நோய்க்காவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 30 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 18:
==வகைகள்==
===ஆத்ரோபோடா===
பொதுவில் அறியப்பட்ட நோய்க்காவிகளாவன [[முதுகெலும்பிலி|முதுகெலும்பிலிகளான]] (Invertibrates) ஆத்ரோபோடா (Arthropoda) [[தொகுதி (உயிரியல்)|தொகுதியை அல்லது கணத்தைச்]] (Phylum) சேர்ந்த [[உயிரினம்|உயிரினங்கள்]], பொதுவாக [[பூச்சி|பூச்சிகள்]] (insects). ஆத்ரோபோடா விலங்குகள் மனிதருக்கு கடித்தல், குத்துதல், தொல்லை கொடுத்தல் போன்ற நேரடியான பாதிப்புக்களை கொடுப்பதுடன் நோய்க்காவியாக செயல்படுவதிலும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஆத்ரோபோடாவிலுள்ள பல சாதியைச் சேர்ந்த [[உயிரினம்|உயிரினங்கள்]] நோய்க்காவியாக இருப்பினும், மிக முக்கியமான நோய்க்காவிகள் [[நுளம்பு]]/கொசுவும் (mosquito), தெள்ளும் (tick) ஆகும். இவற்றுடன் ஈக்கள் (flies), பேன்கள் (lice), தெள்ளுப்பூச்சி (fleas) போன்றனவும் நோய்க்காவியாக செயற்படுகின்றன. குருதியை உணவாகக்கொள்ளும் ஆத்ரோபோடா [[உயிரினம்|உயிரினங்களே]] [[மனிதன்|மனிதர்களில்]] ஏற்படும் [[தொற்றுநோய்|தொற்றுநோய்க்கான]] நோய்க்காவிகளில் அதிக பாதிப்பை கொடுப்பன<ref> Goddard, J. (2000). ''Infectious Diseases and Arthropods''. Totowa, NJ: Humana Press.</ref>.
 
===பாலூட்டிகள்===
இவற்றுடன் சில வீட்டு [[விலங்கு|விலங்குகளும்]], [[ஒட்டுண்ணி வாழ்வு|ஒட்டுண்ணிகளை]] [[மனிதன்|மனிதருக்கோ]], அல்லது வேறு [[பாலூட்டி|பாலூட்டிகளுக்கோ]] கடத்த வல்ல வேறு [[பாலூட்டி|பாலூட்டிகளும்]] கூட நோய்க்காவியாக தொழிற்பட வல்லன. உதாரணமாக அண்மைக் காலங்களில் பரவிய [[பறவைக் காய்ச்சல்]], [[பன்றிக் காய்ச்சல்]] போன்றன முறையே பறவைகள், பன்றிகளிலிருந்து மனிதருக்கு பரவுகின்றன.
 
ஒரு நோய்க்காவியானது, [[நோய்க்காரணி|நோய்க்காரணியான]] [[ஒட்டுண்ணி வாழ்வு|ஒட்டுண்ணி]] [[உயிரினம்|உயிரினத்தின்]] வாழ்க்கை வட்டத்தின் சில நிலைகளுக்கு அவசியமானதாக இருப்பதுடன், நேரடியாக [[நோய்க்காரணி|நோய்க்காரணியை]] [[ஓம்புயிர்|ஓம்புயிரினுள்]] உட்செலுத்தும் தன்மையைக் கொண்டிருக்கும்.
வரிசை 30:
*Aedes aegypti, Aedes albopictus என்னும் இரு நுளம்பு இனங்கள் டெங்கு காய்ச்சலுக்கான (Dengu fever) வைரசை கடத்தும்[http://climateprogress.org/2009/07/10/climate-change-bolsters-spread-of-dengue-fever-in-28-states/].
*மஞ்சள் காய்ச்சலுக்கான (yellow fever) வைரசை Aedes aegypti இன நுளம்பு/கொசு காவிச்செல்கிறது.
ஆ)Pulex, Xenopsylla என்னும் தெள்ளுப் பூச்சிகளால் ஒருவகை பிளேக்நோய் (Bubonic Plague) கடத்தப்படுகிறது.<br></br />
இ)Tsetse ஈக்களின் பல சாதிகள், ‘ஆப்பிரிக்க தூக்க நோய்' என்று அழைக்கப்படும் African trypanosomiasis நோய்க்காரணியை கடத்துகின்றன.
==நோய்க்காவிகளின் புத்தெழுச்சி==
குறைவாக இருந்த பல [[தொற்றுநோய்|தொற்றுநோய்கள்]], 1970 ஆம் ஆண்டிற்குப் பின்னர், மீண்டும் அதிகளவில் வரத் தொடங்கின. இதற்கான காரணங்களில் ஒன்று நோய்க்காவிகளான பூச்சிகளின் அதிகரிப்பாகும். பூச்சிநாசினிகளின் பாவனை அதிகரித்தமையால், அவற்றை எதிர்க்கும் ஆற்றல் கொண்ட பல புதிய இனங்கள் பூச்சிகளில் தோன்றின. அவை தொற்று [[நோய்க்காரணி|நோய்க்காரணிகளை]] காவிச்செல்ல உதவியமையால் [[தொற்றுநோய்|தொற்றுநோய்த்]] தாக்கம் புத்தெழுச்சி பெற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.<ref> Gubler, D. J. (1997). "Resurgent Vector-Borne Diseases as a Global Health Problem." Emerging Infectious Diseases 4(3):442–450</ref>.
[[புவி சூடாதல்|புவி சூடாதல் அல்லது உலக வெப்பமயமாதல்]] காரணமாக, மனித தொற்றுநோய்களைக் கடத்தும் நோய்க்காவிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், தொற்றுநோய்களும் அதிகரிக்கும் அப்பாயம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்[http://www.sciencedaily.com/releases/2009/01/090127202042.htm]
==மேலதிக தகவலுக்கு==
*நோய்க்காவியை கட்டுப்படுத்த<ref> '''Vector Control''', 'Methods for use by individuals and communities', Prepared by Jan A. Rozendaal, [http://www.who.int/en/ World Health Organization], Geneva, 1997</ref>
 
==அடிக்குறிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/நோய்க்காவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது