கதிர்வீச்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 1:
[[படிமம்:Alfa beta gamma radiation penetration.svg|300px|thumb|right|இந்தப் படமானது ஆல்ஃபா (α), பீட்டா (β), காமா (γ) ஆகிய மூன்று வேறுபட்ட அயனாக்க கதிர்வீச்சுக்களின் [[திண்மம்|திண்மப்]] பொருளினுள் ஊடுருவும் சார்பு ஆற்றலை விபரிக்கின்றது. ஆல்ஃபா துகள்கள் (α) ஒரு காகிதத் தாளினாலேயே நிறுத்தப்படுகின்றது. பீட்டா துகள்கள் (β) அலுமினியத் தகட்டினால் நிறுத்தப்படும். காமா கதிர்கள் (γ) ஈயப் பொருளொன்றினூடாகச் செல்லும்போது, கதிர்வீச்சினளவு குறைக்கப்படும்]]

'''கதிர்வீச்சு''' (''radiation'') என்பது இயற்பியலில் ஆற்றலுள்ள அல்லது சக்தியுள்ள துகள்கள் அல்லது அலைகள் ஒரு ஊடகத்தினூடாக அல்லது ஒரு வெளியினூடாக கடந்து செல்வதைக் குறிக்கும். கதிர்வீச்சில் முக்கியமாக அயனாக்க கதிர்வீச்சு, அயனாக்கா கதிர்வீச்சு என இரண்டு வகையுண்டு. பொதுவாக நடைமுறையில் கதிர்வீச்சு எனக் குறிப்பிடும்போது, அது அயனாக்க கதிர்வீச்சை மட்டுமே குறிக்கின்றது.
[[ஆல்ஃபா துகள்கள்]] (α), [[பீட்டா துகள்கள்]] (β), [[நியூட்ரான்|நொதுமி]] (Neutorn) என்பவை அயனாக்க கதிர்வீச்சைக் கொடுக்க வல்லன. [[மின்காந்த அலைகள்]], அவற்றின் [[அதிர்வெண்]]ணின் அளவிற்கேற்ப அயனாக்க கதிர்வீச்சாகவோ, அயனாக்கா கதிர்வீச்சாகவோ இருக்கலாம். மின்காந்த அலைவீச்சின் முடிவில் காணப்படும் குறுகிய அலைநீளம் கொண்ட, அதிக அதிர்வெண்ணுடைய [[ஊடுகதிர் அலை]] (X-ray), [[புற ஊதாக் கதிர்கள்]] (Ultraviolet rays), [[காமா கதிர்கள்]] (γ) போன்றன அயனாக்க கதிர்வீச்சைக் கொடுக்கும். கண்ணுக்குப் புலப்படும் ஒளி அலைகள் (visual light), நுண்ணலைகள் (microwaves), இரேடியோ அலைகள் (radio waves), போன்றன அயனாக்கா கதிர்வீச்சுக்களைத் தரும்.
வரி 17 ⟶ 15:
சுற்றுச்சுழலில் நிகழும் கதிர்வீச்சுகளை
* இயல்பாக நிகழும் கதிர்வீச்சு
* மனிதனால் உண்டுபண்ணப்படும் செயற்கை கதிர்வீச்சு என இரு வகைகளாக பிரிக்கலாம்.

மேலும் கதிர்வீச்சை
*அயனிக் கதிர்வீச்சு ('''எக்ஸ் கதிர்கள், காமாக் கதிர்கள், ஆல்பா மற்றும் பீட்டா கதிர்கள்''')
*அயனியற்ற கதிர்வீச்சு ( ''' வெப்பம், ஒளி, ரேடியோ அலைகள்''') எனவும் பகுக்கலாம்.

===இயற்கை கதிர்வீச்சு===
*1936 -ம் ஆண்டு [[ஹெஸ்]] என்பவர் சூரியன் மற்றும் இதர நட்சத்திர மண்டலங்களில் இருந்து [[காஸ்மிக் கதிர்வீச்சு ]] எனப்படும் விண்வெளிக் கதிர்வீச்சு வருவதாக கண்டறிந்தார். அவை சில தனிமங்களின் வாயிலாக பூமியை அடைகிறது. புவிமண்டலத்தின் மேலே காணப்படும் ஓசோன் மண்டலமானது இத்தகைய கதிர்கள் பூமியில் விழாமல் பாதுகாக்கின்றன. ஆனாலும் மனிதன் உள்ளிட்ட அணைத்து உயிரினங்களும் இக்கதிர்வீச்சினால் பாதிப்படைகின்றனர். இந்த காஸ்மிக் கதிர்கள் ஆண்டுக்கு 40 மில்லியன் ரெம்(REM -Rotgen Equivalent Men ) அளவில் கடலில் குவிவதாக கணக்கிடப்பட்டுள்ளது. மனிதன் பொருத்துக்கொள்ளக்கூடிய அளவு நாள் ஒன்றிக்கு ௦௦.01 ரெம் ஆகும்.
* காற்று மண்டலத்தில் [[ரேடான்]], [[தோரான்]] முதலிய கதிரியக்க வாயுக்களில் இருந்தும் கதிவீச்சு வெளி வருகிறது.
* மனித உடலில் திசுக்களில் [[பொட்டாசியம்]] சிதையும் போது கதிர்வீச்சு தோன்றுகிறது.
* திசுக்களில் சேமிக்கப்பட்ட [[யுரேனியம்]], [[தோரியம்]] ஆகிய கதிரியக்கப் பருப்பொருள்களில் இருந்தும் கதிர்வீச்சு ஏற்படுகிறது.

நாம் வாழும் இப்புவிச் சூழலில் தவிர்க்க இயலாத இயற்கையான கதிர்வீச்சும் உள்லது. இதற்கு பின்நில கதிர்வீச்சு (Background radiation) என்றும் பெயர். கற்பாறைகள்(Granite) மற்றும் உலோகத் தாதுகள் நிறைந்த தரைப் பரப்பில் வாழும் மக்கள் ஏனைய பகுதிகளில் வாழும் மக்களை விட அதிகமான அளவி நிலக் கதிர்வீச்சுக்கு ஆட்படுகின்றனர். இதே போல் மிக உயர்வான பகுதிகளில் வேலை செய்வோர் மற்றும் வசிப்போர் ஆகியோர் காஸ்மிக் கதிர்வீச்சுக்கு ஆட்படுகின்றனர். பொதுவாக நாம் அனைவருமே புவியின் மேல் ஓட்டிலிருந்து(Crust) வெளியாகும் ராடான் வாயுவின் பாதிப்பிற்கு ஆட்படுகிறோம். இது நாம் சுவாசிக்கும் காற்றிலும் கலந்துள்ளது.

யுரேனியம் போன்ற நிலையற்ற தனமை கொண்ட ஐசோடோப்புகள் கதிர்வீச்சுத் தன்மை கொண்டவை. ஒரு ஐசொடோப்பு சிதைவுறும் போது அது தான் பெற்றுள்ள அதிகப்படியான ஆற்றலைக் காமாக் கதிர்களாகவும், ஆல்பா கதிர்கள் மற்றும் பீட்டாக் கதிர்வீச்சாகவும் வெளியிடுகிறது. மேலும் ஐசோடோப்பு ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறும்போது காமாக் கதிர்வீச்சை வெளியிடும் மூலமாகச் செயல்படுகிறது.

===செயற்கை கதிர்வீச்சு===
செயற்கை கதிர்வீச்சு மனிதனால் உண்டாக்கப்படுவதுடன் சுற்றுச்சுழலில் பயங்கரமான பின்விளைவுகளை ஏற்படுத்தியும் வருகின்றன.

* அணு ஆயுதம்
அணுக்கரு பிளவினால் ஆற்றல் வெளிப்பட்டால் அதனை அணுகுண்டு என்பர். அணுகுண்டு தயாரிக்க [[யுரேனியம்]] [[ப்ளுட்டோனியம்]] போன்ற கதிரியக்க ஒரிமங்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
[[அணுக்கரு இணைவு]] ஹைட்ரஜன் குண்டு தயாரிக்கவும், [[அணுக்கரு பிளவு]] அணுகுண்டு தயாரிக்கவும் பயன்படுகிறது.

உலகில் முதல் அணு ஆயுத பரிசோதனை அமெரிக்காவில் உள்ள [[அலமோ கார்டா]]வில் 1945 ஜூலை 16 இல் நடைபெற்றது. இதில் [[ப்ளுட்டோனியம் 239 ]] பயன்படுத்தப்பட்டது.

* அணு உலைகள். அணு உலைக் கழிவுகள்

அணு ஆற்றலை அணுகுண்டு தயாரித்தல் என்னும் அழிவுப்பணிக்கு மட்டும் அல்லாமல் மின்சாரம் தயாரிக்கலாம் என்னும் நற்க்கருத்தின் அடிப்படையில் அணு மின்நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளது. அணு ஆற்றலைக் கட்டுப்படுத்திப் வெப்ப ஆற்றலாக பெற்று பின்னேர் அதைப் பயன்படுத்தி மின் ஆற்றலாக கிடைக்கிறது..
பொதுவாக அணுமின் நிலையங்களில் இருந்து சுற்றுப்புறத்தை மாசுபடுத்தும் வாயுக்கள் வெளிவருவது இல்லை எனினும் அணு உலைகளில் இருந்து வெளிவரும் கழிவுப்பொருட்கள் கதிரியக்கத்தைப் பெற்றுள்ளன. இக்கழிவுப் பொருட்களில் [[ரேடியம்]], [[தோரியம்]] மற்றும் [[ப்ளுட்டோனியம்]] ஆகிய கதிரியக்க தனிமங்கள் உள்ளன. இவை புவி சுற்றுச்சுழலை மாசுபடுத்துவவை.

* எக்ஸ் கதிர்கள்:

எக்ஸ் கதிர்களை [[ராண்ட்ஜன்]] என்பவர் 1895 - இல் கண்டறிந்தார். குறுகிய அளவைக் கொண்ட இக்கதிர்கள் மிக விரைவாக பாய்ந்து செல்லும் இயல்பையும், எல்லாப் பொருட்களிலும் உடுருவும் இயல்பையும் உடையன. உடல் உறுப்புகளில் தோன்றும் நோய்ப் பாதிப்புகளைக் கண்டறிய இக்கதிர்விச்சு பயன்படுகிறது. ஆனால் தொடர்ந்து இக்கதிர் வீச்சுக்கு உட்படும் நோயர் மரபியல் பாதிப்படைகின்றனர்.

*ரேடியம்

மேரி க்யுரி, பியூரி கியூரி ஆகியோர் கண்டு பிடித்த தனிமம் இது ஆகும். இதிலிருந்து வெளிவரும் [[ஆல்பா]] கதிரியக்க துகள்கள் கற்று மண்டலத் தூய்மைக்கேட்டுக்கு காரணமாகிறது.

=== ஒரு சில இயற்கை மற்றும் செயற்கைப் பொருள்களின் கதிர்வீச்சு அளவு ===
வரி 91 ⟶ 87:

== அயனியாக்கக் (அயனாக்க) கதிர்வீச்சு (Ionizing radiation) ==
அயனாக்க கதிர்வீச்சானது, [[அணு]]வை அல்லது [[மூலக்கூறு|மூலக்கூற்றை]] [[அயனாக்கம்|அயனாக்கமடையச்]] செய்யக்கூடிய அளவு [[ஆற்றல்]] உடையதாகும். அதாவது அணு அல்லது மூலக்கூற்றிலிருந்து [[இலத்திரன்]]களை இடம்பெயர்க்கும் வல்லமை கொண்டதாகும். எக்சு கதிர்கள், காமாக் கதிர்கள், ஆல்பாக் கதிர்கள் மற்றும் பீட்டாத்துகள்கள் ஆகியன் பொருண்மையில் அயனியாக்கத்தை ஏற்படுத்தக்கூடியன. இதற்கு அயனியாக்கக் கதிர்வீச்சு என்று பெயர். உயிரியல் அமைப்புகளில் அயனியாக்கமான மூலக்கூறுகளை இது உருமாற்றம் செய்யக்கூடியது. உயிர்-இரசாயண மூலக்கூறுகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. இது செல்களில் சிதைவையும் இறப்பையும் ஏற்படுத்தும். இரண்டு முக்கிய அயனியாக்கக் கதிர்வீச்சுகளாவன.

# துகள்கதிர்வீச்சு
# மின்காந்தக் கதிர்வீச்சு
வரி 121 ⟶ 117:
| செயற்கைக் கதிர்வீச்சு 12%|| மருத்துவம்
கசிவு
ஏனைய வகை
தொழில் சார்ந்தவை
அணுக்கவு வெளியீடு||11
0.4
0.4
0.2
< 0.04

பன்னாட்டுக் கதிரியல் காப்பு கழகம் (International Commission on Radiological Protection -ICRP ) இயற்கை கதிர்வீச்சுடன் எந்த அளவு கதிர்வீச்சு அளவுக்கு ஆட்படலாம் எனப் பின்வருமாறு வரையறை செய்துள்ளது.

# பொதுமக்கள் 1m Sv /yr
# அணுக்கரு ஆய்வு மற்றும் மின் நிலையங்களில் பணிபுரிபவர்களுக்கு 20 m Sv/ yr எனத் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மட்டும்.
வரி 128 ⟶ 124:
* ஒரு சில இயற்கைப் பொருள்கள் கதிர்வீச்சுத் தனிமங்களைக் கொண்டவை. கரியை எரிக்கும் மின்னுற்பத்தி நிலையங்கள் உமிழும் கதிர்வீச்சு அளவு அணுமின் உற்பத்தி நிலையங்கள் உமிழும் கதிர்வீச்சு அளவைக் காட்டிலும் அதிகமாக இருப்பதாக பலமுறை கண்டறியப்பட்டுள்ளது.

* புவியின் மேலோடு கதிரியக்கத் தன்மை கொண்டது. இது ராடான் வாயுவை வளிமண்டலத்திற்குக் கசியவிடுகிறது. கிரானைட் கற்களால் கட்டப்பட்ட வீடுகள் இந்த ராடான் வயுவின் கதிர்வீச்சுத் தன்மைக்கு ஆட்படுகின்றன.

* 30,000 அடி உயரத்தில் அடிக்கடி பறக்கும் விமானிகள் காஸ்மிக் கதிர்வீச்சு பாதிப்பிற்கு ஆட்படுகிறார்கள். புவியில் காணப்படும் அணுக்கருத் தனிமங்களால் சுரங்களில் பணி செய்பவர்கள், எண்ணெய் மற்றும் எரிவாயுத் தொழிற்சாலைகளில் பணிபுரிவோர்கள் அதிக அளவு கதிர்வீச்சு பாதிப்புக்கு ஆட்படுகிறார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/கதிர்வீச்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது