குடும்பப் பெயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 8:
பெரும்பாலான மேல் நாட்டுப் பண்பாடுகளில் குடும்பப் பெயர் சூட்டிய பெயருக்குப் பின்னால் இறுதிப் பெயராக வரும். ஆனால், ஐரோப்பாவின் சில பகுதிகளிலும், [[உருசியா]], [[சீனா]], [[சப்பான்]], [[கொரியா]], [[மடகாசுக்கர்]], [[வியட்நாம்]] போன்ற நாடுகளிலும், [[இந்தியா]]வின் சில பகுதிகளிலும் இது சூட்டிய பெயருக்கு முன் வைக்கப்படுகிறது. எனினும் சப்பான், தாய்லாந்து, அங் ஆங்க் போன்ற நாடுகளில், பெயர்களை இலத்தீன் எழுத்தில் எழுதும்போது மேல் நாட்டு முறைப்படி ஒழுங்கு மாற்றி குடும்பப் பெயரைப் பின் வைத்து எழுதுகின்றனர். பன்னாட்டுத் தொடர்புகளில் ஏற்படக் கூடிய சிக்கல்களைத் தவிர்ப்பதற்காகத் தற்காலத்தில், இந்த நடை முறையைப் பல பண்பாட்டினரும் கடைப்பிடிக்கின்றனர்.
 
இந்தியாவின் பல பகுதிகளில் சாதிப் பெயரே கூடுதல் பெயராக வழங்கி வருகின்றது. ''காமராச நாடார்'', ''சரத் யாதவ்'', ''சந்திரபாபு நாயுடு'' போன்ற பெயர்கள் இதற்கு எடுத்துக்காட்டுகள். தமிழ் நாட்டில் சாதிப் பெயர்களைச் சேர்த்து வழங்கும் முறை தற்போது சட்டப்படி இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது. தமிழ் நாடு உட்பட இந்தியாவின் சில பகுதிகளில், குடியேற்றவாத ஆட்சிக் காலத்தில் தந்தையின் பெயரை அல்லது ஊர்ப் பெயரை அல்லது இரண்டையும் கூடுதல் பெயராகச் சேர்த்துக்கொள்ளும் வழக்கமும் உருவானது. இம்முறையில் கூடுதல் பெயரைச் சூட்டிய பெயருக்கு முன் வைப்பதே வழக்கம்.
 
 
==குறிப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/குடும்பப்_பெயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது