அசை (யாப்பிலக்கணம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
(வேறுபாடு ஏதுமில்லை)

20:07, 29 சனவரி 2006 இல் நிலவும் திருத்தம்

யாப்பிலக்கணத்தில் அசை என்பது எழுத்துக்களின் சேர்க்கையினால் உருவாகும் ஒரு உறுப்பாகும். அசைகள் சேர்ந்தே சீர்கள் உருவாகின்றன.

கீழேயுள்ளது சிறுபாணாற்றுப்படை என்னும் நூலிலுள்ள பாடலொன்றின் முதல் அடி.

அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்

இங்கே அருந்திறல், அணங்கின், ஆவியர், பெருமகன் என்பன சீர்களாகும். இச் சீர்களை அவற்றின் ஒலியமைப்பின் அடிப்படையில் கீழே காட்டியவாறு பிரிக்க முடியும்.

அருந்திறல் - அருந் திறல்
அணங்கின் - அணங் கின்
ஆவியர் - ஆ வியர்
பெருமகன் - பெரு மகன்

மேற்காட்டியவாறு பிரிவடைந்து கிடைக்கும் ஒவ்வொரு பகுதியும் ஒரு அசையாகும். யாப்பிலக்கண விதிகளை அவதானித்தால், அசைகளில் மெய்யெழுத்துக்களுக்குத் தனியான பெறுமானம் இல்லாமை புலப்படும். எனவே ஒற்றெழுத்துக்கள் எனப்படும் மெய்யெழுத்துக்களை நீக்கிப் பார்த்தால் அசைகள், கூடிய அளவாக இரண்டு எழுத்துக்களை மட்டுமே கொண்டிருப்பதைக் காணலாம். இவற்றுடன் ஒரு ஒற்றெழுத்தோ அல்லது இரண்டு ஒற்றெழுத்துகளோ இறுதியில் வரக்கூடும். யாப்பிலக்கண நூல்களில் கூறப்பட்டுள்ளபடி அசைகள் அமையும் முறைகள் வருமாறு.

முதல் எழுத்து இரண்டாம் எழுத்து மூன்றாம் எழுத்து எடுத்துக்காட்டு
குறில் - - அ, க
நெடில் - - ஆ, பூ
குறில் ஒற்று - அன், விண்
நெடில் ஒற்று - ஆள், தீர்
குறில் குறில் - அடி, மன
குறில் நெடில் - அடா, புகா
குறில் குறில் ஒற்று அடர், திகில்
குறில் நெடில் ஒற்று அதால், தொழார்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசை_(யாப்பிலக்கணம்)&oldid=26361" இலிருந்து மீள்விக்கப்பட்டது