"மிலோவின் வீனசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

798 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{Sculpture
| image_file = Front views of the Venus de Milo.jpg
| alt = ''மிலோவின் வீனசு'' லூவரில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது
| title = மிலோவின் வீனசு
| artist = ஆன்டியோச்சின் அலெக்சான்ட்ரோசு
| year = கிமு 130 - 100
| type = [[சலவைக்கல்]]
| height_metric = 203
| city = [[பாரிசு]], பிரான்சு
| museum = லூவர் அருங்காட்சியகம்
| italic title=no
}}<!--changed the data box, which was about ancient Roman religion, why would the Ancient Roman religion be featured on the page of an ancient Greek goddess?-->
'''மிலோவின் வீனசு''' (Venus de Milo) எனப் பரவலாக அறியப்படும் '''மிலோவின் ஆஃப்ரோடைட்டு''' (Aphrodite of Milos) ஒரு பண்டைய கிரேக்கச் சிலையும், பண்டைய கிரேக்கச் சிற்பக்கலையின் மிகவும் பெயர் பெற்ற படைப்பும் ஆகும். முதலில் இது பிராக்சிடெலெசு என்னும் சிற்பி உருவாக்கியதாகக் கருதப்பட்டது. பின்னர், அச்சிலையின் பீடத்தில் காணப்பட்ட கல்வெட்டிலிருந்து இது ஆன்டியோச்சின் அலெக்சாண்ட்ரொசு என்பவருடைய ஆக்கம் என நம்பப்படுகிறது. கிமு 130 க்கும் 100 க்கும் இடையில் உருவாக்கப்பட்ட இச்சிலை காதலுக்கும் அழகுக்குமான கிரேக்கப் பெண் தெய்வம் ஆஃப்ரோடைட்டைக் (உரோமரின் வீனசு) குறிப்பதாகக் கொள்ளப்படுகிறது. சலவைக் கல்லால் செய்யப்பட்ட இச்சிலை இயல்பான மனித அளவிலும் சற்றுப் பெரியதான 203 சமீ (6 அடி 8 அங்) உயரமானது. கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் இதன் கையின் ஒரு பகுதியும், முன்னைய பீடமும் தொலைந்துவிட்டன. இது தற்போது பாரிசில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில் நிரந்தரமான காட்சியில் உள்ளது. இச்சிலை இது கண்டுபிடிக்கப்பட்ட கிரேக்கத் தீவான மிலோசு (Milos) என்பதைத் தழுவிப் பெயரிடப்பட்டது.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2525552" இருந்து மீள்விக்கப்பட்டது