ஐபீரிய மூவலந்தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 94 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up, replaced: BBC News → BBC News using AWB
வரிசை 1:
[[படிமம்:Iberian peninsula.jpg|thumb|350px|right|ஐரோப்பாவின் தென்மேற்கே உள்ள உள்ள ஐபீரிய மூவலந்தீவின் படம். இதில் [[ஸ்பெயின்|எசுப்பானியம்]], [[போர்த்துக்கல்]] ஆகிய நாடுகள் காட்டப்பட்டுள்ளன]]
'''ஐபீரிய [[மூவலந்தீவு]]''' என்பது [[ஐரோப்பா]]வின் தென்மேற்கே உள்ள பகுதி. இந்நிலப்பகுதி இன்றைய [[ஸ்பெயின்|எசுப்பானியம்]], [[போர்த்துக்கல்]] ஆகிய நாடுகள் அமைந்திருக்கும் இடம் ஆகும். இந்நாடுகள் தவிர [[ஆண்டோரா]] நாடும், [[கிப்ரால்ட்டர்]] [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானிய]] ஆட்சிப்பகுதியும் ஐபீரியாவில் அடங்கும். ஐரோப்பியாவில் உள்ள மூன்று [[மூவலந்தீவு|மூவலந்தீவில்]] இதுவே தென்மேற்க்குக் கோடியில் உள்ளது. இதன் கிழக்கு தெற்கு எல்லைகளில் [[மத்தியதரைக் கடல்|நிலநடுக்கடலும்]], வடக்கிலும் மேற்கிலும் [[அட்லாண்டிக் பெருங்கடல்|அட்லாண்டிக் பெருங்கடலும்]] அமைந்துள்ளது. இந்த மூவலந்தீவின் மொத்த பரப்பளவு 582 860 கி.மீ<sup>2</sup> (km²).
 
== வரலாறு ==
இந்த மூவலந்தீவில் ஏறத்தாழ 1,000,000 ஆண்டுகளுக்கு முன்னரே முன்மாந்த இனங்கள் இங்கு வாழ்ந்திருந்தற்கான அடையாளங்கள் கிடைத்துள்ளன. இன்றைய மாந்தர்களாக வடிவெடுப்பதற்கு முன்னர் இருந்த ''முன்மாந்த'' இனங்களான ஓமோ எரெக்டசு (Homo erectus), ஓமோ ஐடெல்பெர்கென்சிசு(Homo heidelbergensis) ஓமோ ஆண்ட்டிசெசர் (Homo antecessor) முதலிய இனங்கள் வாழ்ந்ததற்கான சுவடுகள் ''அட்டாப்புயெர்க்கா'' (Atapuerca) என்னும் இடத்தில் அண்மையில் கண்டு பிடித்துள்ளார்கள் <ref>{{cite news |url=http://news.bbc.co.uk/2/hi/science/nature/6256356.stm |title='First west Europe tooth' found |date=[[2007-06-30]] |publisher=[[BBC News]]}}</ref>. [[இந்திய-ஐரோப்பிய மொழிகள்]] பேசும் மக்கள் வருவதற்கு முன்னரே இங்கு வேறு இன மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுள் [[பாசுக்]] மக்களும் ஓரினமாகும். பாசுக் மக்கள் ''யூசுக்கால்டுனாக்'' (Euskaldunak) என்று அழைக்கப்படுகின்றனர் (அதாவது யூசுக்க்காரா மொழி பேசுவோர்).
 
கடலோடிகளாகிய [[ஃவினீசியர்]]களும், [[கிரேக்கர்]]களும், [[கார்த்தேசியர்]]களும் இந்த மூவலந்தீவில் பலநூற்றாண்டுகளாக சென்று குடியேறியிருக்கிறார்கள். ஏறத்தாழ கி.மு 1100ல் ஃவினீசிய வணிகர்கள் காடிர் (Gadir) அல்லது காடேசு (Gades), என்னும் வணிகக் குடியிருப்பை நிறுவினார்கள். தற்காலத்தில் இது காடிசு (Cádiz) என்று அழைக்கப்படுகின்றது. கிரேக்கர்கள் ஐபர் (Iber (Ebro)) என்னும் ஆற்றின் பெயரின் அடிப்படையில் இப்பகுதியை ''ஐபீரியா'' என அழைத்தனர். கி.மு 600களில் கார்த்தீசியர்கள் இங்கு வந்தனர். மேற்கு நடுத்தரைக் கடல் பகுதிகளை தம் கட்டுப்பாட்டுக்குகீழ் இருக்கச் செய்ய கிரேக்கர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு இப்பகுதியில் நுழைந்தனர். கார்த்தீசியர்களின் முக்கியமான குடியிருப்பு கார்த்தகோ நோவா (Carthago Nova) (தற்கால [[இலத்தீன்]] பெயர் கார்த்தச்செனா அல்லது கார்த்தஃகெனா (Cartagena)).
"https://ta.wikipedia.org/wiki/ஐபீரிய_மூவலந்தீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது