வானதி (கதைமாந்தர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot:Removing stub template from long stubs
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 47:
 
==கதாபாத்திரத்தின் இயல்பு==
கொடும்பாளூர் இளவரசியாக இருந்தாலும் வானதி அடிக்கடி மயங்கி விழுகின்ற கோழைப் பெண்ணாகவே அறிமுகம் செய்கிறார் ஆசிரியர் [[கல்கி_(எழுத்தாளர்)|கல்கி]]. வானதிக்கு வீரமூட்டுவதற்காக இறந்து போன முதலையை வைத்து விளையாட்டு செய்கிறாள், வானதியின் தோழி [[குந்தவை_(கதைமாந்தர்)|குந்தவை]]. அது இறந்த முதலை என்பதை அறிந்து கொண்டு சற்றும் பயம்கொள்ளாமல் இருக்கிறாள் வானதி. ஈழத்திற்கு செல்லவிருக்கும் இளவரசரின் முகத்தினை நேருக்கு நேராகப் பார்த்து மயக்கமிட்டு விழுகிறாள். அருண்மொழி வர்மனின் அக்காவான [[குந்தவை_(கதைமாந்தர்)|குந்தவைக்கு]] வானதியை அருண்மொழிக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஆசையிருக்கிறது. சோழ நாட்டின் சேனாதிபதி [[பூதி விக்கிரம கேசரி (கதைமாந்தர்)|கொடும்பாளூர் பெரிய வேளாருக்கும்(வேளிர்)]] அதே ஆசை இருக்கிறது. அவர்கள் இருவரும் அவ்வப்போது இதுபற்றி இளவரசரிடம் உரையாடுகிறார்கள்.
 
[[சுந்தர_சோழர்_(கதைமாந்தர்)|சுந்தர சோழர்]] தனிமையில் பிதற்றுவதை கேட்டு, மன்னரை யாரோ பயம்செய்விக்கின்றார்கள் என்பதை [[வானதி]] அறிகிறாள். அந்த விபரீதத்தினை கண்டு வழக்கம் போல மயக்கமிட்டும் கீழே விழுகிறாள். மறுநாள் தான் கண்டவைகளை [[குந்தவை_(கதைமாந்தர்)|குந்தவையிடம்]] உரைக்கின்றாள். இளவரசர் [[அருள்மொழிவர்மன் (கதைமாந்தர்)|அருள்மொழி]] வர்மன் கடலில் புயற்காற்றில் சிக்கிக் கொண்டான். அவனைப் பற்றி செய்தி எதுவும் கிடைக்காததால் அவன் இறந்துவிட்டான் என்று தஞ்சையிலிருந்து தூதர்கள் வந்து கூறுகிறார்கள். பழையாறை மக்கள் வெகுண்டெழுந்து பழையாறை மாளிகையில் கூக்குரல் எழுப்புகிறார்கள். இதனை அறிந்த வானதி மயக்கமிட்டு விழுகிறாள். அவளை [[குந்தவை_(கதைமாந்தர்)|குந்தவையும்]], [[வந்தியத்_தேவன்_(கதைமாந்தர்)|வந்தியத்தேவனும்]] மீட்கின்றார்கள். வானதி நினைவிழந்து இருக்கிறாள் என்று நினைத்து [[வந்தியத்_தேவன்_(கதைமாந்தர்)|வந்தியத்தேவன்]] [[பூங்குழலி_(கதைமாந்தர்)|பூங்குழலி]] இளவரசர் அருள்மொழிவர்மனை விரும்புவதை கூறுகிறான். இதனை வானதி அறிந்து பூங்குழலி_(கதைமாந்தர்)|பூங்குழலி]] மேல் வெறுப்பு கொள்கிறாள்.
"https://ta.wikipedia.org/wiki/வானதி_(கதைமாந்தர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது