'''பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்''' ( [[ஆங்கிலம்|English]] : Pamban Gurudasa Swamigal ) , (பி.18501848-5250<sup>அ</sup>,இ.மே 30,1929) [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[இராமேசுவரம்|இராமேசுவரம் தீவில்]] அமைந்துள்ள [[பாம்பன்]] என்ற ஊரில் பிறந்த வடமொழி, தென்மொழி இரண்டிலும் புலமைபெற்று [[முருகன்|ஆறுமுகனை]] வழிபட்டு வந்த ஓர் தமிழ்த்துறவி ஆவார். [[திருஞானசம்பந்தர்]], [[அருணகிரிநாதர்]] வழியில் [[சித்திரக் கவிகள்]] எழுதியுள்ளார். தனது வாழ்நாள் முழுவதும் தமிழுக்கும் சைவ நெறியாகிய குகப்ரம்ம நெறிக்கும் தனது பாடல்களாலும், சாத்திரங்களாலும் தொண்டாற்றினார். [[முருகன்|முருகனின்]] வழிபாடாக இவர் இயற்றிய பாடல்கள் 6666. இவை ஆறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவரியற்றிய [[s:சண்முக கவசம்|சண்முக கவசம்]] புகழ்பெற்றது. பாம்பன் சுவாமிகள் மே 30, 1929 அன்று சமாதி அடைந்தார். அவரது சமாதி கோவில் [[சென்னை]], [[திருவான்மியூர்|திருவான்மியூரில்]] உள்ளது.<ref>[http://pambanswamigal.com/swamihistory.asp சுவாமிகள் வரலாறு]</ref>