சேனாவரையர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: தொல்காப்பியத்துக்கு உரை எழுதியவர் '''சேனாவரையர்'''. இவர...
 
No edit summary
வரிசை 1:
[[தொல்காப்பியம்|தொல்காப்பியத்துக்கு]] உரை எழுதியவர் '''சேனாவரையர்'''. இவர் இந் நூலின் சொல்லதிகாரத்துக்கு மட்டுமே [[உரை]] எழுதினார். எனினும் இவ்வதிகாரத்துக்கு எழுதப்பட்ட எல்லா உரைகளிலும் சிறந்த உரை இவர் எழுதிய உரையே என்று கருதப்படுகிறது. இவரது உரையை விளக்கக் குறிப்புக்களுடன் 1955 ஆம் ஆண்டில் பதிப்பித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கணேசையர் சேனாவரையர் உரைபற்றிப் பின்வருமாறு கூறுகிறார்:
 
: ''தொல்காப்பியச் சொல்லதிகாரத்துக்குப் பல உரைகளுளவாயினும், அவ்வுரைகளுள்ளே பொருள்களைத் தருக்கமுறையாகத் தெரித்துணர்த்துவதினானும், தெளிவும் இன்பமும் பயக்கும் வாக்கிய நடையுடைமையானும், ஆசிரியர் சூத்திரப் போக்கினையும் வடமொழி தென்மொழி என்னும் இரு வழக்கினையும் நன்குணர்ந்து தென்மொழி வழக்கொடு மாறுபடாவண்ணம் வடமொழி வழக்கினையுங்கொண்டு பொருளுரைத்தலினானும் தலைசிறந்து விழங்குவது சேனாவரையருரையே''
 
பிற ஆசிரியர்களின் உரைகளோடு ஒப்பிடும்போது இது பல நயங்கள் உடையதாக இருப்பதுடன் நீண்ட காலமாகவே பலராலும் விரும்பிக் கற்கப்பட்டு வருகிறது.
 
==உசாத்துணைகள்==
* கணேசையர், சி., ''தொல்காப்பியம் சொல்லதிகார மூலமும் சேனாவரையருரையும்'', திருமகள் அழுத்தகம், சுன்னாகம், 1955.
 
 
"https://ta.wikipedia.org/wiki/சேனாவரையர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது