ஓ ஹென்றி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Adding: bn:ও হেনরি
No edit summary
வரிசை 2:
 
'''ஓ ஹென்றி''' ([[செப்டம்பர் 11]], [[1862]] - [[ஜூன் 5]] , [[1910]]) ஆங்கில [[எழுத்தாளர்]]. இவரது உண்மையான பெயர் சிட்னி போர்ட்டர் என்பதாகும். சிறு [[திருட்டு]]க் குற்றத்துக்காக மூன்றாண்டு [[சிறை]]யிலிருந்தார். அக்காலத்தில் [[சிறுகதை]]கள் எழுதத் தொடங்கினார். அதுவே பின்னர் அவரது வாழ்க்கைத் தொழிலாயிற்று.
 
==இளமைக் காலம்==
போர்ட்டர் 1862 ஆம் ஆண்டு [[செப்டெம்பர்]] மாதம் 11 ஆம் தேதி [[வட கரோலினா]]வில் உள்ள கிரீன்ஸ்போரோ என்னும் இடத்தில் பிறந்தார். இவரது [[தந்தை]]யார் டாக்டர் அல்கர்மன் சிட்னி போர்ட்டர் ஆவார். தாயார் பெயர் மேரி ஜேன் வெர்ஜீனியா சுவைன் போர்ட்டர் என்பதாகும். வில்லியத்துக்கு மூன்று வயதாக இருக்கும்போது அவனது தாயார் [[காசநோய்]] ஏற்பட்டு இறந்தார். இதைத் தொடர்ந்து வில்லியமும் அவனது தந்தையும் அவனது தந்தைவழிப் [[பாட்டி]] வீட்டுக்கு இடம் மாறினர்.
 
வில்லியம் சிறுவனாக இருந்தபோது நல்ல வாசிப்புப் பழக்கம் உள்ளவனாக இருந்தான். செந்நெறி இலக்கியங்கள் முதல் மலிவான புதினங்கள் வரை கிடைத்தவற்றை எல்லாம் வாசித்தான். ''[[ஆயிரத்தொரு இரவுகள்]]'' கதை அவனுக்கு மிக விருப்பமான கதையாக இருந்தது.
 
1876 ஆம் ஆண்டில் போர்ட்டர் தனது [[தொடக்கக் கல்வி]]யை முடித்துக் கொண்டு, லிண்ட்சே தெரு உயர் பாடசாலையில் (Lindsey Street High School) சேர்ந்தான். 1881 ஆம் ஆண்டில் அவன் தனது உறவினர் ஒருவரின் [[மருந்துக் கடை]]யில் கணக்கு எழுதுபவராக வேலைக்குச் சேர்ந்தான். 19 ஆவது வயதில் [[மருந்தாளர்|மருந்தாளராக]] அனுமதிப் பத்திரம் கிடைத்தது.
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/ஓ_ஹென்றி" இலிருந்து மீள்விக்கப்பட்டது