முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

12 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
Robot: ar:إندونيسيا is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
1900க்குப் பின்னர் ''இந்தோனேசியா'' என்னும் பெயர் [[நெதர்லாந்து]]க்கு வெளியே பொதுவான பயன்பாட்டுக்கு வந்தது. இந்தோனேசியத் தேசியவாதக் குழுக்கள் ஒரு அரசியல் வெளிப்பாடாக இந்தப் பெயரைப் பயன்படுத்தினர். பெர்லின் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த [[அடொல்ப் பசுட்டியன்]] என்பார் தான் எழுதிய ''இந்தோனேசியா அல்லது மலாயத் தீவுக் கூட்டங்களின் தீவுகள், 1884–1894'' ''(Indonesien oder die Inseln des Malayischen Archipels, 1884–1894)'' என்னும் நூல் மூலமாக இப்பெயரைப் பரவலாக அறிமுகப்படுத்தினார். [[சுவார்டி சூர்யனின்கிராட்]] என்பவர் 1913 ஆம் ஆண்டில் நெதர்லாந்தில் ''இந்தோனேசிக் பேர்சு-பியூரோ'' என்னும் பெயரில் ஒரு பத்திரிகைப் பணியகம் ஒன்றைத் தொடங்கியதன் மூலம், இப் பெயரைப் பயன்படுத்திய முதல் இந்தோனேசிய அறிஞர் ஆனார்.
 
== வரலாறு ==
[[Fileபடிமம்:Borobudur ship.JPG|thumb|left|250px|கிபி 800 ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு [[போரோபுதூர் கப்பல்]] சிற்பம், [[போரோபுதூர்|போரோபுதூரில்]] உள்ளது. கிபி முதலாம் நூற்றாண்டிலேயே இந்தோனேசிய வள்ளங்கள் ஆப்பிரிக்காவின் கிழக்குக் கரைகளுக்கு வணிகப் பயணம் சென்றிருக்கலாம்.<ref>{{cite book |title=A short history of Indonesia: the unlikely nation? |last = Brown | first = Colin |year=2003 |publisher=Allen & Unwin |isbn=1-86508-838-2 |page=13}}</ref>]]
கண்டெடுக்கப்பட்ட புதை படிவங்களும், கருவிகளின் எச்சங்களும், இந்தோனேசியத் தீவுக்கூட்டங்களில், 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து 35,000 ஆண்டுகளுக்கு முன்புவரை, [[சாவா மனிதன்]] என அழைக்கப்படும் ''[[ஓமோ இரக்டசு|ஓமோ இரக்டசுக்கள்]]க்கள்'' வாழ்ந்தனர் என்பதைக் காட்டுகின்றன.<ref>{{cite journal|title=Shell tool use by early members of Homo erectus in Sangiran, central Java, Indonesia: cut mark evidence |doi=10.1016/j.jas.2006.03.013|year=2007|last1=Choi|first1=Kildo|last2=Driwantoro|first2=Dubel|journal=Journal of Archaeological Science|volume=34|page=48}}</ref><ref>[http://www.terradaily.com/reports/Finding_showing_human_ancestor_older_than_previously_thought_offers_new_insights_into_evolution_999.html Finding showing human ancestor older than previously thought offers new insights into evolution]. Terradaily.com. 5 July 2011. Retrieved 29 January 2012.</ref><ref>{{Cite journal |last=Pope |title= Recent advances in far eastern paleoanthropology | journal = Annual Review of Anthropology | volume = 17 | pages = 43–77 | year =1988 |doi=10.1146/annurev.an.17.100188.000355 |first1= GG}} cited in {{cite book |last=Whitten |first=T |coauthors=Soeriaatmadja, RE, Suraya AA | title = The Ecology of Java and Bali |publisher=Periplus Editions |year=1996 |location=Hong Kong |pages=309–12}}; {{Cite journal |last = Pope | first = GG | title = Evidence on the age of the Asian Hominidae | journal = Proceedings of the National Academy of Sciences of the United States of America | volume = 80 | issue=16 |pages=4988–92 |year= 1983|pmid = 6410399 | doi = 10.1073/pnas.80.16.4988 | pmc =384173}} cited in {{cite book |last=Whitten |first= T | coauthors = Soeriaatmadja, RE, Suraya AA | title = The Ecology of Java and Bali | publisher =Periplus Editions |year=1996 |location=Hong Kong |page= 309}}; {{Cite journal | last = de Vos | first = JP | coauthors = PY Sondaar | title = Dating hominid sites in Indonesia |journal=Science |volume=266 |issue=16 |pages=4988–92 |year=1994 |doi=10.1126/science.7992059}} cited in {{cite book |last=Whitten |first=T | coauthors =Soeriaatmadja, RE, Suraya AA | title= The Ecology of Java and Bali |publisher=Periplus Editions |year=1996 |location= Hong Kong |page = 309}}</ref> ''[[ஓமோ சப்பியன்|ஓமோ சப்பியன்கள்]]கள்'' 45,000 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதிக்கு வந்தனர்.<ref>{{cite journal | publisher = Smithsonian | url = http://www.smithsonianmag.com/history-archaeology/human-migration.html | title = The Great Human Migration | year=2008 |month=July | page = 2}}</ref> 42,000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த மக்கள் பெருமளவில் பெரிய ஆழ்கடல் மீன்களைப் பிடித்து உணவாகக் கொண்டனர் என்பதற்கும், அதனால், உயரளவான கடலோடும் திறமை இவர்களுக்கு இருந்தது என்பதற்கும், இதன் மூலம் ஆழ்கடலைக் கடந்து ஆசுத்திரேலியாவையும் பிற தீவுகளையும் எட்டக்கூடிய அளவு தொழில்நுட்பம் இவர்களிடம் இருந்தது என்பதற்கும் 2011 ஆம் ஆண்டில் சான்றுகள் கிடைத்துள்ளன.<ref>[http://www.pasthorizonspr.com/index.php/archives/11/2011/evidence-of-42000-year-old-deep-sea-fishing-revealed Evidence of 42,000 year old deep sea fishing revealed | Archaeology News from Past Horizons]. Pasthorizonspr.com. 26 November 2011. Retrieved 29 January 2012.</ref>
 
தற்கால இந்தோனேசியாவில் பெரும்பான்மையாக வாழும் [[ஆசுத்திரோனேசிய மக்கள்]] தாய்வானில் இருந்து தென்கிழக்கு ஆசியாவுக்குள் குடியேறியவர்கள்.<ref>Taylor (2003), pp. 5–7</ref> கிமு 2000 அளவில் வந்த இவர்கள், இத் தீவுக்கூட்டங்களூடாகப் பரவிய போது, முன்னர் குடியேறியிருந்த [[மெலனீசிய மக்கள்|மெலனீசிய மக்களை]] தூர கிழக்குப் பகுதிகளுக்குள் முடக்கினர். வேளாண்மைக்கான சிறப்பான நிலைமைகளும், கிமு 8 ஆம் நூற்றாண்டிலேயே [[ஈரநில அரிசிப் பயிர்ச்செய்கை]]யில் இவர்கள் பெற்றிருந்த திறமையும்,<ref>Taylor (2003), pp. 8–9</ref> கிபி முதலாம் நூற்றாண்டில், ஊர்களும், நகரங்களும், சிறிய இராச்சியங்களும் தோன்றக் காரணமாகின. கடற்பாதையில் இந்தோனேசியாவின் முக்கிய அமைவிடம், தீவுகளுக்கு இடையிலான வணிகத்தையும், கிறித்துவுக்கு முன் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே காணப்பட்ட இந்திய, சீன இராச்சியங்களுடனான தொடர்புகள் உள்ளிட்ட [[பன்னாட்டு வணிகம்|பன்னாட்டு வணிகத்தையும்]] ஊக்குவித்தது.<ref>Taylor (2003), pp. 15–18</ref> அப்போதிருந்து அடிப்படையில் வணிகமே இந்தோனேசிய வரலாற்றைத் தீர்மானிக்கும் காரணியாகச் செயல்பட்டது.<ref>Taylor (2003), pp. 3, 9–11, 13–5, 18–20, 22–3</ref><ref>Vickers (2005), pp. 18–20, 60, 133–4</ref>
[[Fileபடிமம்:Myristica fragrans - Köhler–s Medizinal-Pflanzen-097.jpg|thumb|upright|200px|சாதிக்காய்ச் செடி இந்தோனேசியாவின் பண்டாத்தீவைத் தாயகமாகக் கொண்டது. ஒரு காலத்தில் மிகவும் பெறுமதி வாய்ந்த பண்டமாகக் கருதப்பட்ட இதுவே ஐரோப்பிய வல்லரசுகளை இந்நாட்டுக்கு இழுத்தது.]]
 
கிபி 7 ஆம் நூற்றாண்டில் இருந்து, வணிக வளர்ச்சியினாலும், அதனுடன் வந்த பௌத்த, இந்து சமயச் செல்வாக்கினாலும், [[சிறீவிஜயம்|சிறீவிசய இராச்சியம்]] சிறப்புற்று விளங்கியது.<ref>Taylor (2003), pp. 22–26</ref><ref>Ricklefs (1991), p. 3</ref> 8ஆம் 10 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், பௌத்த மதம் சார்ந்த சைலேந்திர வம்சமும், இந்து மத மாதரம் வம்சமும் சாவாவின் உட்பகுதிகளில் சிறப்புற விளங்கிப் பின்னர் வீழ்ச்சியடைந்தன. மேற்படி வம்ச ஆட்சிகளின் வளமைக்குச் சான்றாக மிகப்பெரிய சமய நினைவுச் சின்னங்களான சைலேந்திர வம்சத்தின் [[போரோபுதூர்|போரோபுதூரையும்]], மாதரம் வம்சத்தின் [[பிராம்பனான்|பிராம்பனானையும்]] அவை விட்டுச் சென்றுள்ளன. இந்து இராச்சியமான [[மாசாபாகித்]] கிழக்கு சாவாவில் 13 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. கஜ மதா என்னும் தளபதியின் கீழ் இந்த இராச்சியத்தின் செல்வாக்கு இந்தோனேசியாவின் பெரும்பாலான பகுதிகளில் பரவியிருந்தது.<ref>{{cite journal |title=The next great empire |author=Peter Lewis |journal=Futures |volume=14 |issue= 1 | year = 1982 | pages=47–61 |doi=10.1016/0016-3287(82)90071-4}}</ref>
இசுலாமியக் காலத்தின் தொடக்கப் பகுதியிலேயே முசுலிம் வணிகர்கள் தென்கிழக்கு ஆசியாவின் ஊடாகப் பயணம் செய்திருந்த போதிலும், 13 ஆம் நூற்றாண்டில், வடக்கு [[சுமாத்திரா]]வில் இருந்துதே இந்தோனேசியாவில் [[இசுலாம்|இசுலாமைத்]] தழுவிய மக்கள் வாழ்ததற்கான முதல் சான்றுகள் கிடைக்கின்றன.<ref>Ricklefs (1991), pp. 3–14</ref> பிற இந்தோனேசியப் பகுதிகள் படிப்படியாக இஸ்லாமை ஏற்றுக்கொண்டன. 16 ஆம் நூற்றாண்டின் முடிவில், சுமாத்திராவிலும், சாவாவிலும் இஸ்லாமே முதன்மை மதமாக விளங்கியது. பெரும்பாலும், இஸ்லாம் இப்பகுதிகளில் ஏற்கெனவே இருந்த பண்பாட்டு சமயச் செல்வாக்குகளோடு கலந்தே இருந்தது. இது இந்தோனேசியாவில், சிறப்பாக சாவாவில், கைக்கொள்ளப்படும் இசுலாமின் வடிவம் உருவாகக் காரணம் ஆகியது.<ref>Ricklefs (1991), pp. 12–14</ref> 1512 ஆம் ஆண்டில் [[போத்துக்கேயர்|போத்துக்கேய]] வணிகர்கள் [[பிரான்சிசுக்கோ செராவோ]] தலைமையில், [[மலுக்கு]] பகுதியில், [[சாதிக்காய்]], [[கராம்பு]], [[வால்மிளகு]] போன்ற வணிகப் பொருட்களின் வணிகத்தில் தனியுரிமை பெற்றுக்கொள்ள முயன்றனர். அப்போதே, இந்தோனேசிய மக்களுக்கு [[ஐரோப்பியர்|ஐரோப்பியருடனான]] முறையான தொடர்பு ஏற்பட்டது.<ref>Ricklefs (1991), pp. 22–24</ref> போத்துக்கேயரைத் தொடர்ந்து, ஒல்லாந்தரும், ஆங்கிலேயரும் வந்தனர். 1602ல், டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியை நிறுவிய ஒல்லாந்தர் முதன்மையான ஐரோப்பிய வல்லரசு ஆகினர். முறிவு நிலை எய்தியதைத் தொடர்ந்து, 1800ல் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி கலைக்கப்பட்டு, டச்சுக் கிழக்கிந்தியப் பகுதிகள் நெதர்லாந்து அரசின் குடியேற்ற நாடாக அறிவிக்கப்பட்டன.<ref>Ricklefs (1991), p. 24</ref>
 
== நிருவாகப் பிரிவு ==
 
இந்தோனேசியாவில் 34 மாகாணங்கள் உள்ளன. அவற்றுள் ஐந்து சிறப்பு தகுதிநிலையை பெற்றவையாகும். ஜகார்த்தா, ஆசே, பப்புவா, மேற்கு பப்புவா, யோக்யகர்தா என்பவை அந்த ஐந்து சிறப்பு மாகாணங்களாகும். இவற்றின் சட்டமன்றங்கள் மற்ற மாகாணங்களின் சட்டமன்றங்களை விட அதிக அதிகாரங்களை கொண்டுள்ளன. ஆசே மாகாணம் [[இஸ்லாமியச் சட்ட முறைமை|இசுலாமிய சட்டத்தின்]] மாதிரியை 2003ல் இங்கு அறிமுகப்படுத்தியது <ref>{{cite journal |author=Michelle Ann Miller |title=The Nanggroe Aceh Darussalam law: a serious response to Acehnese separatism? |journal=Asian Ethnicity |volume=5 |issue=3 |year=2004 |pages=333–351 |doi=10.1080/1463136042000259789}}</ref>. இச்சட்டம் வேறு எந்த மாகாணத்திலும் கிடையாது. இந்தோனேசிய விடுதலைப்போரில் யோக்யகர்தா கொடுத்த தீவிர பங்களிப்பால் அதற்கு சிறப்பு தகுதி 1950ல் கொடுக்கப்பட்டது. பப்புவாவிற்கு சிறப்பு தகுதி 2001ல் கொடுக்கப்பட்டது. 2003 பிப்பரவரி அன்று இது பப்புவாகவும் மேற்கு பப்புவாகவும் பிரிக்கப்பட்டது <ref>As part of the autonomy package was the introduction of the Papuan People's Council tasked with arbitration and speaking on behalf of Papuan tribal customs, however, the implementation of the autonomy measures has been criticized as half-hearted and incomplete. {{cite news |last=Dursin |first=Richel |coauthors=Kafil Yamin |title=Another Fine Mess in Papua |work=Editorial|work=The Jakarta Post |date=18 November 2004 |url=http://www.infid.be/papua_mess.htm |accessdate=5 October 2006}}{{dead link|date=July 2012}}</ref><ref>{{cite news |title=Papua Chronology Confusing Signals from Jakarta|work=The Jakarta Post |date=18 November 2004 |url=http://www.infid.be/papua_mess.htm#Papua%20Chronology%20Confusing%20Signals%20from%20Jakarta |accessdate=5 October 2006}}{{dead link|date=July 2012}}</ref> . ஜகார்த்தா நாட்டு தலைநகரானதால் அதற்கு சிறப்பு தகுதி வழங்கப்பட்டது.
{{Image label small|x=0.44833332|y=0.39333335|scale={{{width|800}}}|text=[[மேற்கு நுச டெங்கரா]]}}
{{Image label small|x=0.5466667|y=0.36666667|scale={{{width|800}}}|text=[[கிழக்கு நுச டெங்கரா]]}}
{{Image label small|x=0.315|y=0.185|scale={{{width|800}}}|text=[[மேற்கு <br /> களிமன்டன்]]}}
{{Image label small|x=0.37166667|y=0.22333333|scale={{{width|800}}}|text=[[நடு களிமன்டன்]]}}
{{Image label small|x=0.43666667|y=0.13066666|scale={{{width|800}}}|text=[[வடக்கு களிமன்டன்]]}}
{{Image label end}}</div>
 
== மக்கள் தொகையியல் ==
 
2010ம் ஆண்டு கணக்கெடுக்கின் படி இந்தோனேசியாவின் மக்கள் தொகை 237.6 மில்லியன்<ref name="bps2010">{{cite web|url=http://www.bps.go.id/65tahun/SP2010_agregat_data_perProvinsi.pdf |title=Central Bureau of Statistics: ''Census 2010'' |publisher=Badan Pusat Statistik |accessdate=17 January 2011}} {{id}}</ref>. இதில் 58% மக்கள் சாவகத்தீவில் வாழ்கின்றனர் <ref name="bps2010"/>. 2020 ல் மக்கள் தொகை 265 மில்லியன் ஆகவும் 2050ல் 306 மில்லியன் ஆகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு 300 தனித்தன்மை வாய்ந்த இனக்குழுக்கள் உள்ளன, 742 வகையான மொழிகள் பேசப்படுகின்றன <ref>{{cite web |
தற்போது இந்து பௌத்த சமயங்களை சிறுபான்மையினர் பின்பற்றினாலும் இவற்றின் தாக்கம் இந்தோனேசிய பண்பாட்டில் அதிகம். இசுலாம் சமயம் 13ம் நூற்றாண்டில் வடக்கு சுமாத்திரா தீவு மக்களால் முதலில் ஏற்கப்பட்டது, 16ம் நூற்றாண்டு அளவில் நாட்டின் பெரும்பான்மை சமயமாக மாறியது <ref name="csi">{{cite web |title=Indonesia&nbsp;– Islam |publisher=U.S. Library of Congress|url=http://countrystudies.us/indonesia/37.htm |accessdate=15 October 2006}}</ref>. கத்தோலிகம் போர்த்துகீசியர்களால் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டது<ref>Ricklefs (1991), pp. 25, 26, 28</ref><ref>{{cite web | title =1500 to 1670: Great Kings and Trade Empires | publisher = Sejarah Indonesia | url =http://www.gimonca.com/sejarah/sejarah02.shtml | accessdate =25 April 2007 }}</ref>. சீர்திருத்த கிறித்தவம் ஒல்லாந்தர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது <ref>Ricklefs (1991), pp. 28, 62</ref><ref>Vickers (2005), p. 22</ref><ref>{{cite book | last = Goh | first = Robbie B.H. | title = Christianity in Southeast Asia | publisher = Institute of Southeast Asian Studies | page = 80 | isbn = 981-230-297-2 | year = 2005 }}</ref>.
 
== புவியியல் ==
இந்தோனேசியா 17,508 தீவுகளை உடையது. இதில் 6,000 தீவுகளில் மக்கள் வாழ்கிறார்கள் .<ref>{{cite press release |publisher=[[International Monetary Fund]] |
url=http://www.imf.org/external/pubs/ft/weo/2006/01/data/dbcoutm.cfm?SD=2005&ED=2005&R1=1&R2=1&CS=3&SS=2&OS=C&DD=0&OUT=1&C=536&S=PPPWGT-PPPPC&RequestTimeout=120&CMP=0&x=45&y=5 |title=Estimate |accessdate=5 October 2006 |title=World Economic Outlook Database |date=April 2006}}; {{cite web | first =Hendriawan | title =Indonesia Regions | publisher =Indonesia Business Directory | url =http://www.indonext.com/Regions/ | accessdate =24 April 2007 }}</ref>. இவற்றின் தீவுகள் நிலநடுக்கோட்டுக்கு இரு புறமும் உள்ளன. [[போர்னியோ]], [[சுமாத்திரா]], [[சாவகம் (தீவு)|சாவகம்]], [[நியூ கினி]], [[சுலாவெசி]] என்பவை பெரிய தீவுகளாகும். இது போர்னியோ தீவில் [[மலேசியா]]வுடனும் [[புரூணை]]யுடனும், நியு கினி தீவில் [[பப்புவா நியூ கினி]]யுடனும் [[திமோர்]] தீவில் [[கிழக்கு திமோர்]] நாட்டுடனும் நில எல்லைகளை கொண்டுள்ளது. [[சிங்கப்பூர்]], [[பிலிப்பைன்ஸ்]], [[ஆஸ்திரலேசியா]], [[பலாவு]] போன்றவற்றுடன் கடல் எல்லைகளை கொண்டுள்ளது. இந்தோனிசியாவின் தலைநகரும் மிகப்பெரிய நகருமான [[ஜகார்த்தா]] சாவகம் தீவில் உள்ளது.
இந்தோனேசியா [[எரிமலை வளையம்|எரிமலை வளையத்தைச்]] சேர்ந்த நாடாகும். இங்கு 150 உயிருள்ள எரிமலைகள் உள்ளன<ref>{{cite web|url=http://www.volcano.si.edu/world/region.cfm?rnum=06&rpage=list| title=Volcanoes of Indonesia| publisher=[[Smithsonian Institution]]| accessdate=25 March 2007| work=Global Volcanism Program}}</ref>.
 
== பொருளாதாரம் ==
தனியார் துறையும் அரசு துறையும் கலந்த பொருளாதாரம் இந்தோனேசியாவினுடையது.<ref>{{cite web|url=http://www.state.gov/r/pa/ei/bgn/2748.htm |title=Economy of Indonesia |publisher=State.gov |date=3 November 2010 |accessdate=10 April 2011}}</ref>. தென்கிழக்கு ஆசியாவிலேயே இந்தோனேசியா பெரிய பொருளாதாரம் உடைய நாடாகும். இது [[ஜி-20]] ன் உறுப்பினர்<ref>{{cite web|url=http://www.g20.org/about_what_is_g20.aspx |archiveurl=http://web.archive.org/web/20110504233459/http://www.g20.org/about_what_is_g20.aspx |archivedate=4 May 2011 |title=What is the G-20 |publisher=G-20 |accessdate=6 October 2009}}</ref> . இதன் [[மொத்த உள்நாட்டு உற்பத்தி]] 2012 ஆண்டில் 928,274 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது .<ref>{{cite web|url=http://www.imf.org/external/pubs/ft/weo/2011/01/weodata/weorept.aspx?pr.x=26&pr.y=11&sy=2010&ey=2010&scsm=1&ssd=1&sort=country&ds=.&br=1&c=536&s=NGDPD%2CNGDPDPC%2CPPPGDP%2CPPPPC&grp=0&a= |title=Report for
Selected Countries and Subjects |publisher=Imf.org |date=14 September 2006 |accessdate=17 July 2011}}</ref>. 2010ம் ஆண்டு கணக்குப்படி தொழில் துறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 46.4% பங்கும், சேவைத்துறை 37.1% பங்கும், வேளாண்மை 16.5% பங்கும் வகிக்கின்றன. 2010ல் இருந்து சேவைத்துறை மற்ற துறைகளை விட அதிக அளவில் மக்களை பணியில் அமர்த்தியுள்ளது இது மொத்த பணியாளர்களில் 48.9% ஆகும்., விவசாயத்துறை 38.3% பணியாளர்களையும் தொழில் துறை 12.8% பணியாளர்களையும் கொண்டுள்ளது <ref>{{cite web|url=http://www.indexmundi.com/indonesia/economy_profile.html |title=Indonesia Economy Profile 2011 |publisher=Indexmundi.com |accessdate=10 April 2011}}</ref>.
[[பகுப்பு:AFTv5Test]]
 
{{Link FA|ar}}
{{Link FA|en}}
{{Link FA|fr}}
43,906

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1667092" இருந்து மீள்விக்கப்பட்டது