இளம்பிள்ளை வாதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 75 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
(edited with ProveIt) *விரிவாக்கம்*இந்தியாவில் இளம்பிள்ளை வாதம்
வரிசை 15:
 
'''இளம்பிள்ளை வாதம்''' பாதிக்கப்பட்டவரின் மலத்தின் வழியாகப் பரவும் [[தீநுண்மம்|தீநுண்மத்]] [[தொற்றுநோய்]] ஆகும். மலத் துகள்களினால் மாசடைந்த [[நீர்]], அல்லது [[உணவு]] வாய்வழியாக உட்கொள்ளப்படும்போது இந்நோய் தொற்றுகிறது. இது '''போலியோ''' என்னும் ஆங்கிலப் பெயராலும் பரவலாக அழைக்கப்படுகின்றது. ''போலியோமியெலிட்டிஸ்'' ''(Poliomyelitis)'' என்பது இந்நோயின் மருத்துவப் பெயர். இந் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களில் 90% பேரில் அறிகுறிகள் எதுவும் தோன்றுவதில்லை. எனினும் தீநுண்மங்கள் குருதியோட்டத்துடன் கலந்துவிடின் பல வகையான அறிகுறிகள் தோன்றுகின்றன. பாதிக்கப்படுபவர்களில் 1%க்கும் குறைவானவர்களில் தீநுண்மங்கள் [[மைய நரம்புத் தொகுதி]]க்குள் சென்று [[இயக்க நரம்பணு]]க்களைத் தாக்குவதனால் [[தசைநார்]]கள் பலவீனமுற்றுத் தீவிரமான [[தளர்வாதம்|தளர்வாதத்தை]] (flaccid paralysis) உருவாக்குகிறது. பாதிக்கப்படும் [[நரம்பு|நரம்புகளைப்]] பொறுத்துப் பலவகையான [[வாதம்|வாத]] (paralysis) நிலைமைகள் ஏற்படலாம். [[முள்ளந்தண்டு|முள்ளந்தண்டோடு]] தொடர்புள்ள இளம்பிள்ளை வாதமே மிகவும் பொதுவாகக் காணப்படுகின்றது. இது பொதுவாகக் கால்களைத் தாக்குகிறது.
 
==இந்தியாவில் இளம்பிள்ளை வாதம்==
2009ம் ஆண்டில் [[இந்தியா]]வில் 741 இளம்பிள்ளை வாதம் தாக்கிய சம்பவங்கள் பதியப்பட்டிருந்தன.இந்தியாவில் இளம்பிள்ளை வாதம் தாக்கிய கடைசி சம்பவம் [[மேற்கு வங்காளம்|மேற்கு வங்க]] மாநிலத்தில் 2011ல் தெரியவந்தது. அங்கு ஒரு 18 வயது பெண்ணுக்கு இந்த நோய் தாக்கியிருந்தது.இந்தியா, தன்னை போலியோ அற்ற நாடு என்று அறிவிக்கும் நிலையை 13 சனவரி 2014இல் எட்டியியது.இந்திய அரசின் இந்த அறிவிப்பு 13 சனவரி 2014இல் வருகிறது என்றாலும், உலகச் சுகாதார நிறுவனம், இந்தியாவிலிருந்து வந்த கடைசி ஆய்வு மாதிரிகள் சிலவற்றை பரிசோதித்துப் பார்த்துவிட்டுப் பின்னர் பிப்ரவரி 11ம் தேதியே தனது அத்தாட்சிப் பத்திரத்தை வழங்கும்.<ref name="பிபிசி">{{cite web | url=http://www.bbc.co.uk/tamil/india/2014/01/140113_indiapolio.shtml | title=போலியோ அற்ற நாடு என்ற மைல் கல்லை இந்தியா இன்று எட்டுகிறது | publisher=பிபிசி | date=13 சனவரி 2014 | accessdate=13 சனவரி 2014}}</ref>
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:தொற்று நோய்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இளம்பிள்ளை_வாதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது