மேரி பென்னிங்டன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sodabottle (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1399538 இல்லாது செய்யப்பட்டது
சி clean up
வரிசை 21:
 
== பிறப்பும் இளமையும் ==
அமெரிக்காவில் [[டென்னசீ]] மாநிலத்தில் உள்ள [[நாஷ்வில்]] என்ற நகரில், 1872-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8ஆம் தேதி பிறந்தார் மேரி. தந்தை ஹென்றி பென்னிங்டன் - தாய் சாரா மொலோனி. மேரி பிறந்தவுடன் இவரது குடும்பம் பிலடெல்பியாவிற்குக் குடியேறியது. ஹென்றிக்கு தோட்டப் பராமரிப்பில் அதிக ஆர்வம் இருந்தது. எனவே, அவருடன் இணைந்து மேரியும் தோட்டத்துச் செடிகளோடு பொழுதைக் கழித்தார். ஏராளமான காய்கறிகள், பழங்கள் அவர்களுடைய தோட்டத்தில் விளைந்தன. ஆனால், சில நாட்களிலேயே அவை அழுகி விட்டன. இருந்தாலும், குளிர்காலத்தில் மட்டும் அவை நீண்ட நாட்களுக்கு அழுகாமல் இருந்தன. அதற்கான காரணம் கண்டறியும் முயற்சியில் சிறுமியாக இருந்த மேரி ஈடுபட்டார்.
 
== கல்வி ==
வரிசை 33:
==அமெரிக்க வேளாண் துறை பணி ==
1905-ல் மேரி அமெரிக்கா வேளாண்துறையில் நுண்ணுயிர் வேதியியலாளராகப் பணியாற்றிய போது அதன் தலைமை இயக்குநராக இருந்த ஹார்வி வைலி என்பவரின் தூண்டுதலின் பேரில் அப்போது புதிதாக விரிவாக்கப்பட்ட தூய உணவு மற்றும் மருந்து சட்ட அமலாக்கப்பிரிவுப் பணிக்கு விண்ணப்பித்தார்.
1906-ல்மேரி தூய உணவு மற்றும் மருந்து சட்ட அமலாக்கப் பிரிவிற்கு தலைவராகப் பதவியேற்ற பின்னர், எப்போதும் குளிராக இருக்கும்படி அம்மோனியா வாயுவைக் கொண்டு இரட்டைச்சுவர் முறையில் ஒரு ரெயில்பெட்டியை உருவாக்கினார். அதில் வைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் நீண்ட நாட்கள் வரை கெடாமல் இருந்தன. இது முதலாம் உலகப் போரின் போது உணவுப்பொருட்களைக் கெடாமல் எடுத்துச் செல்ல உதவியது. அதுதான் 'உலகின் முதல் குளிர்சாதனப்பெட்டி' என அப்போது யாருக்கும் தெரியவில்லை. மேலும், இக்காலத்தில் தான் மேரி பால் மற்றும் பால் பொருட்கள் பால் பதனிடுவதைக் குறித்த ஆய்வை மேற்கொண்டார். <ref>Stephan, Karl D., "Technologizing the Home: Mary Pennington and the Rise of Domestic Food Refrigeration." ''Proceedings, Women and Technology: Historical, Societal, and Professional Perspectives.'' IEEE International Symposium on Technology and Society, New Brunswick, NJ, July 1999, 290.</ref>
 
== குளிர்சாதனப் பெட்டிப் பொறியியலாளர் ==
இதன் பின்னர் மேரி பென்னிங்டன் போக்குவரத்து மற்றும் வீடுகளின் பயன்பாட்டுக்கான குளிர்சாதனப் பெட்டிகளைத் தயாரிக்கும் முயற்சிகளில் ஆர்வமாக ஈடுபட்டார். 1919-ல் அமெரிக்காவின் பால்சா என்ற தனியார் நிறுவனத்தில் குளிர்சாதனப் பெட்டிக்கான மின்காப்பிடல் துறையின் பொறுப்பேற்றார். அப்பணியில் இருந்து 1922-ல் விலகி தானே ஒரு ஆலோசனை மையத்தைத் சொந்தமாகத் தொடங்கினார். 1952-ல் ஓய்வு பெறும் வரை இந்நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்தினார்.
 
1923-ல் வீட்டு உபயோகத்திற்கான குளிர்சாதனப் பெட்டியைக் கண்டறிந்தார். மேலும் அதனைப் பாதுகாப்புடன் பயன்படுத்துவதற்கான அலோசனைகளையும் மக்களுக்கு வழங்கினார். 1920களில் குளிர்சாதனப் பெட்டி தொடர்பான இவரின் பல பணிகளுக்கு தேசிய பனிக்கட்டித் தயாரிப்பு நிறுவனம் ( National Association of Ice Industries (NAII))பல வகையிலும் உதவியது. தனியார் பனிக்கட்டி விற்பனையாளர்களின் உதவியுடன் குளிர்சாதனப்பெட்டிக்குத் தேவையான பனிக்கட்டிகளை வீடு தோறும் விநியோகம் செய்தது. இப்பணி மின் குளிர்சாதனப் பெட்டி கண்டறிந்து பயன்பாட்டிற்கு வரும் வரைத் தொடர்ந்தது. மேலும் NAII உதவியுடன் மேரி குளிர்சாதனப் பெட்டியைப் பாதுகாப்புடன் கையாள அறிவுரைகளை (''The Care of the Child's Food in the Home'' 1925), (''Cold is the Absence of Heat'' 1927) அச்சிட்டு வழங்கினார்.<ref> Woman's Who's Who of America: a Biographical Dictionary of Contemporary Women of the United States and Canada,year=1914,author=John Williams </ref>
 
== வெளியீடுகளும் சிறப்பு நிலைகளும் ==
வரிசை 51:
 
== உசாத்துணை ==
*[http://tamilthamarai.com/science-articles/1098-2011-05-26-19-16-25.html| தமிழ்தாமரை வலைதளம்]
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மேரி_பென்னிங்டன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது