவி]] இலத்தினிய சாதனங்கள் சில அடிப்படையான மின்சுற்றுக்களைக் கொண்டு உருவாக்கப்படுகின்றன. இவற்றில் மின் அழுத்தத்தின் வீச்சு எவ்வித இடைவெளியும் இன்றி தொடர்ந்திருக்கும். எண்ணிம முறை (எண்மருவி)யில் மின் அழுத்தம் படிப்படியாக இடைவெளியுடன் இருக்கும். ஒரேஒரு இலத்தினியக் கூறு கொண்ட அலைமருவிச் சுற்றிலிருந்து பல கூறுகளை அடக்கிய சிக்கலான சுற்றுக்கள் வரை பல்லாயிரக்கணக்கான அலைமருவிச் சுற்றுக்கள் உள்ளன.
 
இவை சில நேரங்களில் நேரியல் சுற்றுக்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. இருப்பினும் மின்னதிர்வு கலக்கிகள், அலைமாற்றிகள் போன்றவற்றில் இவை நேரியல் அல்லாத தன்மையைக் கொண்டுள்ளன.
 
அண்மைக்கால சுற்றுக்களில் முழுமையும் அலைமருவி சுற்றுக்கள் காணப்படுவதில்லை. பெரும்பாலும் எண்மச் சுற்றுக்களே காணப்படுகின்றன.சில குறிப்பிட்ட பகுதிகள் மட்டுமே அலைமருவி முறையில் அமைக்கப்படுகின்றன; இவை ''கலப்பு மின்சுற்றுக்கள்'' எனப்படுகின்றன.
 
அண்மைக்கால சுற்றுக்களில் முழுமையும் அலைமருவி சுற்றுக்கள் காணப்படுவதில்லை. பெரும்பாலும் எண்மச் சுற்றுக்களே காணப்படுகின்றன.சில குறிப்பிட்ட பகுதிகள் மட்டுமே அலைமருவி முறையில் அமைக்கப்படுகின்றன; இவை ''கலப்பு மின்சுற்றுக்கள்'' எனப்படுகின்றன.
 
=== எண்மருவி மின்சுற்றுக்கள் ===
வரி 51 ⟶ 50:
[[பகுப்பு:AFTv5Test‎]]
[[பகுப்பு:மின்னணுவியல்]]
 
<!-- interwiki -->
"https://ta.wikipedia.org/wiki/மின்னணுவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது