கோல்கொண்டா கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மேற்கோள்கள்
வரிசை 75:
 
== கோட்டை ==
{{சான்றில்லை}}
[[படிமம்:An entrance at Golkonda Fort.JPG|thumb|கோல்கொண்டா நுழைவாயில் ஒன்று]]
கோல்கொண்டா கோட்டை இந்திய தொல்லியல் துறை பட்டியலில் இடம் பெற்றுள்ளது.<ref>{{Cite web|title=Alphabetical List of Monuments - Andhra Pradesh |publisher=[[Archaeological Survey of India]] |url=http://asi.nic.in/asi_monu_alphalist_andhra.asp |archiveurl=https://web.archive.org/web/20140625052615/http://asi.nic.in/asi_monu_alphalist_andhra.asp |archivedate=25 June 2014 |deadurl=no}}</ref>
கோல்கொண்டாவில் 87 அரை வட்ட கொத்தளங்களுடனான 10 கிமீ நீள வெளிச் சுவர் கொண்ட
நான்கு தனித்தனி [[கோட்டை]]கள் உள்ளன. கொத்தளங்கள் சிலவற்றில் இன்னும் பீரங்கிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. கோட்டையில் எட்டு நுழைவாயில்கள், மற்றும் ஏராளமான அரண்மனை குடியிருப்புகள், அரங்குகள், [[கோவில்]]கள், [[மசூதி]]கள் ஆகியவை உள்ளே இருக்கின்றன. இவற்றில் மிகக் குறைந்த உயரத்தில் இருப்பது மிக வெளியில் இருக்கும் வெற்றி நுழைவாயில் (”பதே தர்வாசா”) இணைப்பு ஆகும். கோட்டையை வென்ற [[அவுரங்கசீப்]] ராணுவத்தின் வெற்றிப் படை இந்த வாயில் வழியாக நுழைந்ததால் இந்த பெயர் கிட்டியது. இதன் தென்கிழக்கு மூலை அருகே பெரும் [[இரும்பு]] கூர்முனைகள் பதிக்கப்பட்டிருக்கும். [[யானை]]கள் வாயில் கதவில் மோதி வீழ்த்தாமல் தடுக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோல்கொண்டாவின் [[பொறியியல்]] சிறப்பை எடுத்தியம்பும் ஒலியமைப்பினை வெற்றி நுழைவாயிலில் நாம் உணரலாம். கோபுரத்தின் ஒரு குறிப்பிட்ட புள்ளிக்குக் கீழ் ஒரு கை தட்டினால் கூட, அது சுமார் ஒரு கிமீ தூரத்தில் இருக்கும் விதானத்தில் (பால ஹிசார்) தெளிவாய் ஒலிக்கக் கேட்கலாம். தாக்குதல் சமயத்தில் அரசர்களுக்கு எச்சரிக்கும் அமைப்பாக இது செயல்பட்டது.
வரிசை 86:
பால ஹிசார் நுழைவாயில் தான் கிழக்கு பக்கத்தில் கோட்டைக்கான முதன்மை நுழைவாயிலாக இருக்கிறது. இது கூம்பு வடிவ வளைவைக் கொண்டுள்ளது. தூண்களில் யாளிகள் இடம்பெற்றிருக்கின்றன. கதவுக்கு மேலிருக்கும் பகுதியில் அலங்கார வால்களுடனான மயில்கள் இடம்பெற்றுள்ளன. கீழிருக்கும் கருங்கல் கற்களில் யாளிகளின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. மயில்கள் மற்றும் சிங்கங்களின் வடிவமைப்பு இந்து-முஸ்லீம் கட்டிடக் கலையின் கலவையாகும்.
 
கோல்கொண்டா கோட்டையில் இருந்து சுமார் 2 கிமீ தொலைவில் உள்ள கர்வானில் டோலி மசூதி உள்ளது. இது அப்துல்லா குதுப் ஷாவின் அரச கட்டிடக் கலை நிபுணரான மிர் மூசா கான் மஹால்தார் 1671 ஆம் ஆண்டில் கட்டியதாகும். முகப்பில் ஐந்து வளைவுகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் [[தாமரை]]ச் சின்னங்கள் இடம்பெற்றுள்ளன. மத்தியில் இருக்கும் வளைவு அகன்றதாயும் அலங்காரம் மிக்கதாயும் இருக்கிறது. உள்ளேயிருக்கும் மசூதி இரண்டு அரங்குகளாக பிரிக்கப்பட்டுள்ளது.<ref>[http://www.telanganatourism.gov.in/partials/destinations/heritage-spots/hyderabad/golconda-fort.html Golconda Fort] தெலுங்கானா சுற்றுலாத் துறை</ref>
 
இந்த நுழைவாயிலை கட்டுவதற்கு நிறைய சிந்தித்திருக்கிறார்கள். வாயிலுக்கு சில அடிகள் முன்னால் ஒரு பெரிய சுவர் கட்டப்பட்டுள்ளது. தாக்குதல் சமயங்களில் வீரர்களும் யானைகளும் பின்னால் சென்று ஓடிவந்து மோதுவதைத் தடுப்பதற்கு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/கோல்கொண்டா_கோட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது