ஏ. ஆர். அந்துலே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
வரிசை 42:
'''அப்துல் ரகுமான் அந்துலே''' (9 பெப்ரவரி 1929 – 2 திசம்பர் 2014) [[இந்தியா|இந்திய]] [[அரசியல்வாதி]] ஆவார். [[மகாராட்டிரம்|மகாராட்டிர]] முதலமைச்சராகவும் இந்திய நடுவண் அரசு அமைச்சரவையில் சிறுபான்மையினர் நல அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார். [[பதினான்காவது மக்களவை]]யில் [[இந்திய நாடாளுமன்றம்|நாடாளுமன்ற உறுப்பினராக]] இருந்துள்ளார். ஊழலுக்காக [[பம்பாய் உயர் நீதிமன்றம்|பம்பாய் உயர் நீதிமன்றத்தால்]] தண்டனை வழங்கப்பட்டதை அடுத்து முதலமைச்சர் பதவியிலிருந்து விலக நேரிட்டது.
 
அந்துலே [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசுக் கட்சியைச்]] சேர்ந்தவர். [[இந்தியப் பொதுத் தேர்தல், 2009|2009ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில்]] [[ராய்காட் மக்களவைத் தொகுதி]]யில் [[ஆனந்த் கீத்தே]]யிடம் தோற்றுப் போனார்தோற்றார்.
 
==வாழ்க்கை வரலாறு==
மகாராட்டிரத்தின் [[ராய்கட் மாவட்டம்|ராய்கட் மாவட்டத்தில்]] அம்பேத் சிற்றூரில் அஃபீசு அப்துல் கஃபூருக்கும் சோராபிக்கும் மகனாகப் பிறந்தார். நர்கீசு அந்துலேயை திருமணம் புரிந்துள்ள அந்துலேக்கு ஒரு மகனும் மூன்று மகள்களும் உள்ளனர். இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்த பின்னர் சட்டவியல் படித்தார். [[மும்பை பல்கலைக்கழகம்|மும்பை பல்கலைக்கழகத்திலும்]][[இலண்டன்|இலண்டனில்]] உள்ள லிங்கன் இன்னிலும் படித்தார்.
 
[[மகாராஷ்டிர சட்டமன்றம்|மகாராட்டிர ச்சட்டமன்றத்தில்]] 1962இலிருந்து 1976 வரை பேரவை உறுப்பினராக இருந்துள்ளார்.<ref>http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1962/StatRep_Maharastra_1962.pdf</ref> இந்தக் காலத்தில் சட்டம், நீதித்துறை துணை அமைச்சராகவும் துறைமுகங்கள், மீன்வளத்துறை அமைச்சராகவும் கட்டிடங்கள், குடியிருப்பு வசதிகள் அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார். 1976 முதல் 1980 வரை [[மாநிலங்களவை]] உறுப்பினராக இருந்துள்ளார்; 1980இல் மீண்டும் மகாராட்டிர சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு சூன் 1980 முதல் சனவரி 1982 வரை மகாராட்டிர முதலமைச்சராகப் பணியாற்றினார். ஊழல் மற்றும் மிரட்டிப் பணம்பறிபணம்பறித்த வழக்கில் தண்டனை வழங்கப்பட்டதை அடுத்து முதலமைச்சர் பதவியிலிருந்து விலக நேரிட்டது.<ref name="nytimes1982">[http://query.nytimes.com/gst/fullpage.html?res=9A07E3D61038F930A25752C0A964948260 "AROUND THE WORLD; A Top Official in India Is Convicted of Extortion"], Associated Press (''The New York Times''), January 13, 1982.</ref> 1985இல் மீண்டும் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>[http://eci.nic.in/eci_main/electionanalysis/AE/S13/partycomp13.htm State Elections 2004 - Partywise Comparison for 13 - Shriwardhan Constituency of Maharashtra]</ref> 1989இல் [[ஒன்பதாவது மக்களவை]]க்கும் 1991இல் [[பத்தாவது மக்களவை]]க்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். சூன் 1995 முதல் மே 1996 வரை நடுவண் அரசில் நலவாழ்வு மற்றும் குடும்பநல அமைச்சராகப் பணியாற்றிய அந்துலே, பெப்ரவரி 1996 முதல் மே வரை நீர்வளத்துறை கூடுதல் பொறுப்பையும் கவனித்துக் கொண்டார். 1996இல் [[பதினோராவது மக்களவை]]க்கும், 2004இல் [[பதினான்காவது மக்களவை]]க்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். [[மன்மோகன் சிங்]] அரசில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.<ref name=Sketch>[http://164.100.24.209/newls/Biography.aspx?mpsno=3236 Official biographical sketch in Parliament of India website].</ref>
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஏ._ஆர்._அந்துலே" இலிருந்து மீள்விக்கப்பட்டது