தோற்ற மெய்ம்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''தோற்ற மெய்ம்மை''' (Virtual reality) அல்லது '''மெய்நிகர் உண்மை''' என்பது [[கணினி]]யால் உருவாக்கப்பட்ட தோற்றங்களை மெய்யுருவம் போல் காட்டுவதாகும். இது [[கணினி விளையாட்டு]]களிலும், [[திரைப்படம்|திரைப்படங்களிலும்]] அதிகமாகவும், [[இராணுவம்]], [[வானியல்]] போன்றவற்றில் குறைவாகவும் உபயோகிக்கப்படும் தொழில்நுட்பம்.
 
== வரலாறு ==
1920களில் பயிற்சிப் போர்விமானிகளுக்கு இராணுவ விமானங்களில் போரிடும் முறைகளை மெய்நிகர் உண்மையாக உருவாக்கி வழங்கியவர் எட்வின் லிங். 1980 களில் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மெய்நிகர் உண்மையைப் பயன்படுத்தியது. 1990களில் பொதுமக்களிடம் மெய்நிகர் உண்மையைக் கொண்டுவந்தவர் ஜேரன் லேனியா். இவர்தாம் முதன்முதலில் வெர்சுவல் ரியாலிட்டி எனும் சொல்லையும் பயன்படுத்தினார். இவருக்கு உதவியாக இருந்தவர் தோம் சிம்மர்மேன்.
 
== தோற்ற மெய்ம்மை செயல்பாடு ==
இன்றைய மெய்நிகர் உண்மைக்குரிய களங்களில் பங்கேற்க கணினி மென்பொருள் பெரிதும் பயன்படுகின்றன. கணினியில் உருவகப்படுத்தப்பட்ட முப்பரிமாண களங்களில் பங்கேற்க தரவுகள் கொண்ட தலைக்கவசம், மேலாடை, கையுறை, காலுறை, துப்பாக்கி போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. இம்மாதிரியான கருவிகளை பயன்படுத்தி எதிரியைச் சுடுதல், பந்தயக்கார் ஓட்டுதல், கடலுக்குள் செல்லுதல், பரவெளியில் மிதத்தல் போன்ற அனுபவங்களை அளிக்கிறது.
 
== பயன்பாடு ==
தொடக்கத்தில் போர் பயிற்சிகளைச் செய்வதற்காகவும், மனமகிழ் பொழுதுபோக்கிற்காகவும் உருவாக்கப்பட்ட இது, இனறு அறுவை சிகிச்சை, விவசாயத்துறை, கட்டுமானத்துறை, கலை, கல்வி, வணிகத்துறை, மனநலம் பாதிக்கப்பட்டோர் மீள்துறை போன்ற துறைகளில் விரைவான வளர்ச்சி கண்டு வருகிறது.
 
==உதாரணம்==
[[படிமம்:VR-Helm.jpg|வலது|thumb|180px|தோற்ற மெய்மை]]
"https://ta.wikipedia.org/wiki/தோற்ற_மெய்ம்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது