சர்க்கரைப் பதிலீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 21:
 
==உணவுத் தொழிற்றுறையில் சர்க்கரைப் பதிலீடுகளின் பயன்பாடு==
[[உணவு]] மற்றும் பானத்தொழில் துறையில் [[சர்க்கரை]] அல்லது சோழப் பாணிக்குப் பதிலாகச் செயற்கை [[இனிப்பூட்டிகள்|இனிப்பூட்டிகளைப்]] பயன்படுத்துவது அதிகமாகி வருகிறது. "மின்டெல்" என்னும் சந்தை ஆய்வாளர்களின் கூற்றுப்படி, 2000க்கும் 2005க்கும் இடைப்பட்ட காலத்தில் ஐக்கிய அமெரிக்காவில், செயற்கை இனிப்பூட்டிகளைப் பயன்படுத்தும் 3,920 உற்பத்திகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. 2004ல் மட்டும் 1649 உற்பத்திப் பொருட்கள் அறிமுகமாயின. "பிரீடோனியா" என்னும் சந்தை ஆய்வு நிறுவனம், அமெரிக்காவில், செயற்கை இனிப்பூட்டிச் சந்தை ஆண்டுக்கு 8% வளர்ச்சி பெற்று 2012ல் 189 மில்லியன் டாலர்களை எட்டும் என்று கூறியிருந்தது.
 
அசுப்பர்ட்டேம் என்னும் செயற்கை இனிப்பூட்டியே இப்போது அமெரிக்க உணவுத் தொழிலில் மிகவும் பிரபலமாக உள்ளது. இதற்கான "மான்சான்டோ கம்பனி"யின் காப்புரிமம் 1992 ஆம் ஆண்டில் முடிவடைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட விலை வீழ்ச்சியே இதற்கு முதன்மைக் காரணம். ஆனாலும், "டேட் அன்ட் லைல்" நிறுவனத்தின் புதிய உற்பத்தி முறைக்கான காப்புரிமம் கிடைத்ததும், சுக்கிரலோசின் விலை 30% குறையும் எனக் கருதப்படுவதால், அசுப்பர்ட்டேமை, சுக்கிரலோசு விஞ்சக்கூடிய சாத்தியம் உண்டு.
"https://ta.wikipedia.org/wiki/சர்க்கரைப்_பதிலீடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது