ஃபேபியன் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 56 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up, adding {{tl|s-rel}}
வரிசை 15:
other=}}
 
'''திருத்தந்தை ஃபேபியன்''' (''Pope Fabian'') உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் கி.பி. 236 சனவரி 10ஆம் நாளிலிருந்து 250 சனவரி 20ஆம் நாள் வரை ஆட்சி செய்தார்.<ref>[http://en.wikipedia.org/wiki/Pope_Fabian திருத்தந்தை ஃபேபியன்]</ref> அவருக்கு முன் பதவியிலிருந்தவர் [[அந்தேருஸ் (திருத்தந்தை)|திருத்தந்தை அந்தேருஸ்]] ஆவார். திருத்தந்தை ஃபேபியன் [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க திருச்சபையின்]] 20ஆம் திருத்தந்தை ஆவார்.
 
*ஃபேபியன் ({{lang-la|Fabianus}}) என்னும் பெயர் இலத்தீன் மொழியில் "ஃபேபியுஸ் குடும்பத்தவர்" என்னும் பொருள்தரும்.
வரிசை 24:
{{cquote|உரோமை நகருக்குப் புதியதொரு திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதற்காக கிறித்தவர்கள் ஒன்றுகூடினார்கள். அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட தகுதியுடையோர் பலர் இருந்தார்கள். ஆனால் குருகுலத்தைச் சாராத, பொதுநிலையினராக இருந்த எளிய மனிதரான ஃபேபியன் மீது ஒரு புறா வந்திறங்கியது. உடனே மக்கள் ஒரே குரலாக 'ஃபேபியன் திருத்தந்தை ஆக வேண்டும்' என்று குரலெழுப்பினார்கள்.<ref name="Attwater">Attwater, Donald and Catherine Rachel John. ''The Penguin Dictionary of Saints''. 3rd edition. New York: Penguin Books, 1993. ISBN 0-140-51312-4.</ref>}}
 
உரோமைப் பேரரசன் அராபிய பிலிப்பு (''Philip the Arab'') (ஆட்சி: 244-249) என்பவருக்கும் அப்பேரரசரின் மகனுக்கும் ஃபேபியன் திருமுழுக்குக் கொடுத்து அவர்களைக் கிறித்தவ மதத்தில் சேர்த்தார் என்று ஒரு மரபுச் செய்தி உள்ளது.
 
ஃபேபியன் கிறித்தவக் கல்லறைத் தோட்டங்களை மேம்படுத்தினார் என்றும், சபை நிர்வாகத்தைச் சீர்ப்படுத்தினார் என்றும், மறைச்சாட்சிகளாக இறந்தவர்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்து, பதிவுசெய்ய அலுவலர்களை ஏற்படுத்தினார் என்றும் தெரிகிறது.
வரிசை 47:
உரோமை மன்னன் அராபிய பிலிப்பு காலத்தில் திருச்சபை அமைதியாக செயல்பட்டது. ஆனால் கிபி 249இல் பிலிப்பு மன்னனின் எதிரியாக இருந்த டேசியஸ் என்பவர் பிலிப்பைக் கொன்றுவிட்டு பதவியைக் கைப்பற்றினார். வெளியிலிருந்து படையெடுப்பைத் தடுக்க வேண்டும் என்றால் உள்நாட்டில் மக்கள் ஒரே மதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று டேசியஸ் கருதினார்.
 
எனவே, உரோமை மக்கள் எல்லாரும் மரபுசார்ந்த உரோமை மதத்தைத்தான் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், கிறித்தவர்கள் தம் மதத்தைக் கடைப்பிடித்தால் தேசத்துரோகிகளாகக் கருதப்படுவார்கள் என்றும் மன்னர் அறிவித்தார். உரோமைப் பேரரசின் தெய்வங்களுக்குப் பலி ஒப்புக்கொடுத்து, எல்லாக் குடும்பங்களும் ஓர் அடையாள அட்டை பெற்றுக் கொள்ளவேண்டும், அவ்வாறு அடையாள அட்டை பெறாதவர்கள் சிறைத்தண்டனையும் கொலைத்தண்டனையும் பெறுவர் என்று அறிவிக்கப்பட்டது.
 
அடையாள அட்டை பெறாதவர்கள் நாட்டுக்கு எதிரிகள் என்றும் குற்றவாளிகள் என்றும் கருதப்பட்டனர். இதற்கு கிறித்தவர்கள் மறுப்புத் தெரிவித்தனர். சிலர் உயிர்பிழைப்பதற்காக மன்னன் கேட்டபடி பலி செலுத்தி அடையாள அட்டை பெற்றார்கள்.<ref>[http://www.fordham.edu/halsall/ancient/250sacrificecert.asp பலி செலுத்திய அடையாள அட்டை]</ref> வசதிபடைத்தவர்கள் பணம் கொடுத்து அடையாள அட்டை பெற்றுக்கொண்டார்கள். ஆனால் அரச ஆணையை எதிர்த்தவர்கள் சிறையிலடைக்கப்பட்டு கொடுமைகளுக்கு ஆளாயினர்.
 
அரச ஆணையை எதிர்த்தவர்களுள் திருத்தந்தை ஃபேபியன் முக்கியமானவர். அரச அலுவலர்கள் ஃபேபியனைக் கைதுசெய்தனர். துல்லியானோ (''Tulliano'') சிறையில் அவரை அடைத்தனர். அங்கு அவர் பட்டினியாலும் களைப்பாலும் 250 சனவரி மாதம் 20ஆம் நாள் மறைச்சாட்சியாக உயிர்துறந்தார்.
வரிசை 77:
 
{{s-start}}
{{s-rel|ca}}
{{s-bef|before=[[அந்தேருஸ் (திருத்தந்தை)|திருத்தந்தை அந்தேருஸ்]]}}
{{s-ttl|title=[[உரோமை ஆயர்]]<br> [[திருத்தந்தை]]|years=236&ndash;250}}
வரி 83 ⟶ 84:
 
{{திருத்தந்தையர்}}
 
-
 
[[பகுப்பு:இத்தாலிய திருத்தந்தையர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஃபேபியன்_(திருத்தந்தை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது