சகப் பிணைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 59 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
[[File:Covalent bond hydrogen.svg|thumb|ஐதரசன் மூலக்கூறில் H - H இடையிலான சகப்பிணைப்பு]]'''சகப் பிணைப்பு''' என்பது [[வேதிப்பிணைப்பு]]களுள் ஒன்று. இரண்டு [[அணு]]க்கள் எதிரெதிர் சுழலெண் (spin) கொண்ட இணையான [[எதிர்மின்னி]]களைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்வதால் பகிர்வுப்பிணைப்பு அல்லது '''பகிர்பிணைப்பு''' அல்லது '''சகப்பிணைப்பு''' (இலங்கை வழக்கு:'''பங்கீட்டு வலுப்பிணைப்பு) என்னும் வகையான வேதியியல் பிணைப்பு உண்டாகிறது. இப் பிணைப்பில் பங்கு கொள்ளும் இரு அணுக்களுமே [[எதிர்மின்னி]]களை தங்கள் அணுக்கருவில் உள்ள நேர்மின்னிகளில் விசையால் கவர முயலும். இதனால் உருவாகும் நிகர [[விசை]] சகப் பிணைப்பை உண்டாக்குகிறது.
[[ஐதரசன்]] மூலக்கூறில் உள்ள இரண்டு ஐதரசன் அணுக்களுமே ஒரே மாதிரியான [[எதிர்மின்னிக் கவர்மை]] கொண்டவை. எனவே எதிர்மின்னிகள் (எலக்ட்ரான்கள்) உண்மையிலேயே இரு அணுக்களுக்கும் பொதுவாக இருக்கின்றன (இயங்குகின்றன). ஆனால் [[ஐதரோகுளோரிக் அமிலம்|ஐதரோகுளோரிக்]] காடி (அமில) மூலக்கூறில் உள்ள [[குளோரைடு]] ஐதரசனைக் காட்டிலும் அதிக எதிர்மின்னிக் கவர்மை (கவரும் தன்மை) கொண்டது. அது இணை எதிர்மின்னிகளைத் தன் பக்கம் இழுக்கக் கூடியது. எனவே குளோரைடின் பக்கம் எதிர்மின் சுமை உண்டாகிறது.
 
வரிசை 9:
</gallery>
 
==சகப்பிணைப்பு (பங்கீட்டு வலு) சேர்மங்களின் பௌதீகப் பண்புகள்==
 
{| class="wikitable"
|-
! பௌதீகப் பண்புகள் !! பங்கீட்டு வலுச் சேர்மங்கள்
|-
| பௌதீக நிலை (அறை வெப்பநிலையில்) || திண்மம், திரவம், வாயு
|-
| மின்கடத்துதிறன் || பொதுவாக மின்னைக் கடத்தாது
|-
| உருகும், கொதிக்கும் வெப்பநிலை || வேறுபடும், பொதுவாக அயன் சேர்மங்களினதை விடக் குறைவு
|-
| நீரில் கரைதிறன் || மாறுபடும், பொதுவாக அயன் சேர்மங்களினதை விடக் குறைவு
|-
| வெப்பக் கடத்துதிறன்|| பொதுவாகக் குறைவு
|}
 
==சகப்பிணைப்புகளில் முனைவாக்கம்==
 
{{Main|இரசாயன முனைவுத்தன்மை}}
 
சகப்பிணைப்பில் ஈடுபடும் அணுக்களின் மின்னெதிர்த்தன்மையைப் பொறுத்து மூலக்கூறுகள் முனைவாக்கமுடையனவாகவோ, முனைவாக்கமற்றதாகவோ காணப்படலாம். H-H பிணைப்பு போல அணுக்களிடையே மின்னெதிர்த்தன்மை சமமாக இருந்தால், அது முனைவாக்கமற்ற சகப்பிணைப்பாகும். H-Cl பிணைப்பு போல அணுக்களின் மின்னெதிர்த்தன்மை சமமற்றதாக இருந்தால், அது முனைவாக்கமுடைய சகப்பிணைப்பாகும்.
[[பகுப்பு:வேதிப் பிணைப்பு]]
 
"https://ta.wikipedia.org/wiki/சகப்_பிணைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது