சப்பானியத் தோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Saihouji-kokedera01.jpg|thumb|right|300px|"பாசித் தோட்டம்" எனவும் அறியப்பட்ட [[சைகோ-சி (கியோட்டோ)|சைகோ-சி]], 1339ல் தொடங்கப்பட்டது.]]
'''சப்பானியத் தோட்டம்''' (日本庭園 ''nihon teien'') சிற்றுருவ இலக்கியலானதும் (idealized) உயரளவு பண்பியத்தன்மை (abstract) கொண்டதும் உண்மைத்தன்மை சாராததுமான [[நிலத்தோற்றம்|நிலத்தோற்றத்தை]] உருவாக்கும் ஒரு சப்பானிய மரபுவழித் தோட்டம் ஆகும்.<ref>Gunter Nitschke, ''Le jardin japonais'', pg. 9-10.</ref> பேரரசர்களினதும், பிரபுக்களினதும் தோட்டங்கள் பொழுதுபோக்குக்காகவும், [[அழகியல்]] இன்பத்துக்காகவும் வடிவமைக்கப்பட்ட அதேவேளை, [[புத்த கோயில்]]களின் தோட்டங்கள் நல்ல சிந்தனைகள், [[தியானம்]] போன்றவற்றுக்காக வடிவமைக்கப்பட்டன.
 
தியானத்துக்கானவையும் நீருக்குப் பதிலாக வெள்ளை மணல் பயன்படுத்தப்படுவதுமான கரேசன்சுயி, [[சப்பானியப் பாறைத் தோட்டம்]], சென் தோட்டம் போன்றவையும்; [[சப்பானிய தேநீர் விழா]] நடத்தப்படுவதற்கான எளிமையானதும், கரடுமுரடானதுமான ''ரோசி''; வருபவர்கள் சுற்றி நடந்து பார்ப்பதற்குரிய கையூ-சிக்கி-தையென், உலா வீதி அல்லது உலாவு தோட்டம் ஆகியனவும்; சுபோ-நிவா, சிறிய முற்றத் தோட்டம் என்பனவும் சப்பானியத் தோட்டப் பாணியுள் அடங்குகின்றன.
 
சப்பானியத் தோட்டங்கள் சீனத் தோட்டங்களின் செல்வாக்கின் கீழேயே உருவாகி வளர்ந்தன.<ref>[http://www.britannica.com/eb/article-26262/garden-and-landscape-design ''Encyclopædia Britannica''. Garden and landscape design: Japanese. Accessed: 7 March 2008.]</ref> ஆனாலும், சப்பானியத் தோட்ட வடிவமைப்பாளர்கள் படிப்படியாக, சப்பானியக் கட்டிடப்பொருட்களினதும் பண்பாட்டினதும் அடிப்படையில் தமது சொந்த அழகியலை உருவாக்கத் தொடங்கினர். ஏடோ காலத்தில் சப்பானியத் தோட்டங்கள் தமது சொந்தத் தனித்துவம் வாய்ந்த தோற்றத்தைக் கொண்டிருந்தன. 19ம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து, சப்பானியத் தோட்டங்கள் மேனாட்டுப் பின்னனணிகளுக்கு ஏற்ப தகவமையத் தொடங்கின.
 
==வரலாறு==
வரிசை 10:
அசுக்கா காலத்தில் சப்பானிய வணிகர்கள், சீனாவில் உருவாக்கப்படும் தோட்டங்களைக் கண்டு அவற்றின்பால் ஈர்க்கப்பட்டபோது இவ்வகைத் தனித்துவம் வாய்ந்த தோட்டங்களுக்கான எண்ணக்கரு உருவாகியது. சின்னப் பண்பாட்டின் பல்வேறு அம்சங்கள் வணிகர்களூடாக சப்பானுக்கு இறக்குமதி செய்யப்படுவது அக்காலத்தில் அடிக்கடி நிகழும் ஒன்றுதான். இன்று, சப்பானின் பல பகுதிகளிலும், மேல் நாடுகளிலும், சப்பானியத் தோட்டக் கலை இன்னும் முழுத் தீவிர வெளிப்பாட்டுடன் பேணப்படுவதுடன், தமது சொந்த சப்பானியத் தோட்டங்களை உருவாக்க விருப்பம் கொண்ட கலைஞர்களுக்குத் தொடர்ந்து அகத்தூண்டல்களை அளித்துவருகின்றது.
 
சப்பானியத் தோட்டங்கள், சப்பானின் நடுப்பகுதியில் உள்ள பெரிய தீவான ஒன்சுவில் (Honshu) முதலில் தோற்றம் பெற்றன. இத்தோட்டங்களின் பௌதீகத் தோற்றம், கரடுமுரடான எரிமலை உச்சிகள், அருவிகளுடனும் தொடர் அருவிகளுடனும் கூடிய ஒடுக்கமான பள்ளத்தாக்குகளும் மலை ஓடைகளும், ஏரிகள், சிறு கற்களுடன் கூடிய கடற்கரைகள் என்பவற்றுடனான ஒன்சுவின் தனித்துவமான இயல்புகளைக் கொண்ட நிலத்தோற்றத்தின் செல்வாக்கைக் கொண்டிருந்தன. அத்தீவில் காணப்பட்ட பல்வேறு வகையான பூக்கள், பலவகை மரங்கள் குறிப்பாக பசுமை மாறா மரங்கள் என்பவற்றுடன், சூடானதும் ஈரலிப்பானதுமான கோடை, பனி பெய்யும் மாரி ஆகியவற்றை உள்ளடக்கிய சப்பானின் நான்கு பருவ காலங்கள் என்பவற்றின் செல்வாக்கும் சப்பானியத் தோட்டங்களில் காணப்பட்டது.<ref>Nitschke, L''e Jardin japonais'', pg. 14-15</ref>
 
சப்பானியத் தோட்டங்களின் மூலம், எட்டு இலட்சியத் தீவுகளினதும், கடவுளரின் ஏரியான சின்சி என்பதன் உருவாக்கத்தின் கதையைக் கொண்ட சப்பானிய மதமான சின்டோவில் உள்ளது. காமி, கடவுள்கள், ஆவிகளுக்கான வரலாற்றுக்கு முந்திய சின்டோக் கோயில்கள் தீவு முழுவதிலும் காணப்பட்ட கடற்கரைகளிலும், காடுகளிலும் அமைந்திருந்தன. சில வேளைகளில் அவை வழமைக்கு மாறான பாறைகள் அல்லது வைக்கோல் கயிற்றினால் குறிக்கப்பட்ட மரங்களின் வடிவில் இருந்ததுடன், அவற்றைச் சுற்றிலும் தூய்மையின் சின்னமான வெள்ளைக் கற்கள் இருந்தன.<ref>Nitschke, ''Le Jardin japonais'', pg. 14-15, and Young, ''The Art of the Japanese Garden''.</ref> வெள்ளைக் கல் முற்றம் சின்டோ கோயில்கள், அரச மாளிகைகள், புத்த கோயில்கள், சென் தோட்டங்கள் என்பவற்றின் ஒரு தனித்துவமான அம்சம் ஆகியது.<ref>Young, ''The Art of the Japanese Garden'', pg. 64-65. Famous is Kuitert's critique on the zen garden as a modern interpretation: The term zen garden appears in English writing in the 1930s for the first time, in Japan ''zen teien'', or ''zenteki teien'' comes up even later, from the 1950s. It applies to a Sung China-inspired composition technique derived from ink-painting. The composition or construction of such small, scenic gardens have no relation to religious Zen. See Kuitert, ''Themes, Scenes, and Taste in the History of Japanese Garden Art'', 1988; Kuitert, ''Themes in the History of Japanese Garden Art'' 2002, pp.129-138; and the review of these two books by Elizabeth ten Grotenhuis http://www.jstor.org/stable/25064424</ref>
 
சீனாவில் இருந்து ஏறத்தாழ கிபி 552 அளவில் இறக்குமதி செய்யப்பட்ட சீன மெய்யியலான தாவோயிசம், அமிடா பௌத்தம் ஆகியவற்றின் செல்வாக்குகளும் சப்பானியத் தோட்டங்களில் காணப்பட்டன. தாவோயிசப் பழங்கதைகள், மலைகள் நிறைந்த ஐந்து தீவுகளில் இயற்கையோடு இயைந்து வாழ்ந்த தேவர்களைப் பற்றிப் பேசுகின்றன. இத்தேவர்கள் ஒவ்வொருவரும் மலைகளிலுள்ள தமது வீடுகளில் இருந்து கொக்கின் முதுகில் பயணம் செய்தனர். தீவுகளும்கூட ஒரு மிகப்பெரிய கடலாமையின் முதுகில் அமைந்திருந்தன. சீனப் பழங்கதைகளின் ஐந்து தீவுகள், சப்பானில் ஓரை-சென் அல்லது ஓரை மலை எனப்படும் ஒரு தீவு ஆகியது. பழங்கதைகளில் சொல்லப்பட்டதும், இலட்சிய உலகின் சின்னமுமாகிய இந்த மலையின் மாதிரிகளும் ஆமை, கொக்கு ஆகியவற்றைக் குறிக்கும் பாறைகளும் சப்பானியத் தோட்டங்களில் பொதுவான அம்சங்கள் ஆகும்.<ref>Nitschke, ''Le Jardin japonais'', pg. 22-23</ref>
 
[[பகுப்பு:சப்பானியத் தோட்டங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சப்பானியத்_தோட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது