பயனர்:Sundar/விக்சனரி தானியங்கித்திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎இனி: பணி !! பொறுப்பாளர்(கள்) !! தற்போதைய நிலை
வரிசை 6:
பின்னர் சில திங்கள்கள் கழிந்து ரவி தமிழ் விக்சனரியைத் துவக்குவதில்/உயிர்ப்பிப்பதில் முனைந்தார். அப்போது இந்தக் கலைச்சொற்களை அங்கு ஒருங்குறியில் பதிவேற்றினால் பயனுள்ளதாக இருக்கும் என தோன்றியது. இதற்காக [[பெர்ள் நிரலாக்கமொழி]]யில் சில செய்நிரல்கள் எழுதினேன். அவற்றைக் கொண்டு த.இ.ப. அகரமுதலி ஒன்றை பதிவிறக்கி நிரல்வழியாகவே ஒருங்குறிக்கு மாற்ற முயன்றேன். ரவி அவற்றை மெய்ப்பார்க்கையில் பல வழுக்கள் இருப்பதைக் கண்டறிந்தார். பின்னர் இந்தத் திட்டத்தில் பெரிதும் முன்னேற்றம் ஏற்படவில்லை.
 
சில மாதங்கள் முன்பு இதை மீண்டும் தூசி தட்டி புதிப்பித்தோம். புதிதாக நிரல்கள் எழுதினேன். ரவி குறிமாற்றத்திற்கென ஒரு திறந்தநிலைக் கருவியை<ref>http://software.nhm.in/converter.html</ref> எனக்கு அறிமுகப்படுத்தினார். அப்படியும் எஞ்சியிருந்த வழுக்களை நிரல் கொண்டும், மெய்ப்பார்த்தல் மூலமும் திருத்தினோம். இன்னமும் மிஞ்சியிருப்பவற்றை பங்களிப்பாளர்களே திருத்த வேண்டும். முதல் கட்டமாக காதலர் நாளன்று வெள்ளோட்டம் விடப்பட்டு மற்ற பயனர்களின் கருத்துக்களைப் பெற்றோம்.<ref>[[விக்கிபீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு10#விக்சனரி தானியங்கி]]</ref> என் கணினியிலிருந்து விக்சனரிக்குப் பதிவேற்றத் துவங்கினோம். ஆனால், தொடர்ச்சியான இணைய அணுக்கம் இல்லாமையால் மெதுவாக நடைபெற்றுக் கொண்டிருந்த இப்பணியை ரவி தனது கணினியிலிருந்து செலுத்த முன்வந்தார். தேவையான நிரல்களைப் பொறுமையாக நிறுவி பின் ஒரு இலட்சம் சொற்றொடர்களையும் பதிவேற்றி முடிக்கும்வரை நிரல்களைச் செலுத்தினார்.
 
==தானியங்கிப் பணிகள்==