துணை இயந்திரத் துப்பாக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
(வேறுபாடு ஏதுமில்லை)

14:38, 6 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்

துணை இயந்திரத் துப்பாக்கி அல்லது உப இயந்திரத் துப்பாக்கி (submachine gun [SMG]) என்பது சிறுகைத்துப்பாக்கி வெடியுறைகளைச் சுடுவதற்காக உருவாக்கப்பட்ட வளி குளிராக்கல், தாளிகை மூலம் வழங்கும், தானியக்க குறும்மசுகெத்து ஆகும். ஆங்கிலத்தில் வழங்கப்படும் சொல்லான "submachine gun" என்பது தொம்சன் துணை இயந்திரத் துப்பாக்கி கண்டுபிடிப்பாளரான யோன் ரி. தொம்சன் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.[1]

ஐக்கிய அமெரிக்க சீல் அணியினர் கெக்லர் அண்ட் கோக் எம்பி5 துணை இயந்திரத் துப்பாக்கியுடன் காணப்படுகின்றனர்.

முதல் உலகப் போர் (1914–1918) காலத்தில் துணை இயந்திரத் துப்பாக்கி உருவாக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போர் (1939–1945) காலத்தில் அது உச்சநிலையை அடைந்து, மில்லியன் கணக்கில் அவை உருவாக்கப்பட்டன. போரின் பின் புதிய வடிவமைப்புக்கள் கிட்டத்தட்ட ஒவ்வொரு வாரமும் வெளியாகின.[2] ஆயினும், 1980 களில் அது குறைவடைந்தது.[2] இன்று, தாக்குதல் நீள் துப்பாக்கி துணை இயந்திரத் துப்பாக்கிகளுக்கு மாற்றீடாக அமைந்து,[2] பாரிய தாக்க எல்லை உடையதாகவும் தற்கால காலாட் படையினர் பயன்படுத்தும் தலைக்கவசம், உடற்கவசம் ஆகியவற்றை துளைக்கக் கூடியதாகவும் உள்ளது.[3] ஆயினும், துணை இயந்திரத் துப்பாக்கிகள் சில சிறப்பு படைகளினால் பயன்படுத்தப்படுகிறது. அவற்றின் சிறிய அளவு, ஒலிக் குறைப்பு என்பவற்றால் அவை இன்னும் பயன்படுத்தப்படுகிறது.

  1. http://www.thefreelibrary.com/The+Thompson+submachine+gun%3A+shooting+a+20th+century+icon.-a0172907495
  2. 2.0 2.1 2.2 Military Small Arms Of The 20th Century. Ian Hogg & John Weeks. Krause Publications. 2000. p93
  3. http://www.defensereview.com/submachine-guns-smgs-outpaced-by-today%E2%80%99s-modern-short-barreled-rifles-sbrssub-carbines-or-still-a-viable-tool-for-close-quarters-battleclose-quarters-combat-cqbcqc/