இர்வின் பிரபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 18 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 76:
'''இர்வின் பிரபு ''' (''The Lord Irwin'') (ஏப்ரல் 16, 1881 – திசம்பர் 23, 1959) என்று பரவலாகவும் 1925 முதல் 1934 வரையும் பின்னர் 1934 முதல் 1944 வரை '''ஆலிபாக்சு வைகௌன்ட்டு''' (''The Viscount Halifax'') எனவும் அழைக்கப்பட்ட '''எட்வர்டு பிரெடிரிக் லின்ட்லெ வுட், ஆலிபாக்சின் முதலாம் பிரபு''' (''Edward Frederick Lindley Wood, 1st Earl of Halifax'') 1930களில் [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானிய]] [[கன்சர்வேட்டிவ் கட்சி (ஐக்கிய இராச்சியம்)|கன்சர்வேட்டிவ்]] கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவராக விளங்கியவர். இர்வின் பல முக்கியப் அமைச்சகங்களில் பணியாற்றியிருந்தார்; அவற்றில் வெளிநாட்டுச் செயலராக அவர் 1938 முதல் 1940 வரை பணியாற்றியது குறிப்பிடத்தக்கதாகும். [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போருக்கு]] முன்னதாக [[ஐரோப்பா|ஐரோப்பிய நாடுகள்]] கடைபிடித்த [[விட்டுக் கொடுத்தல் கொள்கை]]யை வடிவமைத்தவராக இர்வின் கருதப் படுகிறார். இரண்டாம் உலகப் போரின்போது பிரித்தானியத் தூதராக [[வாசிங்டன், டி. சி.|வாசிங்டனில்]] பணிபுரிந்தார்.
==இந்தியாவின் வைசிராய்==
இர்வின் பிரபு 1926 முதல் 1931 வரை [[இந்தியாவின் வைசிராய்|இந்தியாவின் வைசிராயாக]] பணியாற்றினார். இவரது பாட்டனார் முன்பு இந்தியாவிற்கான அமைச்சராக இருந்ததை கருத்தில்கொண்டு மன்னர் ஜார்ஜ் V பரிந்துரையின்படி நியமிக்கப்பட்டு ஏப்ரல் 1, 1926ஆம் ஆண்டு மும்பை வந்திறங்கினார்.
 
அவரது பதவிக்காலத்தில் பெருத்த அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன. இந்தியா தன்னாட்சிக்குத் தயாரானநிலையில் உள்ளதா என ஆராய அமைக்கப்பட்ட [[சைமன் குழு]]வில் இந்தியர் எவரும் இடம் பெறாததை கண்டித்து நாடெங்கும் போராட்டங்கள் நடந்தன. இவற்றைக் கட்டுப்படுத்த இர்வின் வழங்கிய சலுகைகளை அரைமனதானதொன்றாக இந்தியர்கள் கருத இலண்டனில் கூடுதலானவையாக கருதப்பட்டன. இக்காலத்தில் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்: சைமன் குழு அறிக்கைக்கு எதிரான போராட்டங்கள்; நேரு அறிக்கை; அனைத்துக் கட்சி மாநாடு; [[அகில இந்திய முசுலிம் லீக்|முசுலிம் லீக்கின்]] தலைவர் [[முகமது அலி ஜின்னா]] பதினான்கு அம்சக் கோரிக்கை; [[மகாத்மா காந்தி]]யின் தலைமையில் [[இந்திய தேசிய காங்கிரசு]] நடத்திய [[உப்பு சத்தியாக்கிரகம்|குடிகளின் ஒத்துழையாமை இயக்கம்]] மற்றும் [[இந்திய வட்டமேசை மாநாடுகள்]] ஆகும்.
வரிசை 87:
*காங்கிரசின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்த அரசு வெளியிட்ட அனைத்து அவசரச் சட்டங்களையும் திரும்பப் பெறும்.
*வன்முறை தவிர்த்த அனைத்து வழக்குகளையும் அரசு விலக்கிக் கொள்ளும்.
*ஒத்துழையாமை இயக்கத்திற்காக கைதாகி தண்டனை பெற்ற அனைத்து காங்கிரசுத் தொண்டர்களையும் விடுவிக்க அரசு உடன்பட்டது.
 
மேலும் இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் காங்கிரசின் ஒரே சார்பாளராக காந்தி கலந்து கொள்ளவும் உடன்பாடு ஏற்பட்டது.
 
மார்ச்சு 20, 1931 அன்று இர்வின் பிரபு ஆட்சியிலிருந்த இளவரசிக்காக கொடுக்கப்பட்ட ஓர் விருந்தில் காந்தியின் நேர்மை, தூய்மை மற்றும் நாடுப்பற்றை பாராட்டிப் பேசினார். இதற்கு பின்னர் ஒரு மாத காலத்தில் பணி ஓய்வு பெற்று நாடு திரும்பினார். இர்வின் திரும்பிய பின்னர் அமைதி நிலவினாலும் ஓராண்டுக்குள்ளேயே மாநாடு தோல்வியடைந்து காந்தி மீண்டும் கைது செய்யப்பட்டார்.
 
இர்வினின் வைசிராய் பதவிக்காலம் இருதரப்பினருக்கும் நடுநிலையில் இருந்தது; கண்டிப்புடனும் தனித்தன்மையுடனும் செயல்பட்டார். எனவே நாடு திரும்பிய பின்னர் மிகுந்த மதிப்புடன் அரசியலில் மீண்டும் ஈடுபட முடிந்தது.
 
==மேற்கோள்கள்==
வரிசை 116:
 
{{இந்திய விடுதலை இயக்கம்}}
 
[[பகுப்பு:1881 பிறப்புகள்]]
[[பகுப்பு:1900 இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/இர்வின்_பிரபு" இலிருந்து மீள்விக்கப்பட்டது