பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் - டெட் மேன்ஸ் செஸ்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 48:
 
''டெட் மேன்ஸ் செஸ்ட்'' 2006 சூலை 7 அன்று அமெரிக்காவில் வெளியாகி, கலவையான விமர்சனங்களைப் பெற்றது. படத்தில் இடம்பெற்ற ஸ்பெசல் எபக்ட் மற்றும் நடிப்பு ஆகியவற்றுக்கு பாராட்டையும், கதையமைப்பு மற்றும் படத்தின் நீளம் ஆகியவற்றுக்காக விமர்சிக்கப்பட்டது. இப்படமானது வெளியான முதல் மூன்று நாட்களில் பல சதனைப் பதிவுகளைச் செய்தது. அமெரிக்காவில் முதல் வார இறுதியில் $ 136 மில்லியன் வசூலையும், அந்த நேரத்தில், உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் $ 1 பில்லியனுக்கும் மிகுதியான வசூலை விரைவாக ஈட்டியது.<ref>{{Cite news|last=Bresnan|first=Conor|date=September 11, 2006|title=Around the World Roundup: 'Cars' Dethrones Billion-Dollar 'Pirates'|archiveurl=https://web.archive.org/web/20130511144755/http://boxofficemojo.com/news/?id=2156&p=.htm|deadurl=no|url=http://boxofficemojo.com/news/?id=2156&p=.htm|accessdate=October 18, 2011|archivedate=May 11, 2013}}</ref> இது உலகளவில் மிக கூடுதலாக வசூலித்த 23 வது படமாகவும், வால்ட் டிஸ்னி ஸ்டூடியோவின் படங்களில் இதன் வசூல் சாதனனையை முறியடித்த படமாக ஆறு ஆண்டுகள் கழித்து வெளியிடப்பட்ட படமான [[தி அவேஞ்சர்ஸ்|தி அவெஞெசர்ஸ்]] (2012) வெளியானது. இந்தப் படமானது சிறந்த கலை இயக்கம், ஒலித் தொகுப்பு, ஒலிக் கலவை ஆகியவற்றுக்கான [[அகாதமி விருது]] பரிந்துரைகளையும், சிறந்த காட்சி நுட்பத்துக்காகன அகதமி விருதையும் பெற்றது. இதன் அடுத்தத் தொடர்ச்சியாக ''அட் வோல்ட்ஸ் எண்ட்'' படம் 2007 ஆண்டு வெளியானது.
== கதை ==
இப்படத்தின் முந்தைய படமான [[பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் - த கர்ஸ் ஆப் பிளாக் பேர்ள்]] படத்தின் இறுதியில் போர்ட் ராயல் துறைமுகத்தில் கைதியாக உள்ள வில் டானரை ஜாக்கும், எலிசபெத்தும் சேர்ந்து காப்பாற்றி தப்ப விடுகின்றனர். அதன் தொடர்ச்சியாக இப்படத்தில் போர்ட் ராயல் துறைமுகத்தின் புதிய நிவாகியான லார்ட் பெக்கட் வில் டானரையும் எலிசபெத்தையும் ஜாக் தப்ப உதவிய குற்றத்திற்காக கைது செய்கிறார். பின்னர் வில் டானரை மட்டும் விடுவித்து ஜாக்கிடம் இருக்கும் அதிசய திசைமானியை கொண்டுவந்தால் எலிசபெத்தை விட்டுவிடுவதாக கூறி விடுகிறார். சாதாரண திசைமாணிகள் வடதிசையைக் காட்டுக்கூடியன ஆனால் ஜாக் ஸ்பேரோவின் திசைமாணியோ செல்ல நினைக்கும் இடத்தின் திசையை காட்டக்கூடியது இதனைக் கொண்டு கடலை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம் என லார்ட் பெக்கட் வில் திட்டமிடுகிறான்.
பிளையிங் டச்மேனின் என்ற கப்பலின் தலைவன் டேவி ஜோன்ஸ். இவனின் முகத்தில் [[சாக்குக்கணவாய்]] போன்ற தோற்றமுடைய விசித்திரமான தாடி மீசை போன்றவை இருக்கும். இவனின் இதயமானது ஒரு பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு ஒரு தீவில் உள்ள மறைவிடத்தில் வைக்கப்பட்டிருக்கும். இவனை யாராலும் கொல்ல இயலாது இவனைக் கொல்ல வேண்ணுமானால் இவனின் இதயத்தக் கண்டுபிடித்து அதைக் கொன்றால் இவன் உயிர் பிரியும். இவனது கப்பலில் உள்ள மாலுமிகள் அனைவரும் இவனின் அடிமைகள் ஆவர். இவனின் அடிமைகளில் ஒருவர் வில் டானரின் தந்தையான பூஸ்ட்ரப் டானர்.
ஜாக் ஸ்பேரோ ஒரு சிறைச்சாலையில் இருந்து ஒரு சாவியின் வரைபடத்தை கைப்பற்றி வருகிறான். அந்த சாவியானது டேவி ஜோன்சின் இதயம் இருக்கும் பெட்டகத்தின் சாவியாகும். டேவி ஜோன்ஸ் ஜாக்கின் கப்பலை மீட்டுத் தந்த உதவிக்கு பிரதிபலனாக ஜாக் பதிமூன்று ஆண்டுகள் அவனது கப்பலின் தலைவனாகவும் பின்னர் ஃபிளையிங் டச்மேன் கப்பலில் அடிமை மாலுமியாகவும் இருக்க வேண்டும் என ஒப்பந்தம் செய்துள்ளான். இதனால் அடிமை வாழ்விலிருந்து மீள டேவி ஜோன்சின் இதயத்தைக் கைபற்றி அதைக் கொல்ல திட்டமிடுகிறான்.
 
இறுதியில் வில் டானர் தன் தந்தையை அடிமைத் தளையில் இருந்தும், எலிசபெத்தை சிறையில் இருந்தும் மீட்டானா, டேவி ஜோன்ஸின் இதயத்தை யார் கைபற்றுகின்றனர் என்பதே மீதிக்கதை.
 
== மேற்கோள்கள் ==