கோபுரம் (கோயில்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[Image:Gopuram-madurai.jpg|thumb|200px|மதுரையில் உள்ள ஒரு கோபுரம்]]
'''கோபுரம்''' என்பது தற்போதைய பரவலான வழக்கில் இந்துக் கோயில்களின் நுழை வாயில்களில் அமைந்திருக்கும் கட்டிட அமைப்பைக் குறிக்கும். பல்வேறு அளவுகளிலும் காணப்படும் இக் கோபுரங்கள், தென்னிந்திய மாநிலமான [[தமிழ் நாடு|தமிழ் நாட்டிலேயே]] அவற்றின் உச்ச வளர்ச்சியைப் பெற்றுக் காணப்படுகின்றன. ஒரு [[பிரமிடு|பிரமிடைப்பட்டைக்கூம்பு]] (பிரமிட்) போல் கீழிருந்து மேலாக ஒடுங்கிச் செல்லும் இந்த அமைப்பு, ஒன்றிமேல் ஒன்றாக அடுக்கிக் கட்டப்பட்ட தளங்களாகக் காட்சி தருகின்றன. ஒரு தளம் கொண்டவை முதல் 12 தளங்கள் கொண்ட கோபுரங்கள் வரை தமிழ் நாட்டில் உள்ளன. இது போலவே ஒரு [[இந்துக் கோயில்|கோயிலில்]] இருக்கக்கூடிய கோபுரங்களின் எண்ணிக்கையும் பலவாறாகக் காணப்படுகின்றன. ஒரேயொரு கோபுரத்தைக் கொண்ட கோயில்களும், 16 கோபுரங்களைக் கொண்ட கோயில்களும் உள்ளன.
 
கோயில்களில் பிரமிட் வடிவில் உயர்ந்து நிற்பனவெல்லாம் கோபுரங்கள் அல்ல. வட நாட்டுக் கோயில்களிலும், தமிழ் நாட்டின் ஆறு தொடக்கம் 10 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதிகளில் கட்டப்பட்ட கோயில்களிலும் உள்ள உயர்ந்த பிரமிட் வடிவ அமைப்புக்கள் [[விமானம் (கோயில்)|விமானங்கள்]], அல்லது சிகரங்கள் எனப்படுகின்றன. இவை [[கருவறை]]க்கு மேலேயே கட்டப்பட்டிருக்கும். ஆனால் கோபுரங்கள் கோயிலைச் சூழவுள்ள சுற்று மதில்களில் அமைந்துள்ள வாயில்களில் கட்டப்பட்டிருக்கும். [[தஞ்சைப் பெரிய கோயில்]], [[கங்கை கொண்ட சோழபுரம்]] கோயில் ஆகியவற்றில் பெரிய அளவில் காட்சி தருபவை விமானங்கள் ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/கோபுரம்_(கோயில்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது