ஆந்திரப் பிரதேசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அறுபட்ட கோப்பை நீக்குதல்
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 108:
2 சூன் 2014 நாளன்று ஆந்திரப் பிரதேசத்தின் வடகிழக்குப் பகுதி பிரிக்கப்பட்டு [[தெலுங்கானா]] என்ற புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது. இதனால் நீண்டகாலமாக ஆந்திராவின் தலைநகரமாக இருந்து வந்த [[ஐதராபாத்து (இந்தியா)|ஐதரபாத்]] நகரம், தெலங்கானாவின் தலைநகரமாக மாறியது. எனினும் ஆந்திர பிரதேச மறுசீரமைப்பு சட்டம் 2014இன் படி ஐதரபாத் ஆந்திரப் பிரதேசத்தின் சட்டப்பூர்வ தலைநகராக அதிகபட்சம் பத்தாண்டுகள் வரை நீடிக்கும். அதற்குள் புதிய தலைநகரமாக [[அமராவதி (நகரம்)|அமராவதி]] என்ற நகரம் உருவாக்கப்பட்ட பிறகு அது சட்டப்படி ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரமாக மாறும்.
 
[[குசராத்து|குஜராத்தை]] அடுத்து ஆந்திரப் பிரதேசம், இந்தியாவின் 2வது மிக நீளமான கடற்கரை எல்லையைக் கொண்டுள்ளது. இது வடமேற்கில் தெலுங்கானா, வடகிழக்கில் [[சத்தீஸ்கர்]] மற்றும் [[ஒடிசா]], மேற்கில் [[கருநாடகம்|கர்நாடகா]] மற்றும் தெற்கில் [[தமிழ்நாடு]] ஆகிய மாநிலங்களுடன் எல்லைகளைக் கொண்டுள்ளது. இதன் கிழக்கில் [[வங்காள விரிகுடா]] அமைந்துள்ளது. மேலும் [[புதுச்சேரி|புதுச்சேரி ஒன்றியப் பகுதியின்]] மாவட்டமான [[மாகி|மாகேயானம்]] என்ற சிறிய பகுதி, ஆந்திர மாநிலத்தில் உள்ள கோதாவரி டெல்டாவில் [[காக்கிநாடா]] நகரத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது.
 
[[விஜயவாடா]], [[திருப்பதி]], [[குண்டூர்]], [[காக்கிநாடா]], [[நெல்லூர்]] மற்றும் [[கர்நூல்]] ஆகியன இம்மாநிலத்திலுள்ள ஏனைய பெரிய நகரங்களாகும்.
"https://ta.wikipedia.org/wiki/ஆந்திரப்_பிரதேசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது