கண்ணகி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 8:
 
==கோவலன் மனைவி==
'''கண்ணகி''', [[தமிழ்|தமிழில்]] எழுந்த [[ஐம்பெருங் காப்பியங்கள்|ஐம்பெருங் காப்பியங்களில்]] ஒன்றான [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரத்தின்]] தலைவி ஆவாள். கற்பிற் சிறந்தவளாக காட்டப்பட்டுள்ள இவள், எவ்வித ஆராய்வுமின்றிப் பொய்க் குற்றச்சாட்டின் மீது கொலைத் தண்டனைக்கு உட்பட்ட தனது கணவனின் குற்றமற்ற தன்மையை [[பாண்டியர்|பாண்டிய]] அரசன் [[நெடுஞ்செழியன் (மாங்குளம்)|நெடுஞ்செழியனிடம்]] வாதித்து நிரூபித்தாள். தன் பிழை கண்டு வேதனையடைந்த பாண்டியனும் அவனது அரசி [[கோப்பெருந்தேவி]]யும் அவ்விடத்திலேயே உயிர் துறந்தனர். கோபம் அடங்காத கண்ணகி, [[மதுரை]] நகரையும் தன் கற்பின் வலிமையால் எரித்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது.
 
சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கண்ணகிக்கு அடைக்கலம் கொடுத்துக் காத்த ஆயர்கள் பற்றிக் குறிப்பிடுகிறார். அந்த ஆயர்கள்தான் யாதவர்கள் என்று சொல்லப்படுகிறது. தமிழ் நாட்டில் இருந்த சித்தர்களில் திருமூலர் மற்றும் இடைக்காட்டுச் சித்தர் ஆகியோர் ஆயர் குலத்தை சேர்ந்தவர்கள் என அறியப்படுகிறார்கள்.
வரிசை 23:
 
==பேகன் மனைவி கண்ணகி==
[[பொதினி]] என்று சங்க காலத்தில் வழங்கப்பட்ட பழனிமலைப் பகுதியைத் தன்னகத்தே கொண்டு விளங்கிய நாடு [[வையாவி நாடு]]. இதனை ஆண்ட சங்க கால அரசர்களுள் ஒருவன் 'வையாவிக் கோப்பெரும் [[பேகன்]]' இவனது மனைவியின் பெயர் கண்ணகி. சிலப்பதிகாரக் கோவலனைப் போலவே இவனும் தன் மனைவி கண்ணகியைப் பிரிந்து வாழ்ந்துவந்தான். புலவர்கள் பலர் இவனுக்கு அறிவுரை கூறித் திருத்தியிருக்கிறார்கள். [[அரிசில் கிழார்]]<ref>புறம் 146</ref> [[கபிலர்]] <ref>புறம் 143</ref> [[பரணர்]] <ref>புறம் 144, 145</ref> [[பெருங்குன்றூர் கிழார், சங்கப்புலவர்|பெருங்குன்றூர் கிழார்]] <ref>புறம் 147</ref> ஆகிய புலவர்கள் கண்ணகி காரணமாக வையாவிக் கோப்பெரும் பேகனைப் பாடி அறிவுரை கூறியுள்ளனர்.
 
==இதையும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/கண்ணகி" இலிருந்து மீள்விக்கப்பட்டது