இயேசு பேசிய மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 1:
[[இயேசு]] எந்த மொழியைப் பேசினார்? எம்மொழியில் மக்களுக்கு போதித்தார்? இக்கேள்விகளுக்கு விடை தேடும் ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன.
 
இயேசு வாழ்ந்த காலத்திலும் இடத்திலும் மக்கள் எம்மொழியைப் பேசினரோ, எந்த மொழியை எளிதில் புரிந்துகொண்டனரோ, அதே மொழியைத்தான் இயேசுவும் பேசியிருப்பார் என நாம் முடிவுசெய்யலாம் <ref>[http://en.wikipedia.org/wiki/Language_of_Jesus இயேசு பேசிய மொழி]</ref>.<ref>[http://www.newadvent.org/cathen/14408a.htm அரமேய (சிரிய) மொழி - கத்தோலிக்க கலைக்களஞ்சியம்]</ref>. ஆனால் இயேசு வாழ்ந்த காலத்தில் பாலஸ்தீன நாட்டில் நான்கு மொழிகள் வெவ்வேறு அளவிலும் நிலையிலும் பயன்பாட்டில் இருந்தன. அவை:
வரிசை 18:
===2) கிரேக்க மொழி===
 
இலத்தீனைவிட கிரேக்க மொழி இயேசு வாழ்ந்த நாட்டில் அதிகம் பயன்படுத்தப்பட்டது. அலக்சாந்தர் மன்னர் (கி.மு. 356 - கி.மு. 323) பாலஸ்தீனப் பகுதியை கி.மு. 331இல் கிரேக்க ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டுவந்தார். ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகள் அங்கே கிரேக்க கலாச்சாரமும் மொழியும் பரவின. குறிப்பாக, துறைமுகப் பட்டினங்களில் கிரேக்க தாக்கம் மிகுதியாக இருந்தது. ஆயினும் அரமேய மொழியே யூதர் நடுவில் செல்வாக்குப் பெற்றிருந்தது.
 
இயேசு கிரேக்க மொழியைச் சிறப்பாகக் கற்றறிந்திருப்பார் என்று சொல்ல முடியாது. தம் போதனைகள அவர் கிரேக்கத்தில் அளித்திருக்கவும் முடியாது. நாசரேத்து மக்களும் கடற்கரையோரம் வாழ்ந்த மக்களும் கிரேக்க மொழியைத் தவிர்த்திருப்பார்கள். தேவையான பொழுது, பயன்படுத்த வேண்டிய அளவுக்கு அவர்கள் கிரேக்கத்தைத் தெரிந்திருப்பார்கள்.
 
இயேசு பிலாத்துவிடம் விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட போது கிரேக்க மொழியில் பேசியிருக்கக் கூடும்.
வரிசை 26:
===3) எபிரேயம்===
 
[[எபிரேய மொழி]] யூத மக்களின் புனித மொழி. மிகப் பழமையான மொழியும் கூட. இசுரயேலர் பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்ட பின்னர் எபிரேய மொழி வீழ்ச்சி கண்டது (கி.மு. 598). அசீரிய, பெர்சிய பகுதிகளில் பேசப்பட்ட அரமேய மொழி முதன்மை பெற்றது. பாபிலோனியாவிலிருந்து வீடு திரும்பிய இசுரயேலர்(கி.மு. 538) மீண்டும் அரமேயம் பேசலாயினர். எபிரேய மொழி பெரும்பாலும் மறைந்துவிட்டாலும், மறக்கப்படவில்லை. கி.மு. 180இல் [[சீராக்கின் ஞானம் (நூல்)|சீராக் நூல்]] எழுதப்பட்டதைக் குறிப்பிடலாம்.
 
அதே சமயத்தில் தொழுகைக் கூடத்தில் வழிபாட்டின்போது [[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டு]] பாடங்கள் எபிரேய மொழியில் வாசிக்கப்படுவதை மக்கள் புரிந்துகொள்ள முடியாமல் போகவே, அரமேய மொழியில் உடனுக்குடன் மொழிபெயர்த்துக் கூறப்பட்டது.
வரிசை 32:
===4) அரமேயம்===
 
[[இயேசு|கிறித்துவுக்குப்]] பின் முதல் நூற்றாண்டில் யூத மக்கள் சாதாரண, அன்றாட வாழ்வில் பயன்படுத்திய மொழி அரமேய மொழியாகும். கி.மு. முதல் நூற்றாண்டின் நடுவிலிருந்து கல்வெட்டுகள், கல்லறைகள் மீது பொறிக்கப்பட்ட வசனங்கள் முதலியவை அரமேய மொழியில் எழுதப்பட்டன. [[சாக்கடல்]] அருகே [[கும்ரான்]] என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட சுருள்களில் சில, அரமேய மொழியில் எழுதப்பட்டுள்ளன.
 
அரமேயம் என்னும் மொழி செமித்திய குடும்பத்தைச் சார்ந்தது. மத்திய தரைக்கடலின் கிழக்குப் பகுதியில் கி.மு. 8ஆம் நூற்றாண்டிலிருந்து கி.மு. 3ஆம் நூற்றாண்டுவரை வழங்கிவந்த முதன்மை மொழி அது. அலக்சாந்தர் மற்றும் உரோமையர் ஆதிக்கத்தின் கீழ் கிரேக்கமும் இலத்தீனும் பரவத் தொடங்கியபோதிலும் அரமேயம் தன் முதன்மையை இழக்கவில்லை. கி.பி. 7ஆம் நூற்றாண்டில் அரபு ஆதிக்கம் ஏற்படும்வரையிலும் அரமேயம் சிறப்புற்றிருந்தது.
வரிசை 76:
{{cquote|ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: "தம் சகோதரரையோ சகோதரியையோ 'ராக்கா' ('முட்டாளே') என்பவர் தலைமைச்சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்; 'அறிவிலியே' என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார்.}}
 
===''மாம்மன்'' (Μαμωνᾶς — Mamōnâs = Mammon)===
 
[[மத்தேயு|மத்தேயு 6:24]]
வரிசை 108:
{{cquote|ஆண்டவரிடம் அன்பு செலுத்தாத எவரும் சபிக்கப்படுக! மாரனாத்தா!}}
 
குறிப்பு: அரமேய மொழியில் מרנא תא அல்லது מרן אתא (Maranatha) என்றால் ''ஆண்டவரே வருக'' அல்லது ''எம் ஆண்டவரே வருக'' எனப் பொருள்படும்.
 
===''ஏலி, ஏலி லெமா சபக்தானி?'' (Ηλει Ηλει λεμα σαβαχθανει = Eli Eli lema sabachthani===
வரிசை 169:
{{cquote|மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் நான் கேபாவைப் பார்த்துப் பேச எருசலேமுக்குப் போனேன்.}}
 
மேற்காட்டிய பாடங்களில் ''கேபா'' என்னும் பெயர் சீமோன் பேதுருவுக்கு ஒரு சிறப்புப் பெயராகக் கொடுக்கப்பட்டுள்ளதைக் காணலாம். சீமோன் என்பது இயற்பெயர்; சிறப்புப் பெயர் ''கேபா'' என்பதற்குப் ''பாறை'' என்பது பொருள். இது பழைய தமிழ் மொழிபெயர்ப்பில் ''இராய்'' என்றிருந்தது. தெலுங்கு மொழிவழக்கில் அது ''கல்'', ''பாறை'' என்னும் பொருளுடையது. ''கேபா'' என்பது கிரேக்கத்தில் பெண்பால் என்பதால் அது ஆண்பாலாக மாற ''கேபாஸ்'' (Κηφας = Cephas/Kephas) என்றாயிற்று. அதன் கிரேக்க மொழிபெயர்ப்பும் ''பேத்ரா'' என்னும் பெண்பால் சொல்லிலிருந்து ''பேத்ரோஸ்'' (Πέτρος = Petros) என ஆண்பாலாக மாற்றப்பட்டது.
 
===''தோமா'' (Θωμας = Thomas)===
வரிசை 217:
''கொல்கொதா'' என்னும் பெயர் அரமேயத்திலிருந்து வருகிறது. ''மண்டைஓடு'' என்பது அதன் பொருள். பழைய தமிழ் மொழிபெயர்ப்பில் ''கபாலஸ்தலம்'' என்றிருந்தது. ''வுல்காத்தா'' (Vulgata = Vulgate) என்னும் இலத்தீன் மொழிபெயர்ப்பில் calvaria (ஆங்கிலத்தில் calvary) என்பதும் இப்பொருளையே தரும்.
 
அரமேயத்தில் இது גלגלתא = Gûlgaltâ என்று இருந்திருக்கும்.
 
===''கபதா'' (Γαββαθα = Gabbatha)===
"https://ta.wikipedia.org/wiki/இயேசு_பேசிய_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது