வானியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி LanguageTool: typo fix
வரிசை 5:
வானியல் என்பது வரலாற்றில் மிகவும் பழைமையான அறிவியல் துறைகளில் ஒன்றாகும். வரலாற்றுக்கு முந்தைய நாகரிகங்களின், அதாவது எகிப்து மற்றும் நுபிய நாகரிக நினைவுச் சின்னங்கள் அவர்களின் வானியல் அறிவைப் பறைசாற்றுகின்றன. மேலும், ஆரம்பகால நாகரிகங்களான பபிலோனிய, கிரேக்க, இந்திய, ஈரானிய, சீன மற்றும் மாயன் நாகரிகங்களில் குறிப்பிட்ட கால இடைவேளைகளில் விண்வெளியை அவதானித்துக் குறிப்புகள் எடுப்பது வழக்கமாயிருந்தது. ஆனாலும், ஒரு தனித்துவமான அறிவியல் துறையாக வளருவதற்கு [[தொலைநோக்கி]]யின் கண்டுபிடிப்பு இன்றியமையாததாக இருந்தது; அதன் பயன்பாடு ஆரம்பித்த பின்னரே வானியல் துறையின் வளர்ச்சி சிறப்பாக இருந்தது. வரலாற்று பூர்வமாக வானியல் பல உட்பிரிவுகளையும், துறைகளையும் கொண்டிருந்தது; வான்பொருளியக்க அளவியல் (Astrometry), விண்-தெரிமுறை செலுத்துநெறி (Celestial Navigation), அவதானிப்பு வானியல் மற்றும் [[நாட்காட்டி]] தயாரித்தல் போன்றவை. வானியல் பெரிதும், [[வானியற்பியல்|வானியற்பியலுடன்]] தொடர்புபட்டது. தற்காலத்தில், தொழில்முறை வானியல் என்பது [[வானியற்பியல்|வானியற்பிய]]லையே குறிக்கின்றது.<ref>{{cite book|last=Unsöld|year=2001|coauthors=Baschek|pages=6–9|chapter=I. Classical Astronomy and the Solar System}}</ref>
 
20-ஆம் நூற்றாண்டில், வானியல் [[அவதானிப்பு வானியல்]] மற்றும் கருத்தியல் வானியல் என்று இரு-துறைகளாகப் பிரிந்தது. விண்பொருட்களை அவதானித்து, தரவுகள் சேகரித்து, அவற்றை இயற்பியல் முறைகளால் பகுத்தாய்வது ''அவதானிப்பு வானியல்'' ஆகும். விண்பொருட்கள் மற்றும் நிகழ்வுகளை, கணினி மற்றும் கணக்கீட்டு மாதிரிகள் கொண்டு விளக்க முற்படுவது ''கருத்தியல் வானியல்'' ஆகும். இவ்விரு துறைகளும் ஒன்றையொன்று சார்ந்தே இருக்கின்றன. கருத்தியல் கோட்பாடுகளை விளக்க அவதானிப்புகளும், அவதானிப்பு நிகழ்வுகளை விளக்கவிளக்கக் கருத்தியல் கோட்பாடுகளும் பயன்படுத்தப்படுகின்றன.
 
[[விழைஞர் வானியல்|விழைஞர்]]கள் இன்னும் முக்கிய பங்கு வகிக்கின்ற மிகச் சில அறிவுத்துறைகளிலே வானியலும் ஒன்று ஆகும். விசேடமாக மாறுகின்ற தோற்றப்பாடுகளைக் கண்டுபிடிப்பதிலும், அவற்றைக் கவனித்து வருவதிலும் அவர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர். இதைச் சோதிடத்துடன் சேர்த்துக் குழப்பிக்கொள்ளக் கூடாது. சோதிடம், கோள்களின் பெயர்ச்சிகளைக் கண்டறிவதன் மூலம், மனிதர்களின் எதிர்காலத்தைப் பற்றிக்கூற முற்படும் ஒன்றாகும்; இது அறிவியல் முறைகளைத் தழுவிய ஒன்றல்ல.<ref name="new cosmos">{{cite book|first=Albrecht |last=Unsöld|coauthors=Baschek, Bodo; Brewer, W.D. (translator)|title=The New Cosmos: An Introduction to Astronomy and Astrophysics|year=2001| location=Berlin, New York|publisher=Springer|isbn =3-540-67877-8}}</ref>
வரிசை 21:
[[File:AiKhanoumSunDial.jpg|thumb|upright|[[சூரிய மணி காட்டி]]; தற்காலத்திய [[ஆப்கானிஸ்தான்]] 3-வது-2வது நூற்றாண்டு கி.மு.]]
 
சில குறிப்பிடத்தக்க வானியல் கண்டுபிடிப்புக்கள், தொலைநோக்கிகள் பயன்பாட்டுக்கு வர முன்னரே நிகழ்த்தப்பட்டன. எடுத்துக் காட்டாககாட்டாகச் சூரியப் பாதையின் சரிவு, கிமு 1000 ஆண்டுக் காலத்திலேயே சீனரால் கணக்கிடப்பட்டு இருந்தது. [[சந்திர கிரகணம்|சந்திர கிரகணங்கள்]] ஒரு குறிப்பிட்ட ஒழுங்கில் திரும்பத் திரும்ப நடைபெறுவதைக் [[கால்டியர்]] அறிந்து இருந்தனர். கிமு இரண்டாம் நூற்றாண்டில் சந்திரனின் அளவையும், பூமியில் இருந்து அதன் தூரத்தையும் [[ஹிப்பார்க்கஸ்]] மதிப்பீடு செய்திருந்தார்.
 
மத்திய காலத்தில், [[ஐரோப்பா]]வில், நோக்கு வானியல் பெரும்பாலும் தேக்கநிலையை அடைந்திருந்தது. இது 13 ஆம் நூற்றாண்டு வரையாவது நீடித்தது. எனினும் இது இஸ்லாமிய உலகிலும் உலகின் பிற பகுதிகளிலும் செழித்திருந்தது. இவ்வறிவியலுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்த இரு அராபிய வானியலாளர்கள் [[அல்-பத்தானி]]யும், [[தெபிட்]] என்பவருமாவர்.
வரிசை 28:
மறுமலர்ச்சிக் காலத்தில் [[நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ்|நிக்கலஸ் கோப்பர்நிக்கஸ்]], சூரிய மண்டலத்துக்கான, சூரியனை மையமாகக் கொண்ட மாதிரி ஒன்றை முன்மொழிந்தார். [[கலிலியோ கலிலி]], [[ஜொகான்னஸ் கெப்ளர்]] ஆகியோர், இவரது முடிவுகளை ஏற்றுக்கொண்டு அதனைத் திருத்தியும், விரிவாக்கியும் மேம்படுத்தினர். கலிலியோ கலிலிதனது ஆய்வுகளுக்குத் [[தொலைநோக்கி|தொலைநோக்கியைப்]] பயன்படுத்தினார். <ref name=f58-64>Forbes, 1909, pp. 58–64</ref>
 
சூரியனை மையத்தில் கொண்ட கோள்களின் இயக்கங்களைச் சரியாக விளக்கும் முறையொன்றை முதலில் உருவாக்கியவர் [[ஜொகான்னஸ் கெப்ளர்|கெப்ளரேயாவார்]]. எனினும், தானெழுதிய இயக்க விதிகளின் பின்னாலுள்ள கோட்பாடுகளை உருவாக்குவதில் அவர் வெற்றியடையவில்லை. இறுதியில் [[ஐசாக் நியூட்டன்]], விண்சார் இயக்கவியலையும், [[ஈர்ப்பு விதி]]யையும் உருவாக்கிஉருவாக்கிக் கோள்களின் இயக்கங்களையும் விளக்கினார். [[தெறிப்புத் தொலைநோக்கி]]யைக் கண்டுபிடித்தவரும் இவரே ஆவார்.<ref name=f58-64/>
 
தொலைநோக்கியின் அளவும், தரமும் கூடிக்கொண்டு வர அத்துடன் புதிய கண்டுபிடிப்புக்களும் நிகழ்த்தப்பட்டன. லாக்கைல் என்பவர் [[விண்மீன்]]கள் பற்றிய விரிவான [[விபரக்கொத்து]] ஒன்றை உருவாக்கினார். வானியலாளரான [[வில்லியம் ஹேர்ச்செல்]], புகையுருக்கள், கொத்தணிகள் என்பன பற்றிய விபரக்கொத்தை உருவாக்கியதுடன், 1781 இல், [[யுரேனஸ்]] கோளையும் கண்டுபிடித்தார். இதுவே புதிய கோளொன்று கண்டுபிடிக்கப்பட்ட முதல் நிகழ்வாகும்.<ref>Forbes, 1909, pp. 79–81</ref>
வரிசை 80:
 
=== புறஊதா வானியல் ===
[[புறஊதா வானியல்]] அண்ணளவாக 100 - 3200 Å (10 - 320&nbsp;nm) அலைநீளம் கொண்ட கதிர்களைகதிர்களைக் கண்டறிந்து கூர்ந்தாய்வது பற்றியது <ref name="cox2000">{{cite book
|editor=Cox, A. N.
|title=Allen's Astrophysical Quantities
"https://ta.wikipedia.org/wiki/வானியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது