தமிழ் மாதங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''தமிழ் மாதங்கள்''' சித்திரை முதல் பங்குனி முடிய பன்னிரெண்டு ஆகும். உண்மையில் இவை, [[இந்தியா|இந்தியாவில்]] மட்டுமின்றி இந்தியாவுக்கு வெளியிலும் பல ஆசிய நாடுகளிலும் கூட இன்றும் சமயம் மற்றும் [[மரபு]] சார்ந்த தேவைகளுக்காகப் புழக்கத்திலுள்ள [[இந்துக் காலக் கணிப்பு முறை|இந்துக் காலக் கணிப்பு முறையை]] அடிப்படையாகக் கொண்டதே. இந்துக் காலக் கணிப்பு முறை இன்று புழக்கத்திலுள்ள பகுதிகளிலெல்லாம் ஒரே விதமாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை. இந்தியாவிலும்கூட வெவ்வேறு பகுதிகள் இம்முறையை வெவ்வேறு வகையில் தான் கடைப்பிடித்து வருகின்றன. இவ்வாறே [[தமிழர்]] வாழும் பகுதிகளிலும் பல்வேறு தனித்துவமான கூறுகளுடன் இம்முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
 
==தமிழ் மாதப் பகுப்பின் அடிப்படை==
வரிசை 47:
 
[[பூமி]] தன் [[அச்சு|அச்சில்]] சுழலுவதை அடிப்படையாகக் கொண்டு [[நாள்|நாட்களும்]], சூரியனைச் சுற்றி வருவதால் [[ஆண்டு|ஆண்டுகளும்]], [[மாதம்|மாதங்களும்]] உருவாகின்றன. இவ்விரு தோற்றப்பாடுகளும் ஒன்றிலொன்று தங்கியிராத இரண்டு வெவ்வேறு விடயங்களாக இருப்பதால், புதிய மாதப் பிறப்பும், புதிய நாள் தொடங்குவதும் ஒரே நேரத்தில் அமைவதில்லை. [[இந்துக் காலக் கணிப்பு முறை|இந்து முறைப்படி]] ஒரு நாள் என்பது குறிப்பிட்ட நாளில் சூரிய உதயம் தொடக்கம் முதல் அடுத்த நாள் சூரிய உதயம் வரையான காலமாகும். ஆகவே நாளின் தொடக்கம் சூரிய உதயமாகும். சூரியன் இராசி ஒன்றுக்குள் புகும் நேரம் (மாதப் பிறப்பு) ஒரு நாளின் எந்த நேரத்திலும் நிகழக்கூடும், இவ்வாறு சூரியன் அந்த இராசி ஒன்றுக்குள் புகும் நேரத்திலேயே புதிய மாதம் தொடங்கும். ஆனாலும் [[திகதி]] குறிக்கும் வசதிக்காக, மாதப் பிறப்பு சூரிய உதயத்துக்கும், [[சூரிய அஸ்தமனம்|சூரிய அஸ்தமனத்துக்கும்]] இடையில் (நாளின் முதற்பாதி) அமைந்தால் அந்த நாளே மாதத்தின் முதல் நாளாகக் கொள்ளப்படும். மாதப்பிறப்பு [[சூரியன்]] மறைந்த பின் அடுத்த சூரிய உதயத்துக்கு முன் நிகழுமாயின் அடுத்த நாளே மாதத்தின் முதல் நாளாகக் கொள்ளப்படும்.
;
 
==மாதங்களின் கால அளவு==
வரி 96 ⟶ 95:
சூரிய உதயமும், மறைவும், நாட்கள் நகர்வதை இலகுவாக உணர்ந்துகொள்ள உதவுவதுபோல் சந்திரன் தேய்வதும் வளர்வதும் மாதங்களின் நகர்வை உணர்வதற்கு வசதியாக உள்ளது. பண்டைத்தமிழ் இலக்கியங்களில் "அடுத்த [[பூரணை]]க்குள் திரும்பி வருவதாகத் தங்கள் தலைவிகளுக்குக் கூறிச் செல்லும்" தலைவர்களைப் பற்றி நிறையவே காண முடியும். எனவே பண்டைத் தமிழகத்தில் சாதாரண மக்கள் காலம் குறிப்பதற்கு சந்திரனையும் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. அத்துடன் பூரணை என்பது காலம் குறிப்பதற்கான முக்கியமான ஒரு நிகழ்ச்சியாகப் பயன்பட்டது எனவும் அறிய முடிகிறது.
 
சந்திரமான முறையில் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் வரும் பூரணை எந்த நட்சத்திரத்தில் வருகிறதோ அந்த நட்சத்திரத்தின் பெயரே அம் மாதத்திற்கு இடப்பட்டது. இதன்படி சித்திரை மாதத்துப் பூரணை சித்திரை நட்சத்திரத்திலும், வைகாசி மாதத்துப் பூரணை விசாக நட்சத்திரத்திலும் வருகின்றன. இவ்வாறே ஏனைய மாதங்களும் அவற்றின் பெயர் கொண்ட நட்சத்திரங்களில் வருவதை அறியலாம். இதனைப் பின்பற்றியே ஒவ்வொரு சந்திரமாதத்துக்கும் அண்மையிலிருக்கும் சூரியமான முறையில் அமைந்த தமிழ் மாதங்களுக்கும் அதே பெயர் இடப்பட்டுள்ளது.
 
==தமிழ் வருடங்கள்==
==சமசுகிருத மற்றும் செந்தமிழ் பெயர்கள்==
''முதன்மை கட்டுரை: [[தமிழ் வருடங்கள்]]''
தமிழ் மாதங்களின் பெயர்கள் சமசுகிருத பெயர்களிலிருந்து திரிந்து வந்தவையாகும்{{cn}}. ஒரு மாதத்தில் பவுர்ணமி சம்பவிக்கும் நட்சத்திரத்தின் பெயரே மாதத்தின் பெயராக அமைந்துள்ளது.
 
{|border="1"
 
!width="25"|-
!width="125"|வழங்கு பெயர் (தமிழ்)
!width="125"|சமசுகிருதம்
!width="125"|செந்தமிழ்
|-
|1||[[சித்திரை]] ||சைத்ர ||[[மேழம் (இராசி)|மேழம்]]
|-
|2||[[வைகாசி]] ||வைஸாயுகயு ||[[விடை (இராசி)|விடை]]
|-
|3||[[ஆனி]]|| ஆநுஷி / ஜ்யேஷ்ட ||[[ஆடவை (இராசி)|ஆடவை]]
|-
|4||[[ஆடி]] ||ஆஷாட ||[[கடகம் (இராசி)|கடகம்]]
|-
|5||[[ஆவணி]] ||ஸ்யுராவண ||[[மடங்கல் (இராசி)|மடங்கல்]]
|-
|6||[[புரட்டாசி]] ||ப்ரோஷ்டபதீ /பாத்யூரபதயூ ||[[கன்னி (இராசி)|கன்னி]]
|-
|7||[[ஐப்பசி]] ||ஆஸ்யுவிந ||[[துலை (இராசி)|துலை]]
|-
|8||[[கார்த்திகை]] ||கார்திக:​ ||[[நளி (இராசி)|நளி]]
|-
|9||[[மார்கழி]] ||மார்கயூஸீயுர்ஷ ||[[சிலை (இராசி)|சிலை]]
|-
|10||[[தை]] ||தைஷ்யம்/ பவுஷ​: ||[[சுறவம் (இராசி)|சுறவம்]]
|-
|11||[[மாசி]] ||மாக ||[[கும்பம் (இராசி)|கும்பம்]]
|-
|12||[[பங்குனி]] ||பாயுல்குயூந​: ||[[மீனம் (இராசி)|மீனம்]]
|}
 
<ref>http://temple.dinamalar.com/news_detail.php?id=6418 தினமலர் கோயில்கள் தளம்</ref>
 
[[File:Tamil Calendar 2013.pdf|thumb|2013-14 விஜய வருடத்திய சித்திரை மாத நாட்காட்டி]]
 
==தமிழ் வருடங்கள்==
''முதன்மை கட்டுரை: [[தமிழ் வருடங்கள்]]''
 
தமிழ் வருடங்கள் அறுபதாக பிரிக்கப்பட்டுள்ளன. சுழற்சி முறையில் இப்பெயர்கள் வருடங்களுக்கு இடப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்_மாதங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது