கோபுரம் (கோயில்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 12:
 
==கோபுரங்களின் தோற்றமும் வளர்ச்சியும்==
[[Image:Sanchi Great Stupa Torana.jpg|thumb|250px200px|சாஞ்சியில் உள்ள [[பௌத்த கட்டிடக்கலை]]க் கூறான [[தாது கோபுரம்]] ஒன்றைச் சூழவுள்ள கல் வேலியின் நுழை வாயிலில் அமைந்துள்ள அமைப்பு. வேதகால நுழைவாயில்களின் நேரடி வாரிசாகக் கருதப்படுகிறது.]]
வேலியிடப்பட்ட இடங்களின் வாயில்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கட்டிட அமைப்புக்களை அமைக்கும் வழக்கம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உலகின் பல பகுதிகளிலும் இருந்து வந்துள்ளது. கி.மு 1500 ஆண்டுகளுக்கு முன்பே [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தில்]] வாயிற் கட்டிட அமைப்புக்களுடன் கூடிய கோயில்கள் இருந்துள்ளன. இன்றுள்ள அமைப்பில் இந்துக் கோயில் கோபுரங்கள் கி.பி 6 ஆம் நூற்றாண்டுகளுக்குப் பிற்பட்டவையே எனலாம். எனினும் இவற்றுக்கான கருத்துரு இந்தியாவில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே இருந்து வருகிறது. [[வேத காலம்|வேத கால]] ஊர்களிலே கோபுரங்களின் கருத்துருவுக்கான அடிப்படைகளை ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். இவ்வாறு [[வீடு]]களிலும், [[ஊர்]]களிலும் காணப்பட்ட, மூங்கில் முதலிய இயற்கைப் பொருட்களாலான எளிமையான வாயிற்கட்டிட அமைப்புக்கள், காலப்போக்கில் நீடித்துழைக்கும் [[கட்டிடப் பொருள்|கட்டிடப் பொருட்களினால்]] அளவில் பெரியனவாக உருவாக்கப்பட்டு முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடத் தொகுதிகளின் வாயில் அமைப்புக்களாக வளர்ச்சியடைந்தன. இவை [[தோரண வாயில்]]கள் எனப்பட்டன. இந்தியாவின் [[சாஞ்சி]]யில் உள்ளது போன்ற பௌத்த கோயில்களில் இவ்வாறான தோரண வாயில்களைக் காண முடியும். தமிழ் நாட்டிலும் சில இந்துக் கோயில்களில் முற்காலத்தில் இவ்வாறான தோரண வாயில்கள் இருந்ததற்கான இலக்கியச் சான்றுகள் உள்ளன. ''கோபுரம்'' என்ற சொல்லின் தோற்றமும், வாயில் கட்டிட அமைப்புக்களுக்கான பழைய எடுத்துக் காட்டுகளும் தமிழ் நாட்டுக்கு வெளியிலேயே காணப்பட்டாலும், இன்றைய வடிவத்தில் கோபுரக் கட்டிடக் கலையின் வளர்ச்சிக்குக் களமாக அமைந்தது தமிழ் நாடே.
 
"https://ta.wikipedia.org/wiki/கோபுரம்_(கோயில்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது