குரோமியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 108 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up, removed: <!-- interwiki -->
வரிசை 1:
{{தகவற்சட்டம் குரோமியம்}}
<big>'''குரோமியம்'''</big> (தமிழில் '''நீலிரும்பு''', ''Chromium'') '''Cr''' என்கிற வேதியியல் குறியீடு கொண்டுள்ள ஒரு தனிமம். இதுவொரு [[மாழை]]யும் (உலோகமும்) ஆகும். இதன் [[அணுவெண்]] 24. குரோமியம் இயற்கையில் தனி உலோகமாகக் கிடைப்பதில்லை. குரோமியத்தின் செழுமை பூமியின் மேலோட்டுப் பகுதியில் ஓரளவு செறிவாகக் (0.02 %) காணப்படுகிறது. குரோமியம், குரோமைட்டு என்ற செவ்வீயத் தாது, குரோமிடைட்டு, குரோகோய்சைட்டு போன்ற கனிமங்களில் காணப்படுகின்றது. இதில் குரோமைட்டு கனிமம் இந்தியாவில் [[சேலம்]] மாவட்டத்திலும் [[துருக்கி]], [[ஈரான்]], [[அல்பேனியா]], [[பின்லாந்து]], [[பிலிப்பைன்சு]], [[மலகாசி]], தென் உரொடீசியாவிலும் கிடைக்கின்றது.
 
== கண்டுபிடிப்பு ==
வரிசை 19:
 
== பயன்கள் ==
* மாழையியல் பயன்களில், நீலிரும்பு அரிப்பெதிர்ப்பையும் பளபளப்பையும் தூண்டுகிறது.எஃகுடன் சிறிதளவு குரோமியத்தைச் சேர்க்க, கலப்பு உலோகத்தின் கடினத் தன்மை பல மடங்காக அதிகரிக்கிறது. தேய்மானத்தை எதிர்ப்பதால் இயந்திரப் பொறிகளில் உள்ள உட் கூறுகளின் தேய்மானத்தைத் தவிர்த்துக் கொள்ள முடிகிறது. இதன் புறப் பரப்பில் வீழ்படியும் குரோமியம் கார்பைடு மிகவும் கடினமான பொருளாகும். இதுவே தேய்மானத்திற்கு எதிரான ஒரு காப்புக் கவசமாக விளங்குகிறது. உயர் வெப்பந்தாங்கும் பொருட்களின் உற்பத்தியில் இது முக்கிய மூலப்பொருளாக இருக்கிறது.
 
* 1000 பாகை செல்சியசு வரை வெப்ப நிலையைத் தாக்குப் பிடிப்பதால் உயர் வெப்ப நிலையில் செயலாற்றும் கருவிகளை வடிவமைக்கவும் இது பயன் தருகிறது. குரோமைட்டு தாதுவை கரித் தூளுடன் சேர்த்து மின் உலை மூலம் வெப்பப்படுத்தினால் பெரோ குரோம் என்ற பொருள் கிடைக்கிறது. இது மணித் தாங்கிங்களை (Ball bearing) தயாரிக்க உதவும் மூலப் பொருளாகப் பயன்படுகிறது.
 
* 17 முதல் 19 விழுக்காடு குரோமியம், 8 முதல் 13 விழுக்காடு நிக்கல், ௦.1 விழுக்காடு கார்பன் கொண்ட எஃகான துருப்பிடிக்காத எஃகு (Stainless steel) எரிவாயு அடுப்பு, சைக்கிள், மகிழுந்து வண்டிகளுக்கான உதிரி பாகங்கள், சக்கரங்களுக்கான வட்டச் சட்டம்(பால் பேரிங்), போன்ற பல பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.
 
* 4 விழுக்காடு குரோமியம், 34 விழுக்காடு நிக்கல் 62 விழுக்காடு இரும்பு கலந்த [[நைக்குரோம்]] உயரளவு மின்தடை காரணமாக மின்னடுப்பு, மின்னுலைக்கான மின் கம்பியாகப் பயன்படுகிறது. இதனுடன் சிறிதளவு கோபால்ட்டு, மாலிப்பிடினத்தைச் சேர்க்க மின் கம்பியானது 650 -900பாகை செல்சியசு வரை வெப்பம் தாங்குகிறது 74 :18 :8 என்ற விகிதத்திலான [[இரும்பு]], குரோமியம் [[நிக்கல்]] கலப்பு மாழை (உலோகம்) 1100 பாகை செல்சியசு வரை வெப்பத்தையும், 80 : 20 நிக்கல், குரோமியக் கலப்பு உலோகம் 1150 பாகை செல்சியசு வரை வெப்பத்தையும் தாங்கவல்லன.
 
* கோபால்ட்டு, மாலிப்பிடினம், குரோமியம் கலந்துள்ள கலப்பு உலோகம் கெமோ குரோமியம் என்பர். இது உடல் நலத்திற்குச் சிறிதும் தீங்கிழைக்காதது{{{fact}}. அதனால் செயற்கை உறுப்புகள் அறுவைச் சிகிச்சைக் கருவிகள் செய்யப் பயன்படுகின்றது.
 
* [[மாங்கனீசு]],குரோமியம் மற்றும் ஆண்டிமணி இவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு மலிவான கலப்பு உலோகம் வெப்ப நிலைக்கு ஏற்ப மாறுபடும் காந்தப் பண்பைப் பெற்றுள்ளது. இது தானியங்கு கருவிகளுக்கான வெப்ப நிலை உணர்வறி உறுப்புகளில் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது.
 
* குரோமியத்தையும் மாக்னசைட்டு என்ற கனிமத்தையும் சேர்த்து உயர் வெப்பநிலையைத் தாக்குப் பிடிக்கும் தீச்செங்கலை உருவாக்கயுள்ளனர். இது உலோகங்களை உருக்கும் சூட்டுலைகள் வார்ப்பச்சுகள் போன்றவை தயாரிக்கப் பயன்படுகிறது.
 
* குரோமைட்டுக் கனிமம் மற்றும் பொட்டாசியம் சோடியம் குரோமேட்டுகள் கலந்த குரோம் ஆலம் என்ற பொருள் தோல் பதனிடும் தொழில் பங்கேற்றுள்ளது. இது துணி ,கண்ணாடி , [[பீங்கான்]] ஆகியவை தயாரிக்கும் தொழிற்ச்சாலைகளிலும் சாயப் பொருள் உற்பத்தி முறையிலும் பயன்படுகிறது.
 
* செயற்கை மாணிக்கம் (Ruby) அலுமினியம் ஆக்சைடு (௦.05 %) மற்றும் குரோமியம் ஆக்சைடு கொண்டு தயாரிக்கப்படுகிறது. இது திண்ம சீரொளிகளை (இலேசர்களை) உருவாக்கப் பயனளிக்கிறது
 
* கண இரக வண்டிகளின் சோதனை ஓட்டக் காலத்தைக் குறைக்க எரி பொருளோடு சிறிதளவு குரோமிக் காடியை சேர்க்கின்றார்கள் . எரிகலனில் எரிக்கப்படும் குரோமிக் ஆக்சைடு நுண் துகள்களாக உட்சுவர் பகுதிகளில் ஒட்டிக் கொண்டு இயக்கத்தின் போது கூடுதலான உராய்வுக்கு உட்பட்டு கரடு முரடான பிறபகுதிகளைச் சமப்படுத்தி தடையில்லா இயக்கத்திற்கு விரைவில் தயார்படுத்தி விடுகிறது.
 
* ஒளிப் பதிவு நாடாக்களில் குரோமிக் ஆக்சைடு பயன்படுத்தப்படுகிறது. ஒளிப்படச் சுருள் மருந்துப் பொருள் உற்பத்தியில் வினையூக்கியாக குரோமிக் ஆக்சைடு பயன்படுகிறது.
 
* கலப்பு உலோகங்கள் மட்டுமின்றி முலாம் பூச்சிற்கும் குரோமியம் பெருமளவில் பயன்படுகிறது. இணைதிறன் 2 என்றவாறுள்ள சேர்மங்கள் குரோமியம் புரோமைடு போன்றவை வளி மண்டலக் காற்றால் மிக எளிதில் ஆக்சிஜனேற்றம் பெற்று விடுகின்றன. குரோமியம் அரியெதிர்ப்பு கொண்டதால் முலாம் பூச்சுத் தொழிலில் பயன்படுகிறது. இணை திறன் 3 என்றவாறுள்ள சேர்மங்களிளிருந்து மின்னாற்பகுப்பு மூலம் குரோமியத்தைப் பிரித்து பொருளின் மீது படிய வைப்பது மிகவு கடினம். இணைதிறன் 6 என்றவாறுள்ள குரோமியச் சேர்மம் (குரோமிக் காடி) குரோமிய முலாம் பூச்சிற்கு மிகவும் உகந்ததாக உள்ளது. குரோமியப் பூச்சை உலோகங்களுக்கு மட்டுமின்றி நெகிழ்மங்களின் மீதும் செய்ய முடியும்.
 
 
=== மேற்கோள்கள் ===
{{reflist}}
* [http://periodic.lanl.gov/elements/24.html Los Alamos National Laboratory - Chromium]
 
<!-- interwiki -->
{{வார்ப்புரு:தனிம வரிசை அட்டவணை}}
 
[[பகுப்பு:தனிமங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/குரோமியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது