யோவான் நற்செய்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
No edit summary
வரிசை 45:
== யோவான் நற்செய்தியின் சிறப்புக் கூறுகள் ==
 
நான்காம் நற்செய்தியாகிய யோவான் நற்செய்தி முந்தைய மூன்று நற்செய்தி நூல்களாகிய ஒத்தமை நற்செய்திகளிலிருந்து மாறுபட்டது. யோவான் இயேசுவின் பொதுப் பணிகாலத்தை மூன்று ஆண்டுக் கால வரையறைக்குள் எடுத்துரைக்கிறார். ஆனால், ஒத்தமை நற்செய்திகளோ இயேசு ஓர் ஆண்டுக் காலமே பொதுப்பணி செய்ததாகக் காட்டுவதுபோலத் தெரிகிறது. யோவான் காட்டும் இயேசு பல தடவை எருசலேமுக்குப் பயணமாகச் செல்கிறார். ஆனால் ஒத்தமை நற்செய்திகளோ, இயேசு ஒரே முறை எருசலேம் பயணத்தை மேற்கொண்டதாகக் கூறுகின்றன. யோவான் நற்செய்தியில் மற்ற மூன்று நற்செய்திகளிலும் வராத கதாபாத்திரங்கள் வருகின்றனர். எடுத்துக்காட்டாக, நிக்கதேமு[[நிக்கதேம்]], சமாரியப் பெண், பிறவியிலேயே பார்வையற்ற ஒருவர், இலாசர், மற்றும் ''இயேசுவின் அன்புச் சீடர்'' ஆகியோரைக் கூறலாம்.
 
ஒத்தமை நற்செய்திகளில் வரும் இயேசு ''கடவுளின் ஆட்சி''யைத் தம் போதனையின் மையப் பொருளாக அளிக்கிறார். ஆனால், யோவான் நற்செய்தியிலோ, கடவுள் மக்களுக்குத் தம்மை வெளிப்படுத்துவதை இயேசு மையப்படுத்துகிறார்; இயேசுவே கடவுளை வெளிப்படுத்துபவராகக் காட்டப்படுகிறார். ஒத்தமை நற்செய்திகள் முன்வைக்கின்ற கிறித்தவ கருத்துப்போக்கும் யோவான் சித்தரிக்கின்ற கிறித்தவ சிந்தனைப் போக்கும் சில வேறுபாடுகளைக் கொண்டுள்ளன.
வரிசை 65:
* '''ஏழு அரும் அடையாளங்களும் உரையாடல்களும்'''
 
இயேசுவின் பொதுப்பணி பற்றி யோவான் தொகுத்துள்ள கூற்றுத்தொடரில் இயேசு புரிந்த ஏழு அரும் அடையாளங்கள் விவரிக்கப்படுகின்றன. இந்த அரும் அடையாளங்கள் யோவான் நூலின் முதல் பகுதி ஒரு தொடர்உரைப் பாணியில் படிப்படியாக மொட்டவிழ உதவுகின்றன. ஊடே இயேசுவின் ஒரு சில உருவக வடிவான செயல்கள் தரப்படுகின்றன (எ.டு. கோவிலைத் தூய்மைப்படுத்துதல், யோவா 2:13-25). கேள்வி-பதில் பாணியில் இயேசு வழங்கிய நெடுமொழிகள் உள்ளன (எ.டு. இயேசுவும் [[நிக்கதேம்|நிக்கதேமும்]], யோவா 3:1-21); இயேசுவும் இன்னொருவரும் நிகழ்த்தும் உரையாடல்கள் அடங்கியுள்ளன (எ.டு. சமாரியப் பெண் ஒருவரும் இயேசுவும், யோவா 4:1-42).
 
இயேசு புரிந்த ஏழு அரும் அடையாளங்கள் இவை:
"https://ta.wikipedia.org/wiki/யோவான்_நற்செய்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது