தாழ்வு மனப்பான்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category பதகளிப்பு
No edit summary
வரிசை 27:
 
முட்கள் நிறைந்த செடியில்தான் ரோஜா மலர்கிறதென்பதனை மனதில் கொள்ள வேண்டும்
தாழ்வு மனப்பான்மை
ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட சூழலை அணுகும்போது ஏற்படும் இயலாமை மனதிறகுள் தாழ்வு நிலையாக உருவெடுக்கிறது. என்னால் முடியும் என்ற நேர்மறை எண்ணம் நமக்குள் இருந்தாலும் கூட, மற்றவர் செய்யும் ஒரு செயலின் விளைவைப் பார்த்து நாம் அதிசயப்பதும் மட்டுமின்றி ஒப்பிடவும் செய்கின்றோம். அவ்வாறு செய்வதனால் ஏதோ ஒரு காரணத்தினால் அவரை விட சிறப்பாக செயல்படாமல் போனால் நமக்குள் இருந்த என்னாலும் முடியும் என்ற நேர்மறை எண்ணம் சிதைந்து தன்னை பற்றிய மேலான உயர்வெண்ணம் குறைய ஆரம்பிக்கிறது. இது காலப்போக்கில் ஒவ்வொரு சூழலிலும் தன்னை தாழ்த்தியும், பிறரை உயர்த்தியும் பார்க்கும் ஒரு மனோபாவம் நம்முள் வளர்வதை தாழ்வு மனப்பான்மை என்கிறோம்.
தாழ்வு மனப்பான்மை என்ற வார்த்தையை கேட்கும்போதே நமக்குள் ஏதாவது ஒரு சூழலில் முளைத்திருக்குமோ என்ற கேள்வி எழும், அதற்கு பதில் ஆம் என்பார்கள் பலர். தாழ்வு மனப்பான்மை உடையோர் காலப்போக்கில் வெற்றி அடைவோம் என்ற எண்ணம் குறைந்து கொண்டே சென்று மனதளவில் விரக்தி அடைகின்றனர். அத்தகைய விரக்தி தொடர்ந்து தோல்வியும் அதை தொடர்ந்து முயற்சி செய்ய விரும்பாத மன ஒட்டத்தினைப் பெறுகின்றனர். காலப்போக்கில் எந்த ஒரு செயலையும் துவங்க இயலாதவர்களாக அடையாளப்படுத்திக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
தாழ்வு மனப்பான்மை நம்மிடமிருந்து விலக வேண்டுமெனில் ‘ நம் பலம் நாம் அறிவது’ என்பது முதல் தீர்வாக அமையும். இதனைத் தான் தன்னை அறிதல் என்கிறோம். உடனடியாக தம்மைப் பற்றி முழுமையாக அறிவது என்பது இயலாத காரியங்களுள் ஒன்று. வெவ்வேறு சூழல்களும் சம்பவங்களும் நம்முடைய செயலின் விளைவை நிர்ணயிக்கின்றன என்றால் இல்லை என்று மறுப்பதற்கில்லை. அத்தகைய பல்வேறு சூழல்களில் தெரிவு செய்த சூழல்களில் பங்கேற்பது, நல்ல சம்பவங்களின் மூலம் சிறந்த அனுபவங்களைப் பெறுவதே தன்னை மென்மேலும் மெருகேற்றவும், அதன் மூலம் இயலாமையை நீக்கி தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபட இரண்டாவது தீர்வாகும்.
இது குறித்து ஒரு கதை மூலம் விளக்கினால் சிறப்பாக இருக்கும். சர்க்கஸில் யானைகளை ஒரு சிறிய மேஜையின் மீது நிற்க வைப்பது உண்டு. எப்படி அவ்வளவு பெரிய யானை அந்த சின்ன ஸ்டூல் மேல் நிற்கிறது வெவ்வேறு நாட்டினரிடமும் பதில் கேட்கப்படுகிறது ஒருவர் இதெல்லாம் பிள்ளையார் மகிமை என்றார். அருகிலுள்ள பாகனிடமிருந்த கொம்பிற்கு பயத்தால் என்றார் மற்றொருவர். யானை தன் பலம் அறியவில்லை என்றார் மற்றொமொருவர். இதிலிருந்து நாம் அறிவது யானை தன் பலம் அறிந்திருக்கவில்லை என்பதே உண்மை. அவ்வாறு அறிந்திருப்பின் பாகன் நிலை என்னவாகியிருக்கும்?
 
[[பகுப்பு:உளவியல் விளைவுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/தாழ்வு_மனப்பான்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது