வேதியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{Link FA|fo}} →
வரிசை 6:
:* [[இயல் வேதியியல்]] ([[பௌதீக இரசாயனம்]]) - ''Physical Chemistry''
 
வேதியியல் அணுக்கள் பற்றியும், அவ்வணுக்களுக்குப் பிற அணுக்களுடனான இடைவினைகள் பற்றியும், சிறப்பாக வேதியியல் பிணைப்புக்களின் இயல்புகள் குறித்தும் கவனம் செலுத்துகிறது.
 
[[நிலவியல்]], உயிரியல் போன்ற இயற்கை அறிவியல் துறைகளை இயற்பியலுடன் இணைக்கும் துறையாக வேதியியல் இருப்பதால், சில வேளைகளில் வேதியியலை "அறிவியலின் மையம்" என்பதுண்டு. வேதியியல் [[இயற்பிய அறிவியல்|இயற்பிய அறிவியலின்]] ஒரு பகுதியாக இருப்பினும், இது இயற்பியலில் இருந்தும் வேறானது.
 
{{அறிவியல்}}
வரிசை 16:
மரபுவழி வேதியியலானது, அடிப்படைத் துகள்கள், அணுக்கள், மூலக்கூறுகள், சாரப்பொருட்கள், உலோகங்கள், பளிங்குகள், பிற பொருட் சேர்க்கைகள் என்பன பற்றி ஆய்வு செய்கிறது. இவ்வாய்வு அப் பொருட்களின் [[திண்மம் (இயற்பியல்)|திண்ம]], [[நீர்மம்|நீர்ம]] அல்லது [[வளிமம்|வளிம]] நிலையில் தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ இடம்பெறலாம். வேதியியலில் ஆராயப்படும் இடைவினைகள், தாக்கங்கள், மாற்றங்கள் என்பன வேதிப்பொருட்களிடையே இடம்பெறும் இடைவினைகளின் விளைவாக அல்லது பொருளுக்கும் ஆற்றலுக்கும் இடையேயான இடைவினைகளின் விளைவாக ஏற்படுபவை. வேதிப் பொருட்களின் இவ்வாறான நடத்தைகள் பற்றிய ஆய்வுகள், வேதியியல் ஆய்வு கூடங்களில் நடைபெறுகின்றன.
 
"வேதியியல் தாக்கம்" அல்லது "[[வேதிவினை]]" என்பது சில சாரப்பொருட்கள் ஒன்று அல்லது பல சாரப்பொருட்களாக மாற்றம் அடைவதைக் குறிக்கிறது. இதை ஒரு [[வேதிச் சமன்பாடு|வேதிச் சமன்பாட்டினால்]] குறியீடாக வெளிப்படுத்த முடியும். இச் சமன்பாடுகளின் வலது பக்கத்திலும், இடது பக்கத்திலும் உள்ள அணுக்களின் எண்ணிக்கை மிகப் பெரும்பாலும் ஒரே அளவாக இருக்கும். ஒரு சாரப்பொருள் உட்படும் வேதிவினைகளின் இயல்புகளும், அதனோடு ஆற்றல் மாற்றங்களும், [[வேதியியல் விதி]]கள் எனப்படும் சில அடிப்படை விதிகளுக்கு அடங்குவனவாக உள்ளன.
 
ஆற்றல், மாற்றீட்டு வெப்பம் ஆகியவற்றைக் கருத்துக்கு எடுத்தல் ஏறத்தாழ எல்லா வேதியியல் ஆய்வுகளிலுமே முக்கியமாக உள்ளது. வேதிச் சாரப்பொருட்களை, அவற்றின் கட்டமைப்பு, நிலை, வேதியியல் சேர்க்கை என்பவற்றின் அடிப்படையில் வகைப்படுத்துகின்றனர். இவற்றை வேதியியல் பகுப்பாய்வுகளுக்கான கருவிகளின் துணையுடன் பகுத்தாய்வு செய்ய முடியும். வேதியியல் ஆய்வுகளில் ஈடுபடும் அறிவியலாளர்கள் வேதியியலாளர் எனப் பெயர் பெறுவர். வேதியியலாளர்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வேதியியலின் துணைப் பிரிவுகளில் சிறப்புத் தகைமைகளைக் கொண்டிருப்பது உண்டு.
வரிசை 24:
 
[[Image:Epicurus Louvre.jpg|thumb|200px|எப்பிகியூரசு (கிமு 341–270), டெமோகிறிடசின் அணுவியக் கோட்பாட்டைப் பின்பற்றியவர்.]]
வேதியியல், தாதுப் பொருட்களில் இருந்து உலோகங்களைப் பிரித்து எடுப்பதற்கு வழி சமைத்த [[எரிதல்]] என்னும் தோற்றப்பாட்டில் இருந்து தோற்றம் பெற்றதாகக் கொள்ளலாம். அடிப்படையான கோட்பாடுகளைப் புரிந்து கொள்ளாவிட்டாலும் [[பொன்]]னின் மீதிருந்த பேராசை அதனை தூய்மையாக்கும் வழிமுறைகளைக் கண்டுபிடிக்க உதவியது. இது தூய்மையாக்குதல் என்றில்லாமல் ஒரு மாற்றம் என்றே அக்காலத்தில் எண்ணியிருந்தனர். அக்காலத்து அறிஞர்கள் பலர் மலிவான உலோகங்களைப் பொன்னாக மாற்றுவதற்கான வழிமுறைகள் உள்ளன என நம்பினர். இது [[இரசவாதம்]] தோன்றுவதற்கு அடிப்படை ஆகியதுடன், மூல உலோகங்களைத் தொட்டதும் பொன்னாக மாற்றக்கூடிய "[[இரசவாதக்கல்]]"லைத் தேடும் முயற்சிகளுக்கும் வித்திட்டது.
 
கிமு 50 ஆம் ஆண்டில் உரோமரான [[லூக்கிரட்டியசு]] என்பவர் எழுதிய ''பொருட்களின் இயல்பு'' (''De Rerum Natura'') என்னும் நூலில் கண்டபடி,கிரேக்கர்களின் [[அணுவியம்|அணுவியக்]] கோட்பாடு கிமு 440க்கு முற்பட்ட பழமை வாய்ந்தது. தூய்மையாக்க வழிமுறைகளின் தொடக்ககால வளர்ச்சிகளில் பெரும்பாலானவை குறித்து [[மூத்த பிளினி]] என்பவர் தனது ''இயற்கைசார் வரலாறு'' (Naturalis Historia) என்னும் தனது நூலில் விளக்கியுள்ளார். வேதியியலின் வளர்ச்சிப் போக்கைப் பருமட்டாகப் பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்:
வரிசை 44:
 
[[Image:Antoine lavoisier color.jpg|thumb|right|200px|தற்கால வேதியியலின் தந்தை எனக் கருதப்படும் [[ஆன்ட்டொயின்-லாரென்ட் டி இலவோசியே]]<ref>{{Cite journal|last=Eagle |first=Cassandra T. |coauthors=Jennifer Sloan |title=Marie Anne Paulze Lavoisier: The Mother of Modern Chemistry |journal=The Chemical Educator |year=1998 |volume=3 |issue=5 |pages=1–18 |url=http://www.springerlink.com/content/x14v35m5n8822v42/fulltext.pdf |format=PDF |accessdate=2007-12-14 |doi=10.1007/s00897980249a }}</ref>]]
ஐரோப்பாவில் வேதியியலின் எழுச்சி, இருண்ட காலம் என அழைக்கப்படும் காலத்தில் அடிக்கடி ஏற்பட்ட கொள்ளை நோயின் காரணமாகவே ஏற்பட்டது. இது மருந்துகளுக்கான தேவையைக் கூட்டியது. அக்காலத்தில் எல்லா நோயையும் குணப்படுத்தவல்ல "காயகல்பம்" என ஒன்று இருப்பதாகக் கருதினர். ஆனால், இரசவாதக்கல் என்பதைப் போலவே இதையும் எவரும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை.
 
இரசவாதத்தைக் கைக்கொண்ட சிலர் அதை ஒரு அறிவார்ந்த செயற்பாடாகவே கருதி வந்தனர். அவர்களிற் சிலர் காலப் போக்கில் முன்னேற்றமான கருத்துக்களையும் முன்வைத்தனர். எடுத்துக்காட்டாக [[பராசெல்சசு]] (1493–1541) என்பார், வேதியியல் பொருட்களையும் மருந்துகளையும் குறித்துத் தனக்கு இருந்த தெளிவற்ற புரிதலை வைத்துக்கொண்டு, நான்கு மூலக் கொள்கையை மறுத்து இரசவாதமும் அறிவியலும் கலந்த கலப்புக் கொள்கையொன்றை உருவாக்கினார். இதுபோலவே, கணிதத் துறையில் கூடுதலான கட்டுப்பாடுகளையும், அறிவியல் கவனிப்புக்களில் பக்கச் சார்பை நீக்குவதையும் வலியுறுத்திய மெய்யியலாளர்களான சர் [[பிரான்சிசு பேக்கன்]] (1561–1626), [[ரெனே டேக்கார்ட்]] (1596–1650) போன்றோரின் செல்வாக்கு அறிவியல் புரட்சிக்கு வித்திட்டது. வேதியியலில், இது [[ராபர்ட் போயில்]] (1627–1691) என்பவருடன் தொடங்கியது. இவர் வளிம நிலையின் இயல்புகள் தொடர்பான விதி ஒன்றை வெளிப்படுத்தினார். இது [[போயில்சின் விதி]] என அழைக்கப்படுகிறது.
வரிசை 55:
வேதியியலில் பல்வேறு அடிப்படையான கருத்துருக்கள் உள்ளன. இவற்றுட் சில கீழே விளக்கப்படுகின்றன.
===அணு===
அணுவே வேதியியலின் அடிப்படையான அலகு. இது நேரேற்றம் கொண்ட மையப் பகுதியையும், அதைச் சுற்றிலும் [[இலத்திரன்]]களையும் (எலெக்ட்ரான்) கொண்டிருக்கும். அணுக்கரு என்று அழைக்கப்படும் மையப்பகுதி [[புரோத்தன்]] (புரோட்டான்), [[நியூத்திரன்]] (நியூட்ரான்) என்னும் துகள்களால் ஆனது. சூழ இருக்கும் இலத்திரன்கள் எதிரேற்றம் கொண்டவை. அதனால், அணுக்கருவின் நேரேற்றத்தைச் சமநிலைப் படுத்துகின்றன. ஒரு தனிமத்தின் இயல்புகளைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கக்கூடிய மிகச் சிறிய துணிக்கையும் அணுவே.
 
===தனிமம்===
வேதியியல் தனிமம் என்னும் கருத்துரு வேதியியல் பொருட்கள் என்பதோடு தொடர்புடையது. ஒரு வேதியியல் தனிமம் என்பது அடிப்படையில் ஒரே வகையான அணுக்களைக் கொண்ட ஒரு பொருள். ஒரு குறிப்பிட்ட தனிமம் ஒரு குறித்த எண்ணிக்கை புரோத்தன்களை அதன் அணுக்கருவில் கொண்டிருக்கும். இந்த எண்ணிக்கை அத் தனிமத்தின் அணுவெண் எனப்படும். எடுத்துக் காட்டாக 6 புரோத்தன்களைத் தமது அணுக்கருவில் கொண்ட அணுக்கள் அனைத்தும் [[கரிமம்]] என்னும் தனிமத்தில் அணுக்கள். அதேபோல், 62 புரோத்தன்களைக் கொண்ட அணுக்கள் [[யுரேனியம்]] என்னும் தனிமத்துக்கு உரியவை.
 
குறித்த தனிமத்துக்கு உரிய அணுக்கள் அனைத்தும் ஒரே எண்ணிக்கையான புரோத்தன்களைக் கொண்டிருக்கும் எனினும், அவற்றில் உள்ள நியூத்திரன்கள் ஒரே எண்ணிக்கையில் இருக்கவேண்டும் என்பதில்லை. இவ்வாறு ஒரேயளவு புரோத்தன்களையும், வெவ்வேறு எண்ணிக்கையான நியூத்திரன்களையும் கொண்ட அணுக்களையுடைய தனிமங்கள் [[ஓரிடத்தான்]]கள் அல்லது [[சமதானி]]கள் எனப்படுகின்றன. உண்மையில் ஒரு தனிமத்துக்குப் பல ஓரிடத்தான்கள் இருக்க முடியும். புரோத்தன்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 94 வேதியியல் தனிமங்கள் அல்லது அணுவகைகள் இயற்கையில் காணப்படுவதாக அறியப்பட்டுள்ளது. மேலும் 18 வகையான தனிமங்கள் ஆய்வு கூடத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.
 
வேதியியல் தனிமங்களைப் பொதுவாக ஆவர்த்தன அட்டவணையில் ஒழுங்கமைக்கின்றனர். இதில் தனிமங்கள் அணுவெண்களின் அடிப்படையிலும், இலத்திரன் அமைப்பின் அடிப்படையில் கூட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. அட்டவணையில் உள்ள நிரல்கள் கூட்டங்களையும், கிடை வரிசைகள் ஆவர்த்தனங்களையும் குறிக்கின்றன. இவ்வாறு குறிப்பிட்ட கூட்டங்களில் அல்லது ஆவர்த்தனங்களில் இருக்கும் தனிமங்கள் [[அணு ஆரை]], [[இலத்திரன் இழுதிறன்]] போன்ற சில பொது இயல்புகளைக் கொண்டவையாக இருக்கின்றன.
 
===சேர்மம்===
வரிசை 68:
 
===வேதிப்பொருள்===
வேதிப்பொருள் என்பது குறித்த சேர்க்கைப் பொருள்களையும், இயல்புகளையும் கொண்ட ஒரு பொருள். இது சேர்வைகள், தனிமங்கள் அல்லது சேர்வைகள் தனிமங்கள் இரண்டினதும் கலவை ஆகும். அன்றாட வாழ்க்கையில் காணும் பெரும்பலான வேதிப்பொருட்கள் ஏதோ ஒரு வகைக் கலவைகளே. வளி, கலப்புலோகம் போன்றவற்றை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.
 
வேதிப்பொருட்களுக்கான பெயரிடல் முறை வேதியியல் மொழியின் முக்கிய பகுதியாகும். பொதுவாக இது வேதியியல் சேர்மங்களுக்குப் பெயரிடும் ஒரு முறையைக் குறிக்கிறது. வேதியியல் வரலாற்றில் தொடக்க காலத்தில் சேர்மங்களுக்கு அவற்றைக் கண்டுபிடித்தவர்களின் பெயரைத் தழுவிப் பெயரிட்டனர். இது பல வகையான குழப்பங்களையும், சிக்கல்களையும் ஏற்படுத்திற்று. இன்று, [[தூய, பயன்பாட்டு வேதியியலுக்கான பன்னாட்டு ஒன்றியம்|தூய, பயன்பாட்டு வேதியியலுக்கான பன்னாட்டு ஒன்றியத்தினால்]] உருவாக்கப்பட்ட முறையைப் பயன்படுத்தி இலகுவாகப் பெயரிட முடிகிறது. வேதியியல் பொருள் வகைகளுக்குப் பெயரிடுவதற்கு சிறப்பாக வரையறுக்கப்பட்ட முறைகள் உள்ளன. [[கரிமச் சேர்மம்|கரிமச் சேர்மங்களுக்கு]] கரிமப் பெயரிடல் முறையும், [[லனிமச் சேர்மம்|கனிமச் சேர்மங்களுக்குப்]] பெயரிடக் கனிமப் பெயரிடல் முறையும் பயன்படுகின்றன. இதைவிட வேதிப்பொருட்களை எண்கள் மூலம் அடையாளம் காணும் முறைகளும் உள்ளன.
வரிசை 100:
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
{{Link FA|fo}}
{{Link FA|lmo}}
{{Link FA|zh-yue}}
"https://ta.wikipedia.org/wiki/வேதியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது