மூளைக் கட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 35 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 16:
| MeshID = D001932
}}
'''மூளைக் கட்டி''' என்பது மூளையினுள் உயிரணுக்களின் அசாதாரணமான வளர்ச்சியைக் குறிக்கிறது. இவ்வகையான வளர்ச்சி, அசாதாராணமாக ஏற்படும் கட்டுப்பாடற்ற உயிரணுக்களின் பிரிவினாலும், தடையற்ற வளர்ச்சியினாலும் ஏற்படுகிறது. அது புற்றுக்கட்டியாகவோ (வீரியம் மிக்க) அல்லது புற்றுக்கட்டி அல்லாததாகவோ (தீங்கற்ற) இருக்கலாம். எவ்வகைக் கட்டியாக இருப்பினும், அவற்றினால் மண்டையோட்டினுள் ஏற்படும் மேலதிக அமுக்கம் காரணமாக தாக்கம் ஏற்படும். தாக்கத்தின் அளவானது கட்டி இருக்குமிடம், அதன் வகை, வளர்ச்சி நிலை என்பவற்றில் தங்கியுள்ளது. இவ்வகையான கட்டி இருப்பவர்கள் வாகனம் ஓட்டுவதற்கும், கர்ப்பம் தரிப்பதற்கும், இயந்திரங்களுடன் வேலை செய்வதற்கும் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது இன்றியமையாதது.
 
மூளைக் கட்டி இருக்கையில் மூளையின் தொழிற்பாடு மாற்றமடைதலால் ஞாபக மறதி, எரிச்சல், உடற்சோர்வு, கடுமையான தொடர்ச்சியான தலைவலி, திடீர் வாந்தி, தலைச் சுற்று, வலிப்பு, பார்வைப் புலன் மங்குதல், கேட்டல் புலன் குறைதல், நடத்தையில் மாற்றமேற்படல் போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.
 
சில கட்டிகள் பிறப்பிலிருந்தே இருக்கலாம். அப்படியான கட்டிகள் [[முளைய விருத்தி]]யின்போதே, மூளை அசாதாரண விருத்திக்குள்ளாவதால் ஏற்படும். பிறப்புரிமை அமைப்பில் ஏற்படும் மாற்றங்களும் மூளைக் கட்டிகளை உருவாக்குவதாக அறியப்படுகிறது. மேலும் கதிரியக்க செயற்பாடுகள், மற்றும் உடலின் ஏனைய பகுதிகளில் ஏற்படும் கட்டிகள் மூளைக்குப் பரவுதலாலும், மூளைக் கட்டிகள் ஏற்படும்.
 
சத்திர சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை, வளர்ச்சியைத் தடுத்து பாதக விளைவுகளைக் கட்டுப்படுத்தக் கூடிய சில மாத்திரைகள் மூளைக் கட்டிகளுக்கான சிகிச்சையாக அமையும்.
 
<br></br />இது பொதுவாக [[மூளை]]க்குள் (நரம்பணுக்கள், கிண்ணக்குழிய உயிரணுக்கள் (உடுக்கலன்கள், ஓலிகோடெண்ட்ரோசைட்டுகள், மூளை ஊற்றறை உள்பாள உயிரணுக்கள், நரம்புக்கொழுப்பு உருவாக்கும் சுவான் உயிரணுக்கள்), நிணநீர்க்குரிய திசு, இரத்த நாளங்கள்) மண்டையோட்டு நரம்புகளில், மூளை உறைகளில் (மூளைச் சவ்வுகள்), மண்டை ஓடு, அடிமூளைச் சுரப்பி மற்றும் கூம்புச் சுரப்பி போன்ற இடங்களிலோ அல்லது மற்ற உறுப்புக்களில் முதல் நிலையாக உருவாகியிருக்கும் புற்றுக்கட்டிகளில் இருந்து பரவுவதாகவோ (மாற்றிடமேறிய கட்டிகள்) இருக்கிறது.
 
தொடக்கநிலை (உண்மை) மூளைக் கட்டிகள் பொதுவாக குழந்தைகளில் மண்டையறை பின்பள்ளத்திலும் வயதுவந்தோர்களில் பெருமூளை அரைக் கோளத்தின் முன்புறப் பகுதிகளிலும் ஏற்படுகின்றன. எனினும் அவை [[மூளை]]யின் எந்தப் பகுதியிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
வரிசை 32:
==பகுப்பு==
 
மூளைக் கட்டிகள் பிரதானமாக இரு வகைப்படுத்தப்படுகின்றன.
 
===முதல் நிலைக் கட்டிகள்===
வரிசை 38:
 
===துணை நிலைக் கட்டிகள்===
இவை உடலின் வேறு இடத்தில் உருவாகி மூளைக்குப் பரவும். அதாவது உடலின் வேறு ஏதாவது ஒரு பகுதியில் உருவான அசாதாரண வளர்ச்சி கொண்ட உயிரணுக்கள் குருதித் தொகுதி, அல்லது நிணநீர்த் தொகுதி மூலமாக கடத்தப்பட்டு, மூளையில் வந்து படிந்து, அங்கே தொடர்ந்து தமது அசாதாரண வளர்ச்சி மூலம் மூளைக் கட்டிகளை உருவாக்கும்.
 
== காரணங்கள் ==
 
மாற்றிடமேறிய புற்றுக் கட்டிகளானது மூளை மற்றும் தண்டு வடத்தில் ஏற்படும் முதன்மையான கட்டிகளைக் காட்டிலும் மிகவும் பொதுவான ஒன்றாக இருக்கின்றது.
 
வினைல் குளோரைடு அல்லது அயனாக்கற்கதிர்ப்பு ஆகியவற்றுக்கு வெளிப்படுவதைத் தவிர்த்து மூளைக் கட்டிகளுடன் தொடர்புடைய இதுவரை அறியப்பட்ட சூழ்நிலைக் காரணிகள் ஏதுமில்லை. திசு மரபு பிறழ்வுகள் மற்றும் கட்டி அடக்கி மரபணுக்கள் என்று பொதுவாக அழைக்கப்படுவனவற்றின் நீக்கங்கள் மூளைக் கட்டிகளின் சில வகைகளுக்குக் காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. வோன் ஹிப்பல்-லிண்டா நோய்க்குறி, பன்மடங்கு நாளமில்லா திசு மிகைப்பு, நரம்பு நார்க்கட்டி வகை 2 போன்ற பல்வேறு மரபுவழி நோய்களுடன் கூடிய நோயாளிகளுக்கு மூளைக் கட்டிகள் உருவாவதற்கான இடர்பாடுகள் மிகவும் அதிகமாக இருக்கின்றன. மொபைல் தொலைபேசிகள் மூளைக் கட்டிகள் ஏற்படுவதற்குக் காரணமாகலாம் என ஒரு அறிக்கை குற்றம் சாட்டுகிறது.<ref>Nancy McVicar [http://www.mindfully.org/Health/2004/Cell-Phones-Tumors14oct04.htm Study Finds Cell Phones Could Cause Noncancerous Tumors]</ref> (பார்க்க ''மொபைல் தொலைபேசி கதிரியக்கமும் உடல்நலமும்'' )
"https://ta.wikipedia.org/wiki/மூளைக்_கட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது