"உருசியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி (தானியங்கிஇணைப்பு category [[:Category:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்|ஐக்கிய நாடுகள் சபையின் உறுப...)
எவ்வாறாயினும், பால்டிக் கரையைக் கைப்பற்றுவதற்கும், கடல் வணிகம் மேற்கொள்வதற்கும், போலந்து, லிதுவானியா மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளின் கூட்டுப் படைகளுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட நீண்ட, தோல்விகரமான லிவோனியப் போரின் காரணமாக சார் ஆட்சி வலுவிழந்தது.<ref>{{Cite book|author=Solovyov, S.|title=History of Russia from the Earliest Times|publisher=AST|year=2001|volume=6|pages=751–908|isbn=5-17-002142-9}}</ref> இதேவேளை, கோல்டன் ஹோர்டின் எச்சமான கிரிமியன் கானேட்டின் தாத்தார்கள், தென்ரசியாவில் தொடர்ச்சியான கொள்ளையடிப்புக்களை மேற்கொண்டனர்.<ref>{{PDFlink|[http://www.econ.hit-u.ac.jp/~areastd/mediterranean/mw/pdf/18/10.pdf The Crimean Tatars and their Russian-Captive Slaves]|355&nbsp;KB}}. Eizo Matsuki, Mediterranean Studies Group at Hitotsubashi University.</ref> 1571ல், வொல்கா கானேட்டை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில், கிரிமியர்களும் அவர்களது [[உதுமானியப் பேரரசு|ஒட்டோமான்]] கூட்டணியினரும் மத்திய ரசியாவை ஆக்கிரமித்து மொஸ்கோவின் பகுதிகளை எரியூட்டினர்.<ref>{{cite book|author=Solovyov, S.|title=History of Russia from the Earliest Times|publisher=AST|year=2001|volume=6|pages=751–809|isbn=5-17-002142-9}}</ref> ஆனாலும்,அடுத்த ஆண்டே மொலோடி போரில், இப்பாரிய ராணுவம் ரசியர்களால் தோற்கடிக்கப்பட்டது. இதன் மூலம் ரசியாவில் ஒட்டோமன்-கிரிமியன் பரவலை தடுத்துக்கொண்டனர். கிரேட் அபாடிஸ் லைன் போன்ற பாரிய கோட்டைகள் கட்டியெழுப்பப்பட்டு எதிரிப் படையெடுப்புக்கான பகுதிகள் குறுக்கப்பட்டன. ஆயினும், 17ம் நூற்றாண்டு வரையில் கிரிமியர்களின் கொள்ளையடிப்பை தடுத்து நிறுத்த முடியவில்லை.
 
[[படிமம்:Minin &Pogjarsky 2Pozharskiy 01.jpgJPG|upright|thumb|மொஸ்கோவிலுள்ள, மினின் மற்றும் பொசார்க்கி ஆகியோருக்கான நினைவுச்சின்னம்]]
 
இவானின் மகன்களின் மரணம் காரணமாக 1598ல் பண்டைய ரூரிக் வம்சம் முடிவு பெற்றது. மேலும் 1601-03 பஞ்சம்<ref>{{Cite book|author=Borisenkov E, Pasetski V.|title=The thousand-year annals of the extreme meteorological phenomena|isbn=5-244-00212-0|page=190}}</ref> உள்நாட்டுக் கலகத்துக்கு வழிகோலியது. 17ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், குழப்ப காலத்தின் போது, ஆட்சி உரிமையாளர்களினதும், வெளிநாட்டினரினதும் குறுக்கீடுகள் ஏற்பட்டன.<ref>{{Cite book|author=Solovyov, S.|title=History of Russia from the Earliest Times|publisher=AST|year=2001|volume=7|pages=461–568|isbn=5-17-002142-9}}</ref> போலிய-லிதுவேனிய பொதுநலவாயம் மொஸ்கோ உள்ளிட்ட ரசியாவின் பகுதிகளை ஆக்கிரமித்தது. 1612ல் இரண்டு தேசிய வீரர்களான குஸ்மா மினின் என்ற வணிகனாலும், திமித்ரி பொசார்கி என்ற இளவரசனாலும் வழிநடத்தப்பட்ட ரசியத் தொண்டர் படையினால் போலியர்கள் பின்வாங்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். செம்ஸ்கி சொபோரின் தீர்மானம் காரணமாக 1613ல் ரோமனோவ் வம்சம் அதிகாரத்துக்கு வந்தது. இதனால் நாடு நெருக்கடியிலிருந்து சிறிதுசிறிதாக மீண்டது.
55

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2393744" இருந்து மீள்விக்கப்பட்டது