சீர்காழி இரா. அரங்கநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 42:
இவர் இந்தியாவின் பல்வேறு பல்கலைக் கழகங்களில் நூலகராகவும், நூலகத் துறைப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். நூலகவியலில் உயர் பட்டங்களை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட இந்திய நூலகவியல் பள்ளியில் பணிப்பாளராகவும் பணியாற்றினார். தவிர, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள பல்வேறு நூலகவியல் சார்ந்த உயர்தொழிற் கழகங்களில், உறுப்பினராக இருந்து உயர் பதவிகளையும் வகித்துள்ளார்.
 
==வாழ்க்கை வரலாறு==
==இளமைக் காலமும் கல்வியும்==
===இளமைக் காலம்===
அரங்கநாதன் 12 ஆகத்து 1892 ஆம் ஆண்டு அக்காலத்துச் சென்னை மாகாணத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்த சீர்காழியில் பிறந்தார். பெற்றோருக்கு இவர் மூத்த மகன். இவரது தந்தையார் இராமாமிருதம், தாயார் சீதாலட்சுமி. இராமாமிருதம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உபயவேதாந்தபுரம் என்னும் ஊரைச் சேர்ந்தவர், படித்த பண்பாடுள்ள மனிதர். இவர் நடுத்தர அளவில் நிலமொன்றை வைத்து நெற்செய்கையில் ஈடுபட்டிருந்தார். மக்களுக்கு இராமாயணக் கதைகூறும் வல்லமை பெற்ற இவருக்கு சுற்றாரிடம் நல்ல மதிப்பு இருந்தது. இராமாமிருதம் 1898 ஆம் ஆண்டில் அவரது 30 ஆவது வயதில் திடீரெனக் காலமானார்.<ref>Sarada Ranganathan Endowment for Library Science, ''Memorabilia Ranganathan, Ranganathan Centenary Series 5'', Bangalore, 1994. பக். V.</ref> அப்போது அரங்கநாதனுக்கு ஆறு வயது. பின்னர் இவர் பள்ளி ஆசிரியராக இருந்த பாட்டனாரிடம் வளர்ந்தார். இவர் மூலமாக இந்து நூல்கள் பற்றி அரங்கநாதனுக்குப் பயிற்சி ஏற்பட்டது. இதனால், நூலகவியல் தொடர்பான இவரது ஆக்கங்களிலும் ஆங்காங்கே இந்து நூல்களின் தாக்கங்கள் காணப்பட்டன.<ref>Garfield, Eugene (6). "A Tribute to S. R. Ranganathan, the Father of Indian Library Science. Part 1. Life and Works". Essays of an Information Scientist 7, 1984, பக். 38, 39</ref>
 
===கல்வி===
சீர்காழியில் இருந்த பள்ளி ஒன்றில் தனது கல்வியைத் தொடங்கிய அரங்கநாதன், பின்னர் அதே ஊரில் இந்து உயர்நிலைப் பள்ளியில் தனது கல்வியைத் தொடர்ந்தார். 1908/1909ல் இடம்பெற்ற மெட்ரிக்குலேசன் பரீட்சையில் முதல் வகுப்பில் வெற்றி பெற்றார். 1909ல் [[சென்னை கிறித்தவக் கல்லூரி]]யில் (Madras Christian College) சேர்ந்த அரங்கநாதன் 1913ல் இளங்கலைப் பட்டத்தையும், 1917 ஆம் ஆண்டில் கணிதத்தில் முதுகலைப் பட்டத்தையும் பெற்று வெளியேறினார். பின்னர் [[சைதாப்பேட்டை]]யில் இருந்த ஆசிரியர் கல்லூரியில் ஆசிரியத் தகுதிச் சான்றிதழையும் பெற்றார்.
 
===திருமணமும் குடும்ப வாழ்க்கையும்===
அரங்கநாதன் 1907 ஆம் ஆண்டில் அவருக்கு 15 வயதாக இருக்கும்போது ருக்மணி என்னும் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். 1928ல், [[திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்]] குளத்தில் குளிக்கும்போது ஏற்பட்ட விபத்தில் ருக்மணி இறந்துவிட்டார். இந்தத் திருமணம் மூலம் அரங்கநாதனுக்குப் பிள்ளைகள் இல்லை. அரங்கநாதன் 1929ல் இரண்டாவது முறையாக சாரதா என்னும் பெண்ணைத் திருமணம் செய்தார். சாரதா மூலம் அரங்கநாதனுக்கு ஒரு மகன் உண்டு.
 
==தொழில்==
"https://ta.wikipedia.org/wiki/சீர்காழி_இரா._அரங்கநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது