தவக் காலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 63 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 9:
==தவக் காலத்திற்கான விவிலிய அடிப்படை==
 
[[மத்தேயு]], [[மாற்கு]], [[லூக்கா நற்செய்தி|லூக்கா]] ஆகிய [[நற்செய்தி|நற்செய்தியாளர்கள்]] இயேசு பாலைநிலத்தில் நாற்பது நாள்கள் இரவும் பகலும் நோன்பிருந்தார் என்னும் தகவலைத் தருகின்றனர் (காண்க: மத் 4:1-11; மாற் 1:12-13; லூக் 4:1-13). இவ்வாறு [[இயேசு]] நோன்பிருந்ததைக் கிறித்தவர்களும் தம் வாழ்வில் கடைப்பிடிக்க அழைக்கப்படுகிறார்கள்.
 
இயேசு நோன்பிருந்தபோது [[சாத்தான்|அலகை]] அவரைச் சோதித்தான். தம் பசியை ஆற்ற இயேசு ''கல்லை அப்பமாக மாற்றலாம்'' என்றும், தன்னை வணங்கினால் உலக அரசுகளை அவருக்குக் கொடுப்பதாகவும், எருசலேம் கோவிலின் உச்சியிலிருந்து கீழே குதித்தாலும் அவருக்குத் தீங்குநிகழாமல் கடவுள் காப்பார் என்றும் கூறி, மூன்று முறை அலகை இயேசுவைச் சோதித்தான். இயேசு தம்மை மாயாஜாலம் நிகழ்த்துபவர் போல ஆக்கலாம் என்றும், கடவுளை மறுத்து அலகையை வணங்கலாம் என்றும், கடவுளின் வல்லமைக்குச் சவால் விடலாம் என்றும் வந்த சோதனைகளுக்கு இடம் கொடாமல், அவற்றை முறியடித்து, அலகையை வென்றார் என்று நற்செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறே கிறித்தவர்களும் அலகையின் சோதனையை முறியடிக்க தவக் காலம் ஒரு வாய்ப்பாக அமைகிறது.
 
நாற்பது நாள் நோன்பு என்பதற்குப் [[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டிலும்]] சில குறிப்புகள் உண்டு. இசுரயேல் மக்களைப் பாலைநிலத்தில் வழிநடத்திய [[மோசே]] சீனாய் மலையில் நாற்பது நாள்கள் கடவுளோடு இருந்தார் என [[விடுதலைப் பயணம் (நூல்)|விடுதலைப் பயணம்]] நூல் கூறுகிறது (காண்க: விப 24:18). அதுபோலவே [[எலியா]] இறைவாக்கினர் ''நாற்பது பகலும் நாற்பது இரவும் நடந்து, ஓரேபு என்ற கடவுளின் மலையை அடைந்தார்'' (காண்க: [[1 அரசர்கள் (நூல்)|1 அரசர்கள் 19:8)]].
வரிசை 19:
==தவக் காலம் தோன்றிய வரலாறு==
 
தொடக்க காலத் திருச்சபையில் [[இயேசுவின் உயிர்த்தெழுதல்]] திருவிழா மைய இடம் பெற்றது. அந்த விழாவை மகிழ்ச்சியோடும் ஆரவாரத்தோடும் கொண்டாடுவதற்கு முன்னால், குறிப்பாக அந்நாளில் [[திருமுழுக்கு|திருமுழுக்குப்]] பெறுவதற்கு முன் ஓரிரு நாள்கள் கிறித்தவர் நோன்பு இருந்தனர். [[இயேசுவின் உயிர்த்தெழுதல்|உயிர்த்தெழுதல் ஞாயிறுக்கு]] முந்திய ஞாயிறு ''பாடுகளின் ஞாயிறு'' எனக் கடைப்பிடிக்கப்பட்டது. அந்த வாரத்தின் புதன், வெள்ளி ஆகிய நாள்களில் நற்கருணைக் கொண்டாட்டம் நிகழ்த்தப்படவில்லை (5ஆம் நூற்றாண்டு).
 
பெரிய குற்றம் செய்தவர்கள் கடவுளோடும் திருச்சபையோடும் மீண்டும் நல்லுறவு கொள்வதற்குத் தயாரிப்புக் காலமாக ஆறு வாரங்கள் ஒதுக்கும் வழக்கம் உருவானது. தவத்திற்கு அடையாளமாக உடல்மீது சாம்பல் பூசிக்கொண்டு, சாக்குத் துணி உடுத்துவதும் வழக்கமானது.
 
5ஆம் நூற்றாண்டுக்குப் பின் எல்லாக் கிறித்தவர்களும் உயிர்த்தெழுதல் திருவிழாவுக்கு நாற்பது நாள்களுக்கு முன் [[திருநீற்றுப் புதன்|திருநீற்றுப் புதனன்று]] சாம்பல் பூசத் தொடங்கினர். கடவுள் முன்னிலையில் எல்லாருமே பாவிகளே என்னும் உண்மையை அது உணர்த்தலாயிற்று.
 
==இன்று தவக் காலம் கடைப்பிடிக்கப்படும் முறை==
வரிசை 31:
[[இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம்|இரண்டாம் வத்திக்கான் சங்கம்]] (1962-1965) நிகழ்ந்த பின், [[கத்தோலிக்க திருச்சபை]] [[இயேசு]] இறுதி இரா உணவு உண்டு, தம் சீடரின் காலடிகளைக் கழுவி (புனித வியாழன் மாலை), துன்புற்று [[இயேசுவின் சிலுவைச் சாவு|சிலுவையில் இறந்து]] (பெரிய வெள்ளி), கல்லறையில் துயில்கொண்டு (புனித சனி), [[இயேசுவின் உயிர்த்தெழுதல்|சாவினின்று உயிர்த்தெழுந்த]] ஞாயிறு மாலை வரை உள்ள மூன்று நாள்களையும் இணைத்து ''முந்நாள் விழா'' (Holy Triduum) எனக் கொண்டாடுகிறது. இந்த முந்நாள் விழாவரை நாற்பது நாள்கள் தவக் காலமாகக் கருதப்படுகிறது.
 
திருநீற்றுப் புதனன்று கிறித்தவர்கள் தவக் காலத்தைத் தொடங்குகின்றனர். அன்று கோவில் சென்று வழிபட்டு, தம் தலையில் (நெற்றியில்) சாம்பல் பூசப்பெறுகின்றனர். [[விவிலியம்|விவிலியத்தில்]] அடங்கியுள்ள கடவுளின் வார்த்தையைக் கவனமாக வாசிப்பதும், வாசிக்கக் கேட்பதும், அந்த வார்த்தைக்கு ஏற்ப வாழ்வதும் தவக் காலத்தில் பொருத்தமானது. தாம் செய்த பாவங்களுக்குக் கடவுளிடம் மன்னிப்புக் கேட்பதும், அதே மன்னிப்பைப் பிறருக்கு வழங்குவதும் தவக் காலத்தின் சிறப்பாகும்.
 
==கத்தோலிக்க சபையில் நிலவும் பழக்கங்கள்==
வரிசை 40:
இறைவேண்டலுக்குக் கூடுதல் நேரம் ஒதுக்குவதும், ஏழைகளுக்கும் பிறருக்கும் தர்மம் செய்து அன்புப் பணி புரிவதில் அதிக கவனம் செலுத்துவதும் தவக் காலப் பண்பு ஆகும்.
 
இந்நற்செயல்கள் எல்லாம் உள்ளத்தின் ஆழத்தில் ஒரு மாற்றம் கொணரவேண்டும். இறைவனோடும் பிறரோடும் உறவை ஆழப்படுத்த வேண்டும்.
 
==உண்மையான நோன்பு==
"https://ta.wikipedia.org/wiki/தவக்_காலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது