உலகச் சமயங்களின் பாராளுமன்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: வகைப்பாடு சமயங்கள் ஐ சமயம் ஆக மாற்றுகின்றன
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 11:
===கருத்துத் தோற்றமும் செயலாக்கமும்===
 
* சார்லஸ் கரோல் போனி எனும் வழக்கறிஞர் சர்வமத மகாசபை (உலகச் சமயங்களின் பாராளுமன்றம்) ஒன்றை கூட்டும் கருத்தையும், அது கிறித்துவ மதத்தை உலகின் தலைசிறந்த மதமாக மேன்மைப்படுத்தும் என்ற கருத்தையும் தெரிவித்தார். போனியின் கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டு சிகாகோ பிரஸ்பிட்டீரியன் சர்ச்சின் மதபோதகர் ஜான் ஹென்றி பரோஸ் சர்வமத மகாசபை அமைப்புக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டு, 1890 ஆம் ஆண்டு அக்டோபரில் இதற்கான பணிகள் துவக்கப்பட்டன.<ref name="சுவாமி">சுவாமி விவேகானந்தர்-1; ஸ்ரீராமகிருஷ்ண மடம்; {{ISBN |81-7823-220-0}}; பக்கம் 520,521,522</ref>
 
* 10,000 கடிதங்களும், 40,000 அறிக்கைகளும் இக்குழுவின் சார்பில் உலக நாடுகள் அனைத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டு, உலக நாடுகள் அனைத்திலிருந்தும் 3000 ஆலோசகர்களும் நியமிக்கப்பட்டனர். <ref name="சுவாமி"/>
வரிசை 25:
* ஹாங்காங் பாதிரிகள் சர்வமத மகாசபை முயற்சியை ’ஏசுவிற்கு எதிரான வஞ்சகத் திட்டம்’ என்று கண்டித்தனர்.<ref name="சுவாமி"/>
 
* திட்டமிட்ட தேதிக்கு மேல் ஒரு மாதம் தள்ளி வைக்கப்பட்டு செப்டம்பர் மாதம் நடத்தப்பட்டது.<ref>சுவாமி விவேகானந்தர்-1; ஸ்ரீராமகிருஷ்ண மடம்; {{ISBN |81-7823-220-0}}; பக்கம் 530</ref>
 
===பங்குபெற்றோர்===
 
* கன்ஃபூசிய மதத்தின் புங் க்வாங் யு, ஜப்பானிய புத்த மதத்தின் ஹோரின் டோக்கி, இலங்கை பௌத்த மதத்தின் தர்மபாலர் இந்தியாவின் பிரம்ம சமாஜிகள் மஜும்தார் மற்றும் நகர்க்கர் ஆகியோரின் உரைகள் கீழை நாட்டு மதங்களின் உயர்வை மேலைநாடுகளுக்குத் தெரியப்படுத்தியது.<ref>சுவாமி விவேகானந்தர்-1; ஸ்ரீராமகிருஷ்ண மடம்; {{ISBN |81-7823-220-0}}; பக்கம் 575</ref>
 
* இதில் இடம் பெற்ற பத்து முக்கிய மதங்கள்: பிரம்ம சமாஜம், யூத, இஸ்லாம், இந்து, பௌத்த, தாவோ, கன்ஃபூசிய, ஷின்டோ,ஜொராஷ்டிரிய, கத்தோலிக்க, கிரேக்க சர்ச் மற்றும் புரோட்டஸ்டன்ட் மதங்கள். இவற்றைக் குறிப்பிடும் வகையில் நியூ லிபர்ட்டி மணி பத்து முறை அடிக்கப்பட்டது. (கத்தோலிக்க, கிரேக்க, புரோட்டஸ்டன்ட் பிரிவுகள் கிறித்துவ மதப்பிரிவுகளாதலால் ஒன்றாகக் கருதப்பட்டன)<ref>சுவாமி விவேகானந்தர்-1; ஸ்ரீராமகிருஷ்ண மடம்; {{ISBN |81-7823-220-0}}; பக்கம் 547</ref>
 
* சுவாமி விவேகானந்தர் 31ஆம் இருக்கையிலும் அவரருகில் மும்பையின் நகர்கர், அடுத்து இலங்கையின் தர்மபாலர், அடுத்ததாக மஜும்தார் ஆகியோர் அமர்ந்திருந்தனர். <ref name="சுவாமி1">சுவாமி விவேகானந்தர்-1; ஸ்ரீராமகிருஷ்ண மடம்; {{ISBN |81-7823-220-0}}; பக்கம் 548</ref>
 
* வீர்சந்த் காந்தி சமண மதத்தின் பிரதிநிதியாகவும் தியசாபிகல் சொசைட்டியின் பிரதிநிதியாக ஞான் சந்திர சக்கரவர்த்தி மற்றும் அன்னிபெசன்ட் வந்திருந்தனர். <ref name="சுவாமி1">சுவாமி விவேகானந்தர்-1; ஸ்ரீராமகிருஷ்ண மடம்; {{ISBN |81-7823-220-0}}; பக்கம் 548</ref>
 
* முதலில் பேசியவர் கிரேக்க சர்ச்சின் ஆர்ச் பிஷப் ஜாந்தே.<ref name="சுவாமி2">சுவாமி விவேகானந்தர்-1; ஸ்ரீராமகிருஷ்ண மடம்; {{ISBN |81-7823-220-0}}; பக்கம் 549</ref>
 
* கன்ஃபூசிய பிரதிநிதி புங் க்வாங் யூ குறிப்பிடத்தக்க பேச்சாளராக அமைந்தார். டாக்டர் பரோஸ், இவருக்கு கிடைத்த வரவேற்பைப் போல் மேடையில் வேறொருவரும் பெறவில்லை என்றும் நீண்ட காலமாக அமெரிக்கர்கள் சீனர்களை நடத்திய விதத்திற்கு மன்னிப்பு வேண்டுகின்ற விதத்திலேயே அத்தகைய சிறந்த வரவேற்பை அவரது உரை பெற்றது என்று போனி யும் குறிப்பிட்டனர்.<ref name="சுவாமி2">சுவாமி விவேகானந்தர்-1; ஸ்ரீராமகிருஷ்ண மடம்; {{ISBN |81-7823-220-0}}; பக்கம் 549</ref>இவர் சீன அரச பாரம்பரிய உடையணிந்திருந்தார்.<ref name="சுவாமி1">சுவாமி விவேகானந்தர்-1; ஸ்ரீராமகிருஷ்ண மடம்; {{ISBN |81-7823-220-0}}; பக்கம் 548</ref>
 
* இலங்கையின் புத்த மதத்தின் தர்மபாலரின் உரை பார்வையாளர்களைப் பிரமிக்கச் செய்த உரையாக அமைந்தது.<ref name="சுவாமி2">சுவாமி விவேகானந்தர்-1; ஸ்ரீராமகிருஷ்ண மடம்; {{ISBN |81-7823-220-0}}; பக்கம் 549</ref>
 
* சுவாமி விவேகானந்தர் 23வது பேச்சாளர். இவரது உரையை அனைத்திலும் வெற்றிகரமானது என்று பத்திரிக்கைகள் எழுதின. <ref>சுவாமி விவேகானந்தர்-1; ஸ்ரீராமகிருஷ்ண மடம்; {{ISBN |81-7823-220-0}}; பக்கம் 552,553</ref>
** சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவு, விண்வெளியைப் போல பரந்ததாக எல்லா மதங்களின் சிறந்த சாரத்தை உள்ளடக்கியிருந்தது என்று ’பாஸ்டன் ஈவினிங் டிரான்ஸ்கிரிப்ட்’ பத்திரிக்கையும், இதுவரை வந்துள்ள எந்தச் சொற்பொழிவாளருக்கும், எந்தப்பாதிரிக்கும் இவருக்கு வழங்கப்பட்ட கவனமும் மரியாதையும் வழங்கப்படவில்லை என்று ’அப்பீல் அவலன்ச்’(Appeal Avalanche) பத்திரிக்கையும் எழுதின.(பத்திரிக்கைகள் இவரது பெயரைப் பலவிதமாக உச்சரித்தன).<ref> (உதாரணத் தகவல்கள் தரப்பட்டுள்ளன,முழுமையான மற்றும் மற்ற அனைத்து பத்திரிக்கைகளின் செய்திகளையும் காண: http://www.advaitaashrama.org/cw/content.php -->Volume 9-->Newspaper Reports)</ref>
** இவரது உரையால் கவரப்பட்ட கண்டுபிடிப்பாளர் ஹிராம் மேக்ஸிம் தமது ’லி ஹன்ங் சாங்க்’ஸ் ஸ்க்ரேப் புக்’ ("Li Hung Chang's scrap-book") நூலின் முன்னுரையில் சுவாமி விவேகானந்தரின் உரையைப் புகழ்ந்து அவரை நெப்போலியன் போன்றவர் என்று குறிப்பிட்டு, அவரது உரைகளின் விளைவால் அமெரிக்க மக்கள் வருடத்திற்கு ஒரு மில்லியன் டாலர் அளவு சேமித்தனர் என்றும் குறிப்பிடுகிறார்.<ref>http://archive.org/stream/cu31924022954436/cu31924022954436_djvu.txt</ref>
வரிசை 93:
the parsons as a cat plays with a mouse. -->
 
* மற்ற அனைத்து சமயப்பிரிவுகளின் பிரதிநிதிகளும் அவரவர்கள் சார்ந்த அமைப்பால் உரிய சான்றிதழ்களுடன் அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர், ஆனால், இந்தியாவிலிருந்து சென்று இந்து மதத்திற்காகப் பேசிய சுவாமி விவேகானந்தரை எந்த தனிப்பட்ட இந்து அமைப்புகளும் அனுப்பி வைக்கவில்லை. இவரை அனுப்பி வைத்த இவரது சென்னைச் சீடர்கள் உரிய அத்தாட்சிப் பத்திரங்களுடன் அனுப்பிவைக்கத் தவறியிருந்தனர். பிச்சை எடுப்பது சட்டப்படிக் குற்றமாக இருந்த அமெரிக்காவில் எப்படியாவது சமாளித்துக் கொள்வார் என்ற நம்பிக்கையுடன் அனுப்பிவைத்திருந்தனர். <ref>சுவாமி விவேகானந்தர்-1; ஸ்ரீராமகிருஷ்ண மடம்; {{ISBN |81-7823-220-0}}; பக்கம் 529</ref>சென்னையில் இருந்த போது, சுவாமி விவேகானந்தர் அறிமுகக்கடிதத்திற்காக தியாசபிகல் சொசைட்டியின் தலைவர் ஆல்காட்டை சந்திக்க, அவ்வமைப்பில் சேர மறுத்ததால் அறிமுகக்கடிதம் தந்து உதவ ஆல்காட் மறுத்திருந்தார்.<ref>சுவாமி விவேகானந்தர்-1; ஸ்ரீராமகிருஷ்ண மடம்; {{ISBN |81-7823-220-0}}; பக்கம் 474</ref>
 
*இந்து மதத்தின் பிரதிநிதியாக சுவாமி விவேகானந்தருக்கு அறிமுகக் கடிதம் தந்தவர் அமெரிக்காவின் பேராசிரியர் ஜான் ஹென்றி ரைட்.<ref>சுவாமி விவேகானந்தர்-1; ஸ்ரீராமகிருஷ்ண மடம்; {{ISBN |81-7823-220-0}}; பக்கம் 537</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/உலகச்_சமயங்களின்_பாராளுமன்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது