நவூரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Robot: bs:Nauru is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
சி LanguageTool: typo fix
வரிசை 57:
மைக்குரோனேசிய மற்றும் [[பொலினீசியா|பொலினேசிய]] மக்கள் வசிக்கும் நவூரு தீவு [[19ம் நூற்றாண்டு|19ம் நூற்றாண்டின்]] இறுதியில் [[ஜெர்மன் பேரரசு|செருமன் பேரரசினால்]] ஆக்கிரமிக்கப்பட்டு அதன் ஒரு குடியேற்ற நாடாக அறிவிக்கப்பட்டது. [[முதலாம் உலகப் போர்|முதலாம் உலகப் போருக்குப்]] பின், [[ஆத்திரேலியா]], [[நியூசிலாந்து]], மற்றும் [[ஐக்கிய இராச்சியம்]] ஆகியவற்றின் கூட்டு நிருவாகத்தின் கீழ் [[உலக நாடுகள் சங்கம்|உலக நாடுகளின் அமைப்பின்]] கீழ் கொண்டுவரப்பட்டது. [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] போது நவூரு [[சப்பான்|சப்பானியப்]] படையினரால் கைப்பற்றப்பட்டது. போர் முடிவடைந்தவுடன் மீண்டும் ஆஸ்திரேலிய, நியூசிலாந்து, பிரித்தானிய நிருவாகத்தின் கீழ் [[ஐக்கிய நாடுகளின் பொறுப்பாட்சி|ஐநா பொறுப்பாட்சியின்]] கீழ் கொண்டு வரப்பட்டது. [[1968]] ஆம் ஆண்டில் நவூரு விடுதலை அடைந்தது.
 
நவூருத் தீவின் மேற்பரப்பில் [[பாஸ்பேட்|பொஸ்பேட்டுப்]] பாறைகள் அதிகமாகக் காணப்படுகின்றன. [[1960கள்|1960களின்]] இறுதியிலும், [[1970கள்|1970களின்]] தொடக்கத்திலும், நவூருவின் நபர்வரி வருமானம் ஏனைய நாடுகளை விட மிக அதிகமாகவிருந்தது. பொஸ்பேட்டு இருப்பு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, சுரங்கத் தொழிலினால் சுற்றுச்சூழல் மிகவும் பாதிக்கப்பட்டு, இந்நாட்டின் அறக்கட்டளை நிதியம் குறைய ஆரம்பித்தது. வருமான அதிகரிப்புக்காக, நவூரு வரிஏய்ப்பு மிகுந்த நாடாகவும், சட்டவிரோதமாகசட்டவிரோதமாகக் கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றும் நாடாகவும் சிறிதுகாலம் இருந்தது. [[2001]] முதல் [[2008]] வரை, பின்னர் [[செப்டம்பர் 2012|2012 செப்டம்பர்]] முதல், ஆத்திரேலியாவில் தஞ்சமடையும் அகதிகளுக்கான தடுப்பு முகாம் நிறுவப்பட்டதை அடுத்து, அதன் மூலம் ஆத்திரேலிய அரசின் பெருமளவு நிதியுதவி பெறப்படுகிறது.
 
நவூருவின் ஓரவை நாடாளுமன்றத்தில் 18 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். [[ஐக்கிய நாடுகள்]], [[பொதுநலவாய நாடுகள்]], [[ஆசிய அபிவிருத்தி வங்கி]], [[பசிபிக் தீவுகளின் ஒன்றியம்]] ஆகியவற்றில் நவூரு உறுப்பு நாடாகவுள்ளது. [[பொதுநலவாய விளையாட்டுக்கள்]], [[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்]] ஆகியவற்றில் பங்குபெறுகின்றது.
வரிசை 63:
== வரலாறு ==
[[படிமம்:Nauruan-warrior-1880ers.jpg|thumb|left|upright|1880 இல் நவூருவப் போர்வீரன்]]
நவூருவில் முதன் முதலாகமுதலாகக் கிட்டத்தட்ட 3,000 ஆண்டுகளுக்கு முன்னர் [[மைக்குரோனீசியா|மைக்குரோனேசிய]], மற்றும் [[பொலினீசியா|பொலினேசிய]] மக்களால் குடியேற்றம் ஆரம்பமானது.<ref name="UNCCD">{{cite web|author=Nauru Department of Economic Development and Environment|year=2003|url=http://web.archive.org/web/20110722013720/http://www.unccd.int/cop/reports/asia/national/2002/nauru-eng.pdf |title=First National Report To the United Nations Convention to Combat Desertification|publisher=UNCCD}}</ref>
 
1788 ஆம் ஆண்டில் பிரித்தானிய மாலுமியும் திமிங்கில வேட்டையாடியவருமான ஜோன் பேர்ன் என்பவரே நவூருவில் கால் வைத்த முதலாவது [[ஐரோப்பா|ஐரோப்பியர்]] ஆவார். அவர் இத்தீவிற்கு "இனிமையான தீவு" (''Pleasant Island'') எனப் பெயரிட்டார். [[1830கள்]] தொடக்கத்தில் ஐரோப்பாவில் இருந்துஐரோப்பாவிலிருந்து திமிங்கில வேட்டையாளர்களாலும், குறிப்பாக நன்னீர் பெற்றுக் கொள்வதற்காகவும் கப்பல்கள் அடிக்கடி வந்து சென்றன.<ref name=spennemann>{{cite journal|last=Spennemann|first=Dirk HR|journal=Aquaculture International|date=January 2002|volume=10|issue=6|pages=551–562|doi=10.1023/A:1023900601000|title=Traditional milkfish aquaculture in Nauru}}</ref> இக்காலப்பகுதியில் ஐரோப்பியக் கப்பல்களில் இருந்துகப்பல்களிலிருந்து தப்பி வந்தவர்கள் இங்கு வாழத் தொடங்கினர். இத்தீவு மக்கள் ஐரோப்பிய வணிகர்களுடன் மது வகைகளையும், துப்பாக்கிகளையும் தமது உணவுப் பொருட்களைக் கொடுத்துப் பண்டமாற்றம் செய்தார்கள்.<ref>{{cite journal|last=Marshall|first=Mac|coauthors=Marshall, Leslie B|title=Holy and unholy spirits: The Effects of Missionization on Alcohol Use in Eastern Micronesia|journal=Journal of Pacific History|date=January 1976|volume=11|issue=3|pages=135–166|doi=10.1080/00223347608572299}}</ref> [[1878]] இல் ஆரம்பமான 12 இனங்களுக்கிடையேயான போரின் போது இந்தஇந்தச் சுடுகலன்கள் பயன்படுத்தப்பட்டன. கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் வரை நீடித்த இப்போரில் ஏறத்தாழ 500 பேர் வரையில் (தீவின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர்) கொல்லப்பட்டனர்.<ref>{{cite journal|journal=New York Law School Journal of International and Comparative Law|title=Nauru v. Australia|author=Reyes, Ramon E, Jr|volume=16|issue=1–2|year=1996|url=http://heinonline.org/HOL/LandingPage?collection=journals&handle=hein.journals/nylsintcom16&div=6&id=&page=}}</ref>
 
1888 ஆம் ஆண்டில் நவூரு [[செருமனி]]யுடன் இணைக்கப்பட்டு [[மார்சல் தீவுகள்|மார்சல் தீவு]] காப்பரசின் கீழ் நிருவகிக்கப்பட்டது.<ref name=firth>{{cite journal|last=Firth|first=Stewart|title=German labour policy in Nauru and Angaur, 1906–1914|journal=The Journal of Pacific History|date=January 1978|volume=13|issue=1|pages=36–52|doi=10.1080/00223347808572337}}</ref> செருமனியரின் வரவு அந்நாட்டில் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது, நவூரு மன்னர்களின் ஆளுகைக்குள் வந்தது. இத்தீவின் மன்னர்களில் [[ஆயுவேயிதா]] என்பவர் குறிப்பிடத்தக்கவர். கிறித்தவ மதப்பரப்புனர்கள் 1888 இல் [[கிரிபட்டி|கில்பர்ட் தீவுகளில்]] இருந்து வந்தனர்.<ref name=hill/><ref>{{cite book|author=Ellis, AF|year=1935|title=Ocean Island and Nauru&nbsp;– their story|publisher=Angus and Robertson Limited|pages=29–39}}</ref> செருமனியக் குடியேற்றவாதிகள் இத்தீவை நவோடோ என்றும், ஒனெவேரோ என்றும் அழைத்தனர்.<ref>{{cite book|title=Deutsche Rundschau für Geographie und Statistik|author=Hartleben, A|year=1895|page=429}}</ref> முப்பதாண்டுகளுக்கு செருமனியினர் இத்தீவைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். உள்ளூர்ப் பெண்ணைத் திருமணம் புரிந்த செருமனிய வணிகர் இராபர்ட் ராசுச் என்பவர் 1890 ஆம் ஆண்டில் நவூருவின் முதலாவது செருமனிய நிருவாகியாக நியமிக்கப்பட்டார்.<ref name=hill>{{cite book|last=Hill|first=Robert A (ed)|title=The Marcus Garvey and Universal Negro Improvement Association Papers|year=1986|publisher=University of California Press|isbn=9780520058170|chapter=2: Progress Comes to Nauru|volume=5}}</ref>
வரிசை 76:
1942 ஆகத்து 25 ஆம் நாள் நவூரு சப்பானியர்களினால் ஆக்கிரமிக்கப்பட்டது.<ref name=bogart/> சப்பானியர்கள் அங்கு விமான ஓடுபாதை ஒன்றை அமைத்தனர். அது 1943 மார்ச்சு 25 இல் அமெரிக்க வான்படையின் குண்டுவீச்சுக்கு இலக்கானது. 1,200 நவூரு இனத்தவர்களை வேலைக்காக [[சூக் தீவுகள்|சூக் தீவுகளுக்கு]] சப்ப்பானியர்கள் அனுப்பினர்.<ref name=PacMag>{{cite journal|author=Haden, JD|year=2000|url=http://166.122.164.43/archive/2000/April/04-03-19.htm|title=Nauru: a middle ground in World War&nbsp;II|journal=Pacific Magazine|accessdate=16 June 2012}}</ref> நவூரு 1945 செப்டம்பர் 13 ஆம் நாள் ஆத்திரேலிய இராணுவத்தினரால் சப்பானியரிடமிருந்து விடுவிக்கப்பட்டது.<ref>{{cite web|first1=Akira |last1= Takizawa |first2=Allan |last2=Alsleben |url= http://www.dutcheastindies.webs.com/japan garrison.html |title=Japanese garrisons on the by-passed Pacific Islands 1944–1945 |date=1999–2000 |work=Forgotten Campaign: The Dutch East Indies Campaign 1941–1942}}</ref> சூக் தீவுகளில் சப்பானியர்களினால் வேலைக்கமர்த்தப்பட்டவர்களில் உயிருடன் எஞ்சி இருந்த 737 நவூருவர்கள் 1946 சனவரியில் நாடு திரும்பினர்.<ref>{{cite book|author=Garrett, J|year=1996|title=Island Exiles|publisher=ABC|isbn=0-7333-0485-0|pages=176–181}}</ref> 1947 இல், ஆத்திரேலியா, நியூசிலாந்து, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளின் பங்கெடுப்பில் ஒரு [[ஐக்கிய நாடுகள்|ஐநாவின்]] [[ஐக்கிய நாடுகளின் பொறுப்பாட்சி|பொறுப்பாட்சி]] நிறுவப்பட்டது.<ref name=highet/>
 
1966 சனவரியில் நவூரு சுயாட்சி பெற்றது. இரண்டாண்டுகளின் பின்னர் 1968 இல் விடுதலை அடைந்தது. ஆமர் டெரோபர்ட் என்பவர் முதலாவது அரசுத்தலைவரானார்.<ref name=davidson>{{cite journal|last=Davidson|first=JW|title=The republic of Nauru|journal=The Journal of Pacific History|date=January 1968|volume=3|issue=1|pages=145–150|doi=10.1080/00223346808572131}}</ref> 1967 இல் பிரித்தானிய பொஸ்பேட்டு ஆணையத்திடம் இருந்த பங்குகள் அனைத்தையும் நவூரு பெற்றுகொண்டது. 1970 சூனில் நவூரு பொஸ்பேட்டு கூட்டுத்தாபனம் நிறுவப்பட்டது.<ref name=autogenerated1 /> பொஸ்பேட்டு சுரங்க வருமானம் பசிபிக் தீவுகளிலேயே மிகச் சிறந்த வாழ்க்கைத் தரத்தை நவூரு மக்களுக்கு வழங்கியது.<ref>{{cite web|url=http://news.bbc.co.uk/2/hi/programmes/from_our_own_correspondent/7296832.stm|title=Nauru seeks to regain lost fortunes|author=Squires, Nick| date=15 March 2008|publisher=BBC News Online|accessdate=16 March 2008}}</ref> 1989 இல், பொஸ்பேட்டு சுரங்கத் தொழிலினால் நவூரு தீவின் சுற்றுச் சூழலுக்கு ஏற்பட்ட தாக்கங்களுக்காக ஆத்திரேலியாவுக்கு எதிராகஎதிராகப் பன்னாட்டு நீதிமன்றத்தில் நவூரு அரசு வழக்குத் தொடுத்தது. நவூருவில் இருந்த சுரங்கப் பகுதிகளில் மறுவாழ்வளிக்க உதவுவதாக ஆத்திரேலியா ஒப்புக் கொண்டது.<ref name=highet>{{cite journal|author=Highet, K; Kahale, H|year=1993|url=http://www.icj-cij.org/docket/index.php?p1=3&p2=3&code=naus&case=80&k=e2|title=Certain Phosphate Lands in Nauru|journal=American Journal of International Law|volume= 87|pages=282–288}}</ref><ref>{{cite book|series=ICJ Pleadings, Oral Arguments, Documents|title=Case Concerning Certain Phosphate Lands in Nauru (Nauru v. Australia) Application: Memorial of Nauru|date=January 2004|isbn=978-92-1-070936-1|publisher=United Nations, International Court of Justice}}</ref>
 
== அரசியல் ==
வரிசை 89:
நவூருவில் இராணுவப் படை எதுவும் இல்லை, ஆனாலும் பொதுமக்களின் கட்டுப்பாட்டில் சிறிய அளவில் காவல்துறையினர் உள்ளனர்.<ref name = "CIA"/> இத்தீவின் பாதுகாப்பு [[ஆத்திரேலியா]]வின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.<ref name=CIA/> ஆத்திரேலியாவுடன் 2005 இல் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஆத்திரேலியா நவூருவிற்கான நிதியுதவி, மற்றும் தொழிநுட்பத் தேவைகளை வழங்குகின்றது, அத்துடன் சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றுக்கான ஆலோசனைகளையும் வழங்குகிறது. பதிலாக ஆத்திரேலியக் கடற்பரப்புக்குள் நுழையும் வெளிநாட்டு அகதிகளை அவர்களின் அகதி விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் வரை அவர்கள் இத்தீவில் தங்க வைத்துப் பராமரிப்படுகின்றனர்.<ref name=DFAT>{{cite web|publisher=Australian Department of Foreign Affairs and Trade|url=http://www.dfat.gov.au/geo/nauru/nauru_brief.html|title=Republic of Nauru Country Brief|date=November 2005|accessdate=2 May 2006}}</ref> நவூரு அதிகாரபூர்வ நாணயமாக [[ஆஸ்திரேலிய டாலர்|ஆத்திரேலிய டாலரைப்]] பயன்படுத்துகிறது.<ref name=state>{{cite web|url=http://www.state.gov/r/pa/ei/bgn/16447.htm|title=Background Note: Nauru|publisher=State Department Bureau of East Asian and Pacific Affairs|date=செப்டம்பர் 2005|accessdate=11 மே 2006}}</ref>
 
2002 சூலை 21 இல், [[மக்கள் சீனக் குடியரசு|சீனாவுடன்]] தூதரக உறவுகளை ஏற்படுத்தி $130 மில்லியன் நிதியுதவியை அந்நாட்டிடம் இருந்துஅந்நாட்டிடமிருந்து பெற்றுக் கொண்டது.<ref name=harding>{{Cite news|author=Harding, Luke|url=http://www.guardian.co.uk/world/2009/dec/14/nauro-recognises-abkhazia-south-ossetia |title=Tiny Nauru struts world stage by recognising breakaway republics |newspaper=கார்டியன் |date= 14 திசம்பர் 2009|accessdate=22 சூன் 2010}}</ref> இரண்டு நாட்களின் பின்னர் [[சீனக் குடியரசு]] நவூருவுடனான உறவுகளைத் துண்டித்தது. பின்னர் 2005 மே 14 இல் மீண்டும் சீனக் குடியரசுடன் உறவுகளைப் புதுப்பித்தது,<ref>{{cite news|url=http://www.taipeitimes.com/News/front/archives/2005/05/15/2003254718|newspaper=தாய்ப்பெய் டைம்சு|date=15 மே 2005|title=Nauru switches its allegiance back to Taiwan from China|author=Su, Joy|accessdate=18 சூன் 2012}}</ref> இதனால் சீனாவுடனான உறவுகள் பாதிப்படைந்தன.<ref>{{cite web|url=http://www.accessmylibrary.com/article-1G1-136916820/china-officially-severs-diplomatic.html|publisher=Asia Africa Intelligence Wire|date=31 May 2005|accessdate=18 June 2012|title=China officially severs diplomatic ties with Nauru}}</ref> ஆனாலும், சீனா தனது பிரதிநிதி ஒருவரை நவூருவில் தொடர்ந்து வைத்துள்ளது.<ref>{{cite web|url=http://www.gov.cn/misc/content 162880.htm|title=Chinese Embassy in Nauru|accessdate=18 June 2012|date=18 January 2006|publisher=Gov.cn}}</ref>
 
2008 இல், நவூரு [[கொசோவோ]]வைத் தனிநாடாக அங்கீகரித்தது, [[2009]] இல் [[சியார்சியா (நாடு)|சியார்சியாவில்]] இருந்து விடுதலையை அறிவித்த [[அப்காசியா]]வை அங்கீகரித்ததன் மூலம், உருசியா, நிக்கராகுவா, வெனிசுவேலா ஆகியவற்றுக்கு அடுத்ததாக அந்நாட்டை அங்கீகரித்த நான்காவது நாடானது. இதன் மூலம் நவூரு $50&nbsp;மில்லியன் நிவாரண உதவியை [[உருசியா]]விடம் இருந்து பெற்றுக் கொண்டது.<ref name=harding/>
 
நவூருவின் வருமானத்தின் முக்கிய பங்கு ஆத்திரேலியாவிடம் இருந்துஆத்திரேலியாவிடமிருந்து கிடைக்கும் உதவி மூலம்உதவிமூலம் கிடைக்கிறது. 2001 ஆம் ஆண்டில் ஆத்திரேலியாவை நோக்கிச் சென்ற படகில் இருந்த 438 [[பர்மா|பர்மிய]] அகதிகளை எம்வி டாம்பா என்ற நோர்வே கப்பல் மீட்டது. நவூருவுடன் ஆத்திரேலியா எட்டிய [[பசிபிக் தீர்வு]] என்ற உடன்பாட்டின் அடிப்படையில் அவர்கள் அனைவரையும் ஆத்திரேலியா நவூரு தீவில் தற்காலிகமாகக் குடியேற்றியது. ஆத்திரேலியாவின் நிதியுதவியைப் பெற்றுக் கொண்டு நவூரு அங்கு ஒரு அகதிகள் தடுப்பு முகாம் ஒன்றை நிருவகித்தது.<ref>{{cite journal|url=http://www.austlii.edu.au/au/journals/MarStudies/2002/2.html|author=White, Michael|title=M/V Tampa Incident and Australia's Obligations&nbsp;– August 2001|year=2002|journal=Maritime Studies|accessdate=18 சூன் 2012}}</ref> இம்முகாமில் இருந்தவர்களின் அகதி விண்ணப்பங்கள் பரீலிக்கப்பட்டு படிப்படியாக அவர்கள் ஆத்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட்டனர். 2006, 2007 காலப்பகுதிகளில் [[இலங்கை]]யர் உட்பட மேலும் பலர் நவூருவுக்கு அனுப்பப்பட்டனர்.<ref>{{cite web|date=12 February 2007|url=http://www.abc.net.au/news/2007-02-12/nauru-detention-centre-costs-2m-per-month/2193118|title=Nauru detention centre costs $2m per month|publisher=ஏபிசி|accessdate=12 பெப்ரவரி 2007}}</ref> 2008 ஆம் ஆண்டில் ஆத்திரேலியாவின் [[கெவின் ரட்]] அரசு இம்முகாமை மூடியது.<ref name=state/> ஆகத்து 2012 இல் ஆத்திரேலிய அரசு மீண்டும் நவூருவில் தடுப்பு முகாம் ஒன்றை நிறுவியது.<ref name="SBS World News Australia">{{cite news|date=16 August 2012|url=http://www.sbs.com.au/news/article/1683062/Asylum-bill-passes-parliament|publisher=SBS World News Australia|title="Asylum bill passes parliament"|accessdate=18 ஆகத்து 2012}}</ref><ref>[[n:அகதிகளை பசிபிக் நாடுகளில் தடுத்து வைக்கும் சட்டமூலத்திற்கு ஆத்திரேலிய நாடாளுமன்றம் அனுமதி|அகதிகளை பசிபிக் நாடுகளில் தடுத்து வைக்கும் சட்டமூலத்திற்கு ஆத்திரேலிய நாடாளுமன்றம் அனுமதி]], விக்கிசெய்தி</ref> 2012 செப்டம்பரில் [[கிறிஸ்துமசு தீவு|கிறித்துமசுத் தீவில்]] தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை அகதிகள் 30 பேரடங்கிய முதலாவது குழு நவூரு தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டனர்<ref>[[n:இலங்கையைச் சேர்ந்த 30 புகலிடக் கோரிக்கையாளர்களை ஆத்திரேலியா நவூருக்கு அனுப்பியது|இலங்கையைச் சேர்ந்த 30 புகலிடக் கோரிக்கையாளர்களை ஆத்திரேலியா நவூருக்கு அனுப்பியது]], விக்கிசெய்தி, செப்டம்பர் 14, 2012</ref>
 
== புவியியல் ==
[[படிமம்:Aerial view of Nauru.jpg|thumb|வானில் இருந்தான நவுருவின் தோற்றம்]]
நவூரு தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் [[நிலநடுக் கோடு|நிலநடுக் கோட்டின்]] தெற்கே 42 கிமீ தூரத்தில் உள்ள 21 சதுரகிமீ<ref name="CIA" /> பரப்பளவைக் கொண்ட ஒரு நீள்வட்ட வடிவத் தீவு. இத்தீவைச் சுற்றியும் [[பவளப் பாறைகள்|பவளத் திட்டுகள்]] காணப்படுகின்றன.<ref name=state/> இப்பவளத்திட்டுகள் காரணமாக இங்கு [[துறைமுகம்]] ஒன்று அமைக்கப்படமுடியாதுள்ளது, ஆனாலும் இங்குள்ள கால்வாய்கள் வழியே சிறிய ரகப் படகுகள் தீவுக்குள் வரக்கூடியதாக உள்ளன.<ref>{{cite web|page=234|url=http://www.sprep.org/att/IRC/eCOPIES/Countries/Nauru/11.pdf|author=Thaman, RR; Hassall, DC|publisher=South Pacific Regional Environment Programme|title=Nauru: National Environmental Management Strategy and National Environmental Action Plan}}</ref> வளமான கரையோரப் பகுதி நிலம் கரையில் இருந்துகரையிலிருந்து 150 முதல் 300 மீட்டர்கள் வரை உள்ளே உள்ளது.<ref name=state/>
 
பவளத் திட்டுகள் நவூருவின் மத்திய மேட்டுநிலத்தைச் சுற்றி அமைந்துள்ளன. மேட்டுநிலத்தின் கமாண்ட் ரிட்ச் எனப்படும் அதியுயர் புள்ளி கடல்மட்டத்தில் இருந்துகடல்மட்டத்திலிருந்து 71 மீட்டர் உயரத்தில் உள்ளது.<ref>{{cite book|title=Geology and hydrogeology of carbonate islands |year=1997 |publisher=Elsevier |isbn=9780444815200 |editors=Vacher, H Leonard; Quinn, Terrence M|chapter=24: Geology and Hydrogeology of Nauru Island|author=Jacobson, Gerry; Hill, Peter J; Ghassemi, Fereidoun|page=716}}</ref> நவூருவின் ஒரேயொரு வளமான நிலம் அத்தீவின் ஒடுக்கமான கரையோரப் பகுதியாகும். இங்கு [[தென்னை]] மரங்கள் அதிகளவில் உள்ளன. புவாடா வாவியைச் சுற்றியுள்ள பகுதியில் [[வாழை]], [[அன்னாசி]], மரக்கறிகள், [[தாழை]] மரங்கள் ஆகியனவும், [[புன்னை]] போன்ற கடின மரங்களும் விளைகின்றன.<ref name=state/>
 
பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள தீவுகளில் பாசுப்பேட்டுப் பாறைகள் அதிகம் உள்ள மூன்று தீவுகளில் நவூருவும் ஒன்று. (ஏனையவை [[கிரிபட்டி]]யில் உள்ள பனாபா, மற்றும் [[பிரெஞ்சு பொலினீசியா]]வில் உள்ள மக்காட்டி ஆகியவை). நவூருவில் பொசுப்பேட்டு வளம் தற்போது மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது. மத்திய மேட்டுநிலப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த பொசுப்பேட்டு சுரங்கத் தொழில் மூலம்தொழில்மூலம் இப்பகுதியில் 15 மீட்டர் உயர அளவில் சுண்ணாம்புத் தரிசு நிலம் ஏற்பட்டுள்ளது. சுரங்கத் தொழில் தீவின் நிலப்பகுதியின் 80 விழுக்காட்டினை வளமற்ற பகுதியாக்கியுள்ளது; கடல் வாழினங்களில் 40&nbsp;விழுக்காடு அழிந்துள்ளது.<ref name=state/><ref name = UNCCC>{{cite web|author=Republic of Nauru|year=1999|url=http://unfccc.int/resource/docs/natc/naunc1.pdf|title=Climate Change&nbsp;– Response|work=First National Communication|publisher=United Nations Framework Convention on Climate Change|accessdate=9 செப்டம்பர் 2009}}</ref>
 
இத்தீவிற்குரிய [[கலன்றாவரம்|உயர் தாவரங்களாக]] 60 வகைகள் இனங்காணப்பட்டுள்ளன. இவை எவையும் [[அகணிய உயிரி]]கள் அல்ல. [[தென்னை]] வேளாண்மை, சுரங்கத் தொழில், மற்றும் [[அறிமுகப்படுத்தப்பட்ட இனங்கள்]] இத்தீவிற்குரிய உள்ளூர்ப் பயிரின வேளாண்மைக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருந்து வந்துள்ளன.<ref name=UNCCD/> இத்தீவிற்குரிய [[பாலூட்டி]]கள் எவையும் இல்லாவிட்டாலும், சில பூச்சி வகைகள், நில நண்டுகள், நவூரு நாணல் கதிர்க்குருவி போன்றவை இத்தீவிற்குரியவையாக உள்ளன. பொலினேசிய எலி, பூனைகள், பன்றிகள், கோழிகள் இத்தீவுக்கு கப்பல்கள் மூலம்கப்பல்கள்மூலம் கொண்டுவரப்பட்டவையாகும்.<ref>{{cite web|url=http://www.sprep.org/att/IRC/eCOPIES/Birdlife-Pacific/Important%20Bird%20Area%20Coverage%20by%20Country.htm|accessdate=18 June 2012|author=BirdLife International|title=Important Bird Areas in Nauru|publisher=Secretariat of the Pacific Regional Environmental Programme}}</ref>
 
நவூருவில் இயற்கை நன்னீர் வளம் மிகக்குறைந்த அளவிலேயே உள்ளது. இங்குள்ளவர்கள் பெரும்பாலும் [[உப்பகற்றல்]] முறை மூலமே நன்னீரைப் பெற்று வருகின்றனர். நவூருவின் காலநிலை ஆண்டு முழுவதும் மிகவும் வெப்பமானதாகவே உள்ளது. நவம்பர் முதல் பெப்ரவரி வரை [[பருவப் பெயர்ச்சிக் காற்று|பருவப் பெயர்ச்சி]] மழை காணப்படுகிறது. ஆனாலும், சூறாவளிகள் மிகக் குறைவாகவே தாக்குகின்றன. ஆண்டு மழைவீழ்ச்சி அளவு இங்கு பெரிதும் மாறுபடுகின்றது, ஆனாலும் [[எல் நீனோ-தெற்கத்திய அலைவு|எல் நீனோ-தெற்கத்திய அலைவினால்]] வறண்ட காலநிலை இங்கு பெருமளவு பதியப்படுகின்றது.<ref name = "UNCCD"/><ref>{{cite book|title=Affaire de certaines terres à phosphates à Nauru|year=2003|publisher=International Court of Justice|isbn=9789210709361|pages=107–109}}</ref> வெப்பநிலை பொதுவாகபொதுவாகப் பகல் நேரத்தில் {{convert|26|°C|°F}} முதல் {{convert|35|°C|°F}} வரை ஆகவும், இரவு நேரத்தில் {{convert|22|°C|°F}} முதல் {{convert|34|°C|°F}} வரை ஆகவும் உள்ளது.<ref>{{cite web|url=http://www.cawcr.gov.au/projects/PCCSP/pdf/6. Nauru GH poster.pdf |title=Pacific Climate Change Science Program |accessdate=10 June 2012|publisher=Government of Australia}}</ref>
 
== பொருளாதாரம் ==
வரிசை 118:
நவூருவில் அதிகமாக வாழும் [[இனக் குழு]] [[நௌருவ மொழி|நவூருவர்கள்]] (58%), ஏனைய பசிபிக் தீவு மக்கள் (26%), ஐரோப்பியர் (8%), சீனர்கள் (8%).<ref name=CIA/> பெரும்பாலானோரின் மதம் [[கிறித்தவம்]] (மூன்றில் இரண்டு பங்கு [[சீர்திருத்தத் திருச்சபை|சீர்திருத்தக் கிறித்தவர்கள்]], ஏனையோர் [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்கர்]].<ref name=state/> இவற்றை விட குறிப்பிடத்தக்க அளவு [[பகாய் சமயம்|பகாய் மதத்தவர்கள்]] (10%) உள்ளனர். உலகிலேயே மக்கள்தொகை அடிப்படையில் அதிக பகாய் மதத்தைச் சேர்ந்தவர்கள் நவூருவிலேயே வசிக்கின்றனர்.<ref>{{cite web|url=http://www.adherents.com/largecom/com bahai.html |title=Adherent.com's Largest Baha'i Communities |publisher=Adherents.com |accessdate=22 June 2010}}</ref>, [[பௌத்தம்|பௌத்தர்கள்]] (9%), முசுலிம்கள் (2.2%) வசிக்கின்றனர்.
 
நவூருவர்களின் [[எழுத்தறிவு]] 96&nbsp;விழுக்காடு ஆகும். ஆறு முதல் பன்னிரண்டு வயதானவர்களுக்குவயதானவர்களுக்குக் கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.<ref>{{cite web|author=Waqa, B|year=1999|url=http://www2.unesco.org/wef/countryreports/nauru/contents.html|title=UNESCO Education for all Assessment Country report 1999 Country: Nauru|accessdate=2 May 2006}}</ref> [[தென் பசிபிக் பல்கலைக்கழகம்|தென் பசிபிக் பல்கலைக்கழகத்தின்]] வளாகம் ஒன்று இங்கு அமைந்துள்ளது.<ref>{{cite web|url=http://www.usp.ac.fj/index.php?id=usp nauru home|accessdate=19 June 2012|title=USP Nauru Campus|publisher=University of the South Pacific}}</ref>
 
நவூருவர்களே உலகிலேயே அதிக [[உடற் பருமன்]] உள்ள மக்கள் ஆவர்: ஆண்களில் 97&nbsp;விழுக்காட்டினரும், பெண்களில் 93&nbsp;விழுக்காட்டினரும் அதிக உடற்பருமனைக் கொண்டுள்ளனர்.<ref name=TI.uk>{{cite news|url=http://www.independent.co.uk/life-style/health-and-families/health-news/fat-of-the-land-nauru-tops-obesity-league-2169418.html|title=Fat of the land: Nauru tops obesity league|date=26 திசம்பர் 2010|newspaper=Independent|accessdate=19 சூன் 2012}}</ref> இதன் விளைவாக, உலகின் அதிகளவு [[நீரிழிவு நோய் (இரண்டாவது வகை)|இரண்டாம் வகை நீரிழிவு]] நோய் நவூருவிலேயே காணப்படுகிறது. இங்குள்ள 40 விழுக்காட்டினர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.<ref>{{cite journal|author=King, H; Rewers M|year=1993|title=Diabetes in adults is now a Third World problem|journal=Ethnicity & Disease|volume=3|pages=S67–74}}</ref> நவூருவர்களின் சராசரி ஆயுட்காலம் ஆண்களுக்கு 60.6&nbsp;ஆண்டுகளும், பெண்களுக்கு 68.0&nbsp;ஆண்டுகளும் (2009 தரவுகள்) ஆகும்.<ref>{{cite web|publisher=[[உலக சுகாதார அமைப்பு]]|work=World health report 2005|url=http://www.who.int/countries/nru/en/index.html|title=Nauru|accessdate=2 மே 2006}}</ref>
வரிசை 130:
 
== உயிர்ப் பல்வகைமை ==
நவூருவில் பொசுப்பேட்டு சுரங்கத் தொழில், தாவர வளர்ச்சிக் குறைபாடு போன்ற காரணங்களால் விலங்கு வளம் இங்கு மிகக் குறைவாகவே உள்ளது. பல உள்நாட்டுப் பறவைகள் காணாமல் போயுள்ளன அல்லது அவற்றின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டமையால் அவை அழிந்து போயின.<ref>http://www.un.int/nauru/countryprofile.html</ref> நவூருவில் பசுமை குறைவாக உள்ளமையே இத்தீவில் விலங்கு வளம் குறைவாக உள்ளமைக்கு முக்கிய காரணம் ஆகும். எலிகள் போன்ற சிறிய வகைக் [[கொறிணி]]கள் இத்தீவில் காணப்படுகின்றன. காட்டுப் பன்றிகள், வீட்டுப் பறவையினங்கள் வேறு இடங்களில் இருந்துஇடங்களிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டன. ஆழம் அதிகமில்லாத கடலடிப் பாறைகள் அதிகம் உள்ளதால் மீன் பிடித்தல், நீரில் குதித்து மூழ்குதல் போன்றவை இங்கு சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் புகழ்பெற்ற பொழுதுபோக்குகளாகும்.<ref>http://www.internationalwildlifelaw.org/NauruFish.html</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நவூரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது