விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு10
நலளமூசிஞ |
---|
1 2 3 4 5 6 7 8 9 |
வருக ஆலமரத்தடிக்கு ! இங்கு விக்கிபீடியா குறித்த செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் இடம் பெறும்.இந்தப் பக்கத்தில் உள்ள பழைய, முடிவடைந்த கலந்துரையாடல்கள் அவ்வப்போது இங்கிருந்து நீக்கப்பட்டுவிடும் என்பதைத் தயவுசெய்து கருத்தில் கொள்க.
விக்கித் திட்டம் பௌத்தம்
தொகுபௌத்தம் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும் புதிய கட்டுரைகள் இயற்றவும், விக்கித் திட்டம் பௌத்தம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பமுடையவர்கள் இதில் பங்கேற்குமாறு வேண்டுகிறேன். நன்றி Vinodh.vinodh 08:18, 17 நவம்பர் 2007 (UTC)
Portal/project
தொகுஎதாவது framework அல்லது portal/project இருந்தால் தெரிவிக்கவும், பங்கு கொள்ள மிகுந்த விருப்பம் உள்ளது. :) --விக்னேஷ்.சு. 09:40, 18 நவம்பர் 2007 (UTC)
மயூரநாதனின் நான்காண்டுகள்
தொகுமயூரநாதன் விக்கிபீடியாவில் தனது பெயரில் பங்களிக்கத் தொடங்கி இன்று ஐந்தாவது ஆண்டு தொடங்குகிறது. (த.வி ஆரம்பிக்கப்பட்டபோது மயூரநாதன் வேறொரு பெயரில் (Architecture??) பங்களித்தாரென நினைக்கிறேன்).
த.வி.யின் முன்னோடியான அவர் இப்பொழுதும் சளைக்காமல் கட்டுரைகள் ஆக்கி வருகிறார். அவரது கட்டுரைகள் ஆழமும் அகலமுங் கொண்டவை. மிகுந்த கவனத்துடன் ஆதாரங்களுடன் எழுத்துப்பிழைகள் இன்றி எழுதப்படுபவை. பல துறைகளையும் உள்ளடக்கியவை. அத்துடன் த.வி ஏனைய சில விக்கிபீடியாக்கள் போல எண்ணிக்கை அதிகரிப்பு, depth அதிகரிப்புப் போன்ற பயனற்ற வழிகளில் நேரம் செலவழிக்காவண்ணம் பார்த்துக் கொண்டதிலும் முக்கியமான உரையாடல்களில் ஆணித்தரமான ஆக்கபூர்வமான கருத்துக்கள் தெரிவிப்பதிலும் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது.
பலரும் தங்கள் வலைத்தளங்கள், வலைப்பதிவுகளிலேயே எழுத விரும்பும் சூழலில் விக்கிபீடியாவுக்காக மிகவும் ஆக்கபூர்வமாக கடுமையாக உழைக்கும் மயூரநாதனுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். கோபி 14:21, 20 நவம்பர் 2007 (UTC)
- சத்தமில்லாமல் உழைக்கும் மயூரனாதன் அவர்களுக்கு ஈடாகத் தமிழிணையத்தில் மிக மிகச் சிலரே உள்ளனர். மயூரனாதன் அவர்களுக்கு என் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.--ரவி 15:40, 20 நவம்பர் 2007 (UTC)
கோபி, ரவி, உங்கள் கருத்துக்களுக்கு முதலில் எனது நன்றிகள். சுற்றியிருப்பவர்களின் ஊக்கம் தான் தொய்வில்லாத உழைப்புக்கான முதல் தேவை. விக்கிபீடியாவில் எனது இந்த நான்கு ஆண்டுகளை மகிழ்ச்சியுடன் நிறைவு செய்ய உறுதுணையாக இருந்த அனவருக்கும் எனது நன்றிகள் உரித்தாகட்டும். Mayooranathan 19:44, 20 நவம்பர் 2007 (UTC)
- விக்கிபீடியாவில் ஐந்தாவது ஆண்டு காலடி எடுத்து வைக்கும் மயூரநாதனுக்கு எனது வாழ்த்துக்கள்.--Kanags 20:41, 22 நவம்பர் 2007 (UTC)
- தொய்வில்லாமல், தொடர்ச்சியாக, தொலைநோக்கு பார்வையோடு முன்னோடியாக நின்று தமிழ் விக்கிபீடியாவை முன்னோக்கி வளர்த்து செல்வதில் மயூரநாதனின் பங்களிப்பு அளப்பரியது. நன்றி. வாழ்த்துக்கள். --Natkeeran 01:42, 23 நவம்பர் 2007 (UTC)
- வாழ்த்துக்கள் மயூரநாதன். ஒரு சில திங்களேனும் உடன் பங்களிக்க யாருமே இல்லாமல் இருந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அக்கட்டத்திலும் தொடர்ந்து பங்களித்து தமிழ் விக்கிபீடியாவை உயிர்ப்புடன் வைத்திருந்திருக்கிறீர்கள். இணையத் தமிழின் வரலாற்றில் தமிழ் விக்கிபீடியா முத்திரை பதிக்கப் போவது திண்ணம். அந்நாளில் உங்கள் பெயரைப் பொன்னில் வடிக்க வேண்டும். -- Sundar \பேச்சு 04:59, 23 நவம்பர் 2007 (UTC)
இணைப்பில்லா நிலையில் விக்கிபீடியாவை வாசித்தல்
தொகுஓர் வலைப்பதிவு ஒன்றில் இணைப்பில்லா நிலையில் விக்கிபீடியாவை வாசித்தல் பற்றித் தரப்பட்டுள்ளது. தமிழ் விக்கிபீடியாவிலும் இது சாத்தியா என்பது தெரியவில்லை. அதில் இணைப்பாகத் தரப்பட்டிருக்கும் மூலநிரலை மாற்றியமைப்பதன் மூலம் தமிழ் விக்கிபீடியாவையும் இணைப்பில்லாநிலையிலும் அணுகமுடியும் என்றே நினைக்கின்றேன். ஆர்வமுள்ளவர்கள் தமது கருத்துக்களைத் தெரிவிக்கவும். --உமாபதி 18:49, 22 நவம்பர் 2007 (UTC)
- நமக்கு வேண்டிய பக்கங்கள் ஒவ்வொன்றாக இறக்கித் தான் படிக்க வேண்டும் போல் இருக்கே..முழு விக்கிபீடியாவையும் இறக்குவதும் போல் வசதி வந்தால் பயன் உள்ளதாக இருக்கும் --ரவி 22:25, 23 நவம்பர் 2007 (UTC)
- முழு விக்கிபீடியாவையும் தரவிறக்கிக் கொள்ளும் வசதி. இவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினால் தமிழ் விக்கியையும் தரக்கூடும். -- Sundar \பேச்சு 06:29, 27 நவம்பர் 2007 (UTC)
அருமையான தகவலுக்கு நன்றி, சுந்தர். முழு ஆங்கில விக்கிபீடியாவையும் தரவிறக்கி விட்டேன். படிமங்கள் இல்லை. படிமங்களை உள்ளடக்கினால் கோப்பின் அளவு அதிகமாகி விடும் என்பதால் புரிந்து கொள்ளத்தக்கது. கட்டுரைப்பக்கங்கள் தவிர்த்த பிற பேச்சு, வரலாற்றுப் பக்கங்கள் இல்லை. பரவாயில்லை. எழுதிக் கேட்பதால் தமிழ் விக்கிபீடியாவைச் சேர்த்துக் கொள்வார்கள் என்று தோன்றவில்லை. தளத்தின் தரத்தைப் பொருத்து தானாகச் சேர்த்துக் கொள்வோம் என்றிருகிகறார்கள். இந்தப் பக்கத்தின் கடைசிக் கேள்வியைப் பார்க்க. --ரவி 12:13, 28 நவம்பர் 2007 (UTC)
India collecting data on villages
தொகுThe Universal Digital Library
தொகுhttp://www.ulib.org/cgi-bin/udlcgi/ULIBAdvSearch.cgi?listStart=0&language1=Tamil&perPage=20
தமிழ் உள்ளீடு
தொகுதெலுங்கு விக்கிபீடியாவில் மேய்வானில் தெலுங்கை தட்டச்சு செய்ய எந்த வித மென்பொருட்களையும் Download செய்யத்தேவையில்லை. விக்கியிலேயே ஜாவாஸ்க்ரிப்ட் மூலம் விசைப்பலகையை வலைப்பக்கத்தினுள் Embed செய்துவிடுகின்றனர்.
அதாவது வினோத் ராஜன் என்பதை எழுத 'VinOd rAjan' என தட்டச்சு செய்தால் மேய்வானில் தானாகவே 'వినోద్ రాజన్' என வருகிறது. ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய எஸ்கேப் எழுத்த வேண்டும். மீண்டும் தெலுங்கில் அடிக்க அதே எஸ்கேப் விசைதான். எனவே பயனர்கள் இதற்கென மெனக்கெட்டு தனி மென்பொருட்கள் தகவலிறக்கம் செய்ய தேவையில்லாமல் போகிறது.
இதே போன்ற ஒரு அமசத்தை தமிழ் விக்கிபீடியாவில் அறிமுகம் செய்தால், இன்னும் அதிகப்படியான பயனர்கள் த.விக்கு எளிதாக பங்களிக்க ஏதுவாக இருக்கும் வினோத் 05:51, 30 நவம்பர் 2007 (UTC)
- வினோத், இது குறித்து முன்பும் தமிழ் விக்கிபீடியாவில் சுட்டிக்காட்டப்பட்டதுண்டு. ஆனால், கொள்கை அளவில் தமிழ் விக்கிபீடியாவில் தமிங்கில அடிப்படை தட்டச்சு ஆதரிக்கப்படுவதைக் கடுமையாக எதிர்க்கிறேன். சேர்ப்பதாக இருந்தால் தமிழ் 99 விசைப்பலகை சேர்க்கலாம். ஆனால், இதிலுமே எனக்குப் பெரிய நம்பிக்கை இல்லை. தமிழ் விக்கிபீடியாவுக்கான பங்களிப்புக் குறைவுகளுக்குப் பல காரணங்கள். நேரடியாகத் தமிழவ் விக்கிபீடியாவில் தட்டச்சுப் பெட்டி இல்லாமல் இருப்பது அதில் ஒரு மிகச் சிறய காரணமாகவே கருதுகிறேன். இப்படி ஒவ்வொரு தளத்துக்கும் தட்டச்சுப் பெட்டி சேர்ப்பதால் தமிழ் இணையம் உருப்படும் என்று தோன்றவில்லை. தளத்துக்கு தளத்துக்கு மாறும் transcription விதிகள் ஒருவரைக் குழப்பவும், முறையான தட்டச்சைக் கற்றுக் கொள்ளாமல் சோம்பல் படவுமே செய்யும். கணினி வைத்திருக்கும் தமிழர்கள் அனைவருக்கும் முறையான தமிழ்த் தட்டச்சு கற்றுத் தரும் வழிகளை தமிழ் விக்கிபீடியாவுக்கு வெளியில் இருந்து நாம் செயற்படுத்த முனைவதே தொலைநோக்கில் பயன் தரும்.--ரவி 11:36, 30 நவம்பர் 2007 (UTC)
நானே கூட தமிங்கில விசைப்பலைகையதான் வைத்துள்ளேன்(தமிழ் தட்டச்சு தெரியும் என்பது வேறு விஷயம். யளனகபக ஙட்மதாத அதாங்க.. asdfgf ;lkjhj போல. ஆனால் தமிழ் தட்டச்சு எனக்கு வசதியாக இருக்கவில்லை(கொஞ்சம் தலைகீழாக யோசிக்க வேண்டும்.புள்ளி வைத்துவிட்டு ப அடிக்க வேண்டும் ப். இகர, ஈகார, உகர, ஊகார, எழுத்துக்களுக்கு இப்படி தலைகீழாக யோசிக்க வேண்டும். அதனால் தமிங்கில விசைப்பலகைக்கு மாறிவிட்டேன் :-)) ). ஏன், இங்கு பங்களிக்கக்கூடிய பெரும்பாண்மையானவர்களும் இந்த விசைப்பலகையைத்தான் வைத்திருப்பர் என்பதில் சந்தேகம் இல்லை. டிரான்ஸ்கிரிப்ஷன் விதிகள் வேறுவாடு குறைந்த அளவே இருக்கு. ஏனெனில் பெரும்பாண்மையோர் எ-கலப்பையோ இல்லை முரசு அஞ்சலைத்தான் பயன்படுத்துகின்றனர்(எனக்கு தெரிந்து). இரண்டிலும் ஃபோனடிக் விசைப்பலகை ஒன்றுதான். எனவே டிரான்ஸ்கிரிப்ஷன் ஒரு பெரிய விஷயமே இல்லை. பெரும்பாலான இந்திய மொழிகளும்(தமிழ் தவிர) இதை பயன்படுத்தும் போது, நாம் ஏன் பயன்படுத்தக்கூடாது. இந்திக்கு இல்லாத விசைப்பலகைகளா, இத்தனைக்கும் இந்திய மொழிகளுக்கான விண்டோஸ் விசைப்பலகை இந்தியை ஆதாரமாக கொண்டதுதான்( அதனால் தான் ஒ(இந்தியில் இல்லாத ஒன்று) ஒரு ஓரத்தில் ஒட்டிக்கொண்டிருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்). அவர்களே ஃபோனெடிக் விசைப்பலகையைத்தான் பயன்படுத்துகின்றனர். எனவே தமிழில் ஒரு உருப்படியான அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் விசைப்பலைகை(தமிழ்99 அல்ல.அதை நான் ஏற்கவே மாட்டேன்.இதை பயன்படுத்துவதற்கு தமிழ் தட்டச்சு முறையினை பயன்படுத்தலாம்) உருவாகும் வரை ஃபோனடிக் விசைப்பலகையை பயன்படுத்தலாம்.இதற்கும், நீங்கள் கொடுத்துல்ல பெரும்பாண்மையான மென்பொருட்கள் ஃபோனடிக் விசைப்பலகையை ஆதாரமாக கொண்டவை. அதற்கு நீங்களே த.வி.யில் இணைத்து விடலாமே. பயனர்கள் வேலை மெனக்கெட்டு தகவலிறக்கம் செய்ய தேவையில்லை. மேலும் Anonymous IPகளில் இருந்து பங்களிப்பு அபரிமிதமாக உயரும். எனவே ஒரு பொது விசைப்பலகை உருவாகும் வரை தமிழ் ஃபோனடிக் விசைப்பலைகையை விக்கி வலைப்பக்கத்துடன் இணைத்துவிடலாம் என்பது எனது கருத்து. வினோத் 15:23, 30 நவம்பர் 2007 (UTC)
- வினோத், typewriting maching தமிழ் விசைப்பலகை கணினிக்கு உதவாது என்பதே என் கருத்தும். அதே வேளை அதிலிருந்து மாறுபட்ட தமிழ் 99 விசைப்பலகை கணினிக்கு என ஆய்ந்து தமிழக அரசே பரிந்துரைத்துள்ள விசைப்பலகை. மிகச்சிறந்தது என்று பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது குறித்த என் கருத்துக்களை இங்கும் இங்கும் காணலாம். ஒரு வேளை இக்கட்டுரைகளைப் படித்திராவிட்டால், படித்து உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள். நன்றி--ரவி 16:38, 30 நவம்பர் 2007 (UTC)
- நன்றி ரவி, விநோத், நான் இன்னமும் அஞ்சல் (தமிங்கிலம்) விசைப்பலகையையே பயன்படுத்தி வருகின்றேன். தமிழ் தட்டச்சு ஆரம்பித்து 7 வருடங்களிற்கு மேல் என்று நினைக்கின்றேன். சித்திரமும் கைப்பழக்கம் போல எல்லாமே எது வசதியானதோ அதைப்பயன்படுத்துவதுதான் நல்லது என நினைக்கின்றேன். எனது விசைப்பலகையிலும் தமிழ் எழுத்துக்கள் உண்டு ஆயினும் பயன்படுத்துவது இல்லை. --Umapathy (உமாபதி) 17:20, 22 டிசம்பர் 2007 (UTC)
- உண்மைதான். பலர் ஆங்கில தட்டச்சே தெரியாமல் ஒன்றிரண்டு விரல்களில் தட்டச்சு செய்கின்றனர். எனவே ஆங்கில தட்டசையே கற்காதவர்கள், தமிழுக்கான பிரத்யேக விசைப்பலகையை கற்க வேண்டுமென்பது நடைமுறைக்கு ஒத்து வராதது வினோத் 17:49, 22 டிசம்பர் 2007 (UTC)
- வினோத், நடைமுறையை நாம்தான் ஏற்படுத்துகின்றோம். தமிழ்நாடு இலங்கை போன்ற இடங்களில் பள்ளியில் தமிழ் தட்டச்சிலும் பயிற்சி கிடைத்தால், அதுதானே நடைமுறை. --Natkeeran 17:52, 22 டிசம்பர் 2007 (UTC)
த.வி.யில் IASTக்கு மாற்று
தொகுத.வியில் சமஸ்கிருத ஒலிகளை குறிக்க(ஆங்கில விக்கி IAST பயன்படுத்துவது போல்) தமிழில் எதை மாற்றாக பயன்படுத்துவது ? சௌராஷ்டிர மொழியினை தமிழில் துணைஇலக்கங்களுடன்(Subscript Numerals) எழுதும் முறையினை பின்பற்றலாமா? இல்லை செல்வாவின் எழுத்துமுறையினை(சில மாற்றங்களுடன்) பயன்படுத்தலாமா ? உடனே கருத்து தெரிவித்தால் பௌத்த கட்டுரைகளின் தேவநாகரி எழுத்துக்களை எடுத்துவிட்டு இதைக் கையாள்வேன். வினோத் 15:43, 30 நவம்பர் 2007 (UTC)
மூன்று வேண்டுகோள்கள் :)
தொகு- தமிழ் விக்கிபீடியாவின் பெரும்பாலான கட்டுரைகளில் (இன்னார் எழுதினார் என்ற வேறுபாடில்லாமல்), பல சொற்களுடன் தேவையில்லாமல் "ஆனது" என்ற சொல் சேர்ந்து வருவது ஒரு செயற்கையான மொழி நடையாகத் தெரிகிறது. எடுத்துக்காட்டுக்கு, இந்நாடானது ஆப்பிரிக்காவில் உள்ளது; இச்செய்மதியானது ஏவப்பட உள்ளது. இந்த "ஆனது" என்ற சொல்லைத் தவிர்த்தாலும் கட்டுரைப் பொருள் எவ்விதத்திலும் மாறாது. இச்சொல்லைத் தவிர்த்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
- முதற்பக்க கட்டுரைகள் தமிழ் விக்கிபீடியாவின் தர அளவை விளம்புவன என்பதால், காட்சிப்படுத்தும் முன்னர், அக்கட்டுரையில் குறைந்தபட்சம் எழுத்துப்பிழைகளாவது இல்லாமல் நாம் உறுதி செய்ய வேண்டும். காட்சிப்படுத்திய பிறகும், பிறர் இதைப் படித்துப் பார்த்து உறுதி செய்ய வேண்டும். அண்மைய சில முதற்பக்கக் கட்டுரைகளில் எண்ணற்ற எழுத்துப் பிழைகள் காணக்கிடைத்தமை கவலை அளிக்கிறது.
- இலங்கைப் பயனர்களும் தமிழகப் பயனர்களும் தங்களுக்குப் பழக்கமான நடையில் தான் எழுத இயலும், எழுதுவது தான் இயல்பு என்றாலும், தமிழ் விக்கிபீடியாவின் நலத்தைக் கருத்தில் கொண்டாவது, பிற நாட்டு எழுத்து நடையைப் புரிந்து கொள்ள முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பிற நாட்டு எழுத்தைப் பற்றிய விழிப்புணர்வு நம் எழுத்தில் ஒரு பொது நடையைக் கொண்டு வர உதவும். பொது நடையை எட்ட இயலாத போது, குறைந்தபட்சம் அடுத்த நாட்டு வழக்கை அடைப்புகுறிகளுக்குள் குறிப்பிடவாவது உதவும். --ரவி 17:29, 1 டிசம்பர் 2007 (UTC)
- ஆனது தவிர மற்றும் என்பதுவும் தேவையற்றுப் பயன்படுகிறது. (இதனையே தேவையற்றுப் பயன்படுத்தப்படுகிறது என்பதாக எழுதும் நடையும் தமிழுக்கு உரியதல்ல) குறிப்பாக and என்பதே மற்றும் என்பதாக மொழிபெயர்கிறது. இவற்றையும் முடிந்தளவு தவிர்க்க வேண்டும். கோபி 17:55, 1 டிசம்பர் 2007 (UTC)
குறிப்பாக நான் இயற்றிய கட்டுரைகளில் அதிகமாக( ரெக்காவின் நெருப்பு :-( ) எழுத்துப்பிழைகள் உள்ளமைக்கு மன்னிக்கவும். மிகவும் நீண்ட கட்டுரைகள் எழுதுவதால் எழுத்துப்பிழைகள் அதிமாகிவிடுகின்றன். நான் இயற்றியதால், படிக்கும் போது எனக்கு சரியாகவே படுகிறது(!). இனி எழுத்துப்பிழைகளை நிறைய ஏற்படாத வண்ணம் பார்த்துக்கொள்கிறேன் வினோத் 18:10, 1 டிசம்பர் 2007 (UTC)
வினோத், இனி ரமணா விஜயகாந்த் போல் நாமும் விக்கிபீடியாவில் மன்னிப்பு என்ற சொல்லைத் தடை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன் :) அடிக்கடி மன்னிப்புகேட்டு சங்கடப்படுத்த வேண்டாம் வினோத் ..விக்கிபீடியாவின் அனைத்துப் பக்கங்களுக்கும் நாம் அனைவருமே கூட்டுப் பொறுப்பு ஏற்பவர்கள் தான். தமிழ் விக்கிபீடியாவின் பல கட்டுரைகளில் எண்ணற்ற எழுத்துப் பிழைகள் உள்ளன. குறைந்தபட்சம், முதற்பக்கக் கட்டுரைகளிலாவது கவனம் செலுத்தலாம் என்று தான் சொன்னேன். உங்களைக் குறித்துக் கூறவில்லை.
கோபி, மற்றும் மற்றும் :) ஆனது ஆகிய சொற்களானது :) தேவையில்லை என்பதால் இவை இரண்டையும் தவிர்ப்பது நலம். செயப்பாட்டு வினை குறித்த உங்கள் கருத்தும் முக்கியமே. ஆங்கில விக்கியில் இருந்து கட்டுரைகளை மொழிபெயர்க்கும் போது நம்மை அறியாமல் இந்த நடை ஒட்டிக் கொள்வதால், சில கட்டுரைகள் உயிர்ப்பற்று செயற்கையாய் இருக்கின்றன. இந்த செயற்கை நடை தெரியாமல் தமிழ் மரபுக்கேற்ப எழுதுவதில் செல்வா தேர்ந்தவர். அவருடைய வண்ணத்துப் பூச்சி கட்டுரை ஒரு எடுத்துக்காட்டு. விக்கியில் செலவிடும் நேரத்தைக் காட்டிலும் கூடுதல் நேரம் புதிதாகப் புத்தகங்களைப் படிப்பதில் செலவிட்டால் நம் மொழிநடையும் கருத்தாழமும் மேம்படும் என்று உணரத் தொடங்கி இருக்கிறேன். ஆனால், நினைத்த நேரத்தில் புத்தகங்கள் வாங்கிப்படிக்க இயலாத இடத்தில் இருக்கிறேன். தமிழகம், இந்தியாவில் இருக்கும் பயனர்கள் இது குறித்து முயன்று தங்கள் எழுத்தாற்றலை வளர்க்கலாம். இப்போது நான் எழுதும் தமிழ், +2 படிப்பின் போது எனக்கு இருந்த எழுத்துத் திறமே ஆகும். அதற்குப் பிறகு, தமிழ் எழுதும் திறன் மெருகேற்றப்படாமல் இருக்கிறது. பல நாடுகள், துறைகள், மொழிகள் சூழலில் வாழ்வதால் நான் எழுதும் தமிழ் இயல்பாக இருக்கிறதா என்று என்னை நானே கேள்விக்குட்படுத்துவதும் உண்டு. இதை ஏன் சொல்கிறேன் என்றால், தமிழ் விக்கிபீடியாவில் அதிகப்படியான பங்களிப்புகள் தருவது ஒரு சிலரே. கட்டுரைகளில் தகவல் செறிவு போக, எழுத்து நடை தெளிவாகவும் சுவையாகவும் இயல்பாகவும் இருக்குமாறு பார்த்துக் கொள்வது நமது கடமை. இல்லாவிட்டால், இந்த நடையே வாசகர்களை அன்னியப்படுத்தி விடும்.--ரவி 18:50, 1 டிசம்பர் 2007 (UTC)
உயர்திரு ரவி அவர்களே, தாங்கள் Bureaucrat என்பது இப்பொது தான் எனக்கு தெரிந்தது(இனி கொஞ்சம் உங்களிடத்தில் எச்சரிக்கையாக நடந்து கொள்கிறேன்). அதனால தடையை குறித்து Spontaneousஆக வந்தது போலும். என்னை தடை ஏதும் செய்யத் தேவையில்லை :-). நானே என்னுடைய மன்னிப்பு என்ற சொல்லின் Frequencyஐ குறைத்துக்கொள்கிறேன். முற்றிலுமாக நிறுத்த முடியாத அப்பறம் ஒரு Formal Touch இல்லாமல் போய் விடும். 121.247.80.205 19:06, 1 டிசம்பர் 2007 (UTC)
வினோத், மற்றும், ஆனது போல் மன்னிப்பு என்ற சொல்லைத் தான் தடை செய்யச் சொன்னேன். உங்களை அல்ல :) தவிர, தன்னிச்சையாகவும் யாரையும் தடை செய்து விட முடியாது!--ரவி 19:26, 1 டிசம்பர் 2007 (UTC)
சிறீதரனின் சீரிய பணி
தொகுகனக்ஸ் கடந்த ஓராண்டாகத் தொடர்ச்சியாக ஆண்டு நிறைவுப் பக்கங்களை உருவாக்கி முழுமையடையச் செய்துள்ளார். குறித்த ஒவ்வொரு திகதியிலும் கடந்த காலங்களில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்துவதற்கான பக்கங்களை உருவாக்கியமையால் முதற்பக்கம் ஆர்வமூட்டுவதாகியுள்ளது. அத்துடன் நடப்பு நிகழ்வுகளையும் கனக்ஸ் தொடர்ச்சியாக இற்றைப்படுத்தி வருகின்றார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 6 இல் ரவி தொடக்கிய ஆண்டு நிறைவுப் பக்கங்களை டிசம்பர் 24 லிருந்து தொடர்ச்சியாக எழுதி வரும் கனக்ஸ் அவற்றில் தெரியும் சிவப்பு இணைப்புக்களுக்கான கட்டுரைகளையும் பெருமளவில் உருவாக்கி வருகிறார். இதன்மூலம் முக்கியத்துவம் வாய்ந்த பலதுறைக் கட்டுரைகள் உருவாகுவதுடன் ஒருவித முழுமைத்தன்மையும் எய்தப்பட்டு வருகின்றது. ஆண்டின் அனைத்து நாட்களுக்குமான விரிவான கட்டுரைகளை உருவாக்கியவரும் கனக்ஸ்தான் என்பதுவும் இங்கு குறிப்பிடப்பட வேண்டியது.
இவ்வகையில் மிகவும் திட்டமிட்டு த.வி.க்கு வளம்சேர்த்து அனைவரும் பயன்பெறத் தொடர்ச்சியாக உழைக்கும் சிறீதரனுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன். கோபி 12:55, 4 டிசம்பர் 2007 (UTC)
- என்னுடைய மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.--ரவி 15:39, 4 டிசம்பர் 2007 (UTC)
- கனகு ஆற்றிவரும் பணி நம் எல்லோருக்கும் முன்மாதிரியானது. அடிப்படையான கட்டுரைகளில் இருந்து (எ.கா ஒளிமின் விளைவு), அறிவியலாளர்கள் (எ.கா சி. ஜே. எலியேசர்), நாடுகள் என்று பற்பல துறைகளில் நேர்த்தியான கட்டுரைகள் ஆக்குவதுமட்டுமல்லாமல், இடையறாது ஆண்டுகள், நாட்கள், சிறப்பு நிகழ்ச்சிகள் என்று த,விக்கு பன்முகவளர்ச்சி நல்கும் மிகச்சிறந்த பங்களிப்பாளர். அதுமட்டுமல்ல, கட்டுரைகளில் திருத்தங்கள் செய்வதில் மிகச் சிறந்தவர். அண்மையில் உடல்நலமில்லாமல் இருந்திருந்தும், விரைவு குன்றாமல் ஆக்கிவரும் கட்டுரைகள் வியப்பூட்டுகின்றன. என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். --செல்வா 23:30, 4 டிசம்பர் 2007 (UTC)
- தமிழ் விக்கிபீடியாவின் துடிப்போட்டத்தை வெளியுலகுக்கு உணத்துவதில் கனகுவின் பணி சிறப்பானது. எதாவது தகவல்கள் புதிதாக இருக்கும் என்று பயனர்கள் எதிர்பார்த்து வரும்பொழுது, அதை தவறாமல் தருவதில் கனகுவின் பணி சிறப்பானது. நன்றி. --Natkeeran 01:00, 5 டிசம்பர் 2007 (UTC)
- சிறீதர் அண்ணாவின் கட்டுரைகள் தரமானவை. விடாமுயற்சியுடன் எழுதி விக்கிபீடியர்களுக்கு ஓர் முன்மாதிரியாகத் திகழ்கின்றார் --உமாபதி 01:41, 5 டிசம்பர் 2007 (UTC)
- ஆம். இப்படி ஒருநாள்கூட விடாது பணியாற்றுவது எல்லோராலும் முடியாத ஒன்று. அதிலும் நாள்வாரியாக எழுதி அதிலுள்ள தலைப்புக்களில் கட்டுரை உருவாக்குவதில் பலமுனைகளிலும் நமது கட்டுரைப் பரம்பல் விரிவடைகிறது. கனகு அவர்களின் பணி தொடரவும் உடல்நலம் முற்றிலும் தேரவும் வாழ்த்துக்கள். -- Sundar \பேச்சு 07:32, 5 டிசம்பர் 2007 (UTC)
அனைவருக்கும் எனது நன்றிகள். பணி இன்னமும் பூர்த்தியடையவில்லை:).--Kanags 11:28, 5 டிசம்பர் 2007 (UTC)
IASTக்கு மாற்றாக இதை பயன்படுத்தவா ?
தொகுஆங்கிலத்தில் kha(ख) என்ற 'ஹ' கரத்துடன் கூடிய ஒலிகளை kh என எழுதுகின்றனர். இதனை ஒட்டி பின் வருபவனவற்றை IASTக்கு மாற்றாக பயன்படுத்த விரும்புகிறேன். தயவு தங்களுடைய கருத்துகளை தெரிவிக்கவும்.
ka - க, kha - கஹ, ga - ஃக, gha - ஃகஹ
ca - ச, kha - சஹ, ja - ஜ, jha - ஜஹ
Ta - ட, Tha - டஹ, Da - ஃட, Dha - ஃடஹ
ta - த, tha - தஹ, da - ஃத, dha - ஃதஹ
pa - ப, pha - பஹ, ba - ஃப, bha - ஃபஹ
Sha - ஷ, sa - ஸ, sha(श) - ஷ2
ரு(ऋ) - ருஇ
am(anusavaram - अं) - ம்*
இல்லையெனில் சௌராஷ்டிர முறையினை பின்பற்றவா ? . உடனே தெரிவித்தால், கட்டுரைகளில் கையாள உதவியாக இருக்கும். தமிழ் கட்டுரைகளில் தேவநாகரி எழுத்துக்களை பயன்படுத்துவதிலேயோ(தற்போது நான் பயன்படுத்துவது) அல்லது IAST முறையை பின்பற்றுவதிலோ எனக்கு விருப்பம் இல்லை வினோத் 17:21, 5 டிசம்பர் 2007 (UTC)
IAST க்கு என் பரிந்துரை
தொகு
ka க kha க: ga 'க gha 'க:
ca ச cha ச: ja 'ச jha 'ச:
Ta ட Tha ட: Da 'ட Dha 'ட:
ta த tha த: da 'த dha 'த:
pa ப pha ப: ba 'ப bha 'ப:
sha ^ச sa ~ச (அல்லது ˘ச) Sha ^ச: (எ.கா உ^சா:) ha ஃஅ [அல்லது ˚அ ]
--செல்வா 19:00, 5 டிசம்பர் 2007 (UTC)
Sa என்பதற்கு ~ச என்பதற்கு மாற்றாக ˘ச என்று எழுதலாம். இதில் உள்ள நிலா/தோணி போன்ற குறிக்கு ஆங்கிலத்தில் breve என்பார்கள். Ha, Hi, Hu முதலான எழுத்தொலிகளுக்கு ஆய்த எழுத்து முதலில் வருவதற்கு மாறாக நுண்குறிப்பாக ˚அ, ˚இ, ˚உ என்று குறிக்கலாம் --செல்வா 21:29, 7 ஜனவரி 2008 (UTC)
சில எடுத்துக்காட்டுகள்:
भगवद्गीता Bhagavad Gītā = 'ப:'கவ'த்'கீதா
महाभारत), /məɦaːbʱaːrət̪ə/ மஃஆ'பா:ரத
भारत गणराज्य Bhārat Gaṇarājya 'பா:ரத 'கணரா'ச்ய
वृद्धि, IAST: vṛddhi வ்ரு'த்:'தி
--செல்வா 19:20, 5 டிசம்பர் 2007 (UTC)
மேலும் சில எடுத்துக்காட்டுகள்:
वज्रधार வ'ச்ர'தா:ர
वसुधारा வ~சு'தா:ரா
ग्रन्थ 'க்ரந்த:
நான் பரிந்துரைக்கும் முறை எளிதாகப் பயன்படுத்தக்கூடியது. தமிழ் எழுத்துக்களை மட்டுமே கொண்டும் ஆக்கியது. இம்முறையை இங்கே விக்கியிலும் பேச்சுப் பக்கங்களில் ஆண்டிருக்கின்றேன். சிறப்புக் குறிகள் யாவும் எழுத்து விசைப்பலகையிலேயே உள்ளன. --செல்வா 19:35, 5 டிசம்பர் 2007 (UTC) --செல்வா 19:35, 5 டிசம்பர் 2007 (UTC)
முக்கிய குறிப்பு
தொகுभगवद्गीता Bhagavad Gītā = 'ப:'கவ'த்'கீதா, भारत गणराज्य Bhārat Gaṇarājya 'பா:ரத 'கணரா'ச்ய என்றெல்லாம் எழுதிக் காட்டினாலும் இவை ஒலிப்புகளைக் காட்ட மட்டுமே. தமிழில் பொதுவாக எழுதி வழங்கும் பொழுது பகவத்கீதா (pakavathkiidhaa) என்றுதான் எழுதி, தமிழ் முறைப்படித்தான் ஒலிக்க வேண்டும். துறை சிறப்பு நூல்களில் மட்டும், துல்லிய ஒலிப்பு காட்ட வேண்டிய இடத்தில் மட்டும் இப்படி எழுதிக் காட்டலாம் என்பதே என் கருத்து. தமிழில் எங்கு எழுதினாலும் இப்படி எழுதவேண்டும் என்பது என் நோக்கமோ கருத்தோ அல்ல. இவற்றைக் கருத்தில் கொள்க. --செல்வா 21:40, 7 ஜனவரி 2008 (UTC)
எழுத்துப் பெயர்ப்பு அட்டவணை
தொகுvelars | palatals | retroflexes | dentals | labials | |
क [k] க |
च [c] ச |
ट [ʈ] ட |
त [t̪] த |
प [p] ப |
unvoiced stops |
ख [kʰ] க: |
छ [cʰ] ச: |
ठ [ʈʰ] ட: |
थ [t̪ʰ] த: |
फ [pʰ] ப: |
aspirated unvoiced stops |
ग [g] 'க |
ज [ɟ] 'ச |
ड [ɖ] 'ட |
द [d̪] 'த |
ब [b] 'ப |
voiced stops |
घ [gʰ] 'க: |
झ [ɟʰ] 'ச: |
ढ [ɖʰ] 'ட: |
ध [d̪ʰ] 'த: |
भ [bʰ] 'ப: |
aspirated voiced stops |
ङ [ŋ] ங |
ञ [ɲ] ஞ |
ण [ɳ] ண |
न [n] ந |
म [m] ம |
nasal |
य [j] ய |
र [r] ர |
ल [l] ல |
व [v] வ |
semi-vowels | |
श [ɕ] ^ச |
ष [ʂ] ^ச: |
स [s] ~ச |
sibilants | ||
ह [ɦ] ஃஅ |
voiced fricative |
--செல்வா 20:21, 5 டிசம்பர் 2007 (UTC)
- செல்வா, உங்களின் இந்த பரிந்துரை மற்றும் வினோத்தின் பரிந்துரை குறித்தும் கண்டிப்பாக உரையாட வேண்டும். முன்பு நீங்கள் பரிந்துரைத்தபோது நாம் வெகுசிலராகத்தான் இருந்தோம், அதனால் நம்மால் விரிவாக உரையாட முடியவில்லை. இப்போது எனது தனிப்பட்ட கருத்தில் ஓரளவு மாற்றம் வந்துள்ளது. சில இடங்களில் மட்டுமாவது புதிய பயன்பாடுகளைச் சோதித்துப் பார்க்கலாமா என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி தனியொரு பக்கத்தில் உரையாடுவோம். அப்பக்கத்தில் நமது முந்தைய உரையாடல்களுக்கும் இணைப்பு தர வேண்டும். -- Sundar \பேச்சு 12:53, 10 டிசம்பர் 2007 (UTC)
சௌராஷ்டிர முறை
தொகுசௌராஷ்டிர மொழிக்கு தற்சமயம் வரி வடிவம் இல்லாததால், அச்சில் தமிழ் எழுத்துக்கள் மற்றும் துணைஇலக்கங்களை பயன்படுத்தி, வடமொழி ஒலிகளை குறிக்க கீழ்க்கண்ட முறையினை பயன்படுத்துகின்றனர்
ka - க, kha - க2 ga - க3, gha - க4
ca - ச, kha - ச2 ja - ஜ, jha - ஜ2
Ta - ட, Tha - ட2 Da - ட3, Dha - ட4
ta - த, tha - த2 da - த3, dha - த4
pa - ப, pha - ப2 ba - ப3, bha - ப4
Sha - ஷ, sa - ஸ,
வினோத் 13:34, 7 டிசம்பர் 2007 (UTC)
பொது வழக்கும் பொருத்தமான வழக்கும்
தொகுஅண்மையில் நடக்கும் சில உரையாடல்களில் கட்டுரைத் தலைப்புக்களுக்குப் பொது வழக்குகளா பொருத்தமான வழக்குகளா என்பது மீண்டும் மீண்டும் வருகிறது. கொள்கை முடிவுகள் இன்றித் தொடர்வதால் ஏற்படும் சிரமங்கள் பல.
வாசகர்களுக்குப் பொதுவழக்கே புரியும். புதிய சொல்லாட்சிகள் அவர்களைக் குழப்பலாம். ஆனால் த.வி ஒரு கலைக்களஞ்சியம் என்ற அளவில் சரியான சொற்களின் பாவனை முக்கியமானது. பகுப்புக்களினூடு நகர்ந்து கட்டுரைகளை அடையும் ஒருவர் புதிய சொல்லாட்சிகளால் தாம் தேடியதைத் தவறவிட வாய்ப்புக்கள் உண்டு. அதனால் பொது வழக்குக்களைக் கட்டுரைகளின் தலைப்புக்களாகப் பயன்படுத்தும் அதே வேளை பொருத்தமான வழக்குகளை கட்டுரையில் பயன்படுத்த முன்மொழிகிறேன். கோபி 18:37, 8 டிசம்பர் 2007 (UTC)
Wikimedia Indian chpater
தொகுAs you might be aware, we are planning to start an India chapter of the Wikimedia Foundation. Please see Wikimedia India for details. We're currently working on the draft of bylaws. If you are interested, please join the discussion on meta, and subscribe to the wikimediaindia-l mailing list. Utcursch 18:07, 10 டிசம்பர் 2007 (UTC)
- Thanks Utcursch.
- முன்னதாக நான் ரவிக்கும் சிவாவுக்கும் இதுபற்றி தெரிவித்திருந்தேன். (வினோத் அப்போது பங்களிக்கத் துவங்கவில்லை. அவர் விரும்பினால் அதற்குறிய மின்னஞ்சல் பட்டியலில் பதிய வேண்டுகிறேன்.) புலம் பெயர்ந்த இந்தியத் தமிழர்களும் இதில் பங்குபெறலாம் என்றால் செல்வாவும் இதில் பங்கேற்க வேண்டும். -- Sundar \பேச்சு 04:42, 11 டிசம்பர் 2007 (UTC)
- சுந்தர், பட்டியலில் இணைந்து விட்டேன். ஆனால், திட்டப்பக்கத்தைப்பார்த்தேன் மிகவும் Legal Jargonஇல் ஏதோதோ எழுதியிருந்தனர் ஒன்றும் புரியவில்லை :-). அதில் என்ன கூறவருகிறார்கள் என்று சுருக்கமாகக் கூறினால் கொஞ்சம் உதவிகரமாக இருக்கும். வினோத் 05:46, 11 டிசம்பர் 2007 (UTC)
- வினோத், பார்க்க; m:Wikimedia_India/projects -- Sundar \பேச்சு 14:43, 12 டிசம்பர் 2007 (UTC)
- நா கிருதஜ்ஞதலு :-) வினோத் 14:48, 12 டிசம்பர் 2007 (UTC)
Please translate
தொகுGreetings.. I am from Wikipedia Bahasa Melayu. I would love to see our language introduction in Tamil language. Can someone please translate this quote:
Want to know about Malay? The Malay language is of Austronesian stock, spoken mainly in the Malay Archipelago of Southeast Asia namely the countries of Indonesia, Malaysia, Brunei, Singapore, Southern Thailand, the Southern Philippines and even as far as Christmas Island in Australia. The language achieved the status of lingua franca in the region during the height of the Malaccan Sultanate in the 15th and 16th century. As of late the importance of Malay as a language is being noted worldwide.
Thanks in advance.. →60.51.43.73 21:41, 15 டிசம்பர் 2007 (UTC)
- மலாய் மொழி - A basic introduction. Facts still need to be cross - checked. --Natkeeran 22:59, 15 டிசம்பர் 2007 (UTC)
- Thank you! Please go to About Malay Language Template talk page if there is anything need to be corrected. 60.51.47.233 14:59, 17 டிசம்பர் 2007 (UTC)
Classical Tamil Winter Seminar - 2008 In Pondicherry, 11th February to 7th of March 2008
தொகு- http://www.efeo.fr/ctws_2008/index.htm
- Where and When: In Pondicherry, 11th February to 7th of March 2008
- "Our fees have been constant for the last 5 years and are still 150 Euros (the reduced price for Indian students being 1000 rs.)"
- "We would also like strongly to encourage Indian students to participate in our classes (and for them there will be specially reduced fees)."
--Natkeeran 17:10, 22 டிசம்பர் 2007 (UTC)
நத்தார் புத்தாண்டு வாழ்த்துக்கள்
தொகுஅனைவருக்கும் எமது நத்தார், புத்தாண்டு வாழ்த்துக்கள். எல்லாரும் எல்லாம் பெற்று சிறப்புடன் வாழ நாம் வேண்டி உழைப்போமாக. --Natkeeran 14:22, 25 டிசம்பர் 2007 (UTC)
எல்லோருக்கும் இனிய நத்தார், புத்தாண்டு வாழ்த்துக்கள்! புத்தாண்டில் தமிழ் விக்கிப்பீடியா இன்னும் பெரும் வளர்ச்சி அடைய வாழ்த்துவோம், கூடி உழைத்து வளர்ப்போம்!--செல்வா 15:33, 25 டிசம்பர் 2007 (UTC)
ஆக்கம் எதிர் அழிவு :)
தொகுhttp://www.nationalpost.com/news/world/story.html?id=199409--ரவி 00:21, 28 டிசம்பர் 2007 (UTC)
- நல்ல பகிர்வு. நன்றி. --Natkeeran 00:48, 28 டிசம்பர் 2007 (UTC)
தமிழ் விக்கிபீடியாவிலும்கூட இவ்வாறான விவாதங்கள் நடைபெற்று இருக்கின்றன. நாம் ஒரு சிறிய குழுவாக இருப்பதால், ஒருவரையொருவர் புரிந்துகொண்டு இணக்கமாகச் செயல்பட முடிகிறது. நாமும் பெரிய அளவில் வளரும்போது பிரச்சினைகள் சிக்கலடையக்கூடும். விக்கிபீடியாவுக்குப் பொருத்தமான கட்டுரைகள் எவை பொருத்தமற்றவை எவை என்பது பற்றித் தொடர்ந்து விவாதித்து உரிய நியமங்களை வகுத்துக்கொள்வது அவசியம். மயூரநாதன் 06:33, 28 டிசம்பர் 2007 (UTC)
மயூரநாதன் இணைப்பிற்கு நன்றி. ஆங்கில் விக்கிபீடியாவில் ஆரம்பத்தில் நான் உருவாகிய கட்டுரைகள் ஆரம்பத்தில் அழிக்கப்பட்டது பின்னர் நீண்ட உரையாடலின் பின்னர் மீட்டெடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் ஆங்கில விக்கிபீடியாவில் நிகழ்ந்த உரையாடல்கள் எனக்கு எரிச்சலையே உண்டுபண்ணியது. இங்கும் இதுபோன்று நிகழவிடாமற் பொறுப்புடன் நாம் அனைவரும் செயற்படவேண்டும். --Umapathy (உமாபதி) 16:17, 31 டிசம்பர் 2007 (UTC)
விக்கிபீடியா பற்றி தமிழத்தில்: விக்கிபீடியா இது ஒரு இலவச தகவல் களஞ்சியம்
தொகு--Natkeeran 14:23, 31 டிசம்பர் 2007 (UTC)
பரிந்துரை: விக்கிப்பீடியா:கேள்விக்குட்படுத்தல்
தொகுஇந்த பக்கத்தை மேம்படுத்தி ஒரு கொள்கை அல்லது வழிகாட்டியாக ஏற்றுக் கொள்ள பரிந்துரை செய்கிறேன். நன்றி. --Natkeeran 15:23, 31 டிசம்பர் 2007 (UTC)
துறைசார் தமிழ் நூற்கள் தகவல் சேகரம்
தொகுதமிழ் நூர்களைப் பற்றி நூற்களை இணையத்தில் பெறுவது பற்றி பல தளங்களில் அலசப்பட்டது. இதற்கான ஒரு விரிவான தீர்வு எட்டாக்கனியாகவே உள்ளது. எமக்கு (தமிழ் விக்கிபீடியர்கள்) உள்ள இப்போதைய தேவையை முன்வைத்து, சில எண்ணங்களை இங்கு பகிர்கிறேன்.
- நூல் பற்றிய தகவல்
- தமிழ் விக்கிபீடியாவில் யாரிடம் இருக்கின்றது அல்லது யாரால் பெறப்பட்டு குறிப்புகள் சேர்க்க முடியும்.
- கிடைக்கும் நூலகம்
- உலகத்தமிழர் பெறப்க்கூடிய வழிமுறை அல்லது விற்பனை அங்காடி.
மேற்கண்ட தகவல்களை துறைசார்பாக தொகுக்க தொடங்கினால், விரைவில் ஒரு பொது தகவல் சேகரத்தை தொகுக்க முடியும் என்று நம்புகிறேன். இது பிறர் செய்யும் ஆய்வுகளுக்கும், மாணவர்களுக்கும், கட்டுரை ஆக்கர்களுக்கும் உதவுவதோடு, தமிழ் விக்கிபீடியாவின் நம்பகத்தன்மையையும் தரத்தையும் உயர்த்தும்.
- தமிழ், தமிழர், தமிழர் பண்பாடு http://ta.wikipedia.org/wiki/WP:Tamils
அல்லது வேறு ஒரு முக்கிய துறையில் தொடங்கலாம்.
பிறர் கருத்து அறிய ஆவல். --Natkeeran 16:06, 31 டிசம்பர் 2007 (UTC)
பரிந்துரை: மேற்கோள் சுட்டுதலை ஒரு அடிப்படைக் கொள்கையாக சேர்கவும்
தொகு--Natkeeran 16:09, 31 டிசம்பர் 2007 (UTC)
சோதனையில் இருக்கும் விண்டோஸ் எக்ஸ்பி சேவைப் பொதி 3
தொகுசோதனையில் இருக்கும் விண்டோஸ் எக்ஸ்பி சேவைப் பொதி 3 தொடர்பான விவாதங்கள் மைக்ரோசாப்ட் இன் டெக்நெட் தளத்தில் இடம்பெற்ற வண்ணம் உள்ளன (http://forums.microsoft.com/TechNet/ShowForum.aspx?ForumID=2010&SiteID=17) இதில் தமிழ் சம்பந்தமானவற்றில் http://forums.microsoft.com/TechNet/ShowPost.aspx?PostID=2614777&SiteID=17 இல் இந்திய நேரம் மற்றும் தேதி (திகதி) காட்டுவதில் உள்ள பிரச்சினை பற்றியது. இது விண்டோஸ் 2000 இலிருந்தே இருக்கின்ற ஓர் பிரச்ச்சினை என முனைவர் (டாக்டர்) பவனஜ தெரிவித்திருந்தார் (http://bhashaindia.com/ForumV2/shwmessage.aspx?ForumID=1&MessageID=2683). இந்தப் பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் சேவைப் பொதி 3 உடன் ஓர் முடிவு ஒன்று எட்டப்படவேண்டியதையே நான் விரும்புகின்றேன். இதுவே தமிழ் மற்றும் இந்திய மொழிகளைப் பேசுபவர்களின் கருத்தாகவும் இருக்குமென நினைக்கின்றேன். இயலுமெனின் இதுதொட்பான கருத்துக்களை மைக்ரோசாப்ட் டெக்நெட் விவாதத்தளத்தில் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன். --Umapathy (உமாபதி) 17:40, 31 டிசம்பர் 2007 (UTC)
மலேசியன் பிரச்சினை
தொகுhttp://www.youtube.com/watch?v=-nWfdDYoB_I&feature=related
--Natkeeran 23:51, 1 ஜனவரி 2008 (UTC)
கலைச்சொல் பயன்பாடு
தொகுநான் அவ்வப்போது எனது தனிப்பட்ட கருத்துக்களை தெரிவிப்பதற்கு மன்னிக்கவும். ஏதோ இது குறித்து கூற வேண்டும் என தோன்றியது.
வழக்கில் இல்லாத சொற்களுக்கு புது கலைசொற்களை பயன்படுத்துவதில் தகுந்த முறையில் புகுத்துவது தவறேதும் இல்லை.
அதே வேளையில், தமிழ்வழிய நூல்களில் பரவலாக அறியப்படும் கலைச்சொற்களை விடுத்து மாற்று சொற்களை பயன்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை.
த.வியில் உள்ள பல கலைச்சொற்கள் தமிழ் வழிய மாணவர்களே கூட புரியாத நிலை உள்ளது. உதாரணமாக உலோகம் என்பதை தமிழ் வழியத்திலும் பிற ஊடங்களும் பயன்படுத்தும் நிலையை அதை மாழை என் குறிப்பிடும் துணைப்பயன்பாட்டை உருவாக்கி அதை முன்னிலைப்படுத்த வேண்டிய வேண்டியதன் அவசியம் என்ன ? அதே போல் வைரஸ், பாக்டீரியா என தமிழ் வழிய மாணவர்களே படிக்கும் நிலையில் அவற்றை கோலுரு நுண்ணுயிரி எனவும், தீ நுண்மம் எனவும் மறு பெயரிட அவசியமென்ன? நேர்மின்னி(புரோட்டான்), எதிர்மின்னி(எலக்ட்ரான்), நொதுமி(நியூட்ரான்) போன்ற புதிய பயன்பாடுகளும் இவற்றுள் அடங்கும். ஒரு தமிழ் வழிய அறிவியல் மாணவனுக்கு Liquid என்பதை திரவமாகவும் Gas என்பதை வாயுவாகவும் அறியப்படும் நிலையில் அதை மாற்ற முனைவதேன்?
மாண்வர்கள் தங்களுக்கு படித்த வழக்குகளைத் தான் காண விரும்புவர்,புதிய வழக்குகளை அல்ல. அப்படி புது வழக்குகளை புகுத்த முற்பட்டால் யாரும் த.வியை நாட மாட்டார்கள். இங்குள்ள பெரும்பாண்மையோர் தமிழார்வலர்களாக இருக்கலாம் இலக்கண இலக்கியத்தை ஆராய்ந்து புதுக்கலைச்சொற்களை உருவாக்கலாம், அதேசமயம் ஒரு சராசரி தமிழ் வழிய மாணவனை குறித்து தாங்கள் நினைத்து பார்க்க வேண்டும்.ஆங்கில வழி மாணவர்களை விட்டொழியுங்கள் குறைந்தபட்சம் தமிழ் வழிய மாணவர்களுக்காவது புரியும் வண்ணம் சொற்கள் இருத்தல் வேண்டும்.
ஒன்று தமிழக் கலைச்சொல்லை பயன்படுத்த வேண்டும் அல்லது இலங்கை கலைச்சொல்லை பயன்படுத்த வேண்டும், அதை விடுத்து புதுச்சொல்லை பயன்படுத்துவதில் சிறிதும் உடன்பாடில்லை. இந்நிலை நீடித்தால் ஒரு கட்டுரை அக்கட்டுரையில் உள்ள கலைச்சொல்லை ஆக்கியவருக்கு மட்டுமே புரியும் நிலை ஏற்பட்டுவிடும்.
கலைச்சொற்களை மாற்றவோ இல்லை திருத்தவோ இது இடம் கிடையாது.
ஆரம்ப நிலையிலேயே இதை சரி செய்து கொள்ள வேண்டுகிறேன்.
|
வினோத் 07:31, 3 ஜனவரி 2008 (UTC)
- ஆம். பாடநூல்களில் உள்ள வழக்கை முன்னிலைப்படுத்தலாம் என்றே நானும் கருதுகிறேன். ஏனெனில் இக்கட்டரைகளின் முக்கியப் பயனாளிகள் மாணவர்களாவே இருக்கக் கூடும் என்ற நிலையில் விக்கிப்பீடியாவிற்கும் அவர்களுக்கும் உள்ள இடைவெளியைக் கூட்டும். பாடநூல் வழக்கை முன்னிலைப்படுத்தி அதற்கான தமிழ்ச்சொற்களை அடைப்புக்குறிக்குள் தரலாம். அதன்மூலம் சொற்களும் அறிமுகமாகும். கட்டுரை நடையும் படிக்கும் மாணவர்களுக்கு எளிதாக இருக்கும். தக்க சமயத்தில் அனைவரின் கவனத்திற்கும் இக்கருத்தைக் கொண்டு வந்ததற்கு நன்றி வினோத். --சிவகுமார் \பேச்சு 08:04, 3 ஜனவரி 2008 (UTC)
முதற்கண் உங்கள் கருத்துகளுக்கு நன்றி. நீங்கள் கூறுவதை நன்கு உணர்வேன். தமிழ்பாடநூல்களில் (11 வகுப்பு), திரிகோணமிதி என்றே கொடுத்துள்ளார்கள். கேரளப் பாடநூல்கள் கூட முக்கோணவியல் என்று பெயர் தந்திருக்கும் பொழுது திரிகோணமிதி என்று 21 ஆம் நூற்றாண்டில் தமிழில் கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்? உஷ்ணம், ரசாயனம் என்றும் ஒரு காலத்தில் பாடநூல்களில் பயன்படுத்தினார்கள். இன்றைய இயற்பியலிலும் வேதியியலிலும் வகுப்புக்கு வகுப்பு கலைச்சொற்கள் மாறுபடுகின்றன. எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் என்னும் சொற்களையோ, லேசர், ரேடார், ரேடியோ முதலான சொற்கள் ஆள்வதையோ தவறென்று நான் சொல்லவில்லை. எலக்ட்ரானுக்கு எதிர்மின்னி என்றும், புரோட்டானுக்கு நேர்மின்னி என்றும் சொல்வதில் குழப்பம் ஏதும் இருக்கத் தேவையில்லை. இன்னும் சொல்லப்போனால், குழப்பம் குறைவாக இருக்கும். நியூட்ரான் என்பதற்கு நொதுமி என்பது புதிதாக இருக்கும். ஒப்புக்கொள்கிறேன். ஆனால் நியூட்ரான் என்பதும் புதிதாக இருப்பதுபோல அதுவும் ஒன்று என்று எடுத்துக்கொள்ள என்ன தயக்கம்? வலைப்பதிவுகளில்கூட பலர் புரோட்டானுக்கு என்ன தமிழ்ச்சொல் போன்ற முறையில் கேட்டுவருகின்றனர். தமிழ்வழி அறிந்தால் சற்று கூடுதலான "நெருக்கம்", புரிதல் நிகழ்கின்றது. தாய்மொழியில் பயிலும் பொழுது "அறிவு" சிறப்பாக "இயங்குகின்றது", "தொழில்படுகின்றது" (உள்ளுக்குள் கேள்விகள் இயல்பாய் எழுந்து, மேலும் ஆழ்ந்த புரிதல் நிகழ்கின்றது) (passive learning and active learning). உலோகம் என்பதை ஏன் மாழை என்று அழைக்க வேண்டும்? உலோகம் என்றே கூறலாம். ஆனால் மாழை என்பதை ஏன் எதிர்க்க வேண்டும்? நான் ஏன் மாழை என்று எழுதுகிறேன் என்பதை பேச்சு:உலோகம் என்னும் பக்கத்தைப் பாருங்கள் விளங்கும். உலோகம் என்னும் சொல்லுடன் தொடர்புடைய தமிழ்ச் சொற்களைத் தேடி பாருங்கள். உஷ்ணம் என்னும் சொல்லோடு (சொல்வடிவோடு) தொடர்புடைய சொற்களைத் தேடிப்பாருங்கள். அதே நேரத்தில் வெப்பம், வெம்மை, வெய்யில், வெந்நீர், வெப்பு, வேக்காடு, வெந்து என்று எத்தனை சொற்களுடன் ஆழத் தொடர்பு கொண்டு நிற்கிறது என்று பாருங்கள். காற்றுக்கு வளி என்பது புதிய சொல் இல்லை. சூறாவளி, "வளி முதலா எண்ணிய மூன்று", வளிமண்டலம் என்றெல்லாம் வழக்கில் உள்ள சொல். திண்ணை போன்ற இணைய இதழ்களில் கூட வளி அடுப்பு (gas stove) என்று பயன்படுத்தி உள்ளார்கள். வளி--> வளிமம் எளிதான சொல். அறிவியல் அகராதிகளிலும் (எடுத்துக் காட்டாக அ.கி மூர்த்தி). உள்ள சொல். நீர்மம் என்பதும் அப்படியே. தண்ணீர், கண்ணீர், நீர்த்த, "நீர்பூத்து இருக்கின்றது" என்று பல இடங்களில் பொதுவழக்கில் உள்ள சொல். திரவம் என்னும் சொல்லுக்குத் தொடர்பான சொற்களைத் தேடிப்பாருங்கள்! மேலும் நீர்மம் என்னும் சொல்லும் (பாடநூல்களில்) வழக்கில் உள்ள சொல். CIIL (Central Institute for Indian Languages, Mysore) நிறுவனத்தில் 9 ஆம் வகுப்புக்கான அறிவியல் பாடத்தில் நீர்மம் என்னும் சொல்லை ஆள்கிறார்கள் இங்கே பார்க்கவும். (அங்கே "வாயுக்களையும் நீர்மங்களையும் பாய்பொருள்கள் என்கிறோம்" என்று வாயு என்னும் சொல்லையும் பயன்படுத்தி உள்ளனர்). கலைக்களஞ்சியமாகிய இதில் தரமான சொல்லாட்சிகளை எடுத்தாள வேண்டும் (பிற சொற்களை பிறைக்குறிகளுக்குள் தந்தோ, வழிமாற்று பக்கங்கள் அமைத்தோ உதவ வேண்டும்). கடைசியாக இன்று இருக்கும் தொழில்நுட்பத்தால், மீசுட்டு (hypertext) வழி எளிதாக எதனையும் அறிந்து கொள்ளலாம். புரியாமல் விழிக்க வேண்டியதில்லை. அதென்ன "மாழை" என்று விக்கித்து நிற்க வேண்டியதில்லை (யாரையும் தேடி அலையவும் வேண்டியதில்லை, அலையவும் கூடாது). ஆங்கிலத்தில் ellipse என்றால், அது என்ன என்று எப்படி அறிந்து கொள்கிறோம்? அப்படி ஏன் தமிழில் அறியத் தயங்குகிறோம்? ஆங்கிலத்தில் Abugida என்று ஒரு சொல் தட்டுப்பட்டால், அது என்ன என்று எப்படி அறிந்து கொள்கிறோமோ அப்படித் தமிழிலும் புரியாத சொற்களாக ஏதும் தட்டுப்பட்டால், அதனைப் புரிந்து கொள்ளுமாறு அழகுடன் இங்கு வசதிகள் செய்து தரலாம். பாடநூலகளும் இப்படி மீசுட்டு கொண்ட வடிவங்களில் வந்துகொண்டிருக்கின்றன. தமிழ்நாடு, இலங்கை கலைச்சொற்கள் வேறுபாடுகள் இன்னொரு சிக்கல். --செல்வா 15:36, 3 ஜனவரி 2008 (UTC)
தமிழ் வழிய பாட புத்தகத்தில் முக்கோணவியல் என்றே உள்ளது :-)). பழக்கப்பட்ட சொல் இருக்கும் போது அதைத்தான் நான் முன்னிலைப்படுத்த வேண்டும். சிவகுமார் கூறியது போல, புதுச்சொல்லாக்கத்தை வேண்டுமானால் நாம் அடைப்புக்குறிக்குள் தரலாம். ஒருவர் படிக்கும் போது தங்களுக்கு பழக்கப்பட்ட சொற்கள் வருவதையே விரும்புவர். இல்லையெனில் மொழி நடை அன்னியப்பட்டு விடும், யாரும் த.வியை நாடமாட்டார்கள். கலைச்சொல்லை மாற்ற வேண்டியது தமிழக அரசு மற்று இலங்கை அரசுகளின் வேலை. கலைக்களஞ்சியத்தின் பணி வழக்கில் உள்ளவற்றை பயன்படுத்துதல். பொதுவழக்கு மாறும் போது இங்கு மாற்றம் தானாக நிகழும். திடீரென்று கலைக்களஞ்சிய வழக்கு என்று ஒன்றை உருவாக்குவது சரியல்ல, கலைக்களஞ்சியத்துக்காக யாரும் பாடவழக்கை மாற்ற போவதில்லை. வழக்கில் இல்லையெனில் புதுச்சொல்லாக்கம் தவறில்லை, அதே சமயம் காலம் காலமாக பயன் படுத்தி வரும் வழக்கை(உலோகம்) மாற்றுவது சரியல்ல. உலோகம் தமிழாகவே அறியப்படும் நிலையில் அதை மாற்ற வேண்டிய அவசியெமென்ன. இப்படி அனைத்துச் சொற்களுக்கும் வடமொழி மூலத்தை ஆராய்ந்து நீக்குவதும் சரியல்ல.
இலங்கை வழக்கு மற்றும் தமிழ் வழக்கை மாறி மாறி அடைப்புக்குறிக்குள் தரலாம்.
|
வினோத் 16:35, 3 ஜனவரி 2008 (UTC)
வினோத், தமிழ்நாடு பாடநூல்களின் 11 ஆவது வகுப்பு கணிதவியல், 6 ஆவது அதிகாரத்தைப் பார்க்கவும். இவ்விணைப்பைப் பாருங்கள். நீங்கள் எழுப்பியிருந்த கேள்விகளுக்கு விளக்கமாக மறுமொழி தந்துள்ளேன். பாட வழக்கு, இதழ்கள் வழக்கு, வலைப்பதிவுகள் வழக்கு, அகராதிக் குறிப்புகள் வழக்கு, கலைக்களஞ்சிய ஆட்சிகள் என்றெல்லாம் பார்ப்பது நல்லதே. ஆனால் இன்றைய நிலையில் இறுக்கமான கொள்கை வைப்பது கடினம். மேலும் கலைக்களஞ்சியம் என்பது பாடநூலும் அல்ல. மொழிநடை அன்னியமாகின்றதா, அல்லது விளக்கம் பெற்று நெருக்கம் அடைகின்றதா என்பதைக் காலம் சொல்லும். நீங்கள் "வடமொழி மூலத்தை ஆராய்ந்து நீக்குவதும் சரியல்ல" கூறுவது நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டாதால். தமிழில் விளங்கும், வேர்கொள்ளும், விரிவடையும், வலுவூட்டும், என்றெல்லாம் தேர்ந்தே சொற்களை ஆள்கிறேன். நான் கேட்டிருந்த கேள்விகள் ஒன்றுக்கேனும் மறுமொழி தந்தீர்களா? உஷ்ணம் என்னும் சொல், திரவம் என்னும் சொல் வடமொழி என்பதால் கையாளாமல் இல்லை. வெப்பம், நீர்மம் என்னும் சொற்கள் இயல்பான தமிழ் சொற்கள் என்பதாலும், பல்வேறு வகையில பொருள் வலுவூட்டும் சொற்கள் என்பதாலும் நான் ஆள்கிறேன். புதிய சொற்கள் நுழைவதும் பழைய சொற்கள் அல்லது பொருத்தம் குறைந்த சொற்கள் விலகுவதும் இயற்கையே. எலெக்ட்ரான் என்பதை விட எதிர்மின்னி என்னும் சொல் பொருள் உணர்த்துவது. எலக்ட்ரான் என்பதை ஆங்கிலம் என்பதால் விலக்க வில்லை. எலக்ட்ரான் என்னும் சொல் கட்டாயம் முதல் பத்தியில் தருவது மட்டுமல்லாமல், கட்டுரையிலும் ஆங்காங்கே எடுத்தாளவேண்டிய அறிவியல் கலைச்சொல். ஆனால் மின்னியல், எதிர்மின்னி, எதிர்மின்மம் போன்ற சொற்கள் ஆள்வதை எதிர்ப்பதால் என்ன பயன். கம்ப்யூட்டர் என்னும் சொல்லும் ஆளலாம், கணினி என்னும் சொல்லும் ஆளலாம். முன்னர் கணினி என்னும் சொல்லுக்கு எத்தனை எதிர்ப்பும் இளக்காரமும் இருந்ததென்பதை நான் நன்கு அறிவேன். த்லைக்காட்சியை இன்றும் டெலிவிசன் என்றுதான் கூறவேண்டும் என்று சொல்வோரும் உள்ளனர். நல்ல பொருளூறும் சொற்கள் நம் சிந்தனையை வளர்க்கும். சற்று திறந்த மனப்பான்மை வேண்டும். தமிழ் என்றாலே கசப்புடனும், சமசுகிருதம், ஆங்கிலம், செருமானிய மொழி என்றாலே இனிப்புடனும் நோக்கினால் என்ன செய்வது? நீங்கள் அப்படி செய்கிறீர்கள் என்று சொல்லவில்லை, பொதுவாக தமிழர்களிடையே சிலருக்கு உள்ள தாழ்வு மனப்பான்மையையும், தமிழ்நலம் போற்றாதவர்களுடைய மனப்போக்கையும் கூறுகிறேன். தமிழர்கள் இன்னும் நெடுங்காலம் குறைந்தது இருமொழி அறிமுகம் கொண்டவர்களாக இருப்பார்கள் (வருங்காலத்தில் சீன மொழி அறிமுகம் கொண்டவர்களாக இருக்கலாம்). தமிழ்ச் சொற்களை ஆள்வதால், தமிழ் நடை செப்பம் அடையுமே தவிர அன்னியப்படாது. கவலை கொள்ளத் தேவை இல்லை.--செல்வா 17:32, 3 ஜனவரி 2008 (UTC)
அந்த இணைய தளத்தில் ஹைதர் காலத்து பாடபுத்தகங்களை பதிவேற்றம் செய்துள்ளனரோ என்னவோ. எனது அம்மா தமிழ் வழிய ஆசிரியை தான், இத்தனைக்கும் தமிழ் வழியத்தில் படித்தவர்.எனக்கு டிரிக்னாமெட்ரி சொல்லித்தரும்போது கூட முக்கோணவியல் என்று தாம் படித்ததாக கூறியதாக நினைவு. அவர்களிடத்தின் இருந்த 10ஆம் வகுப்பு புத்தகத்தில் இவ்வாறே இருந்தது, நான் அதை பார்த்த பிறகு தான் இங்கே எழுதினேன். நான் உங்களது சொல்லாட்சியை குறை கூறவில்லை. மாழை, வளிமம் போன்ற சொல்லாட்சிகள் மிகவும் நன்றாக உள்ளன அவற்றில் ஐயம் ஏதும் இல்லை. புதுச்சொல்லாட்சிகளை நான் தவறென்று கூறவில்லை. நான் கூறுவது என்னவெனில் பாடநூல் வழக்கை முன்னிலைப்படுத்தி புதுவழக்கை துணைவழக்காக அடைப்புக்குறிக்குள் தரலாம் என்பது தான். புதுவழக்குக்கு ஒரு முன்னுரை மட்டும் விக்கிபீடியாவில் போதுமானது. துணைவழக்கு முதன்மை வழக்காகும் போது மாற்றம் இங்கு தானாக நிகழும். ஒரு வழக்கை முதண்மை படுத்தும் கருவியாக விக்கிபீடியாவை பயன்படுத்தல் ஆகாது என்பதே எனது தனிப்பட்ட கருத்து. வழக்கை முதன்மை படுத்த வேண்டின் பேச்சுப்பக்கங்களில் ஆளலாம், நமது சொந்த வழக்கில் மாற்றிக்கொள்ளலாம், நாம் எழுதும் வலைத்தளங்களில் மாற்றிக்கொள்ளலாம். இவ்வாறு முதண்மை படுத்தப்பட்டு அது பலரால் ஏற்றுக்கொள்ளப்படும் நிலையில் மாற்றங்கள் இங்கு தன்னியக்கமாக நடைபெறும், நாம் அதை வலுக்கட்டாயமாக திணிக்க தேவையில்லை. அது எந்த மொழிச்சொல்லாயினும் ஒரு வழக்கு ஒருவருக்கு மிகவும் பழக்கப்பட்ட நிலையில், அதுவும் பாடநூல் வழக்கை மாணாக்கள்களால் மாற்றிக்கொள்ள இயலாத நிலையில், அதை மாற்றி இன்னொரு வழக்கை முதன்மை படுத்துவது சரியல்ல. மேலதிக தகவகலுக்காக ஒரு மாணவர் நியூடிரான் குறித்த கட்டுரையை இங்கு கண்டு நொதுமி என தப்பித்தவறி கையாள்கிறார் என வைத்துக்கொள்ளலாம், இந்த பயன்பாட்டை ஆசிரியர்கள் ஒப்புக்கொள்வார்களா ? ஒரு காற்புள்ளி, அரைபுள்ளி விடுவதையே பிழையாக கருதும் ஆசிரியர்கள் இருக்க புதுச்சொல்லாக்கத்தை ஏற்றுக்கொள்ளும் ஆசிரியர்களை காண்பது மிக அரிது. எனவே தான் பாடநூல் வழக்கை முன்னிலை படுத்த வேண்டும், புதுச்சொல்லாக்கத்தை முன்னுரையில் அடைப்புக்குறிக்குள் தந்தால் போதுமானது.
|
வினோத் 18:29, 3 ஜனவரி 2008 (UTC)
வினோத், உங்கள் கருத்துக்கள், கவலைகளை நானும் இதற்கு முன்னர் சில இடங்களில் பகிர்ந்து இருக்கிறேன். எனினும், இது விசயத்தில் பொத்தாம் பொதுவாக கொள்கை முடிவு எடுப்பது சரியாக இருக்காது என்று தோன்றுகிறது. case by caseஆக பார்ப்பதே நல்ல அணுகுமுறையாக இருக்கும் என்று தோன்றுகிறது.--ரவி 19:25, 3 ஜனவரி 2008 (UTC)
வினோத், நீங்கள் கூறுவதை நான் நன்கு அறிவேன். மாணவர்கள் பாடநூல்களில் இல்லாதவற்றை விடையென எதிர்பார்க்கப்படுவதை விட்டு விட்டுவிட்டு வேறொன்றை எழுதினால் (அது சரியான கருத்தாக, சமன்பாடாக இருப்பினும்), நம் நாட்டுக் கல்விச் சூழலில், ஏற்றுக்கொள்ளப்படாமல் இருக்கும் என்பதை அறிவேன். இது மாணவர்களின் பாடநூல் அல்ல. அவர்கள் (மற்றும் மற்றவர்களுடைய) கருத்தை/அறிவை வளர்ப்பதற்கு ஒரு துணைக்கருவியாய் இருப்பதே. என் கருத்து என்னெவென்றால், கலைச்சொற்களைப் பொருத்த அளவிலே, இன்றைய சூழ்நிலையில், எது சரியான சொல்லோ அதனை முதன்மைப் படுத்தி, மற்ற சொற்களுக்கு வழிமாற்று தந்தும், இடையிடையே மாற்றுச் சொல்லாக வழங்கியும் வரலாம். உலோகம் என்னும் சொல்தான் தலைப்பில் உள்ளது. நான் மாற்றவில்லை. ஆனால் கருத்தளவில் என் பரிந்துரை என்னெவென்றால் மாழை என்றே கட்டுரை இருக்கலாம், அதனுள் உலோகம் என்று குறித்தும், வழிமாற்றுகள் தந்தும் உதவலாம். ஓர் அச்சு கலைக்களஞ்சியமாக இருந்தால், மாற்றுச் சொல்லை இட்டு, இங்கே போய் பார்க்கவும் என்று கூறுவர். அதனை மீசுட்டு (hypertext) வசதி உள்ள மின்மதிப்பில் இன்னும் எளிதாகச் செய்ய இயலுகின்றது. எலக்ட்ரான் போன்ற சொற்களையும் ரேடார் போன்ற சொற்களையும் இடையிடையே வழங்கியும் வரலாம். இதில் ஒரு சிறு சிக்கல் என்னவென்றால் எலக்ட்ரான் என்பதை இலங்கைத் தமிழர்கள் இலத்திரன் என்று வழங்குகின்றார்கள் எனவே பல சொற்கள் (எலக்ட்ரான், இலத்திரன், மின்னணு, எதிர்மின்னி) வழங்கும் நிலை எழுகின்றது. மின்னணு என்பது தவறான சொல்லாட்சி. மின்னணு என்பது ion. இந்தத் தவறான சொல்லாட்சி நுழையும் முன்னமே எதிர்மின்னி என்னும் சரியான சொல்லாட்சி பதிவு பெற்றது. இப்படி நிகழ்வது தமிழ் உலகில் ஒரு வருந்ததக்க நிலை. அதே போல மின்மம் என்பதற்கும் மின்னூட்டம், மின்னூட்டு, மின்னேற்பு, மின்சுமை என்று பல சொற்கள் ஆளப்பட்டுள்ளன (பல பாடப்புத்தகங்களில்). ஆனால் மின் --> மின்மம் எளிதானது. (மின்சுமை என்பது டாய்ட்ச் மொழிச் சொல்லாகிய Elektrische Ladung, ஆங்கிலச் சொல்லாகிய Electric Charge என்பதை அடிப்படையாகக் கொண்டு சொல்லுக்குச்சொல் பெயர்த்தது (அப்படிச் செய்வது தவறில்லை). Electrical load என்பதுடன் குழப்பம் தருவது. இச்சொற்கள் யாவுமே தமிழ்ச்சொற்கள்தாம், எனினும் பொருத்தம் அறிந்து சொற்களை முதன்மைப்படுத்த வேண்டும். தமிழ்ச்சூழலில் இன்னமும் சொற்கள் சீர்தரம் பெறவில்லை. மேலும் ஆங்கிலத்திலும் பிறமொழிகளிலும் கூட கலைச்சொற்கள் துறையில் இன்றும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன (விரித்தால் பெருகும்). அது இயல்புதான். areogramme போய் aerogram ஆகி Air mail ஆகி இன்று Air Letter ஆகிவிட்டது (சில ஆங்கிலம் வழங்கு நிலங்களிலாவது). இதெல்லாம் இயல்புதான். நல்ல பொருத்தமான கலைச்சொற்களை ஆள்வோம் (பிற சொற்களை இணைத்தும் பிணைத்து, இடையிடையே வழங்கியும் வருவோம்). காலம் உறுதி செய்யட்டும். மின்பதிவில் எளிதாக திருத்தங்கள் செய்ய இயலும் (இடர்ப்பாடுகளையும் அறிவேன்). செல்வா 19:29, 3 ஜனவரி 2008 (UTC) --செல்வா 19:29, 3 ஜனவரி 2008 (UTC)
வினோத்தின் கருத்துக்களில் நியாயம் உண்டு. எனக்கும் மாழை போன்ற சொற்களைப் பயன்படுத்துவதில் தயக்கம் உண்டு. ஆனாலும் பொதுவாகக் கொள்கை அடிப்படையில் செல்வாவின் கருத்துக்களே எனது கருத்தும். தமிழ்ச் சொற்களின் வலைப்பின்னலுக்குள் அடங்காமல் தீவுகள் போல் இருக்கும் பிற மொழிச் சொற்கள் தமிழ் வளர்ச்சிக்கு நன்மை தராது. கலைச்சொற்கள் தமிழில் இருப்பதுடன் தமிழிலுள்ள சொல்லாக்க விதிகளுக்கு இணக்கம் உடையனவாகவும் இருத்தல் வேண்டும். அப்பொழுதுதான் தேவைக்கு ஏற்றபடி புதிய புதிய சொற்கள் இலகுவில் உருவாகும். எனினும் நீண்டகாலம் தமிழில் நிலைபெற்றுவிட்ட சொற்களுக்குப் புதிய சொற்கள் உருவாக்குவது குழப்பத்தை உருவாக்கும். எனவே ரவி குறிப்பிட்டதுபோலப் பொதுவாக எந்தமுடிவும் எடுக்க முயலாமல். ஒவ்வொரு விடயத்தையும் தனித்தனியாகக் கருத்தில் எடுத்து முடிவு செய்வதுதான் நல்லது. மயூரநாதன் 20:24, 3 ஜனவரி 2008 (UTC)
தமிழாக்கம் குறித்த விமர்சனம்
தொகுபார்க்க - http://maiya.neerottam.com/2007/11/02/relapse/ . வேர்ட்ப்ரெஸ் தமிழாக்கத்தின் போதும் "புகுபதிகை" போன்ற சொற்களுக்குப் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. நல்ல தமிழ், அதே வேளை, பாமர மக்களை மிரட்டாத தமிழ் - இவை இரண்டுக்கும் இடையில் ஒரு நடு நடை குறித்து நாம் யோசிக்க வேண்டும். பாமர மக்களை மிரட்டாத தமிழ் தான் நல்ல தமிழ் என்று சொல்லலாம். நல்ல தமிழ் என்றுமே பாரம மக்களை மிரட்டாது என்றும் சொல்லலாம் :) --ரவி 15:36, 6 ஜனவரி 2008 (UTC)
- பார்த்தேன், ரவி. இணைப்பு கொடுத்தமைக்கு நன்றி. ஆங்கிலத்தில் உள்ளதை ஆங்கிலேயர்களிலேயே பலரும் புரிந்துகொள்வதில்லை :) இது பற்றி ஏராளமான நகைத்துணுக்குகள் உண்டு (நகைச்சாத்து உண்டு). "அதில் என்ன இருக்கிறது" என்றால் மலைத்து விடுவோர் உள்ளனர். "அதுல இன்னா இருக்கு" என்றால் "..ஆங்.. இப்ப புரியுது :) என்பார்கள். Abugida என்றால் "வாலை மடக்கிக்கொண்டு" கேட்டுக்கொள்வார்கள், அது என்ன என்று முயன்று கண்டுபிடிப்பார்கள், பின்னர் எல்லோரையும் "அசத்தி"க்கொண்டிருப்பார்கள். ஆனால் தமிழில் உயிர்மெய் எழுத்து முறை என்றால் மிரளுவார்கள், வேண்டாம் என்பார்கள், புரியவில்லை என்பார்கள். எளிய தமிழ் பாமர மக்களுக்குக் புரியும் தமிழே நல்ல தமிழ்தான். எழுதும் பொழுது, பொதுப் பயன்பாட்டைக் கருதி, இடத்துக்கு இடம் மாறுபடும் பேச்ச்சுத்தமிழ் வடிவத்தை செப்பமுறுத்தி எழுத வேண்டியுள்ளது (செப்பம் செய்து, சரி செய்து என்றும் கூறலாம்). தமிழ் வழங்க சூழல்கள் மிக மிகக் குறைவாக இருப்பதால் (கல்வி, கோயில் வழிபாடு, குடும்ப நிகழ்வுகளில் சடங்குகள், இசை அரங்குகள், சட்டம், அரசாட்சி, தொழில்/நிறுவன நடப்புகள் என்று இன்ன பிற இடங்களில் தமிழ் வழங்காததால்), பற்பல இடர்ப்பாடுகள் எழுகின்றன, தமிழறிவு சரிந்து கொண்டே போகின்றது (அண்மையில் சில கோணங்களில் தமிழ் வளர்வது போல் தோற்றம் தந்தாலும் உண்மையில் வளர்ந்தே இருந்தாலும், உண்மையில், தமிழர் தம் மொழியாட்சியில் தளர்ந்து, தேய்ந்தே உள்ளனர், சரிந்தே வருகின்றனர். நடையைப் பொறுத்த அளவிலே, நீங்கள் குறிப்பிட்டதுபோல இரண்டிற்கும் இடைப்பட்ட ஒரு நடுநடை நல்லதாக இருக்கும். "நாம மிடில் ஸ்டைல்ல எழுதலாங்க" (நாம மிடில் ஸ்டைல்ல ரைட் பண்றது தப்பு, ஆனா மிடில் ஸ்டைல்ல எழுதலாம்). :)
--செல்வா 16:33, 6 ஜனவரி 2008 (UTC)
மணற்தொட்டி
தொகுமணற்தொட்டி, மணற்பெட்டி எல்லாம் sandbox என்பது எல்லாம் நேரடி மொழிபெயர்ப்பு என்று பலரும் தொடர்ந்து இடித்துரைத்து வருகிறார்கள் !! தமிழ்ப் பண்பாட்டில் உண்மையிலேயே மணற்பெட்டி போன்ற பயன்பாடுகள் இருந்துள்ளனவா? sandboxக்கு பயிற்சிக்களம் போன்ற சொற்களை ஆளலாமா?--ரவி 15:40, 6 ஜனவரி 2008 (UTC)
- மணல்தொட்டி என்பது தமிழிலும் நன்றாகவே எனக்குப் படுகின்றது. மணலில் விளையாடுவது தமிழர்களுக்குப் புதிதல்ல. குழந்தைகள் மணலில் விளையாடுவது பற்றியும் சிற்றில் கட்டி விளையாடுவது பற்றியும் தமிழில் உண்டு. வீடுகளில் தனியாக தொட்டி கட்டி மணல்தொட்டி என்று கூறி அதில் விளையாடும் பழக்கம் இல்லை. அகர வரிசை படித்து கற்பது கூட சில பத்தாண்டுகளுக்கு முன்னர் வரையிலும் மணலில் எழுதி, அழித்துத்தான் கற்பர். Sandbox என்பதின் நேரடி மொழிபெயர்ப்பு என்பது உண்மை ஆனால் அது தமிழ்வழியும் நிறைபொருள் தருவது. ஏதொன்றையும் பயன்படுத்தத் தொடங்கினால்தான் அதன் நன்மை தீமை தெரியும். இதனைவிட சிறந்த சொல்லாட்சிகள் தோன்றும்பொழுது அது தானே வழக்கூன்றும். "விமர்சனம்", மறுபார்வை, திறனாய்வு, திறன்தேர்வு, மதிப்பிடுதல், குறைநிறை பார்த்தல் எல்லாமும் நல்லது. ஆனால், அவை எல்லாமும் சரியென்று நினைப்பது தவறாக முடியலாம். கூடிய அளவு மணல்தொட்டி, மணல்பெட்டி என்று பிரித்தே எழுதுவது நல்லது (இன்றைய சூழலில். புண்ர்ச்சி விதிகளுடன் ஏற்பதில் இலங்கைத் தமிழர்கள் முன்னணியில் இருக்கின்றார்கள் என நினைக்கிறேன். தமிழகத் தமிழர்கள் அப்படி இல்லை. என் கணிப்பு தவறானதாயின் திருத்தவும்). மணல் தொட்டி வேண்டாம் எனில் பயில்பெட்டி, பயிற்சிப்பெட்டி, பயிற்சிக்களம் போன்றவற்றை ஆளலாம். தமிங்கிலமாக டிரையல் பெட்டி என்று பரிந்துரைப்பவர்களும் இருப்பர். அவர்களைப்பொறுத்த அளவிலே அதுவே "பாமர"த் தமிழ் :)--செல்வா 16:49, 6 ஜனவரி 2008 (UTC)
- ரவி, நீங்கள் கொடுத்திருக்கும் இணைப்பில் உள்ள கட்டுரையை வாசித்தேன். யார் எழுதியது என்று தெரியவில்லை. அது பிரச்சினை இல்லை. இன்று புதிது புதிதாக அறிமுகப்படுத்தப்படும் கருத்துருக்களுக்கு எல்லாம் தெரிந்த, அறிமுகமான சொற்களையே பயன்படுத்த வேண்டும் என்று யாராவது நினைத்தால் அது சிரிப்புக்கு இடமானது. பலுக்கல், மணற்பெட்டி, புகுபதிகை என்பன தமிழ் இணைய மென்பொருளுக்குப் பயன்படாத சொற்களாக அடையாளம் கண்டிருக்கும் கட்டுரையாசிரியர், அவர் எழுதும் தளத்தில் உள்ள எபவுட், காப்பரேட் மொழிபெயர்ப்பு போன்றவற்றைத்தான் இணையத்துக்கு ஏற்ற தமிழ் என்கிறாரா என்று தெரியவில்லை. உள்ளூர்மயமாக்கம் என்னும் சொல்லை தயக்கத்துடன் கையாண்டிருக்கும் கட்டுரையில் செல்ஃப் கன்ஃபெஸ்டு போன்ற சொற்கள் அநாயாசமாகக் கையாளப்பட்டுள்ளன. நகைச்சுவைக்காக இக் கட்டுரை எழுதியிருப்பதுபோல் தெரிவதால் இதுபற்றி அதிகம் எழுத நான் விரும்பவில்லை. மற்றவர்கள் மீது குறைகூறுபவர்கள் தாங்கள் முன்னுதாரணமாக இருக்கப் பார்க்கவேண்டும். அது பிழை, இது பிழை என்று கூறிக்கொண்டிராமல் சரியானது எது என்பதை அவர்கள் காட்ட முன்வரலாம்.
- ரவி, இவ்வாறான கருத்துக்களுக்கு எல்லாம் செவிசாய்த்துக் கொண்டிருந்தால் உருப்படியான வேலைகள் எதுவும் செய்யமுடியாது. நியாயமான விமர்சனங்களுக்குத் தலைவணங்கலாம், விசமத்தனமான குற்றச்சாட்டுகளுக்கு அல்ல. மயூரநாதன் 16:52, 6 ஜனவரி 2008 (UTC)
//இன்றைய சூழலில். புண்ர்ச்சி விதிகளுடன் ஏற்பதில் இலங்கைத் தமிழர்கள் முன்னணியில் இருக்கின்றார்கள் என நினைக்கிறேன். தமிழகத் தமிழர்கள் அப்படி இல்லை. என் கணிப்பு தவறானதாயின் திருத்தவும்//
ஆம். அதன் தாக்கத்தினால் விக்கிபீடியாவிலேயே சொல் புணர்ச்சிகள் அனைத்தும் கொஞ்சம் Archaic ஆக உள்ளன. முதற் பக்கம் என்பதை விட முதல் பக்கம் என்பது நன்றாக இருக்கும் :-). செயல்+திட்டம் --> செயற்றிட்டம்; போன்ற பயன்பாடுகளை இங்கு தான் நான் முதன் முதலில் காண்கிறேன். கூடியமட்டும் இயல்பு புணர்ச்சியை ஆளலாம். எழுத்துக்களை இப்படி விகாரப்படுத்துவதால் என்ன இலாபம் என்று எனக்கு புரியவில்லை. இயல்பு புணர்ச்சியை பிரயோகித்தாலே நடையில் ஒரு எளிமை வந்து விடும் என்பது எனது கருத்து.
|
வினோத் 17:01, 6 ஜனவரி 2008 (UTC)
- மணற்தொட்டி என்பது ஒரு குறியீட்டுப் பெயரே. அது ஒரு கலைச்சொல் அல்ல. இது பற்றி அதிகம் அலட்டிக்கொள்ள வேண்டியது இல்லை. கரும்பலகை, வெண்கட்டி (சாக்பீஸ்), வெள்ளைச் சுவர் போன்று ஏதாவதொரு பெயரைக்கூட வைத்துக்கொள்ளலாம். எந்தப் பிரச்சினையும் இருக்காது. ஆனாலும் அவர் சொல்கிறார், இவர் சொல்கிறார் என்பதற்காக மாற்றங்களைச் செய்துகொண்டிருப்பது சரியாக எனக்குத் தெரியவில்லை. மயூரநாதன் 17:09, 6 ஜனவரி 2008 (UTC)
மயூரனாதன், செல்வா - மணற்தொட்டி, புகுபதிகை போன்ற சொற்களை முன்வைத்தும் பொதுவாகவும் தமிழ் விக்கிபீடியா நடை குறித்து நேரிலும் மடல்களிலும் இணையத்திலும் பலரும் குறிப்பிட்டுருக்கிறார்கள். ஒரு எடுத்துக்காட்டுக்காவே அந்த வலைப்பதிவு இணைப்பைக் கொடுத்தேன். ஒவ்வொரு விமர்சனத்துக்குத் தகுந்தவாறும் நாம் நம்மை மாற்றிக் கொள்ள இயலாது. ஆனால், விமர்சனம் சரியோ தவறோ, நம் மீது உள்ள விமர்சனங்கள் குறித்து நாம் அறிந்திருத்தல் நலம் என்ற வகையிலே அவ்விணைப்பைத் தந்தேன். நன்றி
வினோத், செயற்றிட்டம் போன்ற சொற் புணர்ச்சிகளை நாம் கூடுதலாகப் பார்த்திருக்காததால் வேறுபட்டுத் தெரிகிறது. ஆனால், இது போன்ற புணர்ச்சிகளைப் பேச்சு வழக்கில் கூட வேறு இடங்களில் பயன்படுத்துகிறோம் என்று நினைக்கிறேன். கற்றாழை என்பது கல்+தாழை என்று புரிந்து கொண்டிருக்கிறேன். பேச்சு வழக்கில் கற்றாழை கத்தாழை ஆகி விடுகிறது.சொல் புணர்ச்சி என்று உச்சரிப்பதை விட சொற் புணர்ச்சி என்பதை உச்சரிப்பது எனக்கு வேகம் கூடியதாகவும் இலகுவாகவும் இருக்கிறது !! சொற்புணர்ச்சி விதிகள் எழுத்து வழக்குக்காக மட்டும் தோன்றியதாக நினைக்கவில்லை. பேச்சு வழக்கிலும் அவற்றுக்கு கூடிய சாதகம் இருப்பதாலேயே தோன்றி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இது குறித்து அறிந்தவர்கள், புரிந்தவர்கள் மேலும் விரித்துக் கூறினால் நன்றாக இருக்கும்--ரவி 17:25, 6 ஜனவரி 2008 (UTC) --ரவி 17:25, 6 ஜனவரி 2008 (UTC)
- சொற்புணர்ச்சிகள் எல்லா மொழிகளிலும் உண்டு, ஆனால் தமிழில் நுட்பமாய் ஆய்ந்து அவற்றை வகைப்படுத்தி விதி வகுத்துள்ளார்கள். தமிழர்களின் ஒலிநுட்ப அறிவும், எழுத்துத் தேர்வும், சொற்தேர்வும் ஏதும் தற்செயலாய் நேர்ந்ததல்ல, அவை தேர்வுகள், உண்மை இயல்பறிந்து வகுத்த செப்பம்மிக்கத் தேர்வுகள். மொழி உலகில் முன்னோடி மொழிகளில் ஒன்று தமிழ். உண்மை அறியாமல் அவரவர் தம் போக்கில் தமிழை இழித்தும் பழித்தும் வருகின்றனர். அதுமட்டுமல்ல, பற்பல கொச்சை வழக்கும், செந்தமிழின் அடிப்படையில் இருந்தே வந்துள்ளது என்பதற்கு பல அடிச்சான்றுகள் உள்ளன. --செல்வா 18:11, 6 ஜனவரி 2008 (UTC)
- சொற்புணர்ச்சி விதிகளை பின்பற்றா விடின் பொருள் வேறுபடலாம், உச்சரிப்பும் சிரமமாக இருக்கும். வாசிக்கும் பொழுது விட்டு விட்டு தெரியும். சீன, ஆங்கில மொழிகள் போல் அல்லாமல் தமிழ் சொற்புணர்ச்சி மிகுந்த மொழி. தொடக்கத்தில் எனக்கும் புணர்ச்சி விதிகளை பின்பற்றுவது சிரமாகவே இருந்தது. விக்கியில் எழுதத் தொடங்கிய பின், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருக்கின்றது. --Natkeeran 01:03, 7 ஜனவரி 2008 (UTC)
- நான் படித்த வரைக்கும் தொல்காப்பியத்தின் படி வல்லின மெய்கள் சொற்களின் ஈற்றில் வரக்கூடாது(இந்த கூற்று தவறாகவும் இருக்கலாம். அப்படியிருப்பின் மன்னிக்கவும்). முதற்பக்கம் என எழுதாலாம், ஆனால் முதற் பக்கம் என எழுதுவது தவறென நினைக்கிறேன்(சொல்லின் ஈற்றில் றகர ஒற்று வ்ருவதால்). எனவே முதல் பக்கம் என்றே இருத்தல் வேண்டும். தவறிருப்பின் திருத்தவும்.
- ல்-ற், ள்-ட் அனைவருக்கும் அறிந்தது. அதே நேரத்தில் மிகுந்த விகாரமடையும் புணர்ச்சிகளை தவிர்க்கலாம்( யாரும் அவ்வளவாக பின்பற்றாத த்-ற் போன்றவை செய்யாமையாற்றான் - செய்யாமையால் தான்) அதுவே எனது தாழ்மையான கருத்து.
- முதற்பக்கம் என்று எழுதினால் சரிதான். எனினும் முதற் பக்கம் என நிலைமொழியும் வருமொழியும் புணராத நிலையில் புணர்ச்சியை பயன்படுத்துவது தவிர்க்கப்படலாம. எனது தனிப்பட்ட கருத்தென்னவெனில் முதற் பக்கம் என வருவது சிறிது கடுமையாக தோன்றுகிறது. இதற்கு பதில் முதல் பக்கம் என்று பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்
வினோத் 17:45, 7 ஜனவரி 2008 (UTC)
- முதற்பக்கம் என்று எழுதினால் சரிதான். எனினும் முதற் பக்கம் என நிலைமொழியும் வருமொழியும் புணராத நிலையில் புணர்ச்சியை பயன்படுத்துவது தவிர்க்கப்படலாம. எனது தனிப்பட்ட கருத்தென்னவெனில் முதற் பக்கம் என வருவது சிறிது கடுமையாக தோன்றுகிறது. இதற்கு பதில் முதல் பக்கம் என்று பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்
அனைவருக்கும் உடன்பாடு என்றால் முதற் பக்கம் என்றிருப்பது பதில் முதற்பக்கம் என்ற பக்கத்துக்கு நகர்த்தலாம். வினோத், நீங்கள் கூறுவது போல் புணரும் சொற்களைச் சேர்த்து எழுதாமல் தனித்து எழுதுவது உறுத்தலாகத் தான் இருக்கிறது.--ரவி 19:55, 7 ஜனவரி 2008 (UTC)
- முதற்பக்கம்.
- எளிமையாக முதல் பக்கம் என்று இருக்கலாம். அல்லது முதற்பக்கம் என்று இருக்கலாம். ஆனால் பக்கத்தின் பெயர் இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்பதல்ல. [எசுப்பானிய மொழி]யின் தலைப்புப் பக்கத்தை பாருங்கள். [பிரான்சே (பிரெஞ்ச்) மொழி] தலைப்பு பக்கத்தைப் பாருங்கள். வலைப்பக்கத்தின் பெயர் எதுவாக இருப்பினும், வலைப்பக்கத்தின் நுழைவாயிலில் "விக்கிப்பீடியாவுக்கு நல்வரவு" அல்லது அதுபோல் ஏதாவதொரு வரவேற்புத் தொடரை பெரிய எழுத்தில் அழகாக இருக்குமாறு இருத்தல் நன்றாக இருக்கும். இப்பொழுது இருப்பது போல குட்டி எழுத்துக்களில் நீளமான கட்டத்திற்குள் இருப்பது எடுப்பாக இல்லை என்பது என் கருத்து. எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று சிலர் இங்கு முன்வடிப்புகள் வடித்துக் காட்டி பயனர்களின் கருத்துக்களைக் கேட்கலாம். நானும் சில முன்மாதிரிகள் தந்து உங்கள் கருத்துக்களைக் கேட்கவேண்டும் என்று எண்ணியிருந்தேன். --செல்வா 20:35, 7 ஜனவரி 2008 (UTC)
விக்கிப்பீடியா பெயர் மாற்றம்
தொகுமயூரனாதன், தள இட மேல் மூலையில் உள்ள தமிழ் விக்கிப்பீடியா தள சின்னத்தில் விக்கிப்பீடியா என்று மாற்றம் செய்து பதிவேற்ற இயலுமா?
சுந்தர், டெரன்ஸ், வினோத், உமாபதி - உங்களில் எவரேனும் விக்கிபீடியா என்று நம் தளத்தில் சொல்லோ, உள்ளிணைப்போ வரும் இடங்களில் எல்லாம் விக்கிப்பீடியா என்று மாற்றுமாறு ஒரு தானியங்கி எழுத இயலுமா?
சுந்தர் - பெயர்வெளிகளில் இன்னும் wikipedia என்றே இருக்கிறது. அதை விக்கிப்பீடியா என்று மாற்றச் சொல்லி வழு அறிக்கை பதிய வேண்டும். அல்லது, ஏற்கனவே இருக்கிற வழு அறிக்கையை இற்றைப்படுத்த வேண்டும்.
இதை எல்லாம் செய்து முடித்த பின், பெயர் மாற்றம் குறித்து வலைப்பதிவில் அறிவிக்கும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன் :) --ரவி 19:55, 7 ஜனவரி 2008 (UTC)
- விக்கிப்பீடியாவின் சின்னத்தில் மாற்றம் செய்யும் பொழுது அந்த உருண்டையில் ஏதேனும் ஓர் எழுத்து தமிழ் எழுத்தாக இருக்கட்டும். தமிழுக்குச் சிறப்பான ழ் (ழகர ஒற்று) இருக்கலாம். அல்லது த, ம, க ஆகிய எழுத்துக்களில் ஒன்றாக இருக்கலாம். --செல்வா 21:09, 7 ஜனவரி 2008 (UTC)
சின்னம் அனைத்து உலக மொழிகளுக்கும் பொதுவான காப்புரிமை பெற்ற ஒன்று என்று என்பதால் அதைத் தமிழுக்காக மாற்ற முடியுமா என்று தெரியவில்லை--ரவி 22:52, 7 ஜனவரி 2008 (UTC)
- தற்போதுள்ள சின்னத்தில் சில எழுத்துக்கள் தவறாக உள்ளபடியால் (குறிப்பாக இந்தியில்) ஆ.விக்கியில் டேக்சுமேன் அதை மாற்றும்படி விண்ணப்பித்துள்ளார். நமது கணேசும் ஒரு தவறைச் சுட்டியுள்ளார். இம்மாற்றம் நிகழும்போது தமிழைக் கொணர முடியுமா எனப் பார்ப்போம். வாய்ப்பு மிகக் குறைவு. மற்றபடி விரைவில் வழுவை இற்றைப்படுத்துகிறேன். தானியங்கி அல்லது தானுலவியைப் (AWB) பயன்படுத்தலாம். தானுலவியை நான் பயன்படுத்தியதில்லை. டெரன்சு? உமாபதி? -- சுந்தர் \பேச்சு 03:15, 8 ஜனவரி 2008 (UTC)
- சுந்தர், தானூலாவியைப் பயன்படுத்த அழைத்து இணைதல் (டயல்-அப்) இணைப்பில் மூலம் முயன்றேன் இயலவில்லை. நாளை இரவு மீண்டும் முயற்சி செய்து பார்க்கின்றேன். எனக்கு இவ்வாறான வேலை செய்வதில் விருப்பமே ஆனால் அனுபவம் இல்லை. --உமாபதி \பேச்சு 19:01, 12 ஜனவரி 2008 (UTC)
விக்கியா தேடல்
தொகுhttp://alpha.search.wikia.com/ --ரவி 02:41, 8 ஜனவரி 2008 (UTC)
ரவி, அங்கே, எப்படி பயனர் கணக்கு உருவாக்குவது?--74.12.67.212 03:29, 12 ஜனவரி 2008 (UTC)
அந்தத் தளத்தின் உச்சியில் start an account, login என்று இணைப்புகள் இருக்கின்றனவே?--ரவி 15:35, 12 ஜனவரி 2008 (UTC)
பொங்கல் வாழத்துக்கள்
தொகுஊருக்குச் செல்வதால் இப்போதே கூறிவிடுகிறேன். அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழத்துக்கள். எனது பொங்கல் தானியங்கித் திட்டத்தை பணிமிகுதியால் செயல்படுத்த முடியவில்லை. :-( வந்து செய்கிறேன். -- சுந்தர் \பேச்சு 03:10, 12 ஜனவரி 2008 (UTC)
அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள். --உமாபதி \பேச்சு 15:01, 12 ஜனவரி 2008 (UTC)
நானும் என்னுடைய பொங்கல் (திருநாள்), மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்த்துக்கள் தவறு, வாழ்த்துகள் சரி என்று மு. கருணாநிதி ஒரு விழாவில் குறிப்பிட்டு இருக்கிறார்!--ரவி 15:35, 12 ஜனவரி 2008 (UTC)
எல்லோருக்கும் எனது பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள். மயூரநாதன் 18:06, 12 ஜனவரி 2008 (UTC)
எல்லோர் வாழ்விலும் இன்பமும் நலமும் மகிழ்ச்சியும் பொங்க நெஞ்சார வாழ்த்துகிறேன்! அன்புடன் செல்வா--செல்வா 17:53, 13 ஜனவரி 2008 (UTC)
எல்லோருக்கும் எனது இனிய தைப் பொங்கள் வாழ்த்துக்கள்.சாந்தியும் சமாதானமும் மலரும் ஆண்டாக அமையட்டும்.--டெரன்ஸ் \பேச்சு 03:29, 15 ஜனவரி 2008 (UTC)
விக்கிபீடியா -> விக்கிப்பீடியா பெயர் மாற்றத்தைப் பற்றி முதற்பக்கத்தில் அறிவித்தல் விடவும்
தொகுபெயர் மாற்றமா... இரண்டு பெயர்களும் ஒன்றையே நோக்கும்படி செய்ய முடியுமா? பெயர் மாற்றத்தைப் பற்றி ஒரு அறிவித்தல் விடவும். முதற்பக்கதில். --Natkeeran 02:01, 15 ஜனவரி 2008 (UTC)
நற்கீரன், ஆம் இரண்டு பெயர்களும் ஒன்றை நோக்குவதே இப்போதைக்கு நல்லதாகப் படுகின்றது ஏனெனில் இன்னமும் அதிகாரப்பூர்வமாக நாம் இதை மாற்றவில்லை. விக்கிபீடியாவை விக்கிப்பீடியாவாகப் போய் தானியங்கி பல உடைந்த இணைப்புக்களை உருவாக்கிவிட்டது. உடைந்த இணைப்புக்களை மீள்வழிநட்டத்தற் பக்கங்கள் ஊடாக ஓரளவு சரிசெய்துள்ளேன் ஏனையவற்றையும் இயன்றவரை முயற்சி செய்து பார்க்கின்றேன். --உமாபதி \பேச்சு 17:10, 15 ஜனவரி 2008 (UTC)
பெயர் மாற்றத்தில் வரலாறு பேண முடியாமல் போகலாம்
தொகுமேலும் எழக்கூடிய சிக்கல்களை சற்று ஆயவும். நிர்வாகிகள் கவனிக்க. நன்றி. --Natkeeran 02:14, 15 ஜனவரி 2008 (UTC)
தமிழா எ-கலப்பை
தொகுதமிழா எ-கலப்பை மென்பொருளை தானியங்கு முறையில் என்லைட் மென்பொருள் ஊடாக நிறுவக்கூடிய கூடிய Addon ஐ நேற்றிரவு உருவாக்கினேன். இதனால் விண்டோஸ் நிறுவும் பொழுதே இதை நிறுவிக்கோள்ளலாம். இதை உருவாக்கிய முகுந்தாஜின் அனுமதியளிக்கும் பட்சத்தில் பொதுவில் விட்டுவிடுகின்றேன். பரிசோதனை முடிவுகள் திருப்தி அளிக்கின்றன. --உமாபதி \பேச்சு 17:07, 15 ஜனவரி 2008 (UTC)
- நல்ல முயற்சி உமாபதி. -- சுந்தர் \பேச்சு 08:07, 31 ஜனவரி 2008 (UTC)
- நான் ஏற்கனவே முகுந்தராஜ் உடன் தொடர்பு கொண்டபோது டவல்டீசாப்ட் இடம் அனுமதி பெறுவதுதான் சிரமமாக இருக்கும் என்றார். ஏற்கனவே தமிழா எ-கலப்பை அனுமதி பெற்றுள்ளதால் இதற்காக மீண்டும் அனுமதிபெறவேண்டுமா என்பது எனக்கு விளங்கவில்லை. நான் முன்னர் பணிபுரிந்த அமைப்பில் முறைப்படி அனுமதிபெற்ற ஆர்க்வியூஜிஐஎஸ் 3.2 பய்னபடுத்தி பின்னர் 3.3 கிடைத்தபோது அதே அனுமதியினைப் பயன்படுத்தலாம் என்றார்கள். இங்கு என்ன பிரச்சினை என்பது விளங்கவில்லை. --உமாபதி \பேச்சு 16:41, 2 பெப்ரவரி 2008 (UTC)
- விண்டோஸ் லைவ் ஸ்கைடிரைவ் ஊடாகப் இணையத்தில் இருந்து பெற்று விண்டோஸ் நிறுவும் பொழுதே எகலப்பை ஐ நிறுவிக்கொள்ளலாம். இன்றுமுதல் பதிவிறக்கம் செய்யலாம். --உமாபதி \பேச்சு 10:24, 2 மார்ச் 2008 (UTC)
- நான் ஏற்கனவே முகுந்தராஜ் உடன் தொடர்பு கொண்டபோது டவல்டீசாப்ட் இடம் அனுமதி பெறுவதுதான் சிரமமாக இருக்கும் என்றார். ஏற்கனவே தமிழா எ-கலப்பை அனுமதி பெற்றுள்ளதால் இதற்காக மீண்டும் அனுமதிபெறவேண்டுமா என்பது எனக்கு விளங்கவில்லை. நான் முன்னர் பணிபுரிந்த அமைப்பில் முறைப்படி அனுமதிபெற்ற ஆர்க்வியூஜிஐஎஸ் 3.2 பய்னபடுத்தி பின்னர் 3.3 கிடைத்தபோது அதே அனுமதியினைப் பயன்படுத்தலாம் என்றார்கள். இங்கு என்ன பிரச்சினை என்பது விளங்கவில்லை. --உமாபதி \பேச்சு 16:41, 2 பெப்ரவரி 2008 (UTC)
தமிழ் புணர்ச்சி விதிகள்/சந்தி விதிகள்
தொகுஇவற்றைப்பற்றி யாராவது ஒரு கட்டுரையை எழுதினால் விக்கிபீடியருக்கும் ஏனையவருக்கும் உதவியாக இருக்கும். பல இடங்களில் ஐப்பாடு தோன்றுகிறது சில தலைப்புகளிலேயும் புணர்ச்சிப் பிழை இருப்பதாக தோன்றுகிறது. இலங்கை பாடசலைகளில் தரம் 8,9,10 தமிழ் கைநூலில் இது காணப்படலாம் (தமிழ் நாட்டில்???). யாராவது தொகுத்து எழுதினால் நன்றாக இருக்கும்.--டெரன்ஃச் \பேச்சு 09:59, 21 ஜனவரி 2008 (UTC)
- ஆம். செல்வா இப்போது வெளியூரில் உள்ளார். வந்தபின் கேட்போம். -- சுந்தர் \பேச்சு 08:10, 31 ஜனவரி 2008 (UTC)
- டெரன்ஸ், சுந்தர், நீங்கள் கூறுவது உண்மை. ஆனால் புணர்ச்சி விதிகள் பற்றி எழுத பெரியண்ணன் சந்திரசேகரர் அல்லது பயனர்:ஹரிகிருஷ்னன் சிறந்தவர்கள். அவர்கள் எழுதவில்லை என்றால், நான் கட்டாயம் எழுதுகிறேன். --செல்வா 14:55, 2 பெப்ரவரி 2008 (UTC)
இணையத்தில் மொழிகள்
தொகு- http://www.internetworldstats.com/stats7.htm -- சுந்தர் \பேச்சு 08:12, 31 ஜனவரி 2008 (UTC)
தமிழ் விக்கிப்பீடியா தேடல்
தொகுதமிழ் விக்கிப்பீடியாவில் மீடியாவிக்கி தேடல் வேலை செயவதில்லை என்பது அனைவரும் அறிந்த விஷயம். எனவே இதை நிவர்த்தி செய்ய ஆங்கில் விக்கிப்பீடியாவில் உள்ளது போல், கூகிள், யாஹூ, விண்டோஸ் லைவ் தேடல் என External தேடுபொறிகளின் இணைப்பைத் தரவேண்டும் என வேண்டுகிறேன். இதனால் பார்வையாளர்களின் இன்னல் ஓரளவுக்கு சரி செய்யப்பட்டுவிடும் என நினைக்கிறேன βινόδ வினோத் 08:58, 31 ஜனவரி 2008 (UTC)
- ஆம் வினேத் விக்கிபீடியாத் தேடல் வேலைசெய்தாலும் கூட அதற்கு மேலதிகமாக ஆகக்குறைந்தது யாஹூ! கூகிள் தேடுபொறியாவது இருக்கவேண்டும். மைக்ரோசாப்டின் டெக்நெட் கருத்தரங்கைத் தவிர நான் விண்டோஸ் லைவ் தேடலை யாரும் பயன்படுத்தியதைக் காணவில்லை உண்மையில் யாராவது பயன்படுத்துகின்றார்களா? --உமாபதி \பேச்சு 16:34, 2 பெப்ரவரி 2008 (UTC)
- விஸ்டாவின் Default தேடுபொறி விண்டோஸ் லைவ் தேடல் தான். எனவே விஸ்டாவை பயன்படுத்துவோர், தங்களை அறியாமல் அப்பாவித்தன்மாக இதை பயன்படுத்துபவர்களே அதிகம். யாரும் விருப்பப்பட்டு இதை பயன்படுத்துவது இல்லை என நினைக்கிறேன்(POV). எனினும் ஒரு தேடுபொறி விடுத்தல், நடுநிலைகொள்கைக்கு முரணானதாக அமையலாம். எனவே முன்னனி நிறுவனங்களின் தேடுபொறிகளை அனைத்தையும் ஆ.வி.போல் தருவதே நலம்.
கூடுதல் செய்தி: மைக்ரோசாஃட் நிறுவனம் சுமார் 44.6 பில்லியன் டாலர்களுக்கு யாஹூ நிறுவனத்தை வாங்கத்தயாராக இருப்பதாக அறிவித்திருக்கிறது. எனவே யாஹூ தேடம் அதிசீக்கிரத்தில் விண்டோஸ் லைவ்-யஹூ அல்லது மைக்ரோசாஃட் யாஹூ என ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. வினோத் 16:50, 2 பெப்ரவரி 2008 (UTC)
வார்ப்புரு:CURRENTDAYNAME
தொகுமேற்படி வார்ப்புருவில் ஞாயிறு, ஞாயிற என்று வருகிறது. இதனை எப்படித் திருத்துவது?--Kanags \பேச்சு 10:43, 3 பெப்ரவரி 2008 (UTC)
படிமங்கள்-தானியங்கிகள்-காப்புரிமை
தொகுபடிமங்கள் நீக்கல்
தொகுபொதுவிக்கியில் உள்ள படங்கள்
தொகுபொதுவிக்கி (விக்கிகாமன்ஸ்) இல் உள்ள படிமங்களை இங்குள்ள படிமங்களுடன் ஒப்பிட்டு காமன்ஸில் உள்ளதால் இங்குள்ளதை நீக்கவேண்டுமா? காமன்ஸ் இல் இப்படிமம் நீக்கப்பட்டால் இங்கும் நீங்கிவிடுமே?. இங்கு நீக்குவது எல்லாவற்றையும் நிச்சயமாக மீள்விக்கலாம் ஆகவே தமிழ் விக்கிபீடியாவில் அளவு குறைவதற்கும் சாத்தியம் இல்லையென்றே நினைக்கின்றேன். பொதுவிக்கியில் உள்ள படிமங்கள் இங்கு இருந்தால் நீக்குவதன் காரணத்தை அறியலாமா?. இதைவிட கட்டுரை ஆக்கத்தில் பங்களிப்பது கூடுதல் பலனைத் தருமென்றே நான் நினைக்கின்றேன். இது எனது தனிப்பட்ட கருத்தே. --உமாபதி \பேச்சு 16:32, 2 பெப்ரவரி 2008 (UTC)
- விக்கிப்பீடியாவின் முக்கிய அம்சம் கட்டற்ற கலைக்களஞ்சியம் என்பதாகும். அதனால் காப்புரிமை தொடர்பாக இங்கு விளிப்பாக இருப்பது முக்கியம் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். தவி தொடங்கப்பட்ட நாள் முதல் இது தொடர்பில் பல நடைமுறைகளை கையாண்டு வருகிறேம். கட்டுரைகளை பொருத்தவரை காப்புரிமைக்குட்பட்ட உள்ளடக்கங்கள் இணைக்கப்படுவது தவியில் இல்லையென்ற அளவிற்கு கட்டுப்பாட்டில் உள்ளது. படிமங்களைப் பொருத்தமட்டில் இது அப்படியில்லை. இதை 2006 ஆம் ஆண்டறிக்கையிலும் உரையாடினோம். காப்புரிமக்குட்பட்ட படிமங்களை நீக்குதல், நியாயமான பயன்பாட்டில் ஒரு படிமம் வருமா எனப் பார்த்தல், படிமங்களை வகைப்படுத்தி அடுக்கி வைத்தல் என்பன முக்கியமான வேலைகளாகும். இதைத் தான் நான் செய்கிறேன். கட்டுரைகள் ஆக்க வேண்டும் தான்.... ஆனால் இதையும் யாராவது செய்யத்தானே வேண்டும். விக்கிப்பீடியாவை ஒரு உடலுக்கு ஒப்பிடலாம்...உறுப்புக்கள்தான் பயனர்கள். ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு வேலையுண்டு.:)
- காமன்சில் உள்ளப்படிமங்கள்: இது தொடர்பாக இங்கு ஒரு கேள்வி எழுப்பட்டுள்ளது. பதில் எப்படி அமையும் என பார்க்கலாம். ஆனால் எனது கருத்து அப்படியானால் ஏன் காமன்ஸ் என்ற ஒன்று வேண்டும்?
- நான் இங்கு நீக்கியதற்கு காரணங்கள்:
- பொதுவிலும் தவியிலும் இருக்கும் படிமங்கள் இங்கு எந்தவிதமான காப்புரிமை தகவலும் இல்லாமல் இணைக்க்ப்பட்டுள்ளமை.
- பொதுவிலும் தவியிலும் இருக்கும் படிமம் பொது உரிமத்தில் உள்ளது எனவே காமன்சில் நீக்க வாய்ப்பில்லை.
- பொதுவிலும் தவியிலும் இருக்கும் படிம ஒரே பெயரில் உள்ளது எனவே கட்டுரைகளில் சிவப்பு இணைப்பு வர வாய்ப்பில்லை.
- காம்ன்சில் நீக்கினால்: காம்ன்சில் பல காப்புரிமைத் தொடர்பாக விழிப்பாக இருக்கிறார்கள். எனவே காப்புரிமை மீறிய படிம்ங்கள் நீக்கப்படும். இதன் போது தமிழ் விக்கியில் நாம் காமன்ஸ் படிம இணைப்பைக் கொடுத்திருந்தால் பாட் மூலம் இணைப்பை கட்டுரையிலிருந்து நீக்கிவிடுகின்றனர். இது எமது வேலையை இலகுவாக்கவில்லையா? எனது கருத்துக்களை தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ள வேண்டாம்.தவியில் (மற்ற இடங்களிலும் தான் ;))யாருமே காப்புரிமைவிடயத்தில் விடயத்தில் கவலையீனமாக இருக்கக் கூடாது. --Terrance \பேச்சு 14:19, 3 பெப்ரவரி 2008 (UTC)
- விளக்கங்களுக்குநன்றி டெரன்ஸ், நானும் இனிக் படிமங்களின் பதிப்புரிமை குறித்து விழிப்புடன் பதிவேற்றம் செய்யும் போது கவனித்துச் செய்கின்றேன். --உமாபதி \பேச்சு 14:29, 3 பெப்ரவரி 2008 (UTC)
வார்ப்புரு இல்லா படிமங்களை பதிவேற்றுபவர்களுக்கு தானியங்கி மூலமாக எச்சரிப்பதற்காக வார்ப்புரு:image source என்ற வார்ப்புருவை ஆ.வி.யில் இருந்து மொழிப்பெயர்த்தேன். இதன் மொழிப்பெயர்ப்பை சரிபார்க்குமாறு வேண்டுகிறேன் வினோத் 15:16, 3 பெப்ரவரி 2008 (UTC)
மேலும் தானியங்கி மூலம், Commonsஇல் உள்ள படிமங்களை இங்கிருந்து நீக்கி விடலாம். தாங்கள் Manualஆக செய்வதை தானியங்கி மூலம் இதை செய்தால் நிறைய வேலை மிச்சம் ஆகும் என நினைக்கிறேன். அதே போல் அண்மைய பதிவேற்றங்களை கண்கானிக்கும் பொருட்டு, இரு நாட்களுக்கு ஒரு முறை தானியங்கியை ஏவி, சரியான வார்ப்புரு இல்லையெனில் பதிவேற்றியவருக்கு எச்சரிக்கை அனுப்பலாம் காண்க பயனர் பேச்சு:Vinodh.vinodh வினோத் 15:23, 3 பெப்ரவரி 2008 (UTC)
வினோத், இப்படங்கள் பல ஆங்கில விக்கியிலிருந்து எடுக்கப்பட்டவை. ஆங்கில விக்கிப் பக்கங்களுக்கான இணைப்புக்கள் தரப்பட்டுள்ளன. இப்படியான படிமங்கள் எல்லாவற்றையும் நீக்கினால், இறுதியில் எதுவும் இருக்காது. நிற்க உங்கள் பாட் பயனர் பக்கங்களில் இடும் குறிப்புக்கள் மிகவும் பெரியவையாக இருப்பதுடன், பெரும் எண்ணிக்கையில் இடப்படும் இத்தகைய குறிப்புக்கள் திரும்பத் திரும்ப அப்பக்கங்களை நிரப்புகின்றன ([பயனர் பேச்சு: Mayooranathan என்னுடைய பயனர் பக்கத்தை]ப் பார்க்கவும்). தயவுசெய்து இதனைச் சரி செய்யவும். படிமங்களை நீக்குவதற்கு முன் பொதுக் கருத்துக்களை அறிந்து நீக்குவதுதான் நல்லது. ஒவ்வொரு படிமத்தையும் பதிவேற்றுவதற்கு நேரமும் பணமும் செலவாகியிருக்கிறது. எனவே படிமங்களை நீக்குவதில் கூடிய கவனம் தேவை. மயூரநாதன் 16:34, 3 பெப்ரவரி 2008 (UTC)
VinodhBOT - மன்னிக்கவும்
தொகுஏதேனும் அசௌகரயங்கள் நேர்ந்திருப்பின் என்னை மன்னிக்கவும். இந்த காரணத்தினால் தான் checkimages python Scriptyஐ செயல்படுத்துவதை நிறுத்தி விட்டேன். இந்த Bot வார்ப்புரு:image source என்ற வார்ப்புருவை இடுகிறது.அந்த வார்ப்புருவை சுருக்கினால். பிரச்சினை தீரும் என நினைக்கிறேன். முடிந்தால் அந்த வார்ப்புருவை தகுந்த அளவுக்கு சுருக்குமாறு வேண்டுகிறேன் வினோத் 16:25, 3 பெப்ரவரி 2008 (UTC)
ஆங்கில விக்கி இணைப்பு கொடுத்திருந்தாலும் Python Script அதை கண்டு கொள்ளாமல் போனதாலும்(பெரும்பாலானாவை நீங்கள் பதிவேற்றியவை) பயன்ர் பக்கத்தை Mess up செய்ததாலும் அந்த Scriptஐ செயல்படுத்துவதை இன்று மதியமே நிறுத்திவிட்டேன். ஆங்கில விக்கியின் வார்ப்புருவை அப்படியே மொழிப்பெயர்தது User Page Mess upக்கு ஒரு காரணம் என நினைக்கிறேன். முன்னர் கூறியது போல் வார்ப்புருவை சுருக்கினால் பாதி பிரச்சினை தீரும். அதே வேளையில், உமாபதி முன்பு கூறியது போல் delete image என்பதற்கு பதிலாக Defaultஆக fair useஐ இட்டால் மீதி பிரச்சினை தீர்ந்து விடும்.
ஆங்கில விக்கி இணைப்பு இருக்கும் படிமங்களில் அதே தானியங்கி மூலம் அந்த இணைப்பில் இருந்து தகுந்த வார்ப்புருவை தமிழ் விக்கிப்பீடியாவுக்கு தன்னியக்கமாக இட முடியுமா என முயன்று பார்க்கிறேன்.இப்படிச்செயதால், நாம் Fair Use ஆக Assume செய்த பல படிமங்களுக்கு தகுந்த வார்ப்புருக்கள் கிடைத்து விடும். மீதி படிமங்களுக்கு பதிவேற்றியவர்கள் தான Fair Useஐ நீக்கி விட்டு சரியான வார்ப்புருவை இட வேண்டும். நீண்ட காலம் ஆகியும் Fair-use ஐ Replace செய்யப்படவில்லை என்றால், Manual ஆக Review செய்து படிமத்தை நீக்கலாம்.
இது குறித்து தங்களுடைய கருத்துகளை தெரிவிக்கவும் நன்றி வினோத் 16:47, 3 பெப்ரவரி 2008 (UTC)
மீண்டும் மன்னிக்கவும், இது Python Script கோளாறு, அது நீங்கள் கொடுத்த Commentஐ கவனிக்கவில்லை, இதை முன்னரே குறிப்பிட்டுவிட்டேன் அதன் Source Codeஐ ஆராய்ந்ததில் {{enwiki}} (மொழிப்பெயர்க்கப்படாதது) போன்ற வார்ப்புருக்களை மட்டும் தான் அது ஆங்கில விக்கி இணைப்பாக கருதி அதை ஏற்றுக்கொள்கிறது, உங்களுடையதை தவறுதலாக அது படிம வார்ப்புருவை இல்லாததாக தெரிவித்திருக்கிறது. அதை கவனித்த பின்னரே இதை நிறுத்தினேன். எனவே தயவு செய்து ஏதேனும் என்னால் தவறுகள் நேர்ந்திருப்பின் அருள் கூர்ந்து மன்னிக்க வேண்டுகிறேன். தானியங்கியில் தகுந்த மாற்றங்களை செய்த பிறகே மீண்டும் இயக்க உள்ளேன்.
தானியங்கியை பயன்படுத்தி தாங்கள் கொடுத்துள்ள Commentஆக கொடுத்துள்ளவற்றை {{enwiki}} வார்ப்புருவாக மாற்றிவிடுகிறேன். இனி நீங்கள் பதிவேற்றம் செய்யும் படிமங்களுக்கு இந்த வார்ப்புருவை இட்டால் போது தானாக ஆங்கில விக்கி இணைப்பு வந்து விடும். தானியங்கியை இதை ஏற்றுக்கொண்டு விடும். என்னால் நடந்த தவறுகளுக்கு மீண்டும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் வினோத் 17:04, 3 பெப்ரவரி 2008 (UTC)
I have Cleared up the Mess created my Bot removing the messages and replacing the comment by the {{enwiki}} . So if you are uploading any images from English Wiki, Please use the {{enwiki}} tag, as it would point to the English Image Automatically. Sorry Again, for messing up your user page with my bot.
I shall not run the Checkimages Script again hereafter. Thank you வினோத் 17:37, 3 பெப்ரவரி 2008 (UTC)
BOT Changes
தொகுAs said above, I have Changed the வார்ப்புரு:image source, and drasatically reduced the amount of text. Also, Instead of placing the Delete tag, the fair use tage would be used(This was suggested by Umapathy). For the Images, which has the en wiki link in the comments, section shall be converted to {{enwiki}} i.e template:enwiki by using bot(Either AWB or Python) shortly and hencee will be spared by the bot. All others will receive Copyright warning with their images tagged with fair use temporarily, until the uploaders tag it with suitable templates. Then we can review it and remove the unnneeded pics given a fair amount of time. If you have any Objection please tell. வினோத் 17:53, 3 பெப்ரவரி 2008 (UTC)
Please give you comments regarding the Functioning of my bot, for tagging those who upload images without copyright information.
I Strongly Suggest you automate your functions, which you do routinely by using bots, This may help to reduce you workload very much. Thank you வினோத் 18:08, 3 பெப்ரவரி 2008 (UTC)
நன்றி. வினோத். மயூரநாதன் 02:54, 4 பெப்ரவரி 2008 (UTC)
- வினோத், மயூரதன் கூறியது போல, தானியங்கிகள் மூலம் படிமங்களை நீக்குவது சிறந்ததாக படவில்லை. தவியில் உள்ளப் படிமங்களில் பல ஆங்கில விக்கியில் இருந்து எடுக்கப்பட்டு பதிவேற்றப்பட்டுள்ளன. தொடக்கத்தில் காப்புரிமைப் பற்றி நாம் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை எனவே படிமங்களை மட்டும் காப்புரிமை தகவல் இன்றி பதிவேற்றினோம். பின்னர் படிப்படியாக படிமங்களுக்கு காப்புரிமை விபரங்களை இணைத்தோம். தற்போது பதிவேற்றும் போதே காப்புரிமைத் தகவலை கட்டாயப் படுத்துகிறேம். மயூரதன் உட்பட இப்போது அடிக்கடி இங்கே வராத தொடக்கக் கால பயனர்கள் தவிக்கு ஆற்றிய பணி அளப்பரியது. எனவே மயூரதன் போன்றப் பழைய பயனர்கள் 2007 டிசம்பர் மாததுக்கு முன்னர் பதிவேற்றிய படிமங்களின் காப்புரிமையை சரிபார்த்தல் சரியான வார்ப்ப்ருவை இடல், காப்புரிமை மீரப்பட்டிருந்தால் வேறு பொருத்தமான படிங்களை பதிவேற்றல் முதலிய படிமம் தொடர்பான எல்லா கடமைகளையும் நானே ஏற்றுச் செய்கிறேன். வினோத் பொறுமைக் காக்க வேண்டுகிறேன். படிமம் தொடர்பாக இறுக்கமான நடைமுறையை 2008 ஜனவரி 1 முதல் பதிவேற்றும் படிமங்களுக்கு மட்டும் கைக்கொள்ளலாம்.
- {{enwiki}}:காப்புரிமைக்காக ஆங்கில விக்கியை பார்க்கச் சொல்வது ஏன்? இதை நான் கடுமையாக எதிர்க்கிறேன்.படிம வார்ர்புருவுக்கு ஆங்கில விக்கியை பார்க்கச் சொல்வதாக வைத்துக் கொள்வோம்.
- ஆங்கிலம் தெரியாத தவி பயனர்கள் (எ+கா:ஐரோப்பிய) அதனால் பயனடைய மாட்டார்கள்.
- அட்ரிபியுசன் படிமங்கள், நியாயாமான பயன்பாட்டுப் படிமங்கள் என்பவற்றில் படிமம் உள்ள இடத்தில் கட்டாயம் வார்ப்புரு இடப்படவேண்டும் என்பது காப்புரிமையின் ஒரு விதி?
முக்கியமான விடயமாதலால் அதிகம் எழுத வேண்டி வந்துவிட்டது, மயூரதன் என்னைப் பொறுக்க வேண்டும் ;).--Terrance \பேச்சு 03:12, 4 பெப்ரவரி 2008 (UTC)
வினோத், மயூரனாதன் கூறியதை வழிமொழிகிறேன். ஏற்கனவே, தானியங்கியை நீங்கள் நிறுத்தி வைத்து விட்டதை அறிவேன். இருப்பினும் ஒரு குறிப்புக்கு என் கருத்துக்களைப் பதிக்கிறேன். படிமங்களை மனித முறையில் சரி பார்த்து முறையான உரிமங்களைச் சேர்ப்பது நல்ல நடைமுறையாக இருக்கும். நீக்குவது கடைசி தெரிவாகவும் மனித முறையாகவும் இருப்பது விரும்பத்தக்கது. கோபி, டெரன்ஸ் போன்றோர் ஏற்கனவே இது தொடர்பில் கவனம் செலுத்தி வருகிறார்கள். இது போன்ற தானியங்கிகளைத் துவக்கும் முன் ஆலமரத்தடியில் அறிவித்து ஒரு வார கால அவகாசத்துக்குப் பின் செயற்படுத்தினால் நன்றாக இருக்கும்--ரவி 07:49, 4 பெப்ரவரி 2008 (UTC)
See: User talk:Trengarasu வினோத் 18:15, 4 பெப்ரவரி 2008 (UTC)
தானியங்கியின் தேவை
தொகுAs regards the enwiki template I thought it would time saving, to do so.Like you just give a regex check in the bot and the bot would do all the replacement in a jiffy. I copied this ides :-) of using this template(and also the template ofcourse) from the Hungarian Wiki(I am unaware if the knowledge of English is that much high in Hungaria, given the opposition from you), those guys do these stuff.
Another possiblity when there is a comment abt the source of the wiki, it would be better use a bot to tranfer the description automatically from the respective wiki source to ta wiki. Like when you have umpteen number of images, it takes too much of manual work around(Won't it be boring :-) and timeconsuming) to transfer if possible translate certain standard description like 'Photographed by so and so', 'own work of so and so' etc. (Fair use wiki's can be shortlisted for manual review and translation). Guys, try reducing the manual work around here, which could be used some other useful surface.
I Strongly suggest, that some one run the chekcimages.py script(ofcourse with some modification in the script) around here, atleast from now onwards, to check the image uploads. 90% of the images I have uploaded does not contain any info. It was due do to fact that, you guys weren't strict around here, so out of my laziness I left them out :-) . If I had done this in Commons or En wiki, I would have received a BOT warning to add the source in minutes. Due to Which I make a point to add sources, when uploaded to enwiki(..now tawiki ofcourse), without fail.
Also replacing image links, with image links available in commons, is yet another routine activity that can be automated.
Checking the images and placing a tag for replacement with the commons image automatically if the replica exists, is also possible, given the bot is operated by an admin. Same goes with removing images(Which is done only in commons I suppose, that too with bots which itself has admin flag), it can be done only by an Admin operated bot.
Also please consider using imagetransfer.py script, if not atleast upload.py script as it copies the images along with descriptions and templates, reducing again manual work.
Instead of just using the bots to add interwiki links or check broken links, I suggest using the other features that can be got by the usage of bots, which reduces manual work greatly.
Whether to use bots are not is one's personal decision, it depends how much one wishes to automate his/her own work which again depends on his/her work culture. I just wanted to say, what I felt frankly about the usage of bots.
Me operating a bot running this sort of script, must have been informed before hand. Since the same script is implemented in enwiki and commons, I just ran it over here. So I again aplogize for the inconvenience that has been caused by the 'unannounced' operation of my bot. If I want to run any other script, in future(?) whose operations may turn messy, I henceforth will report to the Village Pump and explain in features, gain the approval, and modify the script if any objections is raised and then run it.
Sayanora :-)) வினோத் 18:13, 4 பெப்ரவரி 2008 (UTC)
வினோத், தானியக்கமாகச் செயற்பட்டு நேரத்தைச் சேமிக்க விழைவது புரிகிறது. எனினும் ஆங்கில விக்கிச் செயற்பாடுகளை அப்படியே இங்கு பின்பற்றுவது எல்லா சமயங்களிலும் நடைமுறைக் காரணங்களுக்காகப் பொருந்தாது. எதுவாக இருந்தாலும் ஆலமரத்தடியில் ஒரு வார்த்தை சொல்லி விட்டுச் செய்யுங்கள். இந்தத் தானியங்கியைப் பொறுத்த வரை - ஒரு மாத காலத்துக்குள் நீக்குவது என்ற கெடு வேண்டாம். உரிமம் இல்லாத பக்கங்களில் - உரிமம் இல்லா படிமங்கள்- போன்று ஒரு பகுப்பை இடலாம். இது போன்ற பகுப்பு ஏதும் ஏற்கனவே இருக்கிறதா பாருங்கள். ஒவ்வொரு படிமத்துக்கும் ஒரு அறிவிப்பைப் பயனரின் பேச்சுப் பக்கத்தில் தருவதைக் காட்டிலும் ஒரு பயனர் பதிவேற்றிய அனைத்துப் படிமங்களுக்குமாகச் சேர்த்து ஒரே பட்டியல் அறிவிப்பாகத் தந்தால் நன்று. நன்றி--ரவி 20:35, 4 பெப்ரவரி 2008 (UTC)
- நான் ஏற்கனவே கூறியது போல 2007 டிசம்பர் வரையான படிமங்கள் தற்போது சரிபார்க்கப்பட்டு வருகின்றன. பதிவேற்றியவர்களுக்கு எந்த அறிவித்தலும் கொடுக்கப்படாமல் அது செய்யப்படுகிறது. அவர்களை தொந்தரவுப்படுத்த வேண்டாமே என்று இவ்வாறு செய்தேன். இப்படிமங்களை விடுத்து புதிய படிமங்களை பார்த்தால் ஒருநாளைக்கு ~10 என்ற வீததில் தான் பதிவேற்றப்படுகின்றன. இதை மனித முறையில் கையாளா முடியும். தவி வளர்ந்து இவ்வெண்ணிக்கை கூடும் போது தனியங்கி பற்றி பேசலாம். அல்லது பழைய படிமங்கள அனைத்தையும் காப்புரிமை சரிசெய்த பின்னர் புதிதாக பதிவேற்றும் படிமங்களுக்கு chekcimages.py நிரலை இயக்கலாம். எடுத்துக் காட்டாக இன்று முதல் பதிவேற்றும் படிமங்களை மட்டும் சோதிக்கும் வகையில் ஏதாவது நிரல் உள்ளீடு உள்ளதா? தானியங்கி பற்றிய வினோத்தின் அறிவை தவியில் கட்டுரை ஆக்கம் போன்றவற்றுக்கு பயன்படுத்தலாம். (கனேஷ் பாட் செய்தது போல). --Terrance \பேச்சு 01:44, 5 பெப்ரவரி 2008 (UTC)
I think you must modify the python script, or else make use of the checkimages.py -limit:XX command line parameter Option, where XX stands for the latest XX images list, which the bot will check. Regarding bot articles. comments later வினோத் 03:05, 5 பெப்ரவரி 2008 (UTC)
P.S: Vinodh is too embarrassed abt this :-( . Vinodh thought, if those guys could use there, why not here. Vinodh Didn't Expect this much of reverbation aroumd here, for this. Henceforth Vinodh won't try anything around around here :-)) வினோத் 03:25, 5 பெப்ரவரி 2008 (UTC)
Vinodth, well my opinion would be positive. Don’t hesitate to try anything but just leave a note in advance so that everyone aware of the changes. Of course I have posteponed my bot too but I will not giveup. Bot is quite useful interms of speed. We are not second to English Wikipedia. --உமாபதி \பேச்சு 04:52, 5 பெப்ரவரி 2008 (UTC)
- வினோத் கருத்துக்களை தனிப்பட்ட உங்களுக்கு எதிரான கருத்துக்களாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நான் படிமங்களின் காப்புரிமைப் பற்றிய விடயத்தில் தானியங்கி வேண்டாம் எனவில்லை ஆனால் எல்லா பழைய படிமங்களுக்கும் செய்யத் தேவையில்லை என்றே கூறினேன். புதிய படிமங்களுக்கு முதலில் தேவையான வார்ப்பபுருக்களைத் தமிழாக்கம் செய்து நிரலை சரிசெய்து சில (1-5) தொகுப்புக்களை செய்து ஆலமரத்தடியில் அறிவித்தல் விடவும் எதிர்பில்லாவிட்டால் தொடரலாம்.--Terrance \பேச்சு 05:06, 5 பெப்ரவரி 2008 (UTC)
Ofcourse, Vinodh never took it as personal :-). If this had happened a few months ago, Vinodh would have felt very bad. Well, Vinodh has learnt something about taking other's views and oppositions(So as to say, Vinodh has never experienced any opposition to his views as of now in his 19 years of life) given the experience Vinodh had here for about two months :-))
Well, If Vinodh has any plans of using bots, other than his personal use for uploading, editing, replacing and interwiki(I suppose there would be objections for this:-)) ). Vinodh shall let you guys know, before using those kind of stuff. As of now, If you guys, need any tweaks in the Checkimages.py, Let Vinodh know, he will try and post something around here. வினோத் 11:09, 5 பெப்ரவரி 2008 (UTC)
தமிழ் விக்கிபீடியாவை கலகலப்பாக்க என்ன செய்யலாம் :)
தொகுதமிழ் விக்கிபீடியா எப்ப பார்த்தாலும் ரொம்ப seriousஆ bore அடிப்பதா கொஞ்ச நாள் முன் நண்பர் ஒருவர் சொன்னார். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் உண்மை தான். புதிதாய்ப் பங்களிப்பாளர்களை ஈர்க்கவும் ஏற்கனவே உள்ள பங்களிப்பாளர்கள் இளைப்பாறவும் ;) என்ன செய்யலாம்? சிவகுமாரின் விலங்குகள் குறித்த கட்டுரைகள், டெரன்சின் நடிகைகள் குறித்த கட்டுரைகளைப் பார்க்கும் போது கொஞ்சம் lightஆ இருக்கு. இதே போல் lightஆன தலைப்புகளில் அவ்வப்போது கட்டுரைகள் ஆக்கி வருவது ஒரு வழி? வேறு என்ன செய்யலாம்...பிற விக்கிபீடியாக்களில் இதை எப்படி அணுகுகிறார்கள்? இறுக்கம் குறைந்து செயல்படுவதற்கு ஆங்கில விக்கிபீடியாவில் என்ன அணுகுமுறைகள் உள்ளன?--ரவி 17:45, 5 பெப்ரவரி 2008 (UTC)
ரவி, தமிழ் விக்கிப்பீடியா serious ஆகத்தான் இருக்க வேண்டும். இது ஒரு கலைக்களஞ்சியம். இதில் வாரசஞ்சிகைகளில் இருப்பது போன்ற அம்சங்களை எதிர்பார்க்க முடியாது, எதிர்பார்க்கவும் கூடாது என்பது எனது கருத்து. இதை ஒரு அறிவுப்பெட்டகமாக வளர்க்க முயலவேண்டுமே தவிரப் பொழுதுபோக்குக்காக வாசிப்பதற்கான ஒன்றாக ஆக்கக்கூடாது. மயூரநாதன் 18:43, 5 பெப்ரவரி 2008 (UTC)
மயூரனாதன், கட்டுரை வெளிகளில் seriousஆகத் தான் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்திருக்கிறேன். கட்டுரை உள்ளடக்கம், தொனி, தலைப்புகள், நடை குறித்து அல்ல என் கருத்து. கட்டுரையாக்கம் போக எஞ்சிய இடங்களில் எப்படி இறுக்கத் தன்மையைக் குறைப்பது, எப்படி பங்களிப்பாளர்களிடையேயான உரையாடல்களை less formalஆக ஆக்குவது என்பது குறித்தே என் சிந்தனை. ஒரு அலுவலகங்களில் வேலையையும் செய்கிறோம் அதே வேளை இளைப்பாற என்று ஒரு சிறு அறை, நேரம் ஒதுக்கி பணியாற்றுவோரிடையே நல்லுறவை வளர்க்கிறார்கள் அல்லவா? அது போல் ஏதும் இயலுமா என்று நினைத்தேன். கட்டுரை வெளிகளுக்கு வெளியே ஆலமரத்தடி போன்ற ஒரு தனிப்பக்கத்தில் ஒரு பொதுவான உரையாடல் பக்கமாகவோ இல்லை விக்கிபீடியாவுக்கு வெளியே ஒரு மன்றம், மடலாடற்குழு போல் விக்கிபீடியர்களுக்கு இடையேயான பொதுவான இளக்கமான உரையாடல் குழுவாகவோ ஏதாவது செய்யலாமா என்று தோன்றியது. இதைச் செய்யத் தான் வேண்டும் என்றில்லை. இது போல் பிறர் எவரும் உணர்கிறார்களா, அவர்களின் கருத்து, ஆலோசனை என்ன, பிற விக்கிபீடியாக்களில் இப்படி உணரப்பட்டதா அங்குள்ள நடைமுறைகள் என்ன என்று அறிந்து கொள்ளும் முகமாகவே இதைத் தெரிவித்தேன். தரமான தமிழ்க் கலைக்களஞ்சியத்தை எந்த சமரசமும் இல்லாமல் உருவாக்கும் அதே வேளை அதை எந்த அளவு enjoyableஆகச் செய்ய முடியும் என்பது யோசனை. தற்போது உள்ள தமிழ் விக்கிபீடியா நடைமுறைகள் (கட்டுரைகள் அல்ல) too scholarlyஆக இளையோர்களால் உணரப்படக்கூடுவது தமிழ் விக்கிபீடியாவில் இருந்து அவர்களை விலகி இருக்கச் செய்யலாம். அதே வேளை இந்த இளையோரிடம் பங்களிப்பதற்கான ஆர்வம், ஆற்றல், நேரம், நுட்ப அறிவு மிகுந்து இருக்கலாம். இவர்களை எப்படி ஈர்த்து உள்வாங்கி பங்களிப்புகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று யோசிக்க வேண்டும். scholarly புலங்களைத் தாண்டி இவர்களால் சேகரிக்கப்படக்கூடிய பல தகவல்கள் உண்டு. --ரவி 19:58, 5 பெப்ரவரி 2008 (UTC)
- ரவியின் விளக்கக் கருத்துக்கள் எனக்கும் சம்மதமே. கட்டுரைப் பெயர்வெளிகளுக்கு வெளியே ஏதாவது செய்யமுடியுமானால் நல்லதுதான். மயூரநாதன் 21:38, 5 பெப்ரவரி 2008 (UTC)
- இதை வெகு நாட்களாக சொல்ல வேண்டுமென்று நினைத்துக்கொண்டிருந்தேன். அதற்குள் என்னுடைய Seniorஏ சொல்லிட்டார். இங்கே User Culture மிகவும் Seriousஆ இருப்பது உண்மைதான். Like, You guys can't be serious always right, there needs to be some amount of Fun, in working around here. More Interaction among the Contributors etc etc. If people must constantly contribute around here, they must find fun in doing so. Personal Interaction
English Wikipediaவை பாருங்கள் http://en.wikipedia.org/Wikipedia:Wikipedia is an MMORPG , விக்கிப்பீடியாவில் Work செயவதே ஒரு Game போல் என ஒரு கட்டுரை எழுதி இருக்கின்றனர். When I read this stuff,to be frank I got attracted by this.(There gotta be lot of freaks like me). It makes people believe that, the Whole Process of Contributing to Wikipedia is like a game, its just having fun. இதைப்போன்ற ஒரு முழு பட்ட்யலுக்கு காண்க en:Category:Wikipedia humor. இவ்வளவு கட்டுரைகள் வேண்டாம். Atleast ஒன்று இரண்டாவது இப்படி இருந்தால் Bore அடிக்கும் போது படிக்கலாம். எனக்கு Bore அடித்தால், இதில் இருந்துதான் ஏதாவது படிப்பேன்(இதுல நிறையதுல ரொம்ப மொக்க போட்டிருப்பாங்கறது வேற விஷயம் :-( ,கேட்டா American Comedyன்னு சொல்லுவாங்க!). அங்கும் Serious Zeolites இதெல்லாம் வேண்டாமென்று சொல்லி vfDக்கு Nominate செய்திருக்கின்றனர், அதையும் மீறி இதெல்லாம் அங்கு இன்னமும் இருக்கின்றது
இங்க ஏதாவது எக்குத்தப்பா பேசி அது Comicalஆ மாறி ஏதாவது Discussion எதப்பத்தியாவது நடந்திருக்கனும்(நடக்கலன்னு மட்டும் சொல்லிடாதீங்க) இது மாதிரி http://en.wikipedia.org/Wikipedia:Lamest_edit_wars . இதெல்லாம் Compile பண்ணி ஒரு Pageல வக்கலாம்(ஒரு பத்து நிமிஷம் ஆகுமா, Cut Copy Paste தான :-)) ). அப்பறம் User'sக்கு நடுவுல நடந்த சுவாரஸ்யமான விஷயங்கல்ல Compile பண்ணலாம்(இங்க அது மாதிரி நடந்த சில Discussions'அ ஒட்டுப்பார்த்த முறையில சொல்றேன் :-) ). வர்ரவங்களுக்கு ஒரு Informal Feel தறனும், Ofcourse, Article Creations'a நிச்சயமா Formalityய Enforce பண்ணியே ஆகனு(ம்).
அப்பறம், மத்த விக்கிப்பீடியா மாதிரி தமிழ் விக்கிப்பீடியாவுக்கு ஒரு IRC Channel Open பண்ணனும், So அங்க கொஞ்சம் Informal விக்கி Discussion நிறைய மத்த விஷயங்கல பத்தி பேசலாம். So, விக்கில Edit பண்ணிட்டே Chat பண்ணலாம், இதனால் Editing Bore அடிக்காது, ஏதாவது Silly Doubt இருந்தாலும் Clear பண்ணிக்கலாம். Chat Logsஅ Publish பண்ணக் கூடாதுங்கறதால, எல்லா Official விஷயங்கள இக்கத்தான் பேசனும் அப்பத்தான் History Maintain பண்ண முடியுங்கறது ஒரு காரணம். Meta IRC Page பாருங்க அப்பறம் இது http://en.wikipedia.org/Wikipedia:IRC. So Contributorsக்கு நடுவுல கொஞ்சம் இளக்கமான முறையில் உரையாடல் நடக்கும் வினோத் 10:02, 6 பெப்ரவரி 2008 (UTC)
வினோத், "விக்கிபீடியாவில் தொகுப்புகள் செய்வது வாரக்கடைசியில் விளையாடப் போவது போல..."ன்னு ஜிம்மி வேல்சே அடிக்கடி சொல்வார். அதே போல ஒரு மகிழுணர்வு தமிழ் விக்கிபீடியாவுக்குப் பங்களிக்கும்போதும் வர என்ன பண்ணலாம்னு பார்க்கணும். இப்ப உள்ள பெரும்பாலான பங்களிப்பாளர்கள் தீவிர தமிழார்வத்தால் உந்தப்பட்டு வந்தவங்க தான். ஒன்னு என்ன செய்யலாம்னா, பேச்சுப் பக்கங்கள்ல இறுக்கமான உரைநடைத் தமிழ்ல பேசாம பேச்சுத் தமிழ்ல பேசலாம். (பேச்சுத் தமிழ் தான், தமிங்கிலத் தமிழ் இல்ல ;) ) ஆனா, இதுல என்ன சிக்கல்னா, ஒரு வகைல இந்தப் பேச்சுப் பக்க உரையாடல்கள் எல்லாம் ஒரு வகைல ஆவணங்கள் மாதிரி...பல ஆண்டுகள் கழிச்சும் பல வேறு ஊர்கள்லயும் புரியணும்..இதையும் கவனத்துல வைச்சு பொதுவான பேச்சுத் தமிழ்ல பேசலாம்..அப்புறம், நீங்க சொன்ன மாதிரி சுவாரசியமான விசயங்களை விக்கிபீடியா பெயர்வெளியில் தாராளமா தொகுத்து வைக்கலாம்..தமிழ் விக்கிபீடியாவுக்கு இரண்டு ஆண்டு முன்னாடி ஒரு IRC ஓடை உருவாக்கினோம்..அதுல ஈயோடுனதால அப்படியே விட்டாச்சு..--ரவி 10:37, 6 பெப்ரவரி 2008 (UTC)
பேச்சுத்தமிழ்ல பேசலாம், ஆனா அது Normalizedஆ இருக்கணும், ஆனா அது ரொம்ப கஷ்டம். உரைநடைத்தமிழ்லயே ஸ்ரீலங்கா, இந்தியான்னு பிரச்சினை வரும்போது, பேச்சுத்தமிழ்ல இருக்கிற கஷ்டத்த புரிஞ்சிக்கலாம். இருந்தாலும், பலர் தங்களோட வட்டாரவழக்குல பேசும் போது தானா அது Normalized ஆகி, விக்கித்தமிழ்னு ஒன்னு வந்தாலும் வரலாம் யார் கண்டா ?
திருப்பி வேணும்னா இன்னொரு IRC உருவாக்குங்க. வீட்ல 24 மணி நேரம் சும்மா இருக்குறதுக்கு, அதோட Chanel Opஆ நான் இருக்கேன்(நான் என்கிட்டேயே Chat பண்ற நிலைமை வராம இருந்தா சரி). Orkutல கொஞ்சம் தமிழ் விக்கிபீடியாவுக்கு விளம்பரம் கொடுத்து பாக்குறேன். ஒருத்தர் ரெண்டு பேர் சேர்ந்தாலும் நல்லது தான். அதுக்குல்ல ஏதாவது நகைச்சுவை தொகுப்புகள் இருந்தால் அதையே அதில் பயன்படுத்தலாம். அதனால, அதி சீக்கிரத்தில பல(சரி..சில) இளம் பங்களிப்பாளர்கள நீங்க இங்க பாக்கலாம் வினோத் 10:53, 6 பெப்ரவரி 2008 (UTC)
த.விக்கு ஏற்கனவே ஏதாவது Ad Banner jpg அல்லது gif கோப்புகள் இருந்தால் தரவும். இல்லையெனில் நான் தெ.வி.யை பின்பற்றி ஒரு Advertising Banner gif கோப்பு மற்றும் jpg கோப்பை எழுதி, அதை விளம்பரத்துக்கு பயன்படுத்துகிறேன் வினோத் 10:58, 6 பெப்ரவரி 2008 (UTC)
த.வி சின்னத்தைத் தான் இது வரைக்கும் விளம்பரத்துக்குப் பயன்படுத்துறோம். நீங்களே புதுசா எதுவும் உருவாக்கினா சரி. ஏற்கனவே உருவாக்கப்பட்ட IRC ஓடை விவரம் இங்கு. இன்னிக்குப் பூந்து பார்க்கிறேன்..யாராச்சும் வந்தா சரி--ரவி 11:06, 6 பெப்ரவரி 2008 (UTC)
கவலைப்பாடாதீங்க ரவி, நானாவது இருப்பேன். பார்த்தேன் எனக்கு தெரிஞ்சு Gaimஅ விட mIRC தான் ரொம்ப பரவலா பயன்படுத்தறாங். இப்பவே வந்து பாக்குறேன். கொஞ்சம் பொறுக்கவும்.
அப்பறம் Banner வடிமைச்சா, இங்க ஆலமரத்தடில அத காட்டிட்டுத்தான் பயன்படுத்தனுமா? வினோத் 11:13, 6 பெப்ரவரி 2008 (UTC)
ஆலமரத்தடியைப் பார்த்து ரொம்ப அரண்டுட்டீங்க போல ;) நாம் செய்யும் எந்த விளம்பரமும் அதிகாரப்பூர்வமா இருக்காதுங்கிறதால, உங்க விருப்பப்படி செய்யுங்க.--ரவி 11:18, 6 பெப்ரவரி 2008 (UTC)
- ஏற்கனவே banner ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. பார்க்க: Wikipedia:தமிழ் விக்கிப்பீடியா அறிமுகப்படுத்தல்.--Kanags \பேச்சு 11:21, 6 பெப்ரவரி 2008 (UTC)
எனது விக்கி
தொகுதமிழ் விக்கிபீடியாவிற்கு வரும் புதுப் பயனர்களில் பெரும்பாலானோர் தங்கள் விருப்பங்களிற்கேற்ப சில கவிதைகள் சிலர் புத்தகப் பதிவேற்றம் போன்றனவற்றை செய்வதை அவதானிக்கமுடிகின்றது. சிலரே விக்கிபீடியா நடைக்கேற்ப கட்டுரைகள் எழுத முன்வருகின்றார்கள் இத்தகைய காரணத்தால் பல பயனர்கள் விக்கிபீடியாவில் கட்டுரைகள் வாசிப்பதனையே குறிக்கோளாகக் கொண்டு வருகின்றனர். மேலும் இவ்வாறான பயனர்கள் தங்கள் தமிழ் எழுத்து அறிவிற்கு ஏற்றாற்போல் கவிதைகள் தங்களுக்குத் தெரிந்த கண்ட கேட்ட அனுபவங்கல் கதைகள் சம்பவங்கள் போன்றனவற்றை எளிய தமிழில் பேச்சுத்தமிழில் பதிவு செய்வதற்கு விக்கிபீடியாவின் பிற திட்டங்களில் புதிய for example விக்கி நூல்கள் போன்று விக்கி personal or எனது விக்கி என்று ஒரு பிரிவினை உருவாக்கி தமிழ்த் தெரியாத புதுப் பயனர்களை வேற்று மொழி அன்பர்களையும் தமிழினைக் கற்க ஒரு திட்டத்தினை உருவாக்கினால் மிகவும் அளப்பரிய ஒரு சாதனையாக விளங்கும் பிற பயனர்கல் BLOGGER போன்ற தளங்களில் தனித்தனியே அவர்கள் தங்கள் கவிதைகள், விமர்சனங்கள் அனைத்தையும் எழுதுவது பலருக்குத் தெரியாது காரண்ம் அவர்கள் முகவரிகள் இல்லாதது.பெரும்பாலானோர் இவற்றைத் தேடிக் கண்டுபிடிக்கவும் முயல்வதில்லை இப்படியான blogger பயனர்களை விக்கியில் நான் கூறியது போன்ற திட்டத்தின் மூலம் இணைக்கலாம் உலகத்தமிழ் சொந்தங்கள் அனைவரையும் விக்கிபீடியாவில் சேர்த்தால் மிகப் பெரியசாதனை ஒரே வேளையில் உலக தமிழ்ச் சமுதாயங்களின் சந்திப்பு அதிகரிக்கும். இது என்னுடைய சிந்தனை. உண்மையில் இப்படி உருவாக்கினால் மிகப் பெரும் பயன் கிட்டும்.
எனது விக்கி (இவ்வாறு பெயர் இருந்தால் நன்று)
பிரிவுகள்
- எனது கவிதைகள்
- எனது நகைச்சுவை
- எனக்கு வேண்டிய உதவிகள் (பயன்ருக்குத் தெரியாத விடயங்களைப் பதியலாம் தெரிந்தபயனர்கள் விடையளிக்கலாம் ex எனது passport களவு என்ன செய்யலாம்)
- எனக்கு ஏற்பட்ட சம்பவங்கள் (அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள நினைக்கும் personal விடயங்கள்)
- எனது கண்டுபிடிப்புகள்
- எனது கதைகள் (பயனரின் கதைக்கருக்கள்)
- எனது படைப்புகள் (ஓவியங்கள், நிகழ்பட உருவாக்கங்கள் (பின்னாட்களில் நிகழ்படங்களைச் சேர்க்கலாம்)
இவை எனது உதாரணங்கள் மேலும் இதனை வளர்த்தெடுத்தால் பல எழுத்தாளர்களை உருவாக்கலாம். கண்டுபிடிப்பாளர்களை உருவாக்கலாம். பல படைப்பாலிகளை உருவாக்கலாம் உலகின் பல பாகங்களில் நடங்கும் அவலங்களை பயனர்கள் கேள்விப்பட்ட செய்திகள் ஆகியவற்றை எளிய தமிழில் பதிவு செய்ய முடியும். ஒரு வர் கொலை செய்யப்படப்போகின்றார் என்றால் அவர் அதனை இவற்றில் பதியலாம் (இது எனது idea)
இவ்வாறு மேலும் பலவற்றைனை பயனர்களின் விருப்பதிற்கேற்றாற் போல் சேர்க்கலாம். இவ்வாறு உருவாக்கினால் விக்கிபீடியாவின் serious இல் இருந்து வெளியேற மிகவும் உதவியாகவும் அதிக இளம் பயனர்களை ஈர்க்கவும் மிகவும் மிகவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது எனது தனிப்பட்ட கருத்து.--நிரோஜன் சக்திவேல் 16:41, 6 பெப்ரவரி 2008 (UTC)
நிரோஜன், இது போன்ற விக்கித்தளங்களை Wikiaவில் தொடங்கலாம். இது போன்ற பல வித்தியாசமான விஷயங்களை Wikia தளங்களில் கண்டிருக்கிறேன். முற்றிலும் வித்தியாசமான முயற்சிகள் அங்கு நடை பெறுகின்றன. வினோத் 17:15, 6 பெப்ரவரி 2008 (UTC)
நிரோ, உங்க யோசனை நல்லா இருக்கு. ஆனா, இதை விக்கிபீடியாவில், குறிப்பா விக்கி மென்பொருள் வைச்சு எப்படி செய்யுறதுன்னு புரியல. நீங்க சொன்ன பல விசயங்கள் interactive தன்மை கூடியவை. இவற்றுக்கு facebook, வலைப்பதிவுகள் போன்றவை தான் கூடப் பொருத்தம் என்று நினைக்கிறேன். அவற்றில் இதற்கான தனித்த வசதிகள் உண்டு. விக்கி மென்பொருள் கூட்டு முயற்சிகளுக்கே அதிகம் உதவும்னு நினைக்கிறேன். விக்கியாவில் இருக்கும் தளங்கள் கூட பெரும்பமாலும் வித்தியாசமான தலைப்புகளில் உள்ள கூட்டு முயற்சி தான். வேணா ஒன்னு செய்யலாம். தனி ஒரு விக்கிபீடியா பக்கத்தில் தமிழ் விக்கிபீடியா பயனர்கள் விரும்பினால் தங்கள் பதிவு, facebook, orkut போன்ற விவரங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். இதன் மூலம் இத்தளங்களுக்குச் சென்று இவர்களை நட்பு கொள்ள முடியும். பயனர்களுக்கு இடையேயான தொடர்புகளும் அதிகரிக்கும்.
http://uncyclopedia.org போல் நாமே ஒரு தளம் தொடங்கி அதில் வேடிக்கையாக ஏதும் செய்யலாம். அந்தத் தளத்தில் பங்கு கொள்ள ஆர்வம் கொண்டு வருபவர்கள் விக்கி மென்பொருளைப் பயன்படுத்துவதைப் புரிந்து கொள்வார்கள். பிறகு, அந்த அறிவு விக்கிபீடியா திட்டங்களுக்கும் பயன்படும். --ரவி 10:31, 7 பெப்ரவரி 2008 (UTC)
ஈடுபாடுகள், கலைகள், விளையாட்டு
தொகுமேற்கண்ட துறைகளில் வலைவாசல்களை ஏற்படுத்தி, கூடிய கவனம் தரலாம். அது சரிவர விட்டா பேசாம ஜோதிடம், அழகுக் குறிப்பு என்று தொடங்கிட வேண்டியதுதான்...--Natkeeran 02:26, 7 பெப்ரவரி 2008 (UTC)
- என்ன நற்கீரன், ரொம்ப நொந்துட்டீங்களா ;) ஆனால், நீங்கள் சொல்ல வருவதில் உள்ள உண்மை என்னவென்றால் தீவிர கலைக்களஞ்சியத் தலைப்புகளைக் கவனிக்கும் அதே வேளை, இளைஞர்கள், பெண்கள், மாணவர்களை, இல்லத்தரசிகள் இவர்களை ஈர்க்கும், இவர்களுக்கு அதிகம் பயன்படக்கூடிய, இவர்கள் அதிகம் தேடக்கூடிய தகவல்களை எந்த அளவுக்கு கலைக்களஞ்சிய நடையில் தர முடியும் என்று யோசித்து இது தொடர்பான கட்டுரைகளை உருவாக்குவதிலும் ஒரு பகுதி கவனத்தைச் செலுத்த வேண்டும். திரைப்படத் துறை கட்டுரைகள் ஒரு நல்ல துவக்கம். வெவ்வேறு துறை கட்டுரைகளை ஆக்க வேண்டும். அதே வேளை கலைக்களஞ்சிய நடை, தரத்தையும் கவனம் கொள்ள வேண்டும்--ரவி 10:34, 7 பெப்ரவரி 2008 (UTC)
#tamil_wikimedia IRC channel (Re-Introduction)
தொகுதமிழ் விக்கிமீடியா திட்டப் பயனர்கள், பங்களிப்பாளர்கள் கருத்துப் பரிமாறிக் கொள்வதற்கென #tamil_wikimedia என்ற பெயரில் IRC channel ஒன்றைத் துவக்கி இருக்கிறேன். இதன் மூலம் ஒரு சமயத்தில் எந்தெந்தப் பங்காளிப்பாளர்கள் இணைப்பில் (onlineல்) இருக்கிறார்கள் என்று அறிந்து கொள்ளலலாம். சிறு சிறு ஐயங்கள், குறிப்புகளை பரிமாறிக்கொள்ளலாம். பேச்சுப் பக்கங்களில் தொகுக்கும் நேரம் மிச்சமாகும் (எடுத்துக்காட்டுக்கு, இதை எப்படி செய்வது, இந்த எழுத்துக்கூட்டல் சரியா என்பது போன்ற கேள்விகள்..). ஆங்கிலத்திலோ தமிழிலோ வசதிக்கேற்றவாறு, சற்று இறுக்கமான விக்கி நடையில் இருந்து தளர்த்தி உரையாடிக்கொள்ளலாம். விக்கிப்பீடியர்களுடன் பிற திட்டக்காரர்கள், விக்கியிடைப் பயனர்கள், ஊடகவியலாளர்கள் தொடர்பு கொள்ளவும் உதவும். இந்த இணைய அஞ்சல் அரட்டை (அல்லது இணையத் தொடர் அரட்டை?) ஓடையில் இணைவது குறித்த குறிப்புகள்:
1. Gaim (கெயிம்)மென்பொருளை நிறுவிக்கொள்ளுங்கள். (தரவிறக்கம்)
2. முதன்முதலில் கெயிம் பயன்படுத்துபவர்கள் பின்வரும் படிமத்தில் உள்ளது போல் IRC கணக்கை சேருங்கள்:
ஏற்கனவே கெயிம் பயன்படுத்துபவர்கள், tools-->account பட்டியலுக்கு சென்று add பொத்தானை அழுத்தி பின் வரும் படிமத்தில் உள்ளது விவரங்களைத் தாருங்கள்.
விவரங்களைத் தந்த பின் கெயிம் ஏதாவது பிழைக்குறிப்புக்களைத் தந்தால் கண்டு கொள்ள வேண்டாம் :)
3. நம் ஓடையில் இணைய buddies->join a chat பட்டியலுக்குச் சென்று பின் வரும் படிமத்தில் உள்ளது போல் விவரங்களைத் தாருங்கள்.
இனி நீங்கள் அரட்டை அறையை அடைந்து விடுவீர்கள். அங்கு பொதுவிலோ பயனர்களிடம் தனித்தனியாகவோ உரையாடலாம். நிரோ, நற்கீரன், கோபி. சிவா, நான், சுந்தர் போன்று அடிக்கடி பேச்சுப் பக்கங்களில் குறிப்புகள் இடுவோருக்கு இது உதவியாக இருக்கும். விக்கிபீடியா, விக்சனரி. விக்கிநூல்கள் என்று அனைத்துக்குமான களமாக இது திகழும். உபுண்டு லினக்ஸ் பயனர்கள் இதில் தமிழில் தட்டச்சு செய்து உரையாட முடியும். விண்டாசில் சந்தேகமாக இருக்கிறது. எ-கலப்பை வேலை செய்ய வில்லை. வேறு வழிகள் இருந்தால் தெரியப்படுத்தவும்.
கெயிம் மூலம் உங்கள் யாகூ, msn, gtalk அரட்டைகளையும் இணைத்துக்கொள்ளலாம் என்பது கூடுதல் வசதி. வார நாட்களில் இந்திய நேரம் 10.30-12.00, 21.30 - 03.30 ஆகிய நேரங்களில் என்னை இந்த ஓடையில் எதிர்பார்க்கலாம். வார இறுதி நாட்களில் முழுதும் இருக்கலாம். இல்லாமலும் போகலாம். கெயிம் பயன்படுத்த இயலும் விக்கிபீடியர்கள் அனைவரையும் இதில் இணையக் கேட்கிறேன். வெற்று அரட்டைகள் தவிர்க்கப்பட வேண்டும், அல்லது குறைந்தபட்சம் பொது அறையில் இல்லாமல் தனிப்படட சாளரத்தில் இருக்க வேண்டும் (one-to-one chat) என்ற குறைந்தபட்ச பரிந்துரையை மட்டும் இவ்வோடை நடத்தை நெறியாக முன்மொழிகிறேன்.
உங்கள் கருத்துக்கள், ஐயங்கள், ஆதரவை எதிர்ப்பார்க்கிறேன். நம் முயற்சிகளின் வினைத்திறனை இது அதிகரிக்கும் என்பது என் நம்பிக்கை. --ரவி 21:35, 24 அக்டோபர் 2006 (UTC)
இரண்டு வருட பழைய இந்த உரையாடலை. மீண்டும் இங்கு இடுகிறேன். இங்கு Gaim பயன்படுத்துவதற்கு பதிலாக mIRC பயன்படுத்துதல் மிகவும் Efficientஆக இருக்கும். எந்த அமைவுகளை எவரும் செய்ய வேண்டியதில்லை.
mIRC மென்பொருளை தகவலிறக்கம் செய்து கொள்ளவும். இந்த மென்பொருளை நிறுவிய பிறகு irc://irc.freenode.net/tamil_wikimedia என்ற இணைப்பை சொடுக்கினால், நேராக tamil_Wikimedia ஓடைக்கு இட்டுச்செல்லும். வினோத் 11:28, 6 பெப்ரவரி 2008 (UTC)
விக்கிப்பீடியர்கள் இங்கு ஏதாவது பங்களிக்கும் அதே நேரத்தில் IRC ஓடையிலும் இருந்தால், சிறு சிறு சந்தேகங்களை உடனடியாக நிவர்த்தி செய்ய இயலாம். பேச்சுப்பக்கத்தில் இட்டு பிறகு, இன்னொருவரின் பதிலுக்காக காத்திருக்க வேண்டியதிலை வினோத் 11:38, 6 பெப்ரவரி 2008 (UTC)
--Natkeeran 15:09, 8 பெப்ரவரி 2008 (UTC)
த.வி.யை வெகுஜன ஊடகப்பார்வைக்கு உட்படுத்துதல்
தொகுஇன்று தெ.வி.யை பற்றி தெலுங்கு பத்திரிக்கையான ஈனாடுவில் ஒரு முழு நீள கட்டுரை வெளியிட்டிருக்கின்றனர். அதைக்கண்டு கிட்டத்தட்ட ஒரே நாளில் 70க்கும் மேற்பட்ட பயனர்கள்(நான் இதை எழுதும் வேளையில்) தெ.வி.யில் பயனர் கணக்கை தொடங்கியுள்ளனர். அதில் சிலர் முழுமூச்சாக பங்களிக்க துவங்கனால் கூட நல்லதுதான். இவர்களின் கருத்துகளை அறிந்து கொள்ள விக்கிப்பீடியா:அபிப்ராயாலு(அபிப்ராயங்கள்) என ஒரு தனி பக்கத்தையே உருவாக்கி அவர்களின் கருத்துகளை அறிந்து வருகின்றனர். இன்னும் நாளாக நாளாக வளரும் அதிகமாக இருக்கிறதுவாய்ப்பிருக்கிறது.
இதே போல் த.வி.யை குறித்து இலங்கை அல்லது தமிழக வெகுஜன ஊடகங்களில் தெரியப்படுத்தினால், தெ.வி.யை போல பல புதிய பயனர்கள் கவர்வதற்கு ஏதுவாக இருக்கும் என நினைக்கிறேன் வினோத் 16:53, 8 பெப்ரவரி 2008 (UTC)
- வினோத், நீங்கள் பகிர்ந்த செய்தியின் சுருக்கத்தைத் தர இயலுமா? அவர்கள் அனைவரும் விக்கியர்கள் என்று மட்டும் ஊகிக்க முடிகிறது. இத்தனை விக்கியர்கள் ஒரே இடத்தில் சந்தித்துக் கொண்டிருப்பது மகிழ்ச்சி. தமிழ் விக்கியர் சந்திப்பு ஒன்று குறித்தும் சிந்திக்கலாம். இதழ்களுக்காக என்றில்லாவிட்டாலும் நமக்குள் நட்புணர்வை வளர்க்க உதவும்.
- சென்ற ஆண்டுகளில் தமிழ் விக்கிபீடியா, விக்சனரி குறித்து தினமலரில் மட்டும் துண்டுச் செய்தி அளவில் செய்தி வந்திருக்கிறது. போன ஆண்டு சென்னை விக்கி பட்டறையை அடுத்து இந்து நாளிதழில் விக்கிபீடியா குறித்து ஒரு விரிவான செய்தி வெளியிட முயற்சி எடுக்கப்பட்டு அப்படியே கிடப்பில் இருக்கிறது. இந்து நாளிதழின் நிருபர் ஒருவரும் ஆர்வம் காட்டி இருந்தார். சுந்தரிடம் விவரங்கள் உண்டு. சென்னையில் உள்ள உங்களைப் போன்றோர் முயன்றால் செய்தி வெளிவரச் செய்யலாம். இந்த முயற்சிகள் மூலம் எத்தனை புதிய பயனர்கள் பதிகிறார்கள் என்பது விசயமில்லை. ஒரு முனைப்பான பங்களிப்பாளராவது கிடைத்தால் பரவாயில்லை.
- தமிழ் விக்கிபீடியா கருத்தறியும் பக்கம் பாருங்கள். --ரவி 19:47, 8 பெப்ரவரி 2008 (UTC)
செய்தி சுருக்கம்
தொகுவலையில் நம் தெலுங்கு என்ற தலைப்பில் கட்டுரை உள்ளது. இதில் தெ.விக்கிப்பீடியர்கள் குறித்து, அவர்களது வெவ்வேறு வித பின்னணியில் வந்திருந்தாலும் தெலுங்கு மொழியின் மீதுள்ள தீவிர தாய் மொழிப் பற்றினால் ஒன்றினைந்து, ஒரு பைசா லாபம் இல்லாவிட்டாலும் பலனேதும் எதிர்பாராமல் நாளொன்றுக்கு 2 - 4 மணி நேரம் செலவழிக்கின்றனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. தெ.வி.யில் உள்ள வைஜாசத்யா போன்ற முக்கியமான விக்கிப்பீடியர்கள் குறித்து சிறிது விவரமாக கூறப்பட்டுள்ளது. தெலுங்கு விக்கி பாட் மூலம் பெற்ற வளர்ச்சி, பாட் மூலம் 30,000 சொற்களை தெ.விக்ஷனரியில் சேர்த்தது, என தேதிவாரியாக தெ.வியின் வளர்ச்சி குறித்து விவரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தெலுங்கு பிளாகர்கள் மற்றும் விக்கிப்பீடியர்கள் நடுவில் உள்ள புரிந்துணர்வு, நல்லுறவு குறித்தும் அச்செய்தி கூறுகிறது.
பி.கு: தெ.வி.யில் கிட்டத்தட்ட அனைத்து ஆந்திர கிராமங்களை குறித்தும் கட்டுரைகள்(பாட் கட்டுரைகள்) உள்ளன. அவற்றை தற்போது சிறிது சிறிதாக மேலதிக தகவல்களை சேர்த்து விரிவுப்படுத்தி வருகின்றனர். வினோத் 05:05, 9 பெப்ரவரி 2008 (UTC)
நன்றி வினோத், தெலுங்கு விக்கிபீடியாவில் இது பெருமைப்பட வேண்டிய விடயம் என்றால் தமிழ் விக்கிபீடியாவிலும் இலங்கை பற்றிய இடங்களைக் கட்டுரையில் சேர்த்துவிடலாம். இலங்கையில் உள்ள இடங்களின் அநேகமான இடங்களின் ஆள்கூறுகள் என்னிடம் உள்ளன 3000+ இடங்கள் என்று நினைக்கின்றேன். இவற்றை வேண்டுமானால் தமிழ் விக்கிபீடியாவில் சேர்க்கலாம். ஆனால் இந்தியாவில் உள்ள இடங்கள் போன்றல்லாமல் வேறுதகவல்கள் என்னிடம் உடனடியாக இல்லை. ஆகவே எழுமாற்றுக் கட்டுரை படிப்பவர்களுக்கு இடையூறாகவோ எரிச்சலூட்டுவதாகவோ அமையக்கூடும். எனினும் மற்றவர்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் ஏதாவது ஒருவழியில் குறுங்கட்டுரைகளாவது ஆக்கிவிடலாம். மற்றவர்களின் கருத்தை அறிய விரும்புகின்றேன். தமிழ் விக்கிபீடியாவில் மட்டும் அல்ல கூகிள் ஏர்த் போன்றவற்றிலும் வருமாறு செய்யலாம் :)--உமாபதி \பேச்சு 11:48, 9 பெப்ரவரி 2008 (UTC)
ஒரே விடயத்தில் ஆயிரக்கணக்கில் கட்டுரைகள் இருக்கும்போது உமாபதி சுட்டிக்காட்டியது போன்ற பிரச்சினைகள் இருக்கும். இது அவ்வளவு நல்ல விடயமும் அல்ல. தானியங்கிகள் மூலம் கட்டுரைகளைச் சேர்ப்பதாயின் பல விடயங்கள் தொடர்பிலும் தானியங்கிக் கட்டுரைகளைச் சேர்க்க முயலலாம். ஒரு வரி, இரண்டு வரிக் கட்டுரைகளை எழுதுவதில் பயன் இல்லை. எழுதும் கட்டுரைகள் 4 கிபைட் அளவுக்கு மேல் இருப்பது நல்லது. தானியங்கிக் கட்டுரைகளை உருவாக்குவதற்கு எவ்வாறான வடிவத்தில் தகவல்கள் தேவை என எனக்குத் தெரியவில்லை. யாராவது இது பற்றி விளக்கினால், வேறு என்னென்ன விடயங்களில் குறிப்பிட்ட வடிவத்தில் தகவல்களைச் சேகரிக்கலாம் எனச் சிந்திக்க முடியும். தானியங்கிக் கட்டுரைகளுக்கான தகவல்களையும் கூட்டு முயற்சியில் சேகரிக்க முயலலாம். மயூரநாதன் 19:23, 9 பெப்ரவரி 2008 (UTC)
தமிழ் விக்கிப்பீடியா பற்றிய ஆங்கில விக்கி கட்டுரை
தொகுTamil_Wikipedia இக்கடுரையில் தமிழ் விக்கிபீடியாவின் சின்னம் இணைக்கப்பட வேண்டும். சின்னத்தை பொதுக் கோப்பகத்துக்கு பதிவேற்றலாம். பெயரீட்டுக்கும் காப்புரிமைக்கும் பகுப்ப்புக்கும் தெலுங்குச் சின்னத்தைப் பார்க்க. யாராவது படிமத்தைப் பதிவேற்ற முடியுமா?--Terrance \பேச்சு 03:07, 10 பெப்ரவரி 2008 (UTC)
- படிமம் Commonsக்கு பதிவேற்றப்பட்டது மேலும்,
http://meta.wikimedia.org/wiki/Wikipedia_logo_in_each_language உள்ள கட்டற்ற கலைக்களஞ்சியம் என்ற சொற்றொடரின் லத்தீன எழுத்துப்பெயர்ப்பும் கட்டற்ற கலைக் களஞ்சியம்/(kattaṟṟa kalaikkaḷañciyam) என சரிசெய்யப்பட்டது. வினோத் 13:24, 10 பெப்ரவரி 2008 (UTC)
படிமங்கள்
தொகு2008 ஜனவரி 01 முதல் பதிவேற்றப்படும் படிமங்களுக்கு பதிவேற்றும் போதே காப்புரிமை மூலம் போன்ற வற்றை கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இல்லாவிட்டால் படிமங்கள் 1 வாரக்காலத்துள் நீக்கலப்படும். --Terrance \பேச்சு 01:43, 11 பெப்ரவரி 2008 (UTC)
விக்சனரி தானியங்கி
தொகுநண்பர்களே, நான் சில நாட்களாக குறைந்த அளவு பங்களித்து வந்ததற்கு பணிச்சுமை தவிர மற்றுமொரு காரணமுண்டு. அது த.இ.ப. அகரமுதலிகளை தானியங்கு முறையில் இறக்கி பகுப்பாய்வு செய்து விக்சனரி நடையில் அங்கு பதிவேற்றும் முயற்சி. பல திங்கள்கள் நானும் ரவியும் இதற்காக திட்டமிட்டோம். பின் சில வெள்ளோட்டங்களை ரவி பார்வையிட்டு மாற்றங்களைப் பரிந்துரைத்துள்ளார். (அவரது தொடர் ஊக்கம், உந்துதல், மேலாண்மை, மெல்லிய மிரட்டல் ;), பின்னூட்டம் ஆகியன முதன்மையான பங்களித்துள்ளன. நன்றி.)
கடைசி வெள்ளோட்டத்தின் முடிவுகளைக் கீழ்க்காணும் பக்கங்களில் கண்டு உங்கள் கருத்துக்களை இங்கே பதியுமாறு வேண்டுகிறேன். (ரவி விக்சனரி பங்களிப்பாளர்களுக்கும் தெரிவித்து விடுங்கள்.) அகரமுதலியின் மொழிபெயர்ப்புகள் சில குறையுள்ளவையெனினும் இவற்றை பங்களிப்பாளர்கள் பின்னர் மாற்றியமைக்கக்கூடும். - சுந்தர் \பேச்சு 14:14, 16 பெப்ரவரி 2008 (UTC)
- http://ta.wiktionary.org/wiki/accumulated_temperature
- http://ta.wiktionary.org/wiki/alpha_test
- http://ta.wiktionary.org/wiki/anicteric_hepatitis
- http://ta.wiktionary.org/wiki/automotive_engineering
- http://ta.wiktionary.org/wiki/chiefs
- http://ta.wiktionary.org/wiki/clause
- http://ta.wiktionary.org/wiki/critical
- http://ta.wiktionary.org/wiki/distribution_map
- http://ta.wiktionary.org/wiki/extraxylary_fibres
- http://ta.wiktionary.org/wiki/inclined_cylinder_engine
- http://ta.wiktionary.org/wiki/insertion_of_brackets
- http://ta.wiktionary.org/wiki/laloplegia
- http://ta.wiktionary.org/wiki/light_beam
- http://ta.wiktionary.org/wiki/menthol_crystal
- http://ta.wiktionary.org/wiki/oceanic_ridges
- http://ta.wiktionary.org/wiki/placket_hemmed
- http://ta.wiktionary.org/wiki/poly
- http://ta.wiktionary.org/wiki/screw_right_handed
- http://ta.wiktionary.org/wiki/so_what,_if
- http://ta.wiktionary.org/wiki/surface_drag
- http://ta.wiktionary.org/wiki/westerlies
- http://ta.wiktionary.org/wiki/zinc_alluminium_alloys
- http://ta.wiktionary.org/wiki/zoologist
நன்றி, சுந்தர். இதற்கான சோதனை ஓட்டத்தை இந்த ஆண்டு வேலன்டைன் நாளை முன்னிட்டுச் செய்தோம் என்ற செய்தியைச் சொல்ல மறந்ததைக் கண்டிக்கிறேன் :) விக்சனரியில் தெரிவித்து விட்டேன். ஒரு இலட்சம் சொற்களுக்கும் மேல் இது போல் பதிவேற்றப்பட இருப்பதால், எல்லோரும் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் பார்த்து ஆலோசனைகள், தேவையான மாறுதல்கள், வழுக்களைத் தெரியப்படுத்தினால் முதலிலேயே திருத்த உதவும். --ரவி 16:24, 16 பெப்ரவரி 2008 (UTC)
மிக நல்ல முயற்சி. எனினும் ஒலிப்பு கோப்புகள் சிவப்பு நிற இணைப்பாகவே காணப்படுகின்றன. அதை மட்டும் சரி செய்தால் போதும் என நினைக்கின்றேன். வினோத் 17:47, 16 பெப்ரவரி 2008 (UTC)
நன்றி வினோத். ஒலிப்பு கோப்புகள் இது வரை பதிவேற்றப்படாததால் சிகப்பாக இருக்கின்றன. யாராவது பதிவேற்றினால் நீலமாகி விடும் :) பின்னர், ஒவ்வொரு பக்கத்துக்கும் தனித்தனியாக இந்தத் தொடுப்புகளைச் சேர்க்க இயலாது என்று இப்போதே சேர்த்து விட்டோம்--ரவி 00:14, 17 பெப்ரவரி 2008 (UTC)
ஆ.விக்ஷனரியில் உள்ள தகுந்த ஒலிப்பு கோப்புகளை தானியஙகி மூலம் நேரடியாக இங்கே பதிவேற்றுதல் சாத்தியமா ? வினோத் 02:37, 17 பெப்ரவரி 2008 (UTC)
- பின்னூட்டத்திற்கு நன்றி வினோத். அந்த வார்ப்புரு பொதுவில் (commons:) ஒலிப்புக்கோப்புகள் இருந்தால் இணைப்பை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன். இப்பொழுது பதிவேற்றப்பட்டுள்ளவை பெரும்பாலும் சொற்றொடர்களாக இருப்பதால் அவற்றிற்கு ஒலிப்புகள் பொதுவில் இல்லை. இதைப் பாருங்கள், ஒலிப்பு உள்ளது. -- சுந்தர் \பேச்சு 03:08, 17 பெப்ரவரி 2008 (UTC)
சுந்தர், தங்கள் தானியங்கியின் பணி மிகவும் நன்று. த.இ.ப தளத்தில் சில தட்டச்சுப்பிழைகள் உள்ளன. (பார்க்க: zoologist) அவற்றை நாம் தான் கண்டறிந்து சரிசெய்ய வேண்டும் அல்லவா? இவ்வாறான பிழைகள் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கக் கூடும் என்று நம்புகிறேன். மற்றொன்று, f ஒலியை குறிக்க அத்தளத்தில் ஃப் என்ற எழுத்தைப் பயன்படுத்தியுள்ளனர்(பார்க்க: alpha test). இதில் நமது நிலைப்பாடு என்ன என்பதையும் முடிவு செய்ய வேண்டும். --சிவகுமார் \பேச்சு 04:53, 17 பெப்ரவரி 2008 (UTC)
- நல்ல கருத்து, சிவா. அது தட்டச்சுப்பிழை இல்லை. 'ர்' என்பதற்கு துணைக்கால் மீது புள்ளி வைக்கும் முறையைக் கையாண்டிருக்கிறார்கள் என நினைக்கிறேன். அதை நான் ஒருங்குறிக்கு தன்னியக்கமாக மாற்றியபோது வழுக்கள் ஏற்பட்டன. ரகர உயிர்மெய்கள் பலவற்றில் இச்சிக்கல் இருந்தது, நான் சிலவற்றை சரி செய்தேன். எஞ்சியதை மெய்ப்பார்த்து உதவுங்கள். -- சுந்தர் \பேச்சு 05:41, 17 பெப்ரவரி 2008 (UTC)
சுந்தர், மிகவும் நல்லதோர் முயற்சி, வாழ்த்துக்கள். நான் அலுவலகத்தில் பாபிலோன் (http://www.babylon.com/) இன் 6ஆவது பதிப்பைப் பயன்படுத்தி வருகின்றேன். பாபிலோன் அகராதியை உருவாக்கும் முறைபற்றி http://www.babylon.com/display.php?id=1061&tree=6&level=3 கொடுத்துள்ளார்கள். மைக்ரோசாப்ட் எக்ஸெல் இருந்தால் செய்யலாம் போலத் தோன்றுகின்றது. இதுபோன்ற வேலையைத் தானியங்கி மூலம் செய்ய இயலுமா?. எனக்குள்ள பிரச்சினைகளுள் ஒன்று தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மாற்றுவது இதை இப்போது இல்லாவிட்டாலும் பின்னர் சேர்த்துக் கொள்ளாலாம் அவரசரம் இல்லை. --உமாபதி \பேச்சு 02:42, 18 பெப்ரவரி 2008 (UTC)
- கண்டிப்பாக உமாபதி. எக்சல் கோப்பில் ஏற்றி உங்களுக்கு அனுப்புகிறேன். -- சுந்தர் \பேச்சு 03:33, 18 பெப்ரவரி 2008 (UTC)
சுந்தர் நல்ல முயற்சி. இரு கேள்வி உங்கள் தானியங்கி ஒரு நேரத்தில் இரண்டு இணையத்தளங்களில் இயங்குமா? (எ+கா:விக்சனரி+த.இ.ப.) அப்படியாயின் த.இ.ப. இணையத்தில் தானியங்கி மூலம் தகவல் பெற அனுமதிக்கிறார்களா? சிலவேலை பேண்ட்வித் திருட்டாக கருதப்படலாம்???--Terrance \பேச்சு 03:44, 18 பெப்ரவரி 2008 (UTC)
- டெர்ரன்சு, இதைக்கருத்தில் கொண்டு தரவிறக்கத்திற்கென தனியாக ஒரு தானியங்கி எழுதினேன். அது ஒரு அணுக்கத்திற்கும் அடுத்த அணுக்கத்திற்கும் இடையில் போதிய இடைவெளி விட்டது. இணைய கிராலர்களில் (crawler) இதை பணிவுக் கட்டமைப்பு என்பர். தவிர இது ஒவ்வொரு சொல்லுக்கொரு முறை த.இ.ப. தளத்தை அணுகவில்லை, ஆங்கில எழுத்துவாரியாக பட்டியல் பக்கங்களில் இருந்தே பெற்றது. மேலும் இந்த முகவரியில் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. தரவிறக்கம் ஏற்கெனவே முடிந்தது, இனி பதிவேற்றம் மட்டும்தான் நிலுவையில் உள்ளது. -- சுந்தர் \பேச்சு 05:23, 18 பெப்ரவரி 2008 (UTC)
படிமங்கள் தொடர்பில் உங்கள் ஒத்துழைப்பு வேண்டப்படுகிறது.
தொகு- இதுவரை
படிமங்களில் காப்புரிமை தவியில் ஒரு குறிப்பிட்டளவு பிரச்சினையாக இருந்து இப்போது ஓரளவுக்கு சரி செய்யப்பட்டுள்ளது. நான் பழைய படிமங்களுக்கு (சுமார் 1500) காப்புரிமை வார்ப்புருக்களை இட்டு சரிசெய்த்துள்ளேன். இன்னமும் சுமார் 500 படிமங்கள் சரிபார்க்கப்படவுள்ளன. காப்புரிமை மீறிய காமன்சில் உள்ள என சுமார் 400 படிமங்கள் என்னால் நீக்கப்பட்டன. படிமங்களின் காப்புரிமையை சரிபார்க்கும் பாட் தமிழாக்கம் செய்யப்பட்டுவிட்டது.அதை இனி நான் பெரும்பாலும் ஒவ்வொரு நாள் காலையும் (UTC 00.00-04.00)இயக்குவேன்.
- இனி
படிமங்களைப் பதிவேற்றும் போது
- எங்கிருந்து எடுக்கப்பட்டது (எ+கா: ஆங்கில விக்கியில் இருந்து எடுக்கப்பட்டது, நான் எடுத்தப் படிமம், இணைய முகவரி்....)
- காப்புரிமை நிலை (வார்ப்புரு மூலம் {{GDFL}} {{PD-US}}.....)
இட்டுக்காட்டும் படி உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். படிமங்களை நீக்குவதற்கான பாட் தமிழாக்கம் செய்யப்பட்டு காப்புரிமை நிலை தெரிவிக்கப்படாத படிமங்கள் பாட் மூலம் நீக்கப்படும். படிமங்களை ஒன்றாக சரிபார்பது நேரத்தை வீணடிக்கும் வேலை என்வே பதிவேற்றும் போதே படிமத்தின் காப்புரிமை நிலையை வார்ப்புருமூலம் இட்டுக் காட்டிவிடவும்.--Terrance \பேச்சு 03:26, 20 பெப்ரவரி 2008 (UTC)
விக்கிமீடியா மாற்றம்
தொகுவிக்கிப்பீடியாவின் பதிப்புரிமையை மீறும் உள்ளடக்கங்கள் நீக்கப்படும். கலைக்களஞ்சிய உள்ளடக்கங்களுக்கு மேற்கோள் சுட்டப்படல் வேண்டும். உங்கள் ஆக்கங்களை GFDL உரிமத்தின் கிழ் வெளியிட அனுமதி அளிக்கிறீர்கள்.
இங்கே தொகுப்புச் சுருக்கப் பெட்டி
பதிப்புரிமையுள்ள ஆக்கங்களை அனுமதியின்றி சமர்ப்பிக்க வேண்டாம்!
Insert: – — … ° ≈ ≠ ≤ ≥ ± − × ÷ ← → · § கையொப்பமிட: ~~~~
விக்கி நிரல்கள்:
{{}}
{{{}}}
|
[]
[[]]
[[பகுப்பு:]]
#REDIRECT [[]]
<s></s>
<sup></sup>
<sub></sub>
<code></code>
<blockquote></blockquote>
<ref></ref>
{{Reflist}}
<references/>
<includeonly></includeonly>
<noinclude></noinclude>
{{DEFAULTSORT:}}
<nowiki></nowiki>
<!-- -->
<span class="plainlinks"></span> •
(templates)
குறியீடுகள்: ~
|
¡
¿
†
‡
↔
↑
↓
•
¶
#
¹
²
³
½
⅓
⅔
¼
¾
⅛
⅜
⅝
⅞
∞
‘
“
’
”
«»
¤
₳
฿
₵
¢
₡
₢
$
₫
₯
€
₠
₣
ƒ
₴
₭
₤
ℳ
₥
₦
№
₧
₰
£
៛
₨
₪
৳
₮
₩
¥
♠
♣
♥
♦
எழுத்துக்கள்:
Á
á
Ć
ć
É
é
Í
í
Ĺ
ĺ
Ń
ń
Ó
ó
Ŕ
ŕ
Ś
ś
Ú
ú
Ý
ý
Ź
ź
À
à
È
è
Ì
ì
Ò
ò
Ù
ù
Â
â
Ĉ
ĉ
Ê
ê
Ĝ
ĝ
Ĥ
ĥ
Î
î
Ĵ
ĵ
Ô
ô
Ŝ
ŝ
Û
û
Ŵ
ŵ
Ŷ
ŷ
Ä
ä
Ë
ë
Ï
ï
Ö
ö
Ü
ü
Ÿ
ÿ
ß
Ã
ã
Ẽ
ẽ
Ĩ
ĩ
Ñ
ñ
Õ
õ
Ũ
ũ
Ỹ
ỹ
Ç
ç
Ģ
ģ
Ķ
ķ
Ļ
ļ
Ņ
ņ
Ŗ
ŗ
Ş
ş
Ţ
ţ
Đ
đ
Ů
ů
Ǎ
ǎ
Č
č
Ď
ď
Ě
ě
Ǐ
ǐ
Ľ
ľ
Ň
ň
Ǒ
ǒ
Ř
ř
Š
š
Ť
ť
Ǔ
ǔ
Ž
ž
Ā
ā
Ē
ē
Ī
ī
Ō
ō
Ū
ū
Ȳ
ȳ
Ǣ
ǣ
ǖ
ǘ
ǚ
ǜ
Ă
ă
Ĕ
ĕ
Ğ
ğ
Ĭ
ĭ
Ŏ
ŏ
Ŭ
ŭ
Ċ
ċ
Ė
ė
Ġ
ġ
İ
ı
Ż
ż
Ą
ą
Ę
ę
Į
į
Ǫ
ǫ
Ų
ų
Ḍ
ḍ
Ḥ
ḥ
Ḷ
ḷ
Ḹ
ḹ
Ṃ
ṃ
Ṇ
ṇ
Ṛ
ṛ
Ṝ
ṝ
Ṣ
ṣ
Ṭ
ṭ
Ł
ł
Ő
ő
Ű
ű
Ŀ
ŀ
Ħ
ħ
Ð
ð
Þ
þ
Œ
œ
Æ
æ
Ø
ø
Å
å
Ə
ə •
{{Unicode|}}
கிரேக்கம்:
Ά
ά
Έ
έ
Ή
ή
Ί
ί
Ό
ό
Ύ
ύ
Ώ
ώ
Α
α
Β
β
Γ
γ
Δ
δ
Ε
ε
Ζ
ζ
Η
η
Θ
θ
Ι
ι
Κ
κ
Λ
λ
Μ
μ
Ν
ν
Ξ
ξ
Ο
ο
Π
π
Ρ
ρ
Σ
σ
ς
Τ
τ
Υ
υ
Φ
φ
Χ
χ
Ψ
ψ
Ω
ω •
{{Polytonic|}} • (polytonic list)
Cyrillic: А
а
Б
б
В
в
Г
г
Ґ
ґ
Ѓ
ѓ
Д
д
Ђ
ђ
Е
е
Ё
ё
Є
є
Ж
ж
З
з
Ѕ
ѕ
И
и
І
і
Ї
ї
Й
й
Ј
ј
К
к
Ќ
ќ
Л
л
Љ
љ
М
м
Н
н
Њ
њ
О
о
П
п
Р
р
С
с
Т
т
Ћ
ћ
У
у
Ў
ў
Ф
ф
Х
х
Ц
ц
Ч
ч
Џ
џ
Ш
ш
Щ
щ
Ъ
ъ
Ы
ы
Ь
ь
Э
э
Ю
ю
Я
я
IPA: t̪
d̪
ʈ
ɖ
ɟ
ɡ
ɢ
ʡ
ʔ
ɸ
ʃ
ʒ
ɕ
ʑ
ʂ
ʐ
ʝ
ɣ
ʁ
ʕ
ʜ
ʢ
ɦ
ɱ
ɳ
ɲ
ŋ
ɴ
ʋ
ɹ
ɻ
ɰ
ʙ
ʀ
ɾ
ɽ
ɫ
ɬ
ɮ
ɺ
ɭ
ʎ
ʟ
ɥ
ʍ
ɧ
ɓ
ɗ
ʄ
ɠ
ʛ
ʘ
ǀ
ǃ
ǂ
ǁ
ɨ
ʉ
ɯ
ɪ
ʏ
ʊ
ɘ
ɵ
ɤ
ə
ɚ
ɛ
ɜ
ɝ
ɞ
ʌ
ɔ
ɐ
ɶ
ɑ
ɒ
ʰ
ʷ
ʲ
ˠ
ˤ
ⁿ
ˡ
ˈ
ˌ
ː
ˑ
̪ •
{{IPA|}}
- தொகுத்தல் பயிற்சி செய்ய மணல்தொட்டிக்கு செல்லுங்கள்.
- கட்டுரைகளை உருவாக்கவும் விரிவுபடுத்தவும் செம்மைப்படுத்தவும் உங்களை வரவேற்கிறோம். எனினும், உங்கள் தொகுப்புகளில் ஏதேனும் தவறிருந்தால், அவை பிற பயனர்களால் கவனிக்கப்பட்டு உடனடியாக நீக்கப்படும் என்பதை கருத்தில் கொள்ளவும்.
- நீங்கள் செய்யும் தொகுப்புகளின் நம்பகத்தன்மையை பிறர் உறுதிப்படுத்திக் கொள்ள, தயவுசெய்து தகவல் ஆதாரங்களை தரவும்.
விக்கிபீடியாவுக்கான ஆக்கங்கள் அனைத்தும் "கனு" கட்டற்ற ஆவண அனுமதி (GNU Free Documentation License) முறையின் கீழ் வழங்கப்பட்டதாகவே கருதப்படும் என்பதைத் தயவு செய்து கவனிக்கவும். (விபரங்களுக்கு $1 ஐப் பார்க்க).
உங்களுடைய எழுத்துக்கள் கடுமையாகத் தொகுக்கப்படுவதையோ, விரும்பியபடி விநியோகிக்கப்படுவதையோ நீங்கள் விரும்பாவிடில் இங்கே சமர்ப்பிக்காதீர்.
insert, குறியீடுகள் தவிர்த்து அதற்கு கீழ் உள்ளவை மிகவும் அவசியம் தானா? அதிகம் பயன்படாத நிலையில் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும் போல் இருக்கிறது.--ரவி 11:19, 21 பெப்ரவரி 2008 (UTC)
எழுத்துக்கள், கிரேக்கம், சிரில்லிக் ஆகியவற்றை எடுத்து விடலாம். விக்கிநிரல்கள் மிகவும் பயனுள்ள ஒன்று. ஐ.பி.ஏ கூட பின்னாட்களில் தேவைப்படலாம்.--சிவகுமார் \பேச்சு 13:20, 21 பெப்ரவரி 2008 (UTC)
மாற்றப்பட்ட வடிவம்
தொகுவிக்கிப்பீடியாவின் பதிப்புரிமையை மீறும் உள்ளடக்கங்கள் நீக்கப்படும். கலைக்களஞ்சிய உள்ளடக்கங்களுக்கு மேற்கோள் சுட்டப்படல் வேண்டும். உங்கள் ஆக்கங்களை GFDL உரிமத்தின் கிழ் வெளியிட அனுமதி அளிக்கிறீர்கள்.
இங்கே தொகுப்புச் சுருக்கப் பெட்டி
பதிப்புரிமையுள்ள ஆக்கங்களை அனுமதியின்றி சமர்ப்பிக்க வேண்டாம்!
Insert: – — … ° ≈ ≠ ≤ ≥ ± − × ÷ ← → · § கையொப்பமிட: ~~~~
விக்கி நிரல்கள்:
{{}}
{{{}}}
|
[]
[[]]
[[பகுப்பு:]]
#REDIRECT [[]]
<s></s>
<sup></sup>
<sub></sub>
<pre></pre>
<code></code>
<blockquote></blockquote>
<ref></ref>
{{Reflist}}
<references/>
<includeonly></includeonly>
<noinclude></noinclude>
{{DEFAULTSORT:}}
<nowiki></nowiki>
<!-- -->
<span class="plainlinks"></span> •
{{Polytonic|}}
{{Unicode|}}
{{IPA|}}
குறியீடுகள்: ~
|
¡
¿
†
‡
↔
↑
↓
•
¶
#
¹
²
³
½
⅓
⅔
¼
¾
⅛
⅜
⅝
⅞
∞
‘
“
’
”
«»
¤
₳
฿
₵
¢
₡
₢
$
₫
₯
€
₠
₣
ƒ
₴
₭
₤
ℳ
₥
₦
№
₧
₰
£
៛
₨
₪
৳
₮
₩
¥
♠
♣
♥
♦
கிரேக்கம்:
Ά
ά
Έ
έ
Ή
ή
Ί
ί
Ό
ό
Ύ
ύ
Ώ
ώ
Α
α
Β
β
Γ
γ
Δ
δ
Ε
ε
Ζ
ζ
Η
η
Θ
θ
Ι
ι
Κ
κ
Λ
λ
Μ
μ
Ν
ν
Ξ
ξ
Ο
ο
Π
π
Ρ
ρ
Σ
σ
ς
Τ
τ
Υ
υ
Φ
φ
Χ
χ
Ψ
ψ
Ω
ω
- தொகுத்தல் பயிற்சி செய்ய மணல்தொட்டிக்கு செல்லுங்கள்.
- கட்டுரைகளை உருவாக்கவும் விரிவுபடுத்தவும் செம்மைப்படுத்தவும் உங்களை வரவேற்கிறோம். எனினும், உங்கள் தொகுப்புகளில் ஏதேனும் தவறிருந்தால், அவை பிற பயனர்களால் கவனிக்கப்பட்டு உடனடியாக நீக்கப்படும் என்பதை கருத்தில் கொள்ளவும்.
- நீங்கள் செய்யும் தொகுப்புகளின் நம்பகத்தன்மையை பிறர் உறுதிப்படுத்திக் கொள்ள, தயவுசெய்து தகவல் ஆதாரங்களை தரவும்.
விக்கிபீடியாவுக்கான ஆக்கங்கள் அனைத்தும் "கனு" கட்டற்ற ஆவண அனுமதி (GNU Free Documentation License) முறையின் கீழ் வழங்கப்பட்டதாகவே கருதப்படும் என்பதைத் தயவு செய்து கவனிக்கவும். (விபரங்களுக்கு விக்கிப்பீடியா பதிபுரிமைப் பக்கத்தைப் பார்க்க).
உங்களுடைய எழுத்துக்கள் கடுமையாகத் தொகுக்கப்படுவதையோ, விரும்பியபடி விநியோகிக்கப்படுவதையோ நீங்கள் விரும்பாவிடில் இங்கே சமர்ப்பிக்காதீர்.
நன்று டெரன்ஸ். மேலும், {{subst:newuser}}, {{subst:test}} போன்ற அடிக்கடி பயன்படுத்தப்படும் வார்ப்புருக்களையும் ஒரு வரியில் தந்தால் பயனுள்ளதாயிருக்கும்?--சிவகுமார் \பேச்சு 13:35, 21 பெப்ரவரி 2008 (UTC)